Advertisment

EXCLUSIVE : உண்மையை அம்பலப் படுத்தியதால் வழக்கு? மிரட்டப்படும் தலைமைக் காவலர் ரேவதி!

sa

"உன் மேலும் வழக்கு பாயலாம்.?'' -இதுதான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ்- மகன் பென் னிக்ஸ் இரட்டைச் சித்திரவதை கொலை வழக்கின் உண்மையை வெளிப்படுத்திய பெண் காவலர் ரேவதிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தரத்தொடங்கியிருக்கும் மிரட்டல் பரிசு.

Advertisment

sa

சாத்தான்குளம் ஸ்டேஷனில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறை காவலிலிருந்த சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்து இறந்த நிலையில், ""அவர்களுக்கு மூச்சுத்திணறலும் காய்ச்சலும் இருந்தது'' என தமிழ்நாடு முதல் அமைச்சரும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டியளித்து மக்களிடையே உண்மையை மறைத்த நிலையில், ""இல்லையில்லை.! அடித்து துன்புறுத்தியதாலே காயம் ஏற்பட்டு இயற்கைக்கு மாறாக உயிரிழந்தார்களென'' என நக்கீரன் உண்மையை அம்பலப்படுத்தியது.

அது மக்களிடையே நம்பிக்கையை விதைத்த வேளையில், சாத்தான் குளம் ஸ்டேஷனின் தலைமைக் காவலர் ரேவதியும் மனச் சாட்சிக்கு பயந்து உண்மையை பகிர்கிறேன் என்று கூறி வாக்குமூலம் அளித்ததும் சித்ரவதை கொலைவழக்கில் சிபிஐ கால்பதிக்க வேண்டியதாயிற்று. சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக்கொலை வழக்கு சூடு பிடித்த நிலையில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் தொடங்கி பலரும் கைது செய்யப்பட்டனர்.

"உன் மேலும் வழக்கு பாயலாம்.?'' -இதுதான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ்- மகன் பென் னிக்ஸ் இரட்டைச் சித்திரவதை கொலை வழக்கின் உண்மையை வெளிப்படுத்திய பெண் காவலர் ரேவதிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தரத்தொடங்கியிருக்கும் மிரட்டல் பரிசு.

Advertisment

sa

சாத்தான்குளம் ஸ்டேஷனில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறை காவலிலிருந்த சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்து இறந்த நிலையில், ""அவர்களுக்கு மூச்சுத்திணறலும் காய்ச்சலும் இருந்தது'' என தமிழ்நாடு முதல் அமைச்சரும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டியளித்து மக்களிடையே உண்மையை மறைத்த நிலையில், ""இல்லையில்லை.! அடித்து துன்புறுத்தியதாலே காயம் ஏற்பட்டு இயற்கைக்கு மாறாக உயிரிழந்தார்களென'' என நக்கீரன் உண்மையை அம்பலப்படுத்தியது.

அது மக்களிடையே நம்பிக்கையை விதைத்த வேளையில், சாத்தான் குளம் ஸ்டேஷனின் தலைமைக் காவலர் ரேவதியும் மனச் சாட்சிக்கு பயந்து உண்மையை பகிர்கிறேன் என்று கூறி வாக்குமூலம் அளித்ததும் சித்ரவதை கொலைவழக்கில் சிபிஐ கால்பதிக்க வேண்டியதாயிற்று. சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக்கொலை வழக்கு சூடு பிடித்த நிலையில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் தொடங்கி பலரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு, ""சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்துறையினரால் அடித்துக்கொல் லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கியமான தகவல் களை வழங்கிய தலைமைக் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டது. அதுபோல் இரண்டு காவலர்களை ரேவதிக்கு பாதுகாவலர்களாக நியமித்த காவல்துறை, அவரை சாத்தான்குளத்திலிருந்து மெய் ஞானபுர காவல் நிலையத்திற்கு மாற்றியது என்றாலும் தற்பொழுது நாசரேத் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது.

Advertisment

sathankulam

இந்நிலையில், ரேவதியின் நெருங்கிய ரத்தசொந்தமான அவர் நம்மிடம், ""அந்த இரட்டைக் கொலை வழக்கில் இவ போய் சாட்சியம் சொன்னதை ஆரம்பத்தில் சாதாரணமாகத் தான் நினைத்தோம். பெருமையாகவும் நினைத்தோம். இப்ப என்னடான்னா அதுவே உபத்திரவமாக போச்சு. மடியில் நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கிற சூழ்நிலை. சம்பவம் நடந்து முடிச்ச பிறகு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து உடனடியாக மெய்ஞானபுர போலீஸ் ஸ்டேஷ னிற்கு அனுப்பினாங்க. இவ வீடு இருக்கின்ற அறிவான்மொழியிலிருந்து மெய்ஞானபுரம் ஸ்டேஷனுக்கு போறதுக்குள்ளே நிறைய காடு இருக்கும். அவ தைரியமாக போனாலும் எங்க ளுக்கு பதைபதைப்பு இல்லாமல் இருக்குமா..? இப்ப என்னடான்னா..? எங்களுக்கு எதிராக சாட்சியம் சொன்ன இவளையும் இந்த வழக் கில் சேர்க்காமல் விடமாட்டோம் என மிரட்டிட்டே போறாங்க'' என்கிறார்.

