கோவை மாணவியின் தற்கொலையின் பின்னால் இருக்கும் உண்மைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் போலீசார். கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி மனீஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அதே சின்மயா ஸ்கூலில்தான் ஆசிரியராக இருக்கிறார். அவர், தற்கொலை செய்துகொண்ட மாணவியிடம் பேசும் ஆடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. (அதன் முக்கிய பகுதிகள்)
மனீஷா: ஹலோ, (மாணவியின் பெயரைக் குறிப்பிடுகிறார்) என்னைய வந்து உன்னோட சிஸ்டரா நெனச்சுக்கோ. தைரியமா சொல்லு... யார் மேல தப்பு இருந்தாலும் தப்புதான். எது ஆனாலும் உண்மையை ஓப்பனா சொல்லு.
மாணவி: மிஸ்... நான் யாருகிட்டயாவது சொல்லி ஆகணும் மிஸ். இல்லைன்னா எனக்கு பைத்தியம் புடிச்சிரும்போல இருக்கு மிஸ்.
மனீஷா: ஓ.கே. நீ மிதுன் மேல சொல்ற சம்பவம் என்னைக்கு நடந்தது?
மாணவி: சண்டே மிஸ். ஆடிட்டோரியம் 3-வது ஸ்டெப்ல வைத்து மிஸ்.
மனீஷா: நீ அப்பவே எனக்கு போன்பண்ணி சொல்லியிருக்கலாம்ல. இல்ல மேனேஜ்மெண்ட்ல சொல்லியிருக்கலாம்ல? சரி... நீ ஒரு ஸ்டூடண்ட்? நீ எதுக்கு அவருக்கு மெசேஜ் பண்றே ?
மாணவி: (இன்னொரு மாணவி பெயரைச் சொல்லி) அவ பண்ணினா மிஸ்... அதுனால தான் நானும்..
மனீஷா: அவ என்ன மெசேஜ் பண்ணா?
மாணவி: என்னைய கிஸ் பண்ணுங்க, கட்டிப் புடிங்கன்னு.
மனீஷா: ஒருநாளு வீட்டுக்கு வந்துட்டு... மனீஷா மிஸ்ஸைவிட மிதுன் சாரு ரொம்ப அழகாயிருக்குறாருன்னு நீங்க பேசிக்கிட்டிருந்ததை கேட்டுட்டு அமுதா மிஸ் உங்களை திட்டுனாங்களா இல்லையா?
மாணவி: யெஸ் மிஸ். ஆனா நான் அப்படி

மாணவி: யெஸ் மிஸ். ஆனா நான் அப்படிச் சொல்லலை..
மனீஷா: அன்னைக்கு ப்ரொஜெக்ட்டுக்கு வீட்டுக்கு வந்தபோது கூட... சார்தான் உங்கள விட ரொம்ப அழகாயிருக்கிறார்னு சொன்னீயா இல்லையா? நீ லிமிட்ஸ் தாண்டிப் பேசுறன்னு நான் சொன்னனா இல்லையா? கண்டினியூஸா ஹாய்... ஹாய்... ஹாய்னு மெசேஜ் பண்ணியிருக்கே? நீ அனுப்புன சாட் எல்லாமே என்கிட்டே இருக்கு.
மாணவி: இந்த ப்ராப்ளம் ஆனதுக்கப்புறம்தான் மேம் நான் அனுப்புனது .
மனீஷா: எந்த ப்ராப்ளம் ஆனதுக்கு பிறகு?
மாணவி: என்கிட்டே தப்பா நடந்துக்கிட்ட பிறகு?
மனீஷா: சரி அப்படி பண்ணிட்டாருன்னா, என்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கணும். எந்த மேடத்துக்கிட்டேயும் நீ ஏன் கம்ப்ளைண்ட் பண்ணலை?
மாணவி: பேரண்ட்ஸ்க்கு தெரிஞ்சுரும்ல்ல மேம்.
மனீஷா: உன்னோட பேரண்ட்ஸை கூட்டிட்டு வா. நான் மிதுன் சாரை கூட்டிட்டு வர்றேன். மீரா மேடம்கிட்ட போலாம், போலாமா?
மாணவி: எப்படி மேம் பேரண்ட்ஸ்கிட்ட?
மனீஷா: ஏன்? இந்த மாதிரி ஆயிருச்சுன்னு சொல்லு. உங்க பேரண்ட்ஸ்கிட்ட தானே சொல்றே? தப்பு யார் பண்ணினாங்களோ அவுங்க தண்டிக்கப்படணும். அவரு என் ஹஸ்பெண்ட்ங்கறதால தப்பிக்க வைக்கணும்னு நான் நினைக்கவே இல்லை. ஏன்னா நானும் ஒரு பொண்ணுதான். ஒரு மாஸ்டர் வீட்டுக்கு ப்ராஜக்ட் பண்ண தனியா வந்தா ஒரு மாதிரியா நீ பீல் பண்ணுவேன்னுதான் ரெண்டு மூணு கேர்ள்ஸ்ஸையும் வரச் சொன்னேன். ஆனா அடுத்த நாளு உன்னை வரச்சொல்லவேயில்லை, நீ வந்தே. நீ வந்தப்பவே "நீ எதுக்கு வந்தே?'ன்னு கேட்டனா? இல்லையா?
மாணவி: நீ வந்தா பெட்டரா இருக்கும்னு சத்தியமா அவர்தான் மேம் வரச்சொன்னாரு .
மனீஷா: சரி... நீ வைஷ்ணவ்கூட வெளிய போயிருக்கியா?
மாணவி: யெஸ் மிஸ்.
மனீஷா: உன்னோட விஷயம் எல்லாம் உன் பேரண்ட்ஸுக்கு தெரியுமா?
மாணவி: தெரியும் மிஸ்.
மனீஷா: நீ கிளாஸை ரெகுலரா அட்டண்ட் பண்றதே இல்லை. நான் கூட உன்னை கூப்பிட்டுக் கேட்டனா?
மாணவி: யெஸ் மிஸ்.
மனீஷா: அப்ப நீ என்ன சொன்னே? எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை. வீட்டை விட்டு அப்பா போயிட்டாரு. கடை திறந்து ரொம்ப நாளாச்சு. அம்மாவுக்கு வண்டிக்குத் துணையா நான் நிக்கறேன்னு நீ சொன்னதுக்கு, இனி இந்த மாதிரி காரணத்தை இன்னொரு முறை என்கிட்டே சொல்லக் கூடாதுன்னு நான் சொன்னனா?
மாணவி: உண்மைதான் மிஸ்.
மனீஷா: சரி. சார், மோசமா சாட் பண்ணி இருந்தாருன்னு சொன்னீல்ல.... அந்த சாட் வச்சுருக்கியா? ஏன் டெலிட் பண்ணினே? அது எவிடென்ஸ் தானே?
மாணவி: இல்லை மிஸ். இதைய பெருசுபடுத்த வேண்டாம்னுதான் மேம். நான் குழந்தையா இருக்கும் போதே இது மாதிரி நிறைய அப்யூஸ்க்கு ஆளாகியிருக்கேன் மிஸ்.
மனீஷா: ஒண்ணு நல்லா தெரிஞ்சு வச்சுக்கோ? நம்மள நாமதான் பாத்துக்கணும். இந்த மாதிரி எல்லாம் ஆயிருச்சுன்னு. அந்த டைம்ல ஓங்கி அவனை ஒரு அறை விடவேண்டியதுதானே ..?
மாணவி: எனக்கு பயமா இருந்துச்சு மிஸ்.
மனீஷா: என்ன பயம் உனக்கு? பன்னெண்டாவது போகப்போறே?
மாணவி: எப்படிங்க மிஸ்? மிதுன் சாரை எப்படிங்க மிஸ் அறையறது? ஏன் சார் இப்படி பண்ணீங்கன்னு கேட்டேன். சாரும்தான் இதையவே கேட்டாரு. என்னைய ஓங்கி அறைஞ்சு இருக்கலாம்லன்னு. என்னமோ தப்பே என் மேல மாதிரின்னுதான் பேசுறீங்க?
மனீஷா: நான் உன் மேல பழியைப் போடலை. இது சாதாரணமான இஷ்யூ கெடையாது, இதை மேம்க்கு கொண்டுபோகலாம் சரியா?
