வியாழனன்று இரவு. சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கு இன்பார்மராக இருந்தவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்க, கொலைக்குக் காரணமானவர்கள் என 6 நபர்களை கைது செய்தது காவல்துறை. அவர்கள்தான் கொலையாளிகளா? புலனாய்வில் இறங்கினோம்.

ssஅ.தி.மு.க அரசின் லாக்டவுன் நடைமுறையில் இருந்தபோது, சாத்தான்குளம் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு, படுகொலை நிகழ்த்தப்பட்ட ஜெயராஜ்- பென்னிக்ஸ் தந்தை- மகன் கொலை வழக்கு நடந்தேறி ஏறக்குறைய ஒரு வருடத்தை நெருங்க வுள்ள நிலையில், மீண்டும் ஒரு அசாதாரண நிகழ்வு அங்கு நடந்தேறி யுள்ளது. இந்த முறை கொலை செய்யப்பட்டவன் சாத்தான்குளம் தைக்கா தெருவினை சேர்ந்த போலீஸ் இன்பார்மர் மார்ட்டின் என்பவன்.

இவனுக்கும் இதே பகுதியைச் சேர்ந்த மைதீன் மீரான் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், 10.06.2021 இரவு மார்ட்டின் தனது சகோதரரான மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோந்த பாபு சுல்தான், மைதீன் மீரான், புகாரி, ரஸ்ருதின், பிலால், பாரீஸ், காதர், ஜிந்தா, மகதும், பெட்ரோல் செந்தில், அப்துல் சமது மற்றும் சிலர் மார்ட்டினை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மார்ட்டினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான் குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் கொலையில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்தது காவல்துறை என்றது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.

Advertisment

441

"மார்ட்டின் கொலைக்குக் காரணமாக கொடுக்கல் வாங்கல் பிரச்சினையைக் காரணம் காட்டி விவகாரத்தை அப்படியே அமுக்குகின்றது காவல்துறை. கண்டிப்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் காரணமாகத்தான் கொலை செய்யப்படலாம் என்றால் இதற்குமுன் பல தடவை கொலை முயற்சி நடந்திருக்க வேண்டும். காரணம், இத்தகைய பிரச்சினைகள் நிறைய இருந்தும் இதுநாள் வரை அவனை யாரும் நெருங்கியது கிடையாது. போதாக் குறைக்கு போலீஸ் இன்பார்மர் வேறு.! எந்நேரமும் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனிலேயே கிடப்பான்.

ஸ்டேஷனில் அவனுக்குத் தெரியாத போலீசாரே இல்லை.! ஸ்டேஷனில் அவனைப் பார்த்து, "இந்த மொபைல் நல்லாருக்குலே' என்றால் சட்டென அந்த மொபைலிலுள்ள அவனுடைய சிம் கார்டை கழட்டி விட்டுவிட்டு, அந்த மொபைல் போனை அவரிடமே கொடுத்து விட்டு நடையைக் கட்டுவான். போலீசாருக்கு தேவையான சகலத்தையும் செய்து கொடுப்பான். பெண்கள் உட்பட.!

Advertisment

ssamy

"எனக்கு முப்பது, நாற்பது டிஎஸ்பி-யைத் தெரியும். சுமார் 50 இன்ஸ்பெக்டரைத் தெரியும். அது போக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எனக்குத் தெரியாத போலீசாரே கிடையாது. எதுன்னாலும் செய்வேன்'' என்பான். முன்பு சிப்காட் இன்ஸ்பெக்டராகவும், தற்பொழுது புட்செல் இன்ஸ்பெக்டராக உள்ள தில்லை நாகராசன், அவனுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லுமளவிற்கு நெருக்கம். இதனால் யாரும் அவனை பகைச்சுக்க மாட்டாங்க. போலீசாரே கைகட்டி வாய்பொத்தி நிப்பாங்க.

இதற்குமுன் இங்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு இவன் நெருக்கமாக இருந்தான். இவன்மூலம் வெளி விவகாரங்களுக்கான பண வசூலே நடைபெற்றுள்ளது.. இது சாத்தான்குளத்திற்கே தெரியும். இப்பொழுது இன்ஸ்பெக்டராக பெர்னாட் சேவியர் வந்தபிறகு, ஸ்டேஷன் பக்கம் வராமல் கொஞ்சம் அடக்கி வாசித்தான் என்றாலும், போன் மூலமே ஸ்டேஷன் பஞ்சாயத்துகளை செய்து கொடுத்து கொழுத்தப் பணத் தையும் பெற்றுள் ளான். இது குறித்து உளவுத்துறைக்கும், தனிப் பிரிவிற்கும் தெரியுமே'' என்கிறார் சாத் தான்குளம் துணைச்சரக போலீஸ் ஒருவர்.

ss

சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை படுகொலை வழக்கிற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அனைத்து தரப்பினராலும் கண்காணிக்கப் பட்ட நிலையில், தினசரி நடைபெற்ற காவல்துறை பஞ்சாயத்துக்கள் முடங்கி யுள்ளது. இவ்வேளையில், "மார்ட்டினிட மிருந்து மைதீன் மீரான் என்பவர் வட்டிக்குக் கடனாக பணத்தை வாங்கி யிருந்தார். அதற்குண்டான வட்டியையும், அசலையும் செலுத்திவிட்டார். மீண்டும் வட்டி, அசல் கேட்டு கொலை மிரட்டல் விடுகையில் நான் என்னவென்று கேட் டேன். என்னையும் மிரட்டுகின்றாரென" தற்பொழுது கொலையாளியாகவுள்ள பாபு சுல்தான், சாத்தான்குளம் போலீசாரிடம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாத இறுதியில் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக மார்ட்டினை அழைத்து கையையும், காலையும் உடைத்து 294(பி), 506(2) ஆகிய வழக்குகளில் கைது செய்து நீதிபதி சரவணனிடம் கொண்டு சென்றனர் சாத்தான்குளம் போலீசார். "சார், ஜெயராஜ்-பென்னிக்ஸை கொன்றது போல் என்னைக் கொல்ல நினைக்குது போலீஸ்'' என நீதிபதியிடம் மார்ட்டின் கூறிய நிலையில்... நீதிபதியோ, "எதுக்கு நமக்கு இந்த பிரச்சினை..?'' எனக் கருதி ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

உடனடியாக மருத்துவமனையில் படுத்துக்கொண்ட மார்ட்டின், "ஜெயராஜும்- பென்னிக்ஸும் எப்படி அடிபட்டாங்க தெரியுமா..? எதனால் அடிபட்டாங்க தெரியுமா..? அவங்களை போலீஸ் பிடிச்சுட்டுப் போன அன்னைக்கு நான்தான் தகவல் கொடுத் தேன். அன்னைக்கு நைட்டுக்கும், அடுத்த நாள் முழுவதும் இது தொடர்பாக என்னிடம் எத்தனை போலீஸ் காரங்க பேசியிருக்காங்க தெரியுமா? இந்த போலீஸ்காரங்க அத்தனை பேருக்கும் என்ன வெல்லாம் செய்திருக்கேன். அத்த னையும் வெளியில் சொன்னால் அசிங்கம்'' என சாத்தான் குளம் போலீசாரின் கதைகளை வாசித்து வந்ததும் குறிப் பிடத்தக்க ஒன்று.

sa

"மார்ட்டின் மரணம் சந்தேகத்திற்குரியதே! கொலையுண்ட மார்ட்டினுக்கும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கும் நெருக்கமான உறவு இருந்ததை அனைவரும் அறிவார்கள். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு ஜெயராஜ்-பென்னிக்ஸை போலீஸார் அழைத்து வந்ததிலிருந்தே மார்ட்டினுடன் தங்களுடைய செல்போனில் பேசியிருக்கின்றனர். இரட்டைப் படுகொலையில் சி.பி.ஐ. வழக்கின் இரண்டாம் குற்றவாளியான எஸ்.ஐ. பால கிருஷ்ணனும், மூன்றாம் குற்றவாளியான எஸ்.ரகுகணேஷூம் இதற்கு சி.பி.ஐ. தயாரித்த குற்றப்பத்திரிகை ஆவணமே சாட்சி.

இதில் 18-06-2020 அன்று இரவு 08:08 மணியளவில் கொலையுண்ட மார்ட்டினிடமிருந்து எஸ்.ஐ.பாலகிருஷ்ணனுக் கும், 08:11 மணியளவில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனிடமிருந்து மார்ட்டினுக்கும் கால் சென்றுள்ளது. அடுத்து 19-06-2020 அன்று மதியம் 13:23 மணியளவிலும், 23-06-2020 அன்று நள்ளிரவில் 01:35 மணியளவிலும், அடுத்து அதிகாலை 03.04, 03:23, 06.39 மற்றும் 06.50 மணியளவிலும் மாறி மாறி பேசி யுள்ளனர் இருவரும் மூன்றாம் குற்றவாளியான ரகுகணேஷும், மார்ட்டினும் 18-06-2020 அன்று காலை 11:10 மற்றும் 11:19 மணியளவில் பேசியுள்ளதாக ஆவணம் குறிப்பிட்டுள்ளது.

இதுபோக, நீதிமன்றத்திலே முதன்மை குற்றவாளியான ஸ்ரீதர், "35 லட்சம் கேட்டு யாரோ ஒருவரிடம் போனில் மிரட்டியதாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தார் கொடுத்த புகாரும் நிலுவையிலுள்ளது நினைவுகூர்தல் வேண்டும். அந்த போன், கொலையுண்ட மார்ட்டினிடம் பேசியிருக்கலாம் அல்லவா? ஜெயராஜ்-பென்னிக்ஸ் படுகொலையில் ஏதேனும் ஆவணமோ, ஆதாரமோ ஏதோவொன்று மார்ட்டினிடம் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் ஏதோ ஒரு பண விவ காரம் இவர்களுக்குள் இருந்திருக்க வேண்டும். முதற்கட்டமாக கடந்த ஆகஸ்டில் அவன் தாக்கப்பட்டதும், இந்த முறை கொலையுண்டதும் பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. எங்கிருந்தோ வந்த உத்தரவின் அடிப்படையிலேயே இது நடந்திருக்கலாம். இதனை தெளிவுபடுத்த வேண்டியது காவல்துறையின் கடமை'' என்கின்றார் ஜெயராஜ்-பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் குடும்ப வழக்கறிஞரான ராஜீவ் ரூபஸ்.