கேரள சபரி மலையில் இருக்கும் சுவாமி ஐயப்பனின் பிறந்த இடமாகவும், தை மாத தரிசனத்தில் பந்தள மன்னர்கள் குடும்பத்தினர்களால் ஆபரணங்கள் அணிவிக் கப்பட்ட நிலையில் பொன்னம்பல மேட்டில் ஜோதி ரூபமாக காட்சி தருவார் சுவாமி என பக்தர்களால் நம்பப்படும் புனித தலமாகவும் இருக் கக்கூடிய பொன்னம்பல மேடு, பச்சகானம் வனப் பகுதியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த பொன்னம்பல மேட்டில் உட்கார்ந்து ஒருவர் பூஜை செய்ய விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

sabarai

"இந்த இடத்தைக் காண்பதற்கு கொடுத்து வைக்க வேண்டும். இதற்காக காடு மலையேறி வந்தோம்'' என வீடியோ எடுத்துக்கொண்டே ஒருவர் பின்னணியில் பேச, வீடியோ காட்சியில் ஐயப்பன் ஜோதியாக எழுந்தருளும் பொன்னம் பல மேட்டில் உட்கார்ந்து பூஜை செய்து கொண் டிருப்பார் சாமியார் ஒருவர். இது வாட்ஸ் அப்பில் வைரலான நிலையில், ஆகம விதிமுறை மீறல் என, இந்திய தண்டனைச் சட்டம் 295, 295-ஏ, 447 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு உதவியதாக இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருக் கின்றனர் பத்தனம்திட்டா புழிகீழு போலீஸார்.

திருவிதாங்கூர் தேவஸ்தான கமிஷனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரிலோ, "திருச்சூர் வடக்குநாதர் கோவி லில் குருக்களாக பணியாற்றிவரும் நாராயண நம்பூதிரி தலைமையில் சென்னையைச் சேர்ந்த சந்திரன், கருணாகரன், ராம் உள்ளிட்ட ஆறு நபர் கள் குழு, கடந்த 8ஆம் தேதியன்று சென்னையிலிருந்து வல்லக்கடவுக்கு காலை 7.25 மணியளவில் வந்திருக்கின்றனர். அங்கு முன்பே அறிமுகமாகி யிருந்த வனத்துறை ஊழியர்களான ராஜேந்திரன் கருப்பையா மற்றும் சாபு மேத்யூ துணையுடன் மணியடிப் பாலம் வழியாக பாத யாத்திரை யாக பொன்னம்பல மேட்டிற்கு வந்த நாராயண நம்பூதிரி பொன்னம்பல மேட்டில் ஏறி அமர்ந்து பூஜையை நடத்தி இருக்கின் றார். இது ஐயப்ப பக்தர்களை அவமதிக்கும் செயல். சபரி மலையின் ஆச்சாரத்தை களங் கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பூஜையை நடத்தியுள்ளனர். ரூ.3000 கையூட்டு பெற்றுக்கொண்டு இவர்களுக்கு உதவியாக வனத்துறை ஊழியர்கள் செயல்பட்டதால் கைது செய்கின்றோம்.' என்கிறது அறிக்கை.

காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் போல பச்சகானம் வனத்துறை நிலையத்திலும் தேவஸ்தானம் புகாரளிக்க, அங்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது காவலில் உள்ள குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பச்சகானம் வனத்துறை அதிகாரி ஜெய பிரகாஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது இப்படியிருக்க, "பொன்னம்பல மேட்டில் பூஜை செய்ததில் என்ன தவறு இருக்கின்றது? நான் எங்கு சென்றாலும் அங்கு பூஜை செய்வது வழக்கமான ஒன்று தான். இதனை ஏன் இப்பொழுது பெரிதுபடுத்த வேண்டும்? இதை களங்கம் என்றும், ஆச்சாரம் மீறப்பட்டது என்றும் சொல்வதன் அர்த்தம் என்ன?'' எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் நாராயண நம்பூதிரி.

எனினும், அவரது வாதத்தை ஏற்காத காவல்துறையோ, "சபரி மலையில் கீழ்சாந்தி ஒருவரிடம் பணிபுரிந்தபோது தன்னுடைய காரில் 'தந்திரி' என போர்டு வைத்து பக்தர்களை ஏமாற்றியுள்ளார். அதுபோக, தேவஸ்தான பூஜை ரசீதிலும் தில்லுமுல்லு செய்தவர் இவர். ஏதோ காரணத்துடன் இங்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என்று பூஜை பொருட்கள் உள்ளிட்ட முன் தயாரிப்புகளுடன் பொன்னம்பல மேட்டில் பூஜை நடத்தியிருக்கின்றார். யாருக்காக செய்திருக்கின்றார்? என்ற கேள்விகளின் அடிப்படையில் அவரை நெருங்கி வருகின்றோம்'' என்கின்றது பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை.

Advertisment

sar

"பணத்திற்காக எதனையும் செய்யக்கூடியவர் நாராயண நம்பூதிரி. கடவுளை வழிபட ஆவாஹனம், ஸ்தாபனம், சன்னிதானம், சன்னி ரோதனம், அவகுண்ட னம் உள்ளிட்ட ஆகமங்களில் 16 வகை உபசாரங்கள் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அனைத்து ஆலயங் களிலும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத் தியம், ஆராதனை, உற்சவம் என்ற அடிப்படையில் 6 வகையான உபச்சாரங்களே செய்யப்படுகின்றன. யாரும் ஆவாஹனம் செய்வதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாணியில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதில் கடவுளைக் கொண்டு வந்து, பின்பு அதனை நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள். இது ஒரு வகை ஆவாஹனம். பொன்னம்பலமேட்டில் அமர்ந்து தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பனை ஆவாஹனம் செய்து கொண்டு சென்றிருக்கின்றார் நாராயண நம்பூதிரி. யாருக்காக என்றாலும் இது ஆபத்தானது. விரைவில் அவரை கைது செய்து விசாரித்து அதற்கு முறைப்படி சாந்தி செய்யாவிடில் கேரளா ஆட்சிக்கே ஆபத்தாகும்'' என்கிறார் துவக்க காலத்தில் நாராயண நம்பூதிரியிடம் பணியாற்றிய வேளிமலை அசோகன் என்பவர்.

நடிகை ஜெயமாலாவிற்கு பிறகு நாராயண நம்பூதிரியும் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளார். இது எங்கே சென்று முடியுமோ!

-நா.ஆதித்யா