""தேனி தொகுதியில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அரங்கேற்றி வெற்றி பெற்றிருக் கிறார் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் குமார். அவரின் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன்''’’ என அறிவித் திருக்கிறார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன். தேர்தல் வழக்கு எப்படி நடக்கும், எப்போது முடியும் என்பது இளங்கோவனுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் மகனை மத் திய மந்திரியாக்குவதற்காக தேனியில் ஜெயிக்க வைத்து அதே எம்.பி. தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க.வின் இரு எம்.எல்.ஏ. தொகுதிகளை தாரை வார்த்திருக்கிறார் தந்தை பன்னீர்செல் வம் என்கிறார்கள் சொந்தக் கட்சியினரே.
வாக்கு எண்ணிக்கையின் முதல் ரவுண் டில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார் ரவீந்திரநாத். ஆனால் மூன்றாவது ரவுண்டில் ஐயாயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார் இளங் கோவன். ஏழு ரவுண்ட் முடிந்தால் ஐந்து ரவுண்ட் வாக்கு நிலவரங்களைச் சொல்வதும் பத்து ரவுண்ட் முடிந்தால் எட்டு ரவுண்ட் நிலவரத்தைச் சொல்வதும் என தேர்தல் அதிகாரிகள். டெக்னிக்கலாக செயல்பட்டதால் பரபரப்பும் விறுவிறுப்பும் கூடியது.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த அ.ம.மு.க.வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், ""என்னய்யா இது தமிழ்நாடு முழுக்க தி.மு.க. லீடிங்ல இருக்கு. இங்க மட்டும் எப்படிய்யா ஓ.பி.எஸ். மகன் லீடிங்ல வரமுடியும்'' என ஓப்பனாகவே பேசினார். தேனி எம்.பி. தொகுதி யில் ரவீந்திரநாத் முன்னிலை பெற்றாலும் இடைத் தேர்தல் நடந்த ஆண்டிப்பட்டி, பெரியகுளம் எம்.எல்.ஏ.தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களான மகாராஜனும் சரவணனும் தொடர்து முன்னிலையில் இருந்தனர். அதிலும் ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் 7 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக வாங்கி யிருக்கிறார் ரவீந்திரநாத். அதே போல் ஆண்டிப்பட்டி யில் ரவீந்திரநாத் 7 ஆயிரம் ஓட்டு அதிகம் வாங்கினார் என்றால் எம்.எல்.ஏ.வேட்பாளரான அ.தி.மு.க.. லோகி ராஜனுக்கு 7 ஆயிரம் ஓட்டு குறைவாக விழுந்தது பேரதிசயம்.
""தன்னோட மகன் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆகணும் என்பதற்காக தவியாய் தவித்த தந்தை ஓ.பி. எஸ். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க. கோட்டை யாக இருந்த ஆண்டிப்பட்டியையும் பெரியகுளத்தை யும் கோட்டைவிட்டுட்டாரு. அவர் மகன் ஜெயித்த தில் அவரோட குடும்பத்தினருக்கு மட்டும்தான் சந்தோ ஷம்'' என சலிப்புடன் சொன்னார் பெரியகுளம் ர.ர. ஒருவர்.
வெற்றி பெற்ற பின் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்ற பின், தனக்கு மந்திரி பதவி வாங்கித் தந்தே ஆகவேண் டும் என ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் ரவீந்திரநாத். தனது குடும்பமும் சேர்ந்து நெருக்கடி கொடுப்பதால், மகனின் மந்திரி பதவிக்காக பா.ஜ.க. மேலிடத்திற்கு நெருக்கமான ரஜினி வரை சிபாரிசுக்கு நிற்கிறாராம் ஓ.பி.எஸ்.
-சக்தி