தமிழக அரசு கேபிள் டி.வி.யின் ஒளிபரப்பு சேவை ஒரு வாரமாக முடங்கிப் போனதில் மாநிலம் முழுவதும் அரசு கேபிள் டி.வி.க்கு எதிராகக் கொந்தளித்தனர் கேபிள் டி.வி. உரிமையாளர்கள். இந்த விவகாரத்தில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜன் என்பவரை கைது செய்திருக்கிறது போலீஸ். இதன் பின்னணிகளை ஆராய்ந்த போது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள் கிடைத்தன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கலைஞரால் 2007-ல் துவக்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், 200-க்கும் அதிகமான சேனல்களை ஒளி பரப்பி வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட பல்வேறு புரட்சிகளையடுத்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் புதிய விதிகள் புகுத்தப் பட்டன. அதன்படி, செட்லிடாப் பாக்ஸ் மூலம் டிஜிட்டல் முறையில்தான் ஒளிபரப்பு சேவையை வழங்கவேண்டுமென உத்தரவிடப்பட்டது. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனமும் இதனை அமல்படுத்தத் துவங்கியது.
அந்த வகையில், தமிழகம் முழுவதுமுள்ள தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக செட்லிடாப் பாக்ஸ்களை வழங்க முந்தைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு முடிவு செய்தது. அதன்படி, 37,40,000 பாக்ஸ்களை, 614 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை கடந்த 2017-ல் அறிவித்தது அரசு கேபிள் டி.வி.நிர்வாகம்.
டெண்டரின் இறுதியில், தமிழகத்தைச்சேர்ந்த வி.எஸ்.ராஜனின் மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பாலாஜி நிறுவனம் என்ற 2 நிறு வனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது அரசு கேபிள் டி.வி. செட்லிடாப் பாக்ஸ் களை கொள்முதல் செய்து தருவ துடன், இதற்கான மென் பொருள் (சாஃப்ட்வேர்) இயக்கத்தை பராமரிக்கும் வருடாந்திர சேவையும் மந்த்ரா இண்டஸ்ட் ஸிடமே ஒப்படைக்கப்பட்டது. இதற்கா
தமிழக அரசு கேபிள் டி.வி.யின் ஒளிபரப்பு சேவை ஒரு வாரமாக முடங்கிப் போனதில் மாநிலம் முழுவதும் அரசு கேபிள் டி.வி.க்கு எதிராகக் கொந்தளித்தனர் கேபிள் டி.வி. உரிமையாளர்கள். இந்த விவகாரத்தில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜன் என்பவரை கைது செய்திருக்கிறது போலீஸ். இதன் பின்னணிகளை ஆராய்ந்த போது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள் கிடைத்தன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கலைஞரால் 2007-ல் துவக்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், 200-க்கும் அதிகமான சேனல்களை ஒளி பரப்பி வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட பல்வேறு புரட்சிகளையடுத்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் புதிய விதிகள் புகுத்தப் பட்டன. அதன்படி, செட்லிடாப் பாக்ஸ் மூலம் டிஜிட்டல் முறையில்தான் ஒளிபரப்பு சேவையை வழங்கவேண்டுமென உத்தரவிடப்பட்டது. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனமும் இதனை அமல்படுத்தத் துவங்கியது.
அந்த வகையில், தமிழகம் முழுவதுமுள்ள தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக செட்லிடாப் பாக்ஸ்களை வழங்க முந்தைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு முடிவு செய்தது. அதன்படி, 37,40,000 பாக்ஸ்களை, 614 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை கடந்த 2017-ல் அறிவித்தது அரசு கேபிள் டி.வி.நிர்வாகம்.
டெண்டரின் இறுதியில், தமிழகத்தைச்சேர்ந்த வி.எஸ்.ராஜனின் மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பாலாஜி நிறுவனம் என்ற 2 நிறு வனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது அரசு கேபிள் டி.வி. செட்லிடாப் பாக்ஸ் களை கொள்முதல் செய்து தருவ துடன், இதற்கான மென் பொருள் (சாஃப்ட்வேர்) இயக்கத்தை பராமரிக்கும் வருடாந்திர சேவையும் மந்த்ரா இண்டஸ்ட் ஸிடமே ஒப்படைக்கப்பட்டது. இதற்கான கட்டணம் தனி! ஒப்பந்தங்களின்படி செட்-டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அரசு கேபிள் டி.வி.யும் தனது சேவையை வழங்கி வந்தது.
