கொடநாடு கொலை வழக்கில் பல புதிய உண்மைகள் வெளிவந்திருக்கிறது. அதுதான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றத்திலும் வெளியிலும் ஆவேசப்பட வைத்துள்ளது என்கிறார்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

கொடநாடு கொலையும் கொள்ளையும் நடந்த 2017 ஏப்ரல் அன்று நள்ளிரவு கொடநாடு எஸ்டேட் அமைந்துள்ள பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்கள்தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆவேசத்திற்கு காரணம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

eps

அந்த எண்களில் எடப்பாடி பழனிச்சாமியின் தனிப்பட்ட எண்கள் இருக்கிறது என தமிழக போலீசாருக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அத்துடன், கோவை மாவட்ட அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது அண்ணன் அன்பரசன் எண்களும் கொடநாடு பகுதியில் இருந்த செல்போன் டவரில் பதிவாகியிருக்கிறது.

Advertisment

இந்த புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்த போலீசார், அது குறித்து தகவல்களை கேகரித்துவிட்டனர். அதை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடக்கும் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் புதிய ஆதாரங் களாக சேர்க்கவிருக்கிறார்கள் என்கிற தகவல்களை, காவல்துறை அதிகாரிகள் எஸ்.பி.வேலுமணிக்கு சொல்ல, அதை தெரிந்துகொண்ட எடப்பாடி டென்ஷனாகியிருக்கிறார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.

இந்த செல்போன் பதிவுகளை கொடநாடு கொள்ளை நடந்தவுடன் நடைபெற்ற ஆரம்பகட்ட புலனாய்வு நடவடிக்கைகளிலேயே உதகமண்டலம் மாவட்ட போலீசார் எடுத்துவிட்டனர். அதை அப்போதே அங்கு எஸ்.பி.யாக இருந்த முரளிரம்பா கண்டுபிடித்து விட்டார். அதைப்பற்றி கண்டுகொள் ளாதே என முரளிரம்பாவை வேலுமணி எச்சரித்தார். அதைப்பற்றி வேலுமணிக் கும் எடப்பாடிக்கும் தெரியும். ஆனால் போலீசாரின் ஆரம்பகட்ட எலக்ட்ரானிக் புலனாய்வுப் பதிவுகளை அவர்களால் மறைக்க முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை. அதை மறுபடியும் தி.மு.க. அரசு கையிலெடுத்துவிட்டது. தமிழக போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை நடந்த அன்று கொடநாடு டவரில் நடந்த செல்போன் உரையாடல் களை ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப் பித்தால் எடப்பாடியும், வேலுமணியும் அவரது சகோதரர் அன்பரசனும் சிக்குவார்கள் என்பதால்தான் அ.தி.மு.க. டென்ஷனானது.

eps

Advertisment

அந்த உரையாடல்கள் எப்படி சிக்கியது என நீலகிரி மாவட்ட போலீசாரிடம் விசாரித்தோம். கொடநாட்டில் ஜெ. தங்கியிருந்ததால் அதிக வலுவான செல்போன் டவர் கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடநாட்டில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்க ஜெ. ஏற்பாடு செய்தார். ஜெ. மறைவுக்குப் பிறகு கொலை, கொள்ளை நடந்த அன்று கொடநாட்டில் எடப்பாடியின் பினாமியான சஜீவன் உத்தரவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்து கொடநாடு சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட தினேஷ், அங்கு இயங்கிக்கொண்டிருந்த 27 சி.சி.டி.வி.க்களை அணைத்தார். மின்சாரத்தை துண்டித்தார். அவரால் செல்போன் சிக்னல்களை செயலிழக்கச் செய்ய வைக்க முடியவில்லை. செல்போன் இயக்கம் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தேவைப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை முடிந்ததும் கொலையாளிகள் சென்ற காரை கோத்தகிரி செக்போஸ்ட்டில் போலீசார் பிடிக்கின்றார்கள். அதை செல்போன் மூலம் உத்தரவிட்டு சஜீவன் ரிலீஸ் செய்கிறார். எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான eeசஜீவனின் செல்போன் பதிவுகளையும் நீலகிரி போலீசார் எடுத்துவிட்டனர். இதனால் "நான் அப்ரூவர் ஆகிறேன்'' என சஜீவன் அலறிக்கொண்டி ருக்கிறார்.

