ரு க்ரைம் திரில்லர் சீரியலை மிஞ்சுமளவுக்கு உண்மைச் சம்பவமொன்று நடந்துள்ளது. பள்ளி -கல்லூரி மாணவிகள், இளம்பெண் கள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களை, தன் கையால் புதைத்தும், எரித்தும், அமிலத்தில் சிதைத்தும் உள்ளதாக கர்நாடக மாநிலம், தெற்கு கன்னட மாவட்டம், பெல்தங்காடி தாலுகாவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளது இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது.  

கர்நாடகாவிலுள்ள தர்மஸ்தலாவில் அமைந்துள்ளது மஞ்சுநாதர்சாமி திருக்கோயில். இக்கோயிலின் முன்னாள் துப்புரவு தொழிலாளி பீமா,  கடந்த ஜூலை 4-ஆம் தேதி பெல்தங்காடி நீதிமன்ற நீதிபதியிடம் அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், ராம்பூரா கிரா மத்தைச் சேர்ந்தவன் பீமா. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், இளம்வயதில் பள்ளிக்குச் செல்லாமல் ஊர்சுற்றி வந்ததால், இவரின் அண்ணன் மஞ்சு நாதர் திருக்கோயிலில் வேலைக்குச் சேர்த்து விட்டுள்ளார். அவரும் 1995இல் இருந்து 2016 வரைக்கும் அங்கு பணிசெய்ததாகவும், அப்போது இரவு நேரத்தில் நேத்ராவதி ஆற்றங்கரையில் பிணங்கள், குறிப்பாக சிறுமிகள், இளம்பெண்களின் பிணங்கள் ஆடைகளின்றி, அரை நிர்வாணமாகவும், பலாத்காரம் செய்யப்பட்ட நிலையிலும் அடிக்கடி தட்டுப்படும் என்றும் கூறியுள்ளார். ஒருநாள் இரவு, ஒரு கருப்புநிற எஸ்.யூ.வி காரில் பிணங்களைக் கொண்டுவந்து அந்த இடத்தில் போட்டுச் செல்வதைப் பார்த்துள்ளார். 

கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த முக்கியமான நபரிடமிருந்து அந்தப் பிணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி புதைத்துவிடும்படியும், சில சமயத்தில் எரித்துவிடும்படியும் உத்தரவு வரும். அப் படி செய்யாவிட்டால் உன்னையும் உன் குடும்பத் தையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி யதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

Advertisment

dharamasala1

இவர் பணிசெய்த காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களை புதைத்தும், எரித்தும் உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு, 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட  பள்ளிச் சீருடையிலிருந்த சிறுமியின் பிணத்தை புதைக்க உத்தரவுவந்தது. உள்ளாடையில்லாத நிலையில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் பலத்த காயம் இருந்ததாகவும், அதில் ரத்தம் வடிந்ததாகவும், உடல் முழுக்க நகங்களால் கீறப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருந்ததாகவும், அந்த பிணத்துடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உடனிருந்து, அதை புதைக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த சிறுமியின் டைரியில் முகவரியைப் பார்த்து பெற்றோரிடம் தெரிவித்துவிடலாம் என்று கூறியபோது, பீமா காவல்துறையைச் சேர்ந்தவரால் மிரட்டப்பட்டதால் வேறுவழியில்லாமல் அந்த பிணத்தைப் புதைத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

பீமாவின் உறவினர் பெண்ணிற்கும் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதால், உயிர்பிழைத்தால் போதுமென்று தப்பித்து வேறு மாநிலத்தில் மறைந்து வாழ்ந்துவந்ததாகவும், இந்த கொடுமை மனதை உறுத்தியதால், உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், நீதிமன்றத்தில் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பலத்த பாதுகாப் புடன் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பீமாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

Advertisment

களத்தில் நக்கீரன்

தர்மஸ்தலாவில் நக்கீரன் டீம் களமிறங்கி செய்திகளைச் சேகரித்தது. அதில், தற்போது மட்டும் தர்மஸ்தலா கொலைச் சம்பவங்கள் நடக்கவில்லை. கடந்த 1969-ல் வேதவள்ளி என்ற பள்ளி ஆசிரியை இந்த கோயில் அறக்கட்டளையில் இயங்கும் கல்வி நிறுவனத்தில் பணிசெய்து வந்தார். அந்த பள்ளியில் இவருக்கு பள்ளிமுதல்வர் ஆவதற்கு அனைத்து தகுதியிருந்தும் கோயில் நிர் வாகத்தைச் சேர்ந்த சமூகத்தவர் ஒருவரை நியமனம் செய்ய, வேதவல்லி கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்கு சாதகமாக தீர்ப்பு பெற்றார். பள்ளியின் முதல்வராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார். வேதவள்ளியின் கணவர் மருத்துவர். அவர் வேறு இடத்தில் வேலைசெய்து வந்த நிலையில், தனியாக வீட்டிலிருந்த வேதவள்ளி யை இரு மர்ம நபர்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டார். தீயிலெரிந்த நிலையில் நிர்வாணமாகக் கண்டுபிடிக் கப்பட்ட அவரது உடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதுதான் தர்மஸ்தலாவில் முதல்முறையாக வெளியுலகுக்குத் தெரியவந்த கொலைச்சம்பவம். வேதவள்ளியின் கணவர் புகாரளித்தும் இன்றுவரை அந்த வழக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

dharamasala2

இதனைத் தொடர்ந்து 1986-ல் பத்மலதா என்ற இளம்பெண்ணின் அப்பா அங்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அப்போது கோவில் நிர்வா கத்தை சேர்ந்தவர்கள் அவரை மிரட்டியுள்ளனர். அதையும் மீறி அவர் அந்த தேர்தலில் போட்டி யிட்ட நிலையில் அவரது மகள் பத்மலதா காணா மல் போனார். 56 நாட்கள் கடந்தும் பத்மலதா கிடைக்கவில்லை. பின் பத்மலதா உடல் நிர்வாண நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக சிதைக்கப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கும் தற்போது வரை யார் குற்றவாளி என்று தீர்வு காணப்படாமல் உள்ளது.

2003-ஆம் ஆண்டு கொல்கத்தா வைச் சேர்ந்த அனன்யா என்ற முதலா மாண்டு மருத்துவ மாணவி, உடுப்பியில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறை நாளன்று தர்மஸ்தலா வந்த  அனன்யா மாயமாகியுள்ளார். அவரைத் தேடிவந்த தாயார் சுஜாதா, மேற்குவங்க மாநில சி.பி.ஐ. அலுவலக ஊழியர். இருந்தும் மகளைத் தேடிவந்த சுஜாதாவையும் யாரோ மர்மநபர் தாக்கியதில் சிலகாலம் கோமாவில் விழுந் தார்.  நீதிமன்றம் மூலம் வழக்குப் பதிவு செய்யப் பட்டும் இதுவரை அனன்யா பற்றிய எந்த தகவ லும் தெரியவில்லை. பீமாவின் வாக்குமூலத்தால் மீண்டும் வழக்கு உயிர் பெற்றுள்ளதை அறிந்து சுஜாதா மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்து புகாரளித்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய சௌஜன்யா என்ற மாணவியின் வீட்டைத் தேடிச்சென்று  அவரின் தாயார் குஸ்மாவதியை சந்தித்தோம். அவர் நம்மிடம் சௌஜன்யாவுக்கு நடந்த கொடூர சம்பவத்தை பற்றி பேசினார்,

"கடந்த 2012-ஆம் வருடம் எனது மகள் சௌஜன்யா பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு படித்துவந்தாள். அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி கோயிலின் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் பள்ளியிலிருந்து நேத்ராவதி பஸ் நிலையத்தில் மாலை 4:30 மணிக்கு வந்திறங்கியவள், எனது தம்பியிடம் பேசிவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக நடந்துவந்துள்ளார். வெகுநேரமாகியும் சௌஜன்யா வீட்டுக்கு வராததால் பல இடங்களில் விசாரித்தோம். தகவல் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகாரளித்தேன். உள்ளூர் பொதுமக்கள் சுமார் 400 பேர் உதவியுடன் இரவுமுழுவதும்  பல இடங்களில் தேடினோம். மறுநாள் காலை 10:10 மணியளவில் போலீசாரிட மிருந்து போன் வந்தது. நேத்ராவதி ஆற்றின் அருகே சௌஜன்யாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அரை நிர்வாண நிலையில் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் மரக்கிளையின் பின்புறத்தில் கட்டிய நிலையில் உள்ளாடை ஏதுமில்லாத நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அந்தரங்க இடத்தில் மண் நிரம்பிய நிலையில் மார்பகங்கள் மற்றும் பல இடங்களில் கடித்த காயங்கள், நகக்கீறல்களுடன் காணப்பட்டாள். 

சௌஜன்யாவின் கொலையில் சந்தோஷ் ராவ் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவர் ஒரு அப்பாவி என்பது எங்களுக்குத் தெரிந்தது. ஆரம்பத் திலிருந்து போலீசார் தடயங்களை மறைத்துவந்த னர்'' என்று கூறியவர் பழைய நினைவுகளால் கண் கலங்கினார். நாளடைவில் அவரது ஊர்க்காரர்கள் சௌஜன்யாவுக்கு சிலை வைத்தே வழிபட ஆரம்பித்தனர். 

சௌஜன்யாவின் கொடூர கொலைக்காக நீதிவேண்டி போராடிய குழுவின் தலைவர் மகேஷ் ஷெட்டியை சந்தித்தோம். இந்த கொடூர கொலை யைப் பற்றி வெளியுலகத்திற்கு ஆதாரத்துடன் யுடியூபில் கடந்த 10 மாதத்துக்கு முன்பு செய்தி வெளியிட்ட சமீர் என்பவரையும் சந்தித்தோம். 

நம்மிடம் பேசிய மகேஷ் ஷெட்டி, “"இந்த கொலையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. என்னை என்கவுன்ட்டர் செய்ய போலீசார் முடிவுசெய்த நிலையில் நான் தப்பித்துவிட்டேன்''’ என்றார். சமீரும், மகேஷ் ஷெட்டியும் சௌஜன்யா கொலை விவகாரத்தில் நடந்த அநீதிகளை நம்மிடம் விவரித்தனர்.

சௌஜன்யா கொலை சந்தேகங்கள் அடுத்த இதழில்...

------------------------------------------------------------------------------------------
சிக்கிய மண்டையோடு!

சிறப்பு விசாரணைக் குழு தர்மஸ்தலா விசாரணையைக் கையிலெடுத்த நிலையில், (28-7-2025) அன்று பீமாராவ் கொடுத்த தகவ-ன் அடிப்படையில் மங்களூர் -தர்மஸ்தலா சாலையில் நேத்ராவதி ஆற்றங்கரையோரமாகத் தோண்டிப் பார்த்தனர். அப்போது ஊடகங்களை அருகிலேயே அனுமதிக்காமல் 700 அடி தொலைவிலேயே காவல்துறை தடுத்துவிட்டது. அதில் ஒரு உட-ன் மண்டையோடு கிடைத்துள்ள தாகத் தகவல். வரும் வாரத்தில் அடுத்தடுத்த இடங்களில் எஸ்.ஐ.டி. தோண்டவுள்ளதால் என்னவெல்லாம் வெளிக்கிளம்பப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.