"எந்த வம்புதும்புக் கும் போகாத, வில்லங்க விவ காரத்தில் சிக்காத சமுதாய மக்கள் என்றுதான் இதுவரை யிலும் பெயரெடுத்து வந்திருக் கிறோம். இன்றோ, "சௌராஷ்ட்ரா கிளப்பில் முறை யற்ற செயல்கள் நடக்கின் றன'’என்று முதலமைச்சர் வரையிலும் புகார் அளிக் கின்ற நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம்''’என்று நம்மிடம் வேதனையைப் பகிர்ந்துகொண்டனர், எம்.கே. அமர்நாத், பி.எஸ்.அமர்நாத் மற்றும் மோகன் போன்ற அச்சமுதாய பிரமுகர்கள். என்ன விவகாரம் இது?

புலம்பெயர் இனம்!

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்ட்ரா தீபகற்ப பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் சௌராஷ் டிரர்கள். திப்பு சுல்தானியர் களின் அச்சுறுத்தல் காரண மாக, 1025-லிருந்து அத்தீபகற்ப பகுதியிலிருந்து வெளியேறி பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தனர். பாமினி சுல்தான்கள் விஜயநகரப் பேரரசை ஆக்கிரமித்ததும், 1575-க்குப் பிறகு, தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்ட தமிழ் நாட்டின் மதுரை, கும்ப கோணம், சேலம், தஞ்சாவூர், பரமக் குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற பகுதிகளில் குடியேறினர்.

sclub

Advertisment

மன்னர் திருமலை நாயக்கர் ஆண்ட 1623-1659 காலகட்டத்தில், பட்டுநூல் நெய்தலுக்காக மதுரைக்கு அழைத்து வரப்பட்ட சௌராஷ்ட் ரர்களுக்கு, அப்போது வீடுகளெல் லாம் கட்டிக் கொடுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சௌராஷ்ட்ரர்கள் இருந் தாலும், மதுரையில்தான் அதிகமாக சௌராஷ்ட்ரா குடும்பங்கள் உள்ளன.

பொழுதுபோக்கும் நல்ல நோக்கமும்!

காலப்போக்கில், பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி, மதுரையில் பெரும் செல் வந்தர்களாகிவிட்ட சௌ ராஷ்ட்ரா சமுதாயத்தினர் சிலர், தாங்கள் இளைப்பாற வும், தொழில்கள் குறித்து கலந்துபேசவும், சமுதாய மக்களின் கல்வி முன்னேற் றத்துக்கு வழிவகுக்கவும், நல்லமுறையில் பொழுது போக்கவும், 1906-ல் மதுரை யில் ஆரம்பிக்கப்பட்டது தான் சௌராஷ்ட்ரா கிளப்.

Advertisment

சௌராஷ்ட்ரா கிளப் விதிமுறைகளின்படி, பெரும் பணக்காரர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். புதி தாக ஒருவர் உறுப்பினராக விரும்பினால், அவர் பெரிய வியாபாரியாகவோ, சமு தாயத்தில் நல்ல பெயர் எடுத் திருப்பவராகவோ இருக்க வேண்டும். அவர்களும்கூட, தேர்தல் நடத்தப்பட்டு, கிளப் உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் ஆதரவு இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில், மைனஸ் வாக்கு ஒவ்வொன்றும் நான்கு வாக்குகள் மதிப் புள்ளவை. அதனால், 80 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறுபவரே கிளப் உறுப்பினராக முடியும்.

கிளப் தேர்தலில் இத்தனை கெடுபிடி எதற்கென்றால் -கிளப் என்றாலே சீட்டாடு வது நடக்கும். வசதியில்லாத ஒருவர் உறுப்பினராகி, சீட்டு விளையாட்டு மூலமே பணம் சம்பாதிக்க முடியும் என்ற தப்பெண்ணத்தில் கை யிருப்பை இழந்து, கடன் வாங்கி சூதாடி, அவருடைய குடும்பம் நிரந்தரக் கஷ்டத் துக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான். சௌ ராஷ்ட்ரா கிளப் இந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் நடந்ததாலேயே, சௌ ராஷ்ட்ரா சமுதாயத்தினரால், மதுரையில் பெயர் சொல்லும் அளவுக்கு சில கல்வி நிறுவனங் களை உருவாக்க முடிந்தது.

ss

கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து!

நூறு வருடங்களுக்கு முன், சமுதாய மூதாதையர் உயரிய நோக்கத்துடன் ஆரம்பித்த சௌராஷ்ட்ரா கிளப், கடந்த பத்தாண்டு கால நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கைகளால், நற்பெயரை இழந்துள்ளது. காரணம் -கிளப் நிர்வாகத்துக்குள் அரசியலைப் புகுத்தியதோடு, சௌராஷ்ட்ரா சமுதாயத்தவ ரான முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், தனது பினாமியான கே.ஏ.வெங்க டேஸ்வரனை, செயலாளராகக் கொண்டுவந்ததுதான்.

கிளப் உறுப்பினர் அல்லா தவர்கள் சீட்டு விளையாடுவதும், சட்டத்தை மீறி கிளப்பில் மது அருந்துவதும், சீட்டாட்டத்தில் பெரும்தொகை வைத்து ஆடு வதும், கந்துவட்டிக்காரர்கள் கிளப்புக்கு வந்து வட்டிக்கு பணம்விட்டு சம்பாதிப்பதும், கட்டப் பஞ்சாயத்தில் தகராறு முற்றி கைகலப்பு ஏற்படுவதும், அதனால், பல குடும்பங்கள் அவதிப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. இத்தகைய முறைகேடு களைப் பண்ணுவதற்கு வசதியாக, பதிவுத்துறை சட்டப்படியோ, சௌராஷ்ட்ரா கிளப் விதிமுறை களுக்கு உட்பட்டோ, நிர்வாகிகள் யாரும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. சொசைட்டி ஆப் ரிஜிஸ்ட்ரேஷன் படியும் தேர்தல் நடைபெறவில்லை. பதவி ஆசை காரணமாக, முறைப்படி தேர்தல் நடத்தப்படாமல், நடத்தப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிர்வாகம் சட்டப்படி செல்லத்தகாதது.

ss

அரசியல் மிரட்டல்!

அப்போது அமைச்ச ராக இருந்த ஆர்.பி. உதயகுமார் துணை யோடு, மாவட்ட பதி வாளரை மிரட்டி கிளப் விதிமுறைக்கு மாறாக, தலைக்கு ரூ.25000 வாங்கிக் கொண்டு, புதிதாக 210 உறுப்பினர் களைச் சேர்த்தனர். இதனைத் தட்டிக்கேட்ட பழைய பாரம்பரிய உறுப்பினர்களை, அடியாட்களை வைத்து மிரட்டினர். இதுகுறித்த வழக்கு மேல்முறையீடு செய்யப் பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த கிளப்பில் சீட்டு விளையாட்டு, டென்னிஸ், ஷெட் டில்காக், கேரம் என்றெல்லாம் விளையாடுகிறார்கள். பணமே பிரதானமாக இருக்கும். சீட்டு விளையாட்டில் டேபிளுக்கு இவ்வளவு என வசூலிப்பார்கள். தோராயமாக மாதம் ஒன்றுக்கு ரூ.7 லட்சம் வரை கிளப்புக்கு வருமானம் வருகிறது. ஆனால், 2012-ல் இருந்து கணக்கு எதுவுமே காட்டியதில்லை. கணக்கு கேட்டால், அரசியலை முன் னிறுத்தி மிரட்டி அவர்களை கிளப்பிலிருந்து வெளியேற்றிவிடு கிறார்கள். கிளப்பில் பை-லா கடைப்பிடிக்கப்படுவதில்லை. தங்களுக்கு ஒத்துவரும் ‘ஆமாம் சாமி’ ஆட்களை பொறுப்பாளர் களாக அவர்களாகவே நியமித்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கிளப்பில் குள்ளநரிகளின் ஆட்டம் கலைக்கப்படவேண்டும்.

அமர்நாத் -இருவரும் மோகனும் முறைகேடுகளை நம்மிடம் பட்டியலிட்டபோது, சௌராஷ்ட்ரா சமுதாயப் பெரி யவர்கள் சிலரும் உடனிருந்தனர்.

"கோர்ட்டுல பார்த்துக்கலாம்!" - நிர்வாகிகள் அழுத்தம்!

சௌராஷ்ட்ரா கிளப் செயலாளர் மோதிலாலை தொடர்புகொண்டோம். "உங்க கிட்ட கிளப் நிர்வாகத்தை குறை சொல்லுறவங்க கிளப்புக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்திட்டே இருக்காங்க. கணக்கு வழக்கெல் லாம் எனக்கு தெரியாது. நான் இன்ஜினியரிங் காலேஜ்ல முக்கிய பொறுப்புல இருக்கேன். இதுபத்தி பேசுறதுக்கு என்னால முடியாது. வெங்கடேஸ்வரன்னு இன்னொரு செயலாளர் இருக் காரு. அவருகிட்ட கேட்டுக் கங்க''’என்றார்.

ss

செயலாளர் ஏ.கே.வெங்க டேஸ்வரன் நம்மிடம், "பணத்த வாங்கிட்டு யாரையும் புதிய உறுப்பினரா நான் சேர்க்கல. என் மேல குற்றம் சொல்லுற வங்க பழைய பஞ்சாங்கத்தை பாடுறாங்க. கிளப்போட பேரை யும் என்னோட பேரையும் அசிங்கப்படுத்துறாங்க. எல் லாமே பொய்க் குற்றச் சாட்டு''’என்று மறுத்துப் பேசினார்.

முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் சௌராஷ்ட்ரா கிளப்பின் பொருளாளருமான எஸ்.எஸ்.சரவணனை தொடர்பு கொண்டோம்.

"அவங்கள்லாம் தி.மு.க. காரங்க. அப்படித்தான் சொல்லி ருப்பாங்க. கிளப்ல ரெண்டு குரூப்பும் சண்டை போடுவாங்க. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. அஞ்சு வருஷத்துக்கு முன்னால நான் எம்.எல்.ஏ.வா இருந்ததுனால, சேஃப்டிக்கு என்னை டிரஷரரா போட்டு வச்சிருக்காங்க. என்னால கிளப்ல ஒரு பிரச்சனைன்னா, நான் ரிசைன் பண்ணிட்டு போயிரு வேன். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும், இந்த கிளப்ல புதிய உறுப்பினர்கள் சேர்ந்ததுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. என்னை குற்றம் சொல்லுறவங்ககிட்ட, எஸ்.எஸ். சரவணன் எம்.எல்.ஏ.-க்கு கார்ட்ஸ் விளையாட தெரியுமா? சிகரெட் புகைப்பாரா? வேற ஏதாவது இல்லீகல் ஆக்டிவிட் டீஸ் இருக்கா? இல்ல, கிளப்புக் குத்தான் வந்திருக்காரான்னு கேளுங்க. நானே செக்ரட்டரி கிட்ட பேசுறேன். அமர்நாத் கிட்டயும் பேசுறேன். உனக்கு என்ன பிரச்சினை? தேவையில் லாதத பண்ணிட்டு இருக்கன்னு கேட்கிறேன். க்ளப்ல என்ன நடந்திருக்கு? எவ்வளவு வரு மானம் வருதுன்னு சொல்லு. முன்னாடி நீங்கதான் பொறுப் புல இருந்து என்னல்லாமோ பண்ணிருக்கீங்க. எல்லாத்தயும் கேட்ருவோம்? எந்த சமூகத்துல சண்டை இல்லாம இருக்கு? பிரச்சனைன்னு பார்த்தா வீட்ல இருந்தும் வரும். ஸ்கூல், காலேஜுன்னு எல்லாத்துலயும் வரும். முன்னால ஷெட்டில் விளையாட கிளப்புக்கு போவேன். கொரோனா வந்தபிறகு எனர்ஜி போயிருச்சு. ரெண்டு வருஷமா விளையாட முடியல. செக்ரட்டரிகிட்ட கேட்டேன். ‘"எல்லாமே பக்காவா இருக்கு. ரிஜிஸ்டர் ஆபீஸ்ல.. அப்புறம் கலெக்டர் பெர்மிஷன் வாங்கிருக்கோம். கார்பரேஷன் கமிஷனர்கிட்டயும் வாங்கிருக்கோம். பைலாபடிதான் நடக்குது. முறைகேடுன்னு எதுவும் இல்ல. தேவைன்னா கோர்ட்டுக்குகூட வரட்டும். கோர்ட்டுல பார்த்துக்கலாம்'னு சொன்னாரு''’என்று விளக்கம் அளித்தார்.

ss

சமுதாயச் சுரண்டல்!

இருதரப்பையும் சாராத அந்த சமுதாயத்தின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “"வேங்கடரமண பாகவதர், எல்.கே.துளசிராம், டி.எம். சௌந்தரராஜன், எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலான்னு எங்க சமுதாயத்துலயும் பிரபல மானவங்க இருக்காங்க. மதுரை யைச் சுத்தி 3 லட்சம் பேரு எங்க சமூக மக்கள் இருக்காங்க. இந்த கிளப்ல இப்ப இருக்கிற மெம்பர்னு பார்த்தா வெறும் 306 பேருதான். கிளப்போட நட வடிக்கைகள் இப்ப சரியில்லைங் கிறதும், எங்க சமுதாய கல்வி நிறுவனங்கள்ல சுரண்டல் நடக்கிறதும், அதனால கல்வித் தரம் விமர்சனத்துக்கு ஆளாகி வர்றதும், எங்க மக்கள் எல்லாருக்குமே தெரியும்''’என்று பெருமூச்சுவிட்டார்.

சமுதாய அக்கறையை உயிர்மூச்சாகக் கருதிய முன் னோர் வகுத்த நெறிமுறைகளை மீறி, தவறான பாதையில் விலகிச் செல்வது, சௌராஷ்ட்ரா மக்களுக்கு பெரும் உறுத்தலாக இருக்கிறது.