Advertisment

EXCLUSIVE போலீசாகும்போதே கிரிமினல்தனம்! உடற்பயிற்சியில் ஊக்க மருந்து! எஸ்.ஐ.தேர்வில் விதவிதமான கோல்மால்!

SIexam

காக்கிச்சட்டை என்றால் இன்னமும் மக்களிடம் தனி கம்பீரம் உண்டு. சாத்தான்குளம் காக்கிச்சாத்தான்களை மீறி, நேர்மையான போலீசார் நிறைய உள்ளனர். அதில் ஒருவராக வேண்டும் என்ற கனவு இளைஞர்களுக்கு உண்டு.

Advertisment

siexam

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019, மார்ச் 8ந்தேதி, காவல்துறை உதவி ஆய்வா ளர் பதவிக்கு 969 காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டது. 2020 ஜனவரி 12, 13ல் நடந்த இதற்கான தேர்வில், 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தேர்வெழுதிய நிலையில், மார்ச் 16ந் தேதி 5,275 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக் கப்பட்டனர். இதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்ப தாக கடந்த மார்ச் 25-27 நக்கீரன் இதழில் ஆதாரத்துடன் எழுதியிருந்தோம்.

தற்போது, தேர்ச்சி பெற்றுள்ள 5,275 பேரில் தனித் தேர்வர்கள் கோட்டாவில் 885 பேர், காவல்துறை டிபார்ட் மெண்ட் கோட்டாவில் 369 பேர் என 1,254 பேர் முறைகேடாக தேர்ச்சி அடைந்திருப்பதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. முறையாக விசாரணை நடத்தினால், இந்த எண்ணிக்கை மேலும் அத

காக்கிச்சட்டை என்றால் இன்னமும் மக்களிடம் தனி கம்பீரம் உண்டு. சாத்தான்குளம் காக்கிச்சாத்தான்களை மீறி, நேர்மையான போலீசார் நிறைய உள்ளனர். அதில் ஒருவராக வேண்டும் என்ற கனவு இளைஞர்களுக்கு உண்டு.

Advertisment

siexam

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019, மார்ச் 8ந்தேதி, காவல்துறை உதவி ஆய்வா ளர் பதவிக்கு 969 காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டது. 2020 ஜனவரி 12, 13ல் நடந்த இதற்கான தேர்வில், 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தேர்வெழுதிய நிலையில், மார்ச் 16ந் தேதி 5,275 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக் கப்பட்டனர். இதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்ப தாக கடந்த மார்ச் 25-27 நக்கீரன் இதழில் ஆதாரத்துடன் எழுதியிருந்தோம்.

தற்போது, தேர்ச்சி பெற்றுள்ள 5,275 பேரில் தனித் தேர்வர்கள் கோட்டாவில் 885 பேர், காவல்துறை டிபார்ட் மெண்ட் கோட்டாவில் 369 பேர் என 1,254 பேர் முறைகேடாக தேர்ச்சி அடைந்திருப்பதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. முறையாக விசாரணை நடத்தினால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

Advertisment

மற்ற போட்டித் தேர்வுகளைப் போல் அல்லாமல், போலீஸ் தேர்வில் யாருடன் அமர்ந்து எழுதப்போகிறோம் என்பதை முடிவுசெய்ய முடியும். இதற்காகவே ஆன் லைனில் ‘வெப்- ட்ராஃபிக்’ அதிகமாக இருக்கும் பகல் நேரத்தை விட்டுவிட்டு, இரவு 12 மணிக்குமேல் தங்களுக்கு வேண்டியவர்களுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் அடுத்தடுத்த பதிவெண்கள் கிடைத்ததும் கூட்டுச்சேர்ந்து பேப்பர் மாற்றுவது, செல்போன் பயன்படுத்துவது போன்ற கோல்மால்களை நடத்தி கூட்டமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோன்ற தவறுகள் நடப்பதற்கு காவல்துறையினரே தேர்வு கண்காணிப்பாளராக வருவதும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

வேலூர் வி.ஐ.டி.யில் ரூம் நம்பர் 501ல் தேர்வெழுதிய 60 பேரில் 36 பேர் வரிசையாக தேர்ச்சி பெற்றுள்ள னர். இதே வி.ஐ.டி. ரூம் நம்பர் 513ல் தேர்வெழுதிய 7 பேர் மாநில அளவில் முதல் 25 ரேங்குக்குள் வந்துள்ளனர். சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் நடந்த தேர்வில், போலீஸ் கோட்டாவில் தேர்வெழுதிய நான்குபேர் மாநில அளவில் முன்னிலை பெற்றுள்ளனர். இதில் ஒருவர்தான், மாநில அளவிலான முதலிடத்தைப் பெற்றார். இதே தேர்வில், அடுத்தடுத்த நம்பரில் தேர்வெழுதிய இரட்டை சகோதரிகள் இருவரும் 44 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், ஒருவர் பொதுப்பிரிவிலும், இன்னொருவர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் தேர்ச்சி பெற்றது எப்படியென்பது, தேர்வாணையத்துக்கே வெளிச்சம்.

இந்த மோசடியில் கோச்சிங் சென்டர்களுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், கடலூரில் சார்பு ஆய்வாளராக இருக்கும் ஒருவரை வைத்து, கடலூரை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 300 கிளைகளுடன் இயங்குகிறது ஒரு கோச்சிங் சென்டர். ""முதல் முக்கால் மணிநேரம் உங்களுக்குத் தெரிந்ததை எழுதி வையுங்கள். பின்னர் பக்கத்தில் கேட்டு வாய்ப்பைப் பயன்படுத்தி எழுதுங்கள்'' என்று இங்கு படிப்போரிடம் கோச்சிங் சென்டர் நடத்துபவர்கள் செல் போனில் அறிவுரை சொல்லும் ஆடியோவும் கிடைத்திருக் கிறது. இதேபோல், வேலூரில் ‘ஓய்வுபெற்ற காவ லர்’நடத்திவரும் கோச்சிங் செண்டரின் மூலம், பல்வேறு தேர்வு மோசடிகள் நடந்துள்ளன. சென்னை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் டிரைவர் இங்கே உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். இதுபோன்ற மோசடிப் பேர்வழி களுக்கு அரசுப் பணியாளர்கள் சிலரும் துணைபோயுள்ள னர். குரூப்-2 ஆஃபீசராக இருக்கும் அந்த அதிகாரி, காவல்துறையில் சேர்வதற்கு போதுமான பார்வைத்திறனும், உயரமும் இல்லாதவர்கள் என்று தெரிந்திருந்தும், வேலூர் கோச்சிங் சென்டர் மாணவர்களுக்காக தேர்வு எழுதியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் வி.ஏ.ஓ.வாக இருப்பவரும், பணத்தை வாங்கிக்கொண்டு பத்து பேருடன் சேர்ந்து தேர்வு எழுதியிருக்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, இவ்விருவருமே தேர்வில் தோல்வி அடைந்ததுதான் அவர்களின் சாமர்த்தியம்.

SIexam

இந்த மோசடியின் உச்சகட்டமாக, உடற்பயிற்சித் தேர்வின்போது மாணவர்களுக்கு ஊக்கமருந்தான ஸ்டீராய்டு பயன்படுத்துவதாகவும், இதற்குக் கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிப்பதாகவும், இந்தக் கோச்சிங் சென்டரில் படிக்கும் மாணவர் ஒருவர் ஆடியோ ஆதாரத்துடன் சொல்கிறார்.

“விடைத்தாளான ஓ.எம்.ஆர். ஷீட் உட்பட, இந்தத்தேர்வு குறித்து ஆர்.டி.ஐ.யில் கேட்கும் எந்தக் கேள்விக்கும், 2019 தேர்வு தொடர்பாக செயல்முறைகள் தொடர் நடவடிக்கையில் இருப்ப தால், தகவல் அளிக்க இயலவில்லை’என்றே பதில் தருகிறார்கள். ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களே 969தான் எனும்போது, முறைகேடாகத் தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை 1,254ஆக இருக்கிறது. அப்படியானால், நேர்மையாக படித்தவர்களின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. எனவே, முறைகேட்டாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவேண்டும். மேலும், அதே வயதுவரம்புடன் மறுதேர்வு நடத்தவேண்டும்’ என்பது நேர்மையான தேர்வர்களின் வலிமிகுந்த கோரிக்கையாக இருக்கிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இயக்குனர் தமிழ்செல்வனிடம் இதுதொடர்பாக கேட்க பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை. இத்தனை கோல்மால்களைச் செய்து தேர்வானவர்கள்தான் நாளை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப் போகிறார்களா?

-அரவிந்த்

nkn010820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe