ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமுதாயத்துக்கு என ஒதுக்கப்பட்ட பிரிவில் ஊராட்சி மன்ற தலைவரானவரை, யார் ‘அடிமையாக’ வைத்துக்கொள்வது என்கிற போட்டி முற்றி வெளியே வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது அரியாகுஞ்சூர், சின்னகல்தாம்பாடி என்கிற இரண்டு கிராமங்களை கொண்டது அரியாகுஞ்சூர் சிறப்பு ஊராட்சி. இந்த ஊராட்சியின் மொத்த வாக்கு 700 சொச்சம்தான். இக்கிராமத்தில் ரெட்டியார், வன்னியர், தலித், இருளர் என வாழ்கின்றனர். கடந்த 3 உள்ளாட்சி தேர்தலாக, ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரிசர்வ் எஸ்.சி என இருந்து வந்தது. 2019ல் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலின்போது பழங்குடியின மக்கள் (எஸ்.டி) என ஒதுக்கப்பட்டது.
அரியாகுஞ்சூர் கிராமத்தில் 20 பழங் குடியினரான இருளர்களும், சின்னகல்தாம் பாடி கிராமத்தில் 15 இருளர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். அரியாகுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணியும், சின்ன கல்தாம்பாடி கிராமத்தில் வசிக்கும் முருகேசனும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். முருகேசன் வெற்றி பெற்று தலைவராகிவிட்டார். ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை ஆதிக்க சாதியினர், பிணத்தை புதைக்க குழி தோண்ட வைத்துவிட்டார்கள் என்கிற செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
நாம் அந்த கிராமத்துக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை சந்தித்து கேட்ட போது, ""எனக்கு 6 பொண்ணு, 2 பையன். கூலி வேலைக்கு போனால்தான் சாப்பாடு. நான் அதிமுகவில் இருக்கேங்க.
ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமுதாயத்துக்கு என ஒதுக்கப்பட்ட பிரிவில் ஊராட்சி மன்ற தலைவரானவரை, யார் ‘அடிமையாக’ வைத்துக்கொள்வது என்கிற போட்டி முற்றி வெளியே வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது அரியாகுஞ்சூர், சின்னகல்தாம்பாடி என்கிற இரண்டு கிராமங்களை கொண்டது அரியாகுஞ்சூர் சிறப்பு ஊராட்சி. இந்த ஊராட்சியின் மொத்த வாக்கு 700 சொச்சம்தான். இக்கிராமத்தில் ரெட்டியார், வன்னியர், தலித், இருளர் என வாழ்கின்றனர். கடந்த 3 உள்ளாட்சி தேர்தலாக, ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரிசர்வ் எஸ்.சி என இருந்து வந்தது. 2019ல் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலின்போது பழங்குடியின மக்கள் (எஸ்.டி) என ஒதுக்கப்பட்டது.
அரியாகுஞ்சூர் கிராமத்தில் 20 பழங் குடியினரான இருளர்களும், சின்னகல்தாம் பாடி கிராமத்தில் 15 இருளர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். அரியாகுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணியும், சின்ன கல்தாம்பாடி கிராமத்தில் வசிக்கும் முருகேசனும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். முருகேசன் வெற்றி பெற்று தலைவராகிவிட்டார். ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை ஆதிக்க சாதியினர், பிணத்தை புதைக்க குழி தோண்ட வைத்துவிட்டார்கள் என்கிற செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
நாம் அந்த கிராமத்துக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை சந்தித்து கேட்ட போது, ""எனக்கு 6 பொண்ணு, 2 பையன். கூலி வேலைக்கு போனால்தான் சாப்பாடு. நான் அதிமுகவில் இருக்கேங்க. எனக்கு எழுத படிக்க தெரியாது. 15 வருசமா அரியாகுஞ்சூரை சேர்ந்தவரு தலைவரா இருந்தாரு. இந்த முறை எங்க ஊர் ஆள் இருக்கட்டுமே அப்படின்னு ஊர்க்காரங்க நாங்க எல்லாரும் போய் கேட்டோம், அவுங்க விட்டுதரல. ஊர்ல எல்லாம் சேர்ந்து தலைவருக்கு என்னை நிறுத்த னாங்க, இரண்டு பேர் நின்னோம், மக்கள் என்னை ஜெயிக்கவச் சாங்க. தோற்றவங்க எங்க மேல கோபமா இருந்தாங்க. அந்த கோபத்தில் என்னை சிக்கவச்சிட்டாங்க.
எங்க ஊரை சேர்ந்த 70 வயது ஒருத்தர் இறந்துட்டாங்க. அதனால எங்க வீட்டுக்கு வந்து, "யோ தலைவரே, சவத்துக்கு பள்ளம் எடுக்கனும், யாராவது ஆள் இருந்தா அனுப்பி வைய்யா'ன்னு சொன்னார், ஊர்ல யாருமில்ல. அதனால் நானும், என் பொண்டாட்டியும் போய் எடுத்தோம். நான் பள்ளம் எடுத்துக்கிட்டு இருக்கும்போது இரண்டு பேர் வந்து நின்னு போட்டோ எடுத்தாங்க. மறுநாள் யாரோ கொண்டு வந்து என் முன்னாடி நீட்டனாங்க (மைக்). ஊர் பிரச்சனையெல்லாம் கேட்டாங்க சொன்னேன். இது இவ்ளோபிரச்சனையாகும்னு தெரியலைங்க. டி.வி.யில ஓடுனதை பார்த்துட்டு அதிகாரிங்க வந்து விசாரிச்சாங்க'' என்றவர், ""இப்ப மட்டும்மில்லைங்க, தலைவரா ஆகறதுக்கு முன்னாடியும், பள்ளம் எடு வான்னு கூப்டுவாங்க. செய்வேன். தலைவரானதுக்கப்பறம் சவத்துக்கு பள்ளம் எடுக்ககூடாதுன்னு எனக்கு தெரியாது, தெரிஞ்சியிருந்தா போயிருக்கமாட்டன்'' என்றார்.
அவரது மனைவி லட்சுமி, ""அந்த இரண்டு பேரும் நாங்க சொல்லிக்கொடுக்கறதை அப்படியே சொல்லுன்னு சொன்னாங்க. நான் அப்பவே இவருக்கிட்ட வேணாம்ன்னு சொன்னன். இவரு பேசிப்புட்டாரு. இப்போ எங்களை பிரச்சனையில மாட்டிவிட்டுட்டு போய்ட்டாங்க. விதி'' என்றார் வேதனையுடன்.
நாம் அந்த கிராமத்தை சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ""நீண்ட வருடமாக தலைவராக இருந்த அரியாக்குஞ்சூரை சேர்ந்த முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தனுக்கு, அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மனசில்லை. தலைவர் பதவி, எஸ்.டி.க்கு மாறியதும் தன் சார்பாக இருளர் சாதியை சேர்ந்த பொன்னம்மா என்கிற பெண் மணியை நிறுத்தினார். சின்னகல்தாம்பாடியை சேர்ந்த வன்னியரான செல்வம் (தற்போது 3வது வார்டு உறுப்பினர்), இப்போது துணை தலைவரா இருக்கற அதிமுக பிரமுகரான சிவானந்தம் ரெட்டியார் இருவரும் சேர்ந்து முருகேசனை நிறுத்தினாங்க. வன்னியர் ஓட்டு, ரெட்டியார் ஓட்டு, இருளர் ஓட்டு மொத்தமா முருகேசனுக்கு விழுந்து அவர் ஜெயிச்சிட்டார். முருகேசன், ஊராட்சி மன்ற தலைவரா இருந்தாலும் துணை தலைவர் சிவானந்தம், செல்வத்தை மீறி செயல்பட முடியாத நிலை. பொருளாதாரத்திலும் மிகவும் ஏழ்மையானவர், எதிர்க்க முடியாது. சொன்ன இடத்தில் கையெழுத்து போடுவார். குடும்ப செலவுக்கு விறகு வெட்ட, கழனி வேலைக்கு போவார்.
ஜூன் 1ந்தேதி வன்னிய சமுதாயத்தை சேர்ந்த முத்தம்மாங்கற மூதாட்டி இறந்துட்டாங்க. 4 வீடு தள்ளியிருக்கற அவுங்க வீட்டுக்கு இவர் மாலையோட வந்ததை பார்த்து, தலைவரானதும் மாலை எடுத்துவந்து போடற அளவுக்கு பெரியாளாகிட்டயான்னு சிலர் பேசியிருக்காங்க. இதனால் இன்னும் விரக்தியாகி வீட்டுக்கு வந்துட்டாரு. சவம் புதைக்க பள்ளம் எடுக்க போன்னு வீட்டுக்கு வந்து சொன்னதும் புருஷனும், பொண்டாட்டியும் போய் எடுத்திருக்காங்க. ஏற்கனவே மனவருத்தத்தில் தன்னை அடிமையா நடத்தறதைப்பத்தி பி.டி.ஓ.வுக்கு லெட்டர் எழுதியிருக்கார். இவரோட மனக்குமுறலை தெரிஞ்சவங்க இவர் சவக்குழி தோண்டுவதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிட்டாங்க. இது மறுநாள் செய்தியாகி விசாரிக்க, ஊரார் சிலர் தலைவரை மிரட்டனதால் அந்த குடும்பமே மிரண்டு போயிருக்கு. அவர் தலைவரா இருந்தாலும் மற்ற சமுதாயத்தினர் மட்டமா நடத்தறது உண்மை'' என்றார்.
நாம் 3வது வார்டு உறுப்பினர் செல்வத்திடம், ""நீங்க தலைவரை அடிமையா வச்சியிருக்கிங்களாமே'' என கேட்டபோது, ""எங்க ஊரை சேர்ந்தவங்க இதுவரை தலைவரா இருந்ததில்லை. இந்த முறை எங்களுக்கு விட்டு கொடுங்க முருகேசனை நிறுத்தறோம்னு கேட்டதுக்கு விட்டுதரல. முருகேசன்கிட்ட சாதி சர்டிபிகேட் கூடயில்லை. அதை 6 மாசம் அலைஞ்சி திரிஞ்சி வாங்கி தந்து, தேர்தலில் அவரை நிறுத்தி எல்லா செலவையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். ஜெயிச்ச துக்கப்பறம் அவரை தேடித்தான் பஞ்சாயத்து செயலாளர் வந்து பார்த்து கையெழுத்து வாங்கிக்கிட்டு போறார். அவர் பஞ்சாயத்து ஆபிசுக்கே போறதில்லைன்னு பி.டி.ஓக்கிட்ட புகார் சொல்லியிருக்காங்க, தினமும் ஆபிசுக்கு போனா, நான் சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு கேட்டுருக்காரு. நாங்க அவரை அடிமையா வச்சியில்ல. அவர் என்னை தூக்கி வளர்த்தவர், எங்க குடும்பத்துக்கு விசுவாசமானவர். உதவி செய்யற அளவுக்கு நான் பணக்காரனுமில்லை, கடனாதான்தர்றன், வேலை செய்து திருப்பி தந்துடுவார். அவர் பள்ளம் எடுத்தப்ப நான் ஊரில் இல்லை. போட்டோ எடுத்து சாதி அடக்குமுறைன்னு பெருசு பண்ணிட்டுயிருக்காங்க'' என்றார்.
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளனர். முக்கிய அதிகாரி ஒருவ ரிடம் இவ்விவகாரம் குறித்து பேசியபோது, அவர் மேலும் சில சம்பவங்களைச் சொன்னார். ""கலசப் பாக்கத்துக்கு மிக அருகில் உள்ளது அந்த கிராமம், தலித் ஊராட்சி மன்ற தலைவர் அவர். கரோனா பரவலை தடுக்க ஊரில் மருந்து தெளிக்கச்சொல்லி தலைவருக்கு அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். அதை செய்யவில்லை என்றதும் அதிகாரிகள் தலைவரிடம் கேட்டப்ப, என்னை பஞ்சாயத்து செயலாளரே மதிக்கறதில்லை, ஆபிஸ் வெளியிலயே உட்காரவைக்கறாங்கன்னு புலம்பியதும், அதிர்ச்சியாகி செக்ரட்டரியை விசாரிக்க வரச்சொன்னப்ப வரல. ஊர் பஞ்சாயத்து கூட்டம் போட்டு, தலைவரை சாதி ரீதியா திட்டியது, அப்படியே ஆடியோவா கலெக்டருக்கு அனுப்பிட்டாங்க. பஞ்சாயத்து செயலாளரை சஸ்பென்ட் செய்துட்டார். திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கற ஒரு தலித் தலைவரை, அந்த பஞ்சாயத்தின் துணை தலைவர் தன் முன்னால் உட்காரவைக்காம நிறுத்திவைக்கறார் அப்படின்னு பிரச்சனை கிளம்பியிருக்கு. இதை சட்டரீதியாக அனுகினால் பெரிய பெரிய தலைவலிகளை உருவாக்கறாங்க'' என்றார்.
மக்கள் மனங்களில் சாதி மறையாத வரை எத்தனை சட்டம் போட்டாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சாதிக் கண்ணோட் டத்துடன் செயல்படும்போது, இந்த அடுக்குமுறைகள் கிராமங்களில் தொடரவே செய்யும்.
-து.ராஜா