மாணவி: நான் என்ன மிஸ் தப்பு பண்ணினேன்?
மனீஷா: நீ எதுக்கு மிதுன் சாருக்கு மெசேஜ் பண்ணே? ஒரு டீச்சருக்கு அனுப்புற மாதிரியா மெசேஜ் பண்ணியிருக்கே?
மாணவி: அவருதான் மிஸ்.. பேர் சொல்லி கூப்புடச் சொன்னாரு. சார்னு மட்டும் கூப்புடாதேன்னு சொன்னாரு மிஸ். அவருதான் மிஸ் மொதல்ல எனக்கு போன் பண்ணி கூப்பிட்டாரு.
மனீஷா: சரி. இப்ப ரிலாக்ஸா படுத்துத் தூங்கு. நாளைக்கு மீரா மேம்கிட்ட இந்த விஷயத்தை கொண்டுபோலாம். நான் உன்மேல மட்டும் தப்பு சொல்லலை. நான் அவருகிட்டயும் கேட்டேன். அவரும் சில விஷயம் சொல்றாரு. நீ சொல்றது சரி, அவரு சொல்றது பொய்யின்னும் சொல்ல முடியலை. அதனால ரெண்டு பேரையும் நேருக்கு நேரா வச்சு கேட் டாத்தானே உண்மை என்னான்னு தெரியும்? உண்மையாவே அவரு தப்பு பண்ணியிருந்தா அவரை பனிஷ் பண்ணித்தான் ஆகோணும். புரியுதா? என் ஹஸ்பண்ட் தப்பு பண்ணிட்டாரே.. அவரை காப் பாத்தணும்னு நினைக்கிற டைப் நான் கிடையாது. ஆனா நீ பொய் சொல்லியிருந்தா நீதான் பாதிக்கப்படுவே? நான் இப்ப அவருகிட்ட என்ன நடந்தது? ஏது நடந்ததுன்னு கேட்கப் போறேன்.
மாணவி: நானும் லைன்லேயே இருக்கேன் மிஸ்.
மனீஷா: தேவையில்லை. அவருகிட்ட என்ன ஏதுன்னு கேட்டுக்கறேன். மீரா மேம்கிட்ட போனா ஒரு சொல்யூஷன் கிடைக்கும். யார் தப்பு பண்ணி னாங்கன்னு தெரிஞ்சா அவுங்களை பனிஷ் பண்ணிரலாம். மேம் கூப்புட்டு கேட்டா கரெக்ட்டா சொல்லுவே இல்ல. நான் மேம் கிட்ட பேசிட்டு என்ன சொல்றாங்கனு பார்க்கலாம். ஓ.கே?
மாணவி: ஓ.கே. மேம்.
...இப்படி முடிகிறது அந்த ஆடியோ.
ஆசிரியை மனீஷா -மாணவியின் இந்த ஆடியோ பேச்சு மகளிர் போலீசாரை அழ வைத்திருக்கிறது.
மாணவி மிகத்தெளிவாகத் தன் விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆசிரியையின் கேள்விகளில் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான கண்டிப்பான குரல் வெளிப்படுகிறது. விவகாரம் வெளியானதி-ருந்தே மாணவிக்குப் பல தரப்பு நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. பள்ளி நிர்வாகம், பெற்றோருக்குத் தகவல், ஆசிரியை விசாரணை... என தொடர்ச்சியான நெருக்கடிகளும் மிரட்டலும் மாணவியைத் தற்கொலை நோக்கி தள்ளியுள்ளது.
இந்நிலையில்... மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விசாரணை நடைபெற்றது .
அந்த ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் மல்லிகா செல்வராஜ், சரண்யா மற்றும் ராமராஜ் ஆகியோர், கைதான மிதுனின் மனைவி மனீஷாவிடமும், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர் .
இந்த விசாரணை முழுதும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணையை முடித்து வெளியே வந்த ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, "13 சாட்சிகளிடம் விசாரணை செய்துள்ளோம். அந்த அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்'' என்றார் உறுதியாக.
ஆசிரியராய்ச் செயல்படவேண்டிய மிதுன், அதைச் சரியாய் செய்யாததால் நாடே அலறிக் கொண்டிருக்கிறது.