இந்த செல் உரையாடல்களையெல்லாம் நடத்தியது கனகராஜ். ஜெ.வின் டிரைவராக இருந்த கனகராஜின் நடவடிக்கைகள் சசிகலாவுக்கு சந்தேகத்தை விளைவித்ததால் அவரை டிரைவர் வேலையிலிருந்து சசி நீக்கினார். அதனால் அவர் சசிக்கு எதிராக ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக செயல் பட்ட ஆறுகுட்டி எம்.எல்.ஏ.வின் டிரைவரானார். ஆனால் எடப்பாடியை அடிக்கடி சந்தித்து வந்தார். எடப்பாடிக்கு சால்வை போட்டு எடுத்துக்கொண்ட படத்தை மற்றொரு குற்றவாளியான சயானுக்கு காண்பித்தார். அத்துடன் சேலத்தில் பேக்கரி வைத் திருந்த சயானுடன் சேர்ந்து வேலுமணியின் அண்ண னான அன்பரசனை சந்தித்துப் பேசியுள்ளார்.

எடப்பாடியிடம் ஜெ.வின் டிரைவராக கொடநாடு பங்களாவில் மாடி அறைகளில் இருக்கும் பணத்தைப் பற்றியும், ஓ.பி.எஸ்., எடப்பாடி, நத்தம் விசுவநாதன், வைத்திய லிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரிடமிருந்து, eeஅவர்கள் ஜெ.வுக்கு கொடுக்காமல் ஏமாற்றிய பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள் என ஜெ. வீட்டுக் காவலில் வைத்து கைப்பற்றிய ஆவணங்கள் இருக்கும் இடத்தைப் பற்றியும் விவரித்தனர்.

கேரளாவைச் சேர்ந்த சயான், வாழையார் மனோஜ் மற்றும் சுவாமி ஆகியோர் மூலம் பத்துபேர் கொண்ட கூலிப்படையைத் திரட்டித் தருவதாகச் சொல்ல... கொடநாடு கொள்ளைத் திட்டம் ஒரு ஆபரேஷனாக உருவாகியது.

கொள்ளை நடந்த அன்று சேலத்தில் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த காரில் கனகராஜ் வந்தார். அவர் ஏற்கனவே, எடப்பாடியின் காரை ஓட்டியதை சயான் பார்த்திருக்கிறார். அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் செக்யூரிட்டியாக இருந்த ஓம்பகதூர் கொல்லப்படுவார் என கனகராஜ் நினைக்கவில்லை. ஓம்பகதூரை வாளையார் மனோஜ் கொன்றுவிட, கொள்ளை முயற்சியில் ரகசியமாக முடியவேண்டிய ஆபரேஷன் ரிஸ்க் ஆனதை கனகராஜ், வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்குச் சொன்னார். உடனே எடப்பாடிக்கும் தெரிவிக்கப்பட்டது. இருவரும் மாறி, மாறி கனகராஜின் போனுக்கு பேசினார்கள். வேலுமணி, கனகராஜை திட்டித் தீர்த்தார்.

அதன்பிறகு கொடநாட்டில் இருந்து எடுக்கப்பட்ட டாகுமெண்ட்டுகள் மற்றும் பணத்தை எங்கே ஒப்படைப்பது என்பது பற்றியும் குற்றவாளிகள் சென்ற காரை, போலீசார் பிடித்தது பற்றியும் கனகராஜின் செல்போனில் எடப்பாடியும் வேலு மணியும் அன்பரச னும் பேசினார் கள். இவை யெல்லாம் கொடநாடு செல்போன் டவரில் பதிவாகியுள்ளது. இதை கொடநாடு கொலைவழக்கின் ஆரம்பகட்டத்திலேயே விசாரணை நடத்திய போலீசார் கண்டு பிடித்துவிட்டனர்.

ss

இந்தக் கண்டு பிடிப்பு நடந்த சில நாட்களிலேயே கனகராஜ் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். கனகராஜுடன் நேரடி தொடர்பில் இருந்தவரும், கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துள்ள சயானை கொல்வதற்கும் கனகராஜ் இறந்த அன்றே முயற்சி செய்யப்பட்டது.

