ந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள் ளது தர்மஸ்தலா. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக ஸ்தலமான மஞ்சுநாதர் கோயில் முக்கிய நிர்வாகிகளால்.. பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட வர்களின் பிணங்களை, முக்கிய நிர்வாகிகள் உத்தரவு பெயரில், புதைத்ததாகவும், எரித்ததாகவும், ஆசிட் ஊற்றி சிதைத்ததாகவும் பீமா என்பவர், கடந்த ஜூலை 4-ஆம் தேதி பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 

தற்போது பீமா கூறிய இடங்களில் பிணங் களைத் தோண்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  இந்த வழக்கை மூடிமறைக்க இதன் பின்னணியில், தேசிய அளவிலுள்ள ஒரு கட்சியின் அழுத்தத்தால் வழக்கை திசைதிருப்பும் வேலைகள் நடந்துவருகின்றன. அப்ரூவ ராக மாறி வாக்குமூலம் கொடுத்துள்ள நபரை எஸ்.ஐ. டி. ஸ்பெஷல் இன்வெஸ்டி கேஷன் டீமைச் சேர்ந்த மஞ்சுநாத் கவுடா மிரட்டிய தாக சர்ச்சை எழுந்துள்ளது.

பீமா தற்போது நீதிமன்ற உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கில் மேலுமொருவர் நேரடியாக நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளார். இதனால் இந்த வழக்கின் பரபரப்பு மேலும் அதி கரித்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு 14 அல்லது 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியின் பிணம் அந்த கோயில் வளாகம் அருகே இருந்ததாகவும், ஒரு போலீஸ் எந்த ஒரு சட்டதிட்டத்திற்கு உட்படா மல் அந்த பிணத்தை அப்பகுதியில் புதைத்ததாக வும், அதை நேரில் பார்த்ததாகவும், அந்த இடத்தை தற்போது அடையாளம் காண்பிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisment

மேலும், இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பல விவரங்களைத் கேட்டும், இதுவரை அதற்குப் பதில்கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 1986-ல், 56 நாட்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் பிண மாக மீட்கப்பட்ட பத்மலதாவின் உறவினர் ஜெயந்த்ஷெட்டி என்பது குறிப்பிடத்தக் கது. அவர் நக்கீரனுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார், (வரும் இதழில் அவரது நேர்காணல் நக்கீரனில் வெளிவரும்.) 

dharmasathala1

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஹனிஷ் என்பவர், தனது அப்பா ஜாய் விபத்தில் இறந்ததாகவும் அந்த விபத்து செயற்கையாக நடத்தப்பட்டது என்றும், அதற்கும் மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் தற்போது தெரிவித்துள்ளார். தர்மஸ்தலாவில் நடந்த பல முக்கிய கொலைகளைப் பற்றி ஆதாரப்பூர்வமாக நமக்கு ஒரு காவல் அதிகாரி விவரங்களை வழங்கியுள்ளார், வரும் இதழில் அவரின் சிறப்பு நேர்காணலும் வெளிவரும். 

Advertisment

இந்த வழக்கின் மொத்த விவரங்களையும் தர்மஸ்தலா போலீசாரிடமிருந்து கடந்த ஜூலை 25-ஆம் தேதி மற்றும் 27-ஆம் தேதி ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் பெற்றுக்கொண்டது. பின்னர் பீமா கூறிய வாக்குமூலத்தின்படி அவர் கூறும் இடங்களை அடையாளம் கண்டு தோண்டும் பணிக்கு தயாரானது. ஜூலை 28-ஆம் தேதி உயரதிகாரிகள் ரகசியக் கூட்டம் நடத்தப்பட்டு... அதில் போலீசார், வருவாய்த்துறை, மருத்துவக் குழு, தடயவியல் துறை நிபுணர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மறுநாள் ஜூலை 29-ஆம் தேதி காலை 11 மணியளவில் மிகுந்த பாதுகாப்புடன் பீமா அழைத்துவரப்பட்டு, சம்பந்தப் பட்ட 13 இடங்களையும் அடையாளம் காட்டினார். பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர், இந்தநிலையில் பீமா கூறிய இடங்களை தோண்டும் பணியை ஆரம்பித்தனர். கடந்த மாதம் முதலே அங்கு அதிகப்படியான மழை பொழிந்துகொண்டிருந்தது. கடும் மழையிலும் பிணங்களைத் தோண்டும் பணி நடைபெற்ற நிலையில் ஒரு பெண்ணின் டெபிட் கார்டு, மற்றும் ஒரு பான் கார்டு கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் அந்த பான் கார்டு கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த நீலமங்களா பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடையது எனத் தெரிந்து, போலீசார் அந்த முகவரியில் விசாரித்தனர். அப்போது சுரேஷின் அப்பா எஸ்.ஐ.டி அதிகாரியிடம் சுரேஷ் குடிப்பழக்கத்தால் இறந்துவிட்டதாகவும், அந்த டெபிட் கார்டு அவரின் தாயார் லட்சுமியுடையது என்றும்,  லஷ்மி தற்போது உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இருந்தாலும் போலீசார் அவர் பயத்தில் எதையாவது மறைக்கிறாரா என்பதைப் பற்றி ரகசியமாக விசாரித்து வருகின்றனர். 

பிணங்களைத் தோண்டும் பணி தீவிரப்படுத்தப் பட்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. பள்ளம் தோண்ட மினி ஜே.சி.பி. களத்திலிறக்கப்பட்டது. பல இடங்களில் எலும்புகள் கிடைக்க ஆரம்பித்தது. குறிப்பாக, சைட் 6 மற்றும் 11-ல் நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புத் துண்டுகள் மற்றும் மனித கபாலம் கிடைத்துள்ளது. எத்தனை பேரின் எலும்புகள் கிடைத்துள் ளன என்பதை போலீசார் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.

dharmasathala2

இது ஒருபக்கமிருக்க, இந்த கோயில் நிர்வாகம் பற்றி யாரும் செய்தி வெளியிடக் கூடாது என்று ஆரம்பத்தில் மீடியாக்கள் மிரட்டப்பட்டன. கேக் ஆர்டர் மூலம் 338 பிரஸ் மீடியாக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அச்சு, ஒலி-ஒளிபரப்பு, யூடியுப் என்று எதிலும் செய்தி வரக்கூடாது என்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி விஜயகுமார்ராய் உத்தரவிட்டார். மேலும் 8,800 வீடியோ லிங்க்குகளின் பதிவுகள் அழிக்கப்பட்டன.

இந்த கேக் ஆர்டர் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளதாக மேல்முறையீடு செய்யப்பட்டது. நவீன் சூரிஞ்சி, முனிகட்டி பலா, பைரப்பா ஹரிஷ்குமார் என்ற மூன்று பத்திரிகை யாளர்கள் இந்த கேக் ஆர்டர் ஒரு தலைப்பட்ச மாக வழங்கப்பட்டுள்ள தாக முறையிட்டனர். இந்த தடை உத்தரவை வழங்கிய நீதிபதி விஜயகுமார் ராய், 1995 முதல் 1998 வரை மஞ்சுநாதா கோயில் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் கல்லூரியில் சட்டம் படித்தவர். இவர் இந்த கோயில் நிர்வாகத்தின்கீழ் பல வருடம் வேலை பார்த்தவர். இந்த அறக்கட்டளையின் சார்பாக பல வழக்கு தொடுத்தவர். இந்த விவரங்களை மேல்முறையீட்டில் சுட்டிக் காட்டியதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கேக் ஆர்டர் என்ற தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த டி.கேங் என்று அழைக்கப்படும் கேங், பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மீடியாக்களை மிரட்டிவந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி புதன்கிழமை மாலை  நாலு மணி யளவில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி சௌஜன்யா வீட்டுக்குச் செல்லும் வழியில் செய்தி சேகரித்துக்கொண்டி ருந்த யூட்யூபர் அபிஷேக், யூட்யூபர் சந்தோஷ், புகைப்பட கலைஞர் அஜய், மேலும் ஒருவர் என நான்குபேரைத் தாக்கினர். இந்த டி.கேங் ரவுடிகளின் கொடூர தாக்குதலால் இவர்கள் படுகாயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சௌ ஜன்யா மரணத்துக்கு நீதிவேண்டி போராடும் போராட்டக் குழு தலைவர் மகேஷ்ஷெட்டி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

dharmasathala3

இந்த மகேஷ்ஷெட்டி நக்கீரனுக்குக் கொடுத்த பிரத்யேக பேட்டியைப் படம்பிடித்த அபிஷேக்கும் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். சௌஜன்யா கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தீரஜும் பத்திரிகையாளர்களைத் தாக்கிய கும்பலின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற குழப்பத்தையும் கலவரத்தையும் தூண்டுவதால் அதிக பிணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சைட் 13 பகுதியை தோண்டும் பணி தடைபட்டுள்ளது.  

சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று காரணம் கூறி மீடியாக்களை முடக்கும் முயற்சியில் கோயில் முக்கிய நிர்வாகிகள், இதன் பின்னணியிலுள்ள அரசியல் புள்ளிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளார் கள் என்று அபிஷேக் தரப்பினர் நம்மிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அப்ரூவராக மாறியுள்ள பீமாவுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள் அவர்கள். 

______________
இறுதிச் சுற்று!

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

"காரைக்குடி மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி அ.தி.மு.க. துணையுடன், கமிஷனரிடம் புகார் அளித்தார் நடப்பு துணைமேயர். இதனையே  நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றார் அ.தி.மு.க. கவுன்சிலர் ராம்குமார். மனுவினை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, "நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தவேண்டும்' என உத்தரவிட்டது. 

07-8-2025 அன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 மற்றும் ஒரு சுயேட்சை கவுன்சிலர் உட்பட எட்டு பேர் மட்டும் கலந்துகொண்டனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த துணைமேயரும், மாநகர தி.மு.க. செயலாளருமான குணசேகரன் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநகரச் செயலாளர் மற்றும் துணைமேயருமான குணசேகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா? என்பது தி.மு.க.வினரின் கேள்வி.                        

   -நாகேந்திரன்