"தமிழ்நாடு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏலக்காய் வியாபாரம் செய்துவந்த தங்களது "மாதா எண்டர்பிரைசஸ்', வணிக வரித்துறைக்கு ரூ.8.32 கோடி மதிப்பிலான வரிகளை செலுத்தத் தவறிவிட்டீர்கள் என வருமான வரி மற்றும் வரி விதிப்புத்துறை தெரிவித்துள்ளதால் உங்களது வங்கிக் கணக்கு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என தகவல் தெரிவித்து, வங்கிக் கணக்கை மூடியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

Advertisment

"நம்ம ஊரு மத்தியப்பிரதேசம். நாம் ஏன் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்யவேண்டும்? செய்யாத வியாபாரத்திற்காக வரியா? இது மோசடியான ஒன்று' என கோபமடைந்து இன்றுவரை சட்டப் போராட்டம் நடத்திவருகிறார் மத்தியப்பிரதேசம் சித்தியைச் சேர்ந்த சாவித்ரி மிஸ்ரா.

கிளைக் குறியீடு: 30380 CIF எண்: 78338884747 பெயர்: சாவித்ரி, கிளைக் குறியீடு: 01262 CIF  எண்: 80893602503 பெயர்: சாவித்திரி, கிளைக் குறியீடு: 01262 CIF எண்: 89964929886 பெயர்: மிஸ்ரா நர்சிங் ஹோம் படிவம் மஇல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பணத்தை மீட்டெடுக்க ஏற்பாடு செய்யவும், மேலே குறிப்பிடப்பட்ட கணக்குகளிலிருந்து சட்டப்பூர்வ வரியை மாநில வரி அதிகாரி, போடிநாயக்கனூர் மதிப்பீட்டு வட்டம், போடிநாயக்கனூர், தமிழ்நாடு- 625513 என்ற முக வரிக்கு கோரிக்கை வரைவோலை மூலம் செலுத்தவும். ரூ.8,32,78,029.00  மீட்டெடுப்புக்கு தேதியிட்ட 29.03.2022 தேதியிட்ட தர்ஸ்ரீ எண்.331/2018/ஆ3, பெயர்: மாதா எண்டர்பிரைசஸ் பஒச: 33825081422, TIN எண்: AGRPM0906ஈ என்ற கடிதத் துடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை அணுகியிருக்கின்றது வணிகவரித்துறை.

"எனக்கு தமிழ்நாட்டில் எந்தவொரு வியாபார நிறுவனமும் இல்லை. மத்தியப்பிரதேசம், டின் தயாள் நகரில் வைஷ்னவி எனும் மெடிக்கல் ஷாப் மட்டுமே நடத்தி வருகிறேன். எனக்கும் மாதா எண் டர்பிரைசஸ் எனும் நிறுவனத்திற் கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அந்த பான் எண் என்னுடையதே! அந்த பான் எண்ணை வைத்து இவ்வளவு பெரிய மோசடியில் ஈடு பட்டுள்ளனர்'' என பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு

Advertisment

elakai1

கடிதத்தையும்,TNGST சட்டம் 2017-இன் பிரிவு 79(1) இன் கீழ் 29.03.2022 தேதி யிட்டGST DRC-13 படிவத்துடன் செலுத்தவேண்டிய பணம் குறித்து எனது எஸ்.பி.ஐ. வங்கியாளர், சித்தி மூலம் எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதற்காக என்னு டைய விளக்கத்தைப் பகிர்கிறேன்: "நான் மாதா எண்டர்பிரைசஸின் உரிமையாளர் அல்ல, இந்த நிறுவனம் பற்றி எனக்குத் தெரியாது, இந்த நிறுவனத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு தமிழ்நாடு மாநிலத்தில் எந்த வணிகமும் இல்லை, எனவே தமிழ்நாடு மாநிலத்தில் கூறப்பட்ட  TIN எண் 33825081422 மற்றும் GCST எண் 138213 உட்பட எந்த TIN  எண்ணையும் நான் பெறவில்லை. அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ள  PAN எண் AGRPM0906C  என்னுடையது. மேலும்,  கடந்த 15 ஆண்டுகளாக இந்த PAN உடன் ITRஐ நான் தொடர்ந்து தாக்கல் செய்துவருகிறேன். இந்த PAN வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும்/செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அறி விப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி GSTIN எண் 23AGRPM0906C1ZR & 23 AGRPM 0906 C2ZQ  ஆகியவை சித்தி (மத்தியப்பிர தேசம்) இல் வணிக இடத்தைக் கொண்ட உரிமையாளர் வணிகங் களை நடத்துவதற்காக என்னால் பெறப்பட்டுள்ளன. மேற்கூறிய உண்மைகளிலிருந்து, மேற்கண்ட TIN எண்ணை வழங்குவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யும்போது, எனது  PAN எண்ணை யாரோ ஒருவர் மோசடியாகப் பயன்படுத்தியுள்ளார் என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, இந்த விஷயத்தில் தகுந்த விசாரணை நடத்துவதற்காக காவல் அதிகாரிகளிடம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறும், எனது வங்கியாளர்கள் மீது வெளியிடப்பட்ட குறிப்பிடப்பட்ட மீட்பு அறிவிப்பான ஜி.எஸ்.டி. -டி.ஆர்.சி-13ஐ விரைவில் நீக்கம்செய்ய ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள் கிறேன்.  -இப்படிக்கு சஜிதி மிஷ்ரா (சாவித்ரி மிஸ்ரா) பிராப், வைஷ்ணவி மெடிக்கல் ஸ்டோர்'' என்கின்ற கடிதத்தை மாநில வணிகவரித்துறைக்கு அனுப்பியிருக்கின்றார் சாவித்ரி மிஸ்ரா.

