Advertisment

பொற்பனைக்கோட்டை அகழாய்வு! அகழாய்வு தொடங்கியது!

ss

மிழ்நாட்டில் புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளை வெளிக்கொண்டுவந்து ஆவணப்படுத்தி, தமிழர்களின் தொன்மையான வர லாற்றை வெளிப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டிவருகிறது.

Advertisment

அந்த வகையில் கீழடி, பொருணை உள்பட பல இடங்களில் நடத்தப்படும் அகழாய்வில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளை பொதுமக்கள் பார்வையிட வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

ff

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் மூலம், “"தமிழ்நாட்டிலேயே அதிகமான வரலாற்றுத் தொன்மச் சான்றுகள் நிறைந்து கிடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் உள்ள பொற் பனைக்கோட்டை என்பது சற்றும் சிதிலமடையாத சங்ககாலக் கோட்டை. இதற்கு தமிழி கல்வெட்டு மற்றும் மேற் பரப்பில் கிடைத்த செங்கல், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்பு

மிழ்நாட்டில் புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளை வெளிக்கொண்டுவந்து ஆவணப்படுத்தி, தமிழர்களின் தொன்மையான வர லாற்றை வெளிப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டிவருகிறது.

Advertisment

அந்த வகையில் கீழடி, பொருணை உள்பட பல இடங்களில் நடத்தப்படும் அகழாய்வில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளை பொதுமக்கள் பார்வையிட வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

ff

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் மூலம், “"தமிழ்நாட்டிலேயே அதிகமான வரலாற்றுத் தொன்மச் சான்றுகள் நிறைந்து கிடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் உள்ள பொற் பனைக்கோட்டை என்பது சற்றும் சிதிலமடையாத சங்ககாலக் கோட்டை. இதற்கு தமிழி கல்வெட்டு மற்றும் மேற் பரப்பில் கிடைத்த செங்கல், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்பு உருக்குக் குழாய்கள், சென்னாக் குழிகள் போன்ற ஏராளமான சான்று கள் கிடைத்துள்ளன. இதை வைத்து அங்கு ஒரு மன்னன் வாழ்ந்த அரண்மனை மண்ணடியில் புதைந்துள்ளது. அதனை அகழாய்வு செய் தால் தமிழர்களின் வரலாறு மேலும் வலுப்படும்''’என்று வாதிட்டு அகழாய்வு செய்ய உத்தரவு பெற்றனர்.

அதன்பிறகு மத்திய தொல்லியல் துறை அனுமதி பெற்று சென்னை திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் இனியன் முதல் கட்ட அகழாய்வு செய்து, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மணிகள், தமிழி எழுத் துடன் கூடிய பானை ஓடுகள் என ஏராளமான தொல்லியல் சான்றுகளை வெளிக்கொண்டு வந்தார். தற்போது இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வுப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

ff

இதன் அடிப்படையில் அந்த இடத்தில் மேலும் அகழாய்வு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்த நிலையில் மத்திய அரசு அனுமதி கிடைத்தது. அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொள்கிறது. அதற்கான இடத் தேர்வுகளை தொல்லியல் துறை இயக்குநர் காந்தி உத்தரவின் பேரில், தொல்லியல் துறை அகழாய்வில் சிறப்பாக செயல் பட்டுவரும் ஆய்வாளர்கள் மூலம் நடத்தப்பட்டது, இறுதியில் நீராழிக் குளத்தின் மேற்குப் பகுதியில் அரண்மனைத் திடல் என்ற இடத்தில் அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான முதல் கட்டப் பணிகள் முடிந்துள்ள நிலையில், மே 20-ஆம் தேதி சனிக்கிழமை காலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் தொல்லியல் துறை இயக்குநர் காந்தி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தலைமையில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் பொற் பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,

"பொற்பனைக்கோட்டை அகழாய்வு பெரிய திருப்பங்களை கொடுக்கப்போகிறது. இதுவரை நடந்த அகழாய்வுகளில் வாழ்விடம், புதைவிடங்கள் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் பொற்பனைக்கோட்டையில் மிகப்பெரிய கோட்டை உள்ளது. அதனை அகழாய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான உத்தரவைப் பெற்று தற்போது பணிகள் தொடங்கி உள்ளது.

இங்கு ஏற்கனவே தமிழி கல்வெட்டு கிடைத்துள்ளது, கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் தமிழி எழுத்து கிடைத்துள்ளது. இரும்பு எச்சங்கள் கிடைத்திருப்பதால் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது நடக்க உள்ள அகழாய்வில் மேலும் ஏராளமான சான்றுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கிடைக்கும் பொருட்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும். இதற்கான செலவினங்களை தடையின்றி தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும். இந்த இடத்தை அகழாய்வு செய்ய தொடர்ந்து முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகள்'' என்றார். நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சின்னத்துரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பொற்பனைக்கோட்டை நீராவிக்குளத்தில் கிடந்த வீர நடுகல்லில்... பொன்கொங்கர் விண்ணகோன் காலத்தில் அதவனூரைச் சேர்ந்த கணங்குமரன் என்ற வீரன் ஆநிரைப் பூசலில் பசுக்கூட்டத்தை கைப்பற்றி இறந்ததால் எடுக்கப்பட்ட நடுகல் என்பது தெரியவந்துள்ளது. கொங்கு என்ற வார்த்தை கொங்கு நாட்டினைக் குறிப்பதாகும். அந்த சொல் கல்வெட்டுகளில் வெளிப்படுவது இதுவே முதன்முறையாக உள்ளது. இந்தக் கோட்டையை பொன்பரப்பினான் என்ற அடைமொழியினைக் கொண்ட பாண அரசகுல குறுநில மன்னன் கட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

nkn270523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe