உற்சாக கலெக்டர்கள்! அதிருப்தி அதிகாரிகள்! -டிரான்ஸ்பர் சர்ச்சை!

ias

மாவட்ட கலெக்டர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொத்துக் கொத்தாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 27 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுடன் 15-ந் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்த ஆலோசனையில், பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படவும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யவும் அவர்களுக்கு அறிவுறுத்தினார் ஸ்டாலின். மேலும், மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உண்மையான அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். வளமான தமிழகத்திற்கான அரசின் 7 இலக்குகளை அடைய உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று

மாவட்ட கலெக்டர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொத்துக் கொத்தாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 27 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுடன் 15-ந் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்த ஆலோசனையில், பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படவும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யவும் அவர்களுக்கு அறிவுறுத்தினார் ஸ்டாலின். மேலும், மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உண்மையான அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். வளமான தமிழகத்திற்கான அரசின் 7 இலக்குகளை அடைய உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

IAS

முதல்வரின் ஆலோசனை உற்சாகம் தந்துள்ள அதே வேளையில், அதிகாரிகளின் மாற்றத்தில் அதிருப்திகளும் தொடர்கின்றன. புதிய ஆட்சி பொறுப்பேற்கும் போது, நிர்வாக வசதிக்காக அதிகாரிகள் மாற்றம் என்பது இயல்பானதுதான். ஆனால், முந்தைய ஆட்சியில் இருந்த அதிகாரிகளைக் கையாள்வதில் தி.மு.க அரசின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கிறது என்கிறார்கள் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

நம்மிடம் அவர்கள், "அதிகாரிகள் மாற்றத்தில் முதல்வரை சுற்றியுள்ள மூன்று அதிகாரிகளின் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கிறது. அ.தி.மு.க.வில் ஊழல் அதிகாரிகளாக பரிணமித்த பலர் நல்ல பதவிகளிலும், நேர்மையான அதிகாரிகள் பலர் இப்பவும் சாதாரண பதவிகளிலும் நியமிக்கப்பட்டு வருவதாக சர்ச்சை எழுகிறது.

அமைச்சர்கள் தங்களது துறைக்கும், மாவட்டத்துக்கும் தாங்கள் விரும்பும் அதிகாரிகள் வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல, பெரிய இடத்து மாப்பிள்ளையும் நல்ல அதிகாரிகள் சிலருக்கு சிபாரிசு செய்திருக்கிறார். ஆனால், அந்த அதிகாரிகள் மீது, அந்த புகார்கள் இருக்கிறது; இந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறது என சொல்லி தட்டிக் கழித்துவிடுகிறார், அதிகாரிகள் மாற்றத்தைக் கவனிக்கும் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி! மற்ற அதிகாரிகளை குறை சொல்லும் இவர் மீது குற்றச்சாட்டே இல்லையா? புகார்தான் இல்லையா?

இவர் ஐ.ஏ.எஸ். தேர்வானதும் பயிற்சி மையத்தில் 6 மாதம் பயிற்சி எடுக்கிறார். அப்போது இவரால் பாதிக்கப்பட்ட ஒரு அதிகாரி இவர் மீது வில்லங்கமான புகார் கொடுக்கிறார். அது குறித்து விசாரணையும் நடக்கிறது. அப்போது, புகார் உண்மைதான் என தெரிய வருகிறது. புகார் கொடுத்த அதிகாரி தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.சாக இப்போதும் இருக்கிறார். அதேபோல புகாரை பதிவு செய்த பயிற்சி ஆசிரியர்களும் உயிருடன்தான் இருக்கிறார்கள்.

இந்தப் புகார் இருந்ததனாலேயே, 4 வருடத்தில் கிடைக்க வேண்டிய கலெக்டர் வாய்ப்பு இவருக்கு மட்டும் கிடைக்கவில்லை. பிறகு, பல முயற்சிகளை மேற்கொண்டு தன் மீதான புகாரை ஒரு வழிக்கு கொண்டு வந்துவிடுகிறார் அவர். அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் கலெக்டர் வாய்ப்பே அவருக்கு கிடைக்கிறது.

இப்படிப்பட்ட இவர் மற்ற அதிகாரிகளை குறை சொல்வது என்ன நியாயம்? அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகாரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட பலரையும், தனது பேட்ச்அதிகாரிகளையும் தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் நல்ல பதவியில் நியமித்திருக்கிறாரே, இதுதான் நேர்மையின் அடையாளமா? இப்படிப்பட்ட மாற்றங்களினால் தி.மு.க. ஆட்சிக்குத்தான் கெட்டப்பெயர்''’என்கிறார்கள்.

மேலும் நாம் விசாரித்தபோது, "ஐ.ஏ.எஸ். அதிகாரிவினய் துடிப்பான அதிகாரி. கடந்த ஆட்சியில், சேலம் மாவட்டம் பட்டு வளர்ப்புத் துறையில் இயக்குநராக முடக்கப்பட்டிருந்தார். தற்போதைய மாற்றலில் அவருக்கு சர்வே செட்டில்மெண்ட் துறை ஒதுக்கப்பட்டதில் சீனியர்களுக்கே வருத்தம் உண்டு. தவிர, மாற்றலில் குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை. சேலம் கலெக்டராக இருந்த ராமனை ஆர்டிக்கல்சர் மற்றும் ப்ளாண்டேஷன் கார்ப்பரேசனின் இயக்குநராக நியமித்தனர். ரெண்டே நாளில் அவரை மியூசியத்திற்கு மாற்றினார்கள். ஆர்டிக்கல்சர் கார்ப்பரேசனின் இயக்குநராக பிருந்தாதேவியை நியமித்தனர். இந்த பொறுப்பில் கலெக்டராக இருந்து அனுபவம் பெற்ற சீனியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் புதியவரான பிருந்தாதேவிக்கு இன்னும் கலெக்டர் அனுபவம் கிடைக்கவில்லை. அவர் எப்படி மாவட்ட கலெக்டர்களுடன் விவாதிப்பார்? இப்படி நிறைய குழப்பங்கள் இருக்கிறது‘’ என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் அமைச்சர்களிடமும் சீனியர் ஐ.ஏ.எஸ்.களிடமும் அதிகரிக்கும் அதிருப்தியினை முதல்வர் கவனிக்க வேண்டும்' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

nkn190621
இதையும் படியுங்கள்
Subscribe