மாநில வணிகவரித்துறை, மதுரை கோட்ட இணை ஆணையருக்கு கடிதத்தை அனுப்பி கருத்தைக் கேட்டிருக்கின்றது. மதுரை கோட்டமோ தேனி துணை ஆணையருக்கு கடிதத்தை அனுப்பிவைக்க, அங்கிருந்து போடிநாயக்கனூருக்கு கடிதம் பறந்திருக்கின்றது. 

Advertisment

"போடிநாயக்கனூரில் ஏலக் காய் வியாபாரத்திற்காக இயங்கிய தாகக் கூறப்படும் மாதா எண்டர் பிரைசஸின் உரிமையாளர் பெயர் மணி,  TVKK நகர் நூறடி சாலை யைச் சேர்ந்த இவர்தான் சாவித்ரி மிஸ்ராவின் பான் எண்ணைக் கொண்டு TIN எண் 33825081422 பெற்று ஏலக்காய் வியாபாரம் செய்துவந்திருக்கின்றார்' என்கின்ற தகவலை மட்டும் உறுதிசெய்து மணியை இன்றுவரை தேடிவருகின் றது வணிகவரித்துறை. இதேவேளை யில், இந்த அளவுக்கு பெரிய வரி விதிப்பின் பின்னணி யார்? சாவித்ரி மிஸ்ராவின் பெயர்,  PAN எண்ணைக் கொண்டு மாதா எண்டர்பிரைசஸ் பதிவுசெய்யப்பட்டது எப்படி? வணிக வரித்துறையின் “சி” படிவங் கள் ஊழலால் பாதிக்கப்பட் டுள்ளதா?, இணைஆணையர் மற் றும் துணை ஆணையர் அளவுக்கு நிர்வாகத்தில் தவறு நடந்துள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

elakai2

சாவித்ரி மிஸ்ராவின் போராட்டத்தால் வணிகவரி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாதா எண்டர்பிரைசஸ் நிறுவனம் உள்ள முகவரியைத் தேடி அலைந்த பிறகுதான் தெரிந்துள்ளது அது போலியான முகவரி என்று. மாதா எண்டர்பிரைசஸ் உரிமை யாளரான மணியின் வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுதுதான் அவர் தினக்கூலி எனத் தெரியவந்திருக்கின்றது. வேறு வழியில் லாமல் மதுரைக்கோட்ட இணை ஆணையர் மணி மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். எனினும் தவறே செய்யாத சாவித்ரி மிஸ்ராவின் வங்கிக் கணக்கு இன்று வரை மூடப்பட்டே உள்ளது என்பதுதான் வேதனையான ஒன்று.

  "மாதா எண்டர்பிரைசஸை யார் உருவாக்கியது? மணி என்பவர் ஏலக்காய் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தினக் கூலியே? அவனுக்கு சாவித்ரி மிஸ்ராவின் பான் எண்ணைக் கொண்டு TIN  வாங்கிக் கொடுத்தது யார்? என்ற அடிப்படை தகவல் ஆராயப்பட்டதில் மாதா எண்டர்பிரைசஸ்போல் 33855081842 SRI VARI TRADERS Bodinayakanur, 33815081573 GARUDA TRADERS Bodinayakanur, 33365081869 GOWMARI TRADERS Bodinayakanur, 33405081847#SRIAYYAPPA AGENCY Bodinayakanur, 3825081422 MATHA ENTERPRISES Bodinayakanur, 33305081708 GREEN ENTERPRISES Thevaram, 33115081861 SHREE MEENAAKSHE & CO Bodinayakanur, 33755081800 ALAMELU MANGAI SPICES Bodinayakanur, 33685081499 SRIMURUGAN TRADERS Bodinayakanur உள்ளிட்ட ஏலக்காய் வியாபார நிறுவனங்களுக்கு [email protected] என்கின்ற அடையாளத்திலேயே TIN எண் உரிமம் தயாரித்து ஏலக்காய் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் எவரோ ஒருவரின் அடை யாளத்தை அரசு அதிகாரிகள் உதவியுடன் பல கோடிக்கு ஏலக்காய் வியாபாரம் செய்துள்ளது ஒரு மாபியா கும்பல். இதனால் அரசுக் கும் பல நூறு கோடிகள் வரி இழப்பு. பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒரே செல் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படி யெனில் பல கோடி ஏலக்காய் வர்த்தகத்தில் பயனடைந்தது யார்?'' என்கின்றார் நேர்மையான வணிகவரி அலுவலர் ஒருவர்.

தொடர் விசாரணையில்... "வரி ஏய்ப்பிற்கு இது மாதிரி யான போலி நிறுவனங்களை உருவாக்க, தன்னுடைய மொபைல் எண்ணையும், தன்னுடைய இமெயில் அடையாளத்தை பயன் படுத்தியதும் சரவணக்குமார் என்பவரே என்பது கண்டறியப் பட்டுள்ளது. சாதாரண பொதுஜனம் இதுபோல் வரி ஏய்ப்பிற் காக இது மாதிரி வெறொருவரின் பெயரில் உள்ள பான் எண் ணைக் கொண்டு நிறுவனங்களை உருவாக்க முடியாது. வணிக வரித்துறை அலுவலர்கள் உதவி இல்லாமல் இது நடந்திருக்காது. பல கோடி வரி ஏய்ப்பு நடத்திய நிறுவனங்கள் யாருக்காக இயங் கியது?  என்பதறிய சரவணக்குமாரை கைது செய்து விசாரித் தால் மட்டுமே இது சாத்தியம்' என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

சரவணக்குமார் கைது, விசாரணை மட்டுமே பல கோடிகளை மீட்டெடுக்கும். ஏலக்காய் மாபியாக்களையும் வெளிச்சம் காட்டும்