Advertisment

உள்ளடியை சமாளிக்க எ.வ.வேலு! மாஜிக்கு ஆப்படிக்கும் அமைச்சர்! -இராமநாதபுரம் தி.மு.க. - அ.தி.மு.க. அதிரடி!

v

முன்னாள் அமைச்சரும் இராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மணிகண்டன், தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு கீழக்கரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், சாதாரண உறுப்பினர்கள் என ஆயிரம் பேருக்கு தீபாவளிப் பரிசாக வேட்டி-சேலை வழங்கினார்.

Advertisment

velu

அந்நிகழ்ச்சியில் பேசிய மணிகண்டன், “""வருகிற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் நான்தான் வேட்பாளர். கட்சி மேலிடத்திலும் பேசிவிட்டேன். இருந்தாலும் என்னை மீறி யாரை நிறுத்தினாலும் தோற்றுப்போவார்கள்''’என சாபம் பிராண்ட் சரவெடியாக வெடித்தார் மணிகண்டன். அவரின் ஆதரவாளர்களும், "அண்ணனை விட்டால் இங்க வேற நாதியில்லை'’’என பொங்கினார்கள்.

Advertisment

தீபாவளிக்குப் பின்னாலோ அமைச்சர் உதயகுமார் பிராண்ட் தண்டர் வெடியால் தலை கிறுகிறுத்துப் போயுள்ளார் மணிகண்டன். இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கிராமம்தான் உதயகுமாருக்குச் சொந்த ஊர் என்

முன்னாள் அமைச்சரும் இராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மணிகண்டன், தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு கீழக்கரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், சாதாரண உறுப்பினர்கள் என ஆயிரம் பேருக்கு தீபாவளிப் பரிசாக வேட்டி-சேலை வழங்கினார்.

Advertisment

velu

அந்நிகழ்ச்சியில் பேசிய மணிகண்டன், “""வருகிற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் நான்தான் வேட்பாளர். கட்சி மேலிடத்திலும் பேசிவிட்டேன். இருந்தாலும் என்னை மீறி யாரை நிறுத்தினாலும் தோற்றுப்போவார்கள்''’என சாபம் பிராண்ட் சரவெடியாக வெடித்தார் மணிகண்டன். அவரின் ஆதரவாளர்களும், "அண்ணனை விட்டால் இங்க வேற நாதியில்லை'’’என பொங்கினார்கள்.

Advertisment

தீபாவளிக்குப் பின்னாலோ அமைச்சர் உதயகுமார் பிராண்ட் தண்டர் வெடியால் தலை கிறுகிறுத்துப் போயுள்ளார் மணிகண்டன். இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கிராமம்தான் உதயகுமாருக்குச் சொந்த ஊர் என்றாலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியிலும் அதன்பின் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலும் வெற்றி பெற்று அமைச்சரானார் உதயகுமார்.

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியான முதுகுளத்தூரில் நிற்கும் ஐடியாவுக்கு வந்திருந்தார். இராமநாதபுரம் மாவட்ட கட்சிப் பஞ்சாயத்துக்களையும் கவனிப்பதால், முதுகுளத்தூர் தொகுதி நிலவரம் குறித்து அடிக்கடி உளவுத்துறையை விட்டு உளவு பார்த்தார் உதயகுமார். இதை கடந்த ஜூன் 17-20 நக்கீரனிலும் எழுதியிருந்தோம்.

இப்போது மதுரை புறநகர், இராமநாதபுரம், தேனி, நெல்லை, தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்களின் மண்டலப் பொறுப்பாளராக கட்சியின் மேலிடத்தால் நியமிக்கப்பட்டதும் மேலும் குஷியாகிவிட்டார் உதயகுமார். இதனால் முதுகுளத்தூர் தொகுதியில் உதயகுமார் நிற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. சரி, "உதயகுமார் முதுகுளத்தூரில் நிற்பதற்கும் மணிகண்டனுக்கு மண்டையடி வருவதற்கும் என்ன சம்பந்தம்?'’பரமக்குடி சீனியர் ர.ர.ஒருவரிடம் கொக்கியைப் போட்டோம்.