இந்த நிலையில்தான், கடந்த ஒரு வாரமாக அரசு கேபிள் டி.வி. சேவை முடங்கிப்போன விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்த, தற்போதைய தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு கேபிள் டி.வி. நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், மந்த்ரா இண்டஸ்ட்ரீசின் இயக்குநர் ராஜனை அதிரடியாகக் கைது செய்திருக்கிறார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது,”மந்த்ரா இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர் ராஜன், அ.தி. மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் நண்பர். இந்த செட்-டாப் பாக்ஸ் கொள்முதல் பிசினஸில் தனது பினாமியாக ராஜனை களமிறக்கினார் எஸ்.பி.வேலுமணி. 2017-ல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அரசு கேபிள் டி.வி. சேர்மனான முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ் ணன், எஸ்.பி.வேலுமணி ஆகிய மூவரும் இணைந்துதான் செட்-டாப் பாக்ஸ் கொள் முதல் டெண்டரை மந்த்ரா மற்றும் பாலாஜி ஆகிய 2 நிறுவனங்களுக்கும் கொடுத்தனர்.
டெண்டரின் மதிப்பான 614 கோடி ரூபாயும் முழுமையாக வழங்கப்பட்டு விட்டன. அதன்படி, ஒரு சாதாரண செட்-டாப் பாக்ஸை 1,588 ரூபாய் மதிப்பில், சுமார் 36 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களையும், ஒரு ஹெச்.டி. செட்-டாப் பாக்ஸ் 2,100 ரூபாய் என்ற விலையில் 40,000 பாக்ஸ்களையும் வாங்குவதற்கு கொள்முதல் ஆர்டரை வழங்கியது எடப்பாடி அரசு.
அதன்படி, சீனா மற்றும் தைவான் நாடுகளிலிருந்து செட்-டாப் பாக்ஸ்களை மேற்கண்ட 2 நிறுவனங்களும் இறக்குமதி செய்தன. இதற்காக, 20 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசுக்கு செலுத்தியாக வேண்டும்.
அதனால், 1,588 ரூபாய் மதிப்பிலான சாதாரண செட்-டாப் பாக்ஸின் விலை 1,725 ரூபாயாகவும், 2,100 ரூபாய் மதிப்பிலான ஹெச்.டி. செட்-டாப் பாக்ஸின் விலை 2,283 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த உயர்வினை அரசு ஏற்க வேண்டும் என டெண்டர் எடுத்த நிறுவனங்கள் கோரிக்கை வைக்க, அதனை மறுத்திருக்க வேண்டிய எடப் பாடி அரசு, மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அந்த உயர்வினை ஒப்புக்கொண்டு அதற்குரிய ஆணைகளையும் பிறப்பித்தது.
பொதுவாக, டெண்டரின் கண்டிஷன் படி, இறக்குமதி வரியின் ஏற்ற இறக்கங் களை, கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களே ஏற்க வேண்டும். ஆனால், இந்த செட்-டாப் பாக்ஸ் விவ காரத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனமே இறக்குமதி வரியை கொடுத்துள்ளது. இதனால் அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டது.
இது மட்டுமல்ல; மந்த்ரா மற்றும் பாலாஜி ஆகிய 2 நிறுவனங்களும் இறக்கு மதி வரியை மத்திய அரசுக்கு செலுத்தி யதற்கான ஆதாரங்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே, செட்-டாப் பாக்ஸ்களை வழங்க அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு அதற்குரிய விலையையும் அரசு கேபிள் டி.வி. நிர்வாகம் ரிலீஸ் செய்ய வேண்டும்.
ஆனால், இறக்குமதி வரி செலுத்தி யதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காம லேயே, சுமார் 37 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களையும் டெண்டர் எடுத்த நிறுவனங்கள் வழங்கி விட்டன. அப்படி வழங்கப்பட்ட போது, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விலைப்பட்டியலில் இறக்குமதி வரி செலுத்தியதற்கான விபரங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. இது தெரிந்தும் முழு தொகையையும் அந்த நிறுவனங் களுக்கு வழங்கியிருக்கிறது அரசு கேபிள் டி.வி. நிறுவனம்.
இதனைக் கண்டறிந்த மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடமும், டெண்டர் எடுத்த நிறுவனங்களிடமும் இறக்குமதி வரிக்கான ஆதாரங்களைக் கேட்டபோது, அவைகளைத் தர மறுத்துவிட்டன. ஆனால், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்த போது, ஒரு செட்-டாப் பாக்ஸுக்கு சராசரியாக 570 ரூபாய்தான் இறக்குமதிவரி செலுத்திய ஆதாரம் தணிக்கைத்துறைக்கு தெரிந்தது. அதை வைத்து கணக்கிடும்போது, செட்-டாப் பாக்ஸ் ஒப்பந்தத்தின் விலை 1,163 ரூபாய் தான்.
ஆனால், டெண்டர் எடுத்த நிறுவனங்களுக்கு அரசு செலுத்திய தொகை என்பது, அந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்திய வரியைவிட கூடுதலாக இருப்பதைக் கண்டு தணிக்கைத்துறையினர் அதிர்ந்தனர். இதன்மூலம் சுமார் 14.74 கோடி ரூபாய் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு இழப்பு.
அதேபோல, குறிப்பிட்ட காலத்திற்குள் செட்-டாப் பாக்ஸ்களை வழங்காவிட்டால், வழங்கப்படாத பொருளின் மதிப்பில் அதிகபட்சம் 5 சதவீத அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும். டெண்டர் எடுத்த நிறுவனங்களோ, சுமார் 1 வருட காலதாமதத்தில்தான் வழங்கினர்.
இதற்கான அபராதத் தொகையாக மந்த்ரா மற்றும் பாலாஜி ஆகிய 2 நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் 22.16 கோடி ரூபாய் கணக் கிடப்பட்டது. ஆனால், இதனை எடப்பாடி அரசு வசூலிக்கவே இல்லை. ஆக, இப்படி சலுகைகள் அளித்ததன் மூலம் அரசு கேபிள் டி.வி.க்கு சுமார் 37 கோடி (14.74+22.16) ரூபாய் இழப்பு! இந்த தொகை எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் சென்றிருக்கிறது''’என்று விவரிக்கிறார்கள் தகவல் தொழில் நுட்பத்துறையினர்.
அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தரப்பில் விசாரித்தபோது,”"இந்த விவகாரத்தில் தரம் குறைந்த செட்-டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டது; கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டது; செட்- அப் டெண்டர் மூலம் முடிவெடுக்கப்பட்டது என 3 வில்லங்கங்கள் இருக்கின்றன. அரசு கொள்முதல் செய்த 37 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களில், 60,000 செட்-டாப் பாக்ஸ் களை எடுத்துக்கொண்டு போய்விட்டார் உடுமலை ராதாகிருஷ்ணன். இதனால், சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ் கிடைக்காததால் அவர்களெல் லாம் தனியார் நிறுவனத்துக்கு சென்று விட்டனர். இதனால், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, ஒப்பந்தத்தின்படி செய்யவேண்டிய பராமரிப்புப் பணிகளை ராஜனின் நிறுவனம் செய்யாததால் 52 கோடி ரூபாயை தற்போதைய தி.மு.க. அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதனைக்கேட்டு தி.மு.க. அரசுக்கு கடிதம் எழுதியபடி இருந்தார் ராஜன். அரசு தர மறுத்தது. ஆனால், அதனை பெற்றுத்தருவதில் ராஜனுக்கு சாதகமாக அரசு கேபிள் டி.வி.யின் சேர்மன் குறிஞ்சி சிவக்குமார் அதீத ஆர்வம் காட்டியதால் தான் அவரிடமிருந்து சேர்மன் பதவியை பறித்தது தி.மு.க. அரசு.
இந்த நிலையில், தனது கோரிக்கை ஏற்கப்படாத ஆத்திரம், அனைத்து வகையிலும் தனக்கு உதவிய குறிஞ்சி சிவக்குமாரின் பதவியைப் பறித்த கோபம் எல்லாம் சேர்ந்து டென்சனான ராஜன், தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அரசு கேபிள் டி.வி. சேவையை முடக்கிவிட்டார். இதனால், அரசு கேபிள் டி.வி.யின் சந்தாதாரர்களில் 21 லட்சம் பேரின் செட்-டாப் பாக்ஸ்கள் செயலிழந்தன. ராஜனின் இந்த சைபர் க்ரைமை கண்டுபிடித்த தி.மு.க. அரசு, தற்போது அவரை கைது செய்திருப்பதுடன் தொழில் நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. எடப்பாடி அரசில் முளைத்த பினாமிகளால் தலைவலியை சந்திக்கிறது தி.மு.க. அரசு'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்த ஒரு நிபுணரை தந்து உதவுங்கள் என ஒன்றிய அரசிடம் 6 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பணிபுரிந்த ரவிராபர்ட் என்பவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
துறையின் அட்வைஸராக நியமிக்கப்பட்ட அவர், ஐ.டி. துறையிலுள்ள சிக்கல்களை ஆராய்ந்து அரசுக்கு ரிப்போர்ட் தந்தபடி இருக்கிறார். கேபிள் டி.வி. நிறுவனம் குறித்து அவர் கொடுத்த ரிப்போர்ட்டில்தான் இந்த வில்லங்கங்களெல்லாம் அரசுக்கு தெரியவந்திருக்கிறது என்கிறார்கள்.