சயானும் அவரது மனைவியும் மகளும் சென்ற காரில் ஒரு லோரி மோதி அவரது மனைவியும் மகனும் இறக்க.. சயான் பிழைத்துக்கொண்டார். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். கொடநாடு கொள்ளை வழக்கை பிடிபட்ட குற்றவாளிகள் மட்டும்தான் செய்தனர் என வேகமாக நடத்த உத்தரவிட்டது தமிழக அரசு.

வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சயானும் மனோஜும், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மூலம் இதன் பின்னணியில் எடப்பாடி இருக்கிறார் என சொன்னார்கள். அதற்கு முன்பே தமிழகத்தில் நக்கீரன் மட்டுமே எக்ஸ்குளூஸிவாக கொடநாடு கொலை கொள்ளையைப் பற்றி தொடர் கட்டுரைகள், பேட்டிகள் வெளியிட்டு வந்தது.

எடப்பாடி மறுபடியும் சயானையும் மனோஜையும் கைது செய்து சாட்சியங்களை கலைத்தார்கள் என சிறையிலடைத்தார். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் மூலம் மானநஷ்ட வழக்கும் தொடர்ந்து இவர்களது வாயை மூடினார். சிறையிலிருந்த வாழையார் மனோஜுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை எஸ்.ஐ. வேல்முருகனும், அரசு வழக்கறிஞரும் காசு கொடுக்கிறேன் என ஆசை காட்டினர். மனோஜுக்கு தனியாக வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்தினர்.

மனோஜுக்கு கொள்ளையடித்த அன்று நடந்ததுதான் தெரியும். பின்னணியில் யார் என்பது தெரியாது என்பதால் அந்த விபரம் தெரிந்த சயானை, மனோஜ் மூலமாக வளைக்க முயன்றனர். சயான் அதற்கு உடன்படவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சயானை வழக்கறிஞர்கள் மூலம் ஜாமீனில் எடுத்தார் பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல்.

ஜாமீன் கிடைத்ததும் ஜாமீனை செயல் படுத்த தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல நாட்கள் வெளியே வராமல் சிறையிலிருந்தார் சயான். சயானின் வழக்கறிஞராக பல ஆண்டுகளாக இருப்பவர் தி.மு.க. வழக்கறிஞர் ஆனந்தி. ஜாமீன் கிடைத்தும் பல நாட்கள் கழித்து வெளிவந்த சயானிடம் நீலகிரி போலீசார் மறுபடியும் வாக்குமூலம் கேட்டனர்.

வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கொடுத்த அனுமதி அடிப்படையில் சயான் போலீசில் சொன்ன விவரம் பற்றிக் கேட்டபோது, ஏற்கனவே நாங்கள் மீடியாக் களில் பேசக்கூடாது என தடையிருக்கிறது என நம்மிடம் பேச மறுத்துவிட்டார். ஆனால் எடப்பாடி சட்டமன்றத்தில் கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகிகளைச் சேர்க்க தி.மு.க. முயற்சிக்கிறது என ஓ.பி.எஸ். வேலுமணியுடன் சேர்ந்து சட்டமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்கிறார்கள் என பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின், மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும் என அதற்குப் பதிலளித்தார். கொடநாடு மர்மக் கொலை -கொள்ளைகள் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் சுற்றி வளைப்பதால் பதறும் எடப்பாடி பழனிச்சாமி, இதை அரசியலாக்கி கவர்னர், டெல்லி எனப் பயணித்து தண்ணீர் ஊற்ற முடியுமா என்பதில் தீவிரமாக இருக்கிறார்.