சாத்தான்குளம் காவல் நிலைய சித்ரவதைக் கொலை வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ-யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் செல்வராணி, பியூலா, பெர்சி, ஜோசப் சுந்தரராஜ், ஜெயா, ஜெயசீலன், sathankulamதேசிங்குராஜா, தாவீது, பியூலா செல்வகுமாரி, ரேவதி, சுடலைமுத்து, சங்கரலிங்கம், நாகராசன் உள்ளிட்ட உள்ளிட்ட 105 சாட்சியங்களில் தலைமைக்காவலர் ரேவதியின் சாட்சியம் உயிரோட்டமானது. இதற்கு முன்னதாக ஜூலை 3 அன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நடுவர் எண் 3 முன் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார் ரேவதி. அது தற்போது வெளியாக, சிக்க லாகியுள்ளது ரேவதியின் இயல்பு வாழ்க்கை.

பூட்டிய அறையில் அப்போது நீதிபதியிடம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில் ""உனக்கும் உம்புருஷனுக்கும் சண்டை யாமே...? இவனுங்க இரண்டு பேரையும் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) அடிப்பது போலதான் அவனையும் அடிக்க வேண்டும். அதனால் இப்ப அடித்து பழகு' என்றார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். என்னுடைய குடும்ப விஷயத்தில் தலையிட நீங்கள் யார்? எனக் கூறிவிட்டேன். அதன் பிறகு ஜெயராஜ் பென் னிக்ஸ் மீது காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு குறித்து எஸ்.பி.அலுவலகத்திடமும், தனிப்பிரிவு போலீசாரிடமும் தகவலாக போனி லும், வாட்ஸப்பிலும் அனுப்பிவிட்டேன்'' எனவும் குறிப்பிட்டுள்ளார் தலைமைக்காவலர் ரேவதி. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை காரணம் காட்டியே வழக்கினை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட போலீசாரின் வழக்கறிஞர்களைக் கொண்டு தங்களது அடுத்தகட்ட மூவை நகர்த்தியுள்ளது தமிழக அரசு.

sathankulam

""தமிழ்நாடு காவல் நிலைய ஆணைகளின்படி ஒவ்வொரு ஸ்டேஷனிற்கும் வெளியே துப்பாக்கியுடன் நிற்பவர் "பாரா' போலீஸ்காரர். ஸ்டேஷன் முழுவதும் அவர் பொறுப்பில் இருக்கும். ஸ்டேஷனுக்கு யார் வருகிறார்கள், வந்த நோக்கம் என்ன என்பதனை அவர்கள் தான் அறிய வேண்டும். ஸ்டேஷனில் பாரா இருக்கும் காவலர்தான் சம்பந்தப்பட்ட ஸ்டேஷனிற்கு பொறுப்பு என்பதால் போலீஸ் ஸ்டேஷனிற்கு சந்தேகத்திற்குரிய அன்னிய நபர் வந்தால் சூழ்நிலைக்கு ஏற்ப 'பாரா' போலீஸ்காரர் துப்பாக்கிச்சூடு நடத்தலாம் என முந்தைய டிஜிபி ஒருவரே சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார்.

அதுபோக தமிழ்நாடு காவல் நிலைய ஆணைகளின் நிலைக்காப்பு விதிகளே இதனை உணர்த்தும். அதன்படி சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனின் பாரா தலைமைக்காவலர் ரேவதியே. ஜெயராஜ் பென்னிக்ஸ் மீது போடப்பட்ட வழக்கு குறித்து மாவட்ட எஸ்பி ஆபிசிடமும், தனிப்பிரிவு எஸ்.ஐ.யிடமும் தகவல் கூறிய ரேவதி, அப்பா-மகன் இருவரையும் தாக்கி காயப்படுத்திய தையும் கூறியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? இது தவறான செயல் அல்லவா? அப்படியெனில் இவரும் குற்றத்திற்கு உடந்தை தானே...? அவர் எப்படி சாட்சியமாவார்..? இதைத்தான் அடுத்து வரும் வழக்கு நாட்களில் எடுத்துக் கூறவிருக்கின்றோம்'' என் கின்றனர் வழக்கில் சிக்கியிருக்கும் காவல்துறை யினரின் உறவினர்கள்.

நெல்லையின் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் பாபுவோ, ""ஐபிசி செக்ஷன் 34ன்படி ஸ்டேஷன் பாரா போலீசாரே குற்றத்திற்கு உடந்தை என வழக்கிற்குள் கொண்டு வரலாம். எனினும், தான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. நீதி நிலை நாட்டப்படவேண்டுமென என்ற நம்பிக்கையில் பூட்டிய அறைக்குள் நீதிபதியின் முன்பும், சிபிஐயின் முன்பும் ஒப்புதல் வாக்குமூலம் எப்போது அளித்தாரோ அன்றே இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நீதியும் கூட'' என்கிறார்.

""பத்து குடும்பத்தை நாசம் பண்ணிட்டியேன்னு பலர் சாபம் விட்டும், எச்சரித்தும் இருக்காங்க. இருந்தாலும் உண்மைய கூறனும். மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடக்கனும் என்பதால்தான் வாக்குமூலமே கொடுத்தேன். எது வந்தாலும் பரவாயில்லை'' என்கிறார் சாத்தான்குளம் காவல்நிலையக் கொடூர சித்ரவதைகளுக்கும் அதனால் நடந்த இரட்டைக் கொலைக்கும் சாட்சியான தலைமைக் காவலர் ரேவதி.

-நாகேந்திரன்

படங்கள்; விவேக்

nkn041120
இதையும் படியுங்கள்
Subscribe