velu

""எடப்பாடி ஆதரவாளராக அவ்வப்போது சீன் போடும் மணிகண்டன், பன்னீர் செல்வத்தின் பாதையில்தான் பயணிப்பார். ஆனால் மாவட்டம் முனியசாமியோ, எப்போதுமே எடப்பாடியின் தீவிர விசுவாசி. அதனால் இந்த தேர்தலில் உதயகுமார் முதுகுளத்தூரில் போட்டியிட்டால், தனது மனைவி கீர்த்திகாவை இராமநாதபுரத்தில் நிறுத்தும் ஐடியாவுக்கு வந்துவிட்டார் முனியசாமி. மணிகண்டனை மட்டம்தட்டி, ஓ.பி.எஸ்.சுக்கு செக் வைக்க இதுதான் சான்ஸ் என இ.பி.எஸ்.ஸும் உதயகுமாரும் ப்ளான் பண்ணி விட்டார்கள். இதுவும் பத்தாதுன்னு அன்வர்ராஜாவையும் மணிகண்டனுக்கு எதிராக தயார்படுத்தி வருகிறார் கள்''’என்றார் மிகத்தெளிவாக.

தி.மு.க.வில் லேட்டஸ்ட்

மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்து ராமலிங்கத்திற்கும் மாஜி மா.செ. சுப.த.திவாகரனுக்கு மிடையே நடக்கும் பனிப்போர் குறித்து கடந்த ஜூன் 17-20 நக்கீரனில் எழுதியிருந்தோம். நமது செய்தியைப் பார்த்து கட்சியின் முதன்மைச் veluசெயலாளர் கே.என்.நேரு நடத்திய கண்டிப்பான பஞ்சாயத்தால் இருதரப்பிற்கும் இடையே சமாதானக் கொடி பறக்க ஆரம்பித்தது. இதை யும் கடந்த அக். 17-20 தேதியிட்ட நக்கீரனில் சிக்னல் பகுதியில் எழுதியிருந்தோம். இதற்கிடையே மாவட்டங் கள் பிரிப்பு வைபவம் வரிசையாக நடக்க ஆரம்பித்ததால், "இராமநாதபுரத்தை யும் இரண்டாகப் பிரிக்க தலைமை முடிவு செய்திருப்ப தாகவும் இதற்காக கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் மாவட்டத் தலைநகருக்கு வருகிறார் கள்'’என ஒருதரப்பு உ.பி.க்கள் உற்சாகமானார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி மாவட்ட பிரிப்பு நடக்கவில்லை. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தூதுவராக எ.வ.வேலு மட்டும் கடந்த அக். 12-ஆம் தேதி இராமநாதபுரம் வந்தார். மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளின் நிலவரம் குறித்து பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் கொடுத்த ரிப்போர்ட்டில் திருப்திகரமான அம்சங்கள் இல்லாததால், அதை சரிபண்ணும் பஞ்சாயத்திற்காகத்தான் வேலு வந்திருந்தார்.

அதிலும் பரமக்குடி இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளர் சண்.சம்பத்குமார் தோல்விக்கு மாஜி எம்.எல்.ஏ.வும் இப்போது மாவட்டக் கவுன்சிலராகவும் இருக்கும் திசைவீரன் திசை மாறியது, மற்றும் சில உள்ளடி வேலைகளால்தான்’ என்ற மெயின் பஞ்சாயத்திற்காகவும் வந்திருந்தார் வேலு.

இராமநாதபுரம் வருகை தந்த வேலுவை மா.பொ.முத்துராமலிங்கம், மாஜி மந்திரி சுப.தங்கவேலன், மாஜி மா.செ. சுப.த.திவாகரன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் ஆஜராகி, வேலுவுக்கு சால்வை வழங்கினார்கள். ஆனால் நகரில் உள்ள கோல்டன் டவர் ஓட்டலில் வேலுவுடன் நடந்த ஆலோசனையில் முத்துராமலிங்கம், தங்கவேலன், திவாகரன் ஆகிய மூவர் மட்டுமே கலந்துகொண்டனர்.

velu

அப்போது அவர்களிடம், ’’""இது நமக்கு வாழ்வா, சாவா தேர்தல். அதனால எல்லோரும் ஒற்றுமையாக இருங்க. வீக்காக இருக்கும் தொகுதிய கவனிங்க''’’ என ஆலோசனை கூறியுள்ளார். அடுத்ததாக திசை வீரனையும் சண்.சம்பத்குமாரை மட்டும் அழைத்துப் பேசிவிட்டு சிவகங்கை கிளம்பிவிட்டார் எ.வ.வேலு.

-பரமு

படங்கள்: பாலாஜி

nkn211120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe