Advertisment

தப்பி வந்த தாடி ஆடு! -இயல் இசை நாடக மன்ற சர்ச்சை!

ss

""கலைத்துறையில் சாதனை கள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கலைமாமணி விருது. தற்போது 2 படங்களில் நடித்துவிட் டால் விருது வழங்கலாம் என்ற நிலை உள்ளது'' என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமர்சித்துள்ள னர். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் மட்டுமல்லாமல், அதிலுள்ள கலைஞர்களும் பல்வேறு புகார்களையும், போராட் டங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisment

ss

இன்றைய ஓ.டி.டி. கால கட்டத்தில், எளிய மக்களின் கலைகள் பலவற்றையும் உயிர்ப் போடு வைத்திருக்கும் எளிய கலை ஞர்களுக்கான இந்த மன்றத்தில், தனி நபர் ஆதிக்கம் இருப்பதாகவும், தேர்வு முறைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பல்வேறு குற்றச் சாட்டுகளை எழுப்பிவரும் மாற்று ஊடக மையம், அனைத்து கலைஞர் கள் வாழ்வாதார கூட்டமைப்பைச் சேர்ந்த முனைவர் இரா.காளீஸ்வர னிடம் கேட்டபோது, ""நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயற்குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்தான் க

""கலைத்துறையில் சாதனை கள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கலைமாமணி விருது. தற்போது 2 படங்களில் நடித்துவிட் டால் விருது வழங்கலாம் என்ற நிலை உள்ளது'' என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமர்சித்துள்ள னர். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் மட்டுமல்லாமல், அதிலுள்ள கலைஞர்களும் பல்வேறு புகார்களையும், போராட் டங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisment

ss

இன்றைய ஓ.டி.டி. கால கட்டத்தில், எளிய மக்களின் கலைகள் பலவற்றையும் உயிர்ப் போடு வைத்திருக்கும் எளிய கலை ஞர்களுக்கான இந்த மன்றத்தில், தனி நபர் ஆதிக்கம் இருப்பதாகவும், தேர்வு முறைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பல்வேறு குற்றச் சாட்டுகளை எழுப்பிவரும் மாற்று ஊடக மையம், அனைத்து கலைஞர் கள் வாழ்வாதார கூட்டமைப்பைச் சேர்ந்த முனைவர் இரா.காளீஸ்வர னிடம் கேட்டபோது, ""நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயற்குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்தான் கலைமாமணி விருதுக்கான தேர்வுகளில் தனது ஆதிக்கத்தைக் காட்டி, தகுதியற்ற பலருக்கும் பெற்றுத்தந்தார். கலைமாமணி விருது வழங்குவதில் மட்டுமல்லாது, கலைஞர்களுக்கான சீருடைகள் வாங்குவதிலும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உறுப்பினர் செயலாளர் என்ற பதவி கொடுக்கப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவருக்கு எப்படி பதவி கொடுக்கலாமென்று நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சோமசுந்தரத்தை அப்பதவியிலிருந்து தூக்கினார்கள்.

அதன்பின்னர், நாடகவியலாளர் மு.ராமசாமி தோழரை அப்பதவியில் அமர்த்தினார்கள். அவர் நேர்மையாளராகவும், நிர்வாகத்தின் முறைகேடு களைக் கேள்வி கேட்பவராகவும் இருந்தார். பதவியிலிருந்து விலக்கப்பட்ட சோமசுந்தரத்தை இயல் இசை நாடக மன்றத்தின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தததால், அதுகுறித்து கேள்வியெழுப்பியிருக்கிறார். இதையடுத்து, அவருக்கு தொடர்ச்சியாகக் குடைச்சல்கள் கொடுக்கப்பட்டதால் ஒரு கட்டத்தில் அவர் பதவி விலகினார். தற்போதும் சோமசுந்தரத்தின் செல் வாக்கு, மன்றத்தில் குறையாமல் இருக்கிறது. இளைஞர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டத்தில் இளைஞர்களைச் சேர்ப்பதற்காக, சோமசுந்தரமும் அவரது ஆதரவாளரான பனையூர் ராஜா என்பவரும் தான் நேர்முகத்தேர்வு நடத்தினர். 500 கலைஞர்களுக்கு சீருடை நிதி வழங்கியதில் சோமசுந்த ரத்தின் ஆதரவாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காசி தமிழ்ச்சங்க விழா வுக்கு செல்லும் கலைஞர்களிலும் சோமசுந்தரத் தின் ஆதரவாளர்களே தேர்வுசெய்யப்பட் டார்கள். அவரின் தலையீட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் விலக்கினால்தான் உண்மை யான கலைஞர்களுக்கு பாராட்டும், விருதும், நல உதவிகளும் கிடைக்கும்'' என்றார்.

Advertisment

ss

நாடகவியலாளர் மு.ராமசாமி தோழரிடம், அவர் பதவியிலிருந்து வெளியேற நெருக்கடி தரப்பட்டதா என விசாரித்தபோது, ""அங்க இருக்க முடியாமல்தான் வெளியேறினேன். எனக்கு முன்பிருந்த சோமசுந்தரம் என்பவரை வெளி யேற்றிய கோபத்தை என்மீது காட்டினார்கள். மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படை யாகக் கேள்விகள் எழுப்பியதால் என்னைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக மறைமுக மாக பல்வேறு வேலைகளைக் கூட்டணியாகச் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு நான் துணை போக வில்லை. அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, வெளிப் படையாக, "தப்பிவந்த தாடி ஆடு -என் கதை' என்ற நூலாகவே வெளியிடவுள்ளேன். அதிலிருந்து நீங்கள் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்'' என்றார்.

குற்றச்சாட்டுக்குள்ளான சோமசுந்தரம் கூறுகையில், ""தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை வைத்திருக்கிறோம். இதில் நூற்றுக்கணக்கான சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இவர்களில் யார் தேர்வானாலும் அதற்கு நான் தான் பொறுப்பு என்றால் எப்படி சார்? பனையூர் ராஜா என்பவர் தகுதியுள்ள கலைஞர். அதனால்தான் அவரை தேர்வுக்குழுவில் போட்டார்கள். காசி தமிழ்ச்சங்க விழாவுக்கு செல்பவர்களின் தேர்வுக்கும் எனக்கும் தொடர் பில்லை. மன்றத்தின் ஹெஸ்ட்ஹவுஸில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தங்கலாம். அப்படித்தான் நானும் தங்கினேன். எனக்குத் தெரியாதவர்களே நிறைய பேர் தேர்வாகியுள்ளனர். கலைமாமணி விருதுக்கான தேர்வில் தவறு நடந்திருப்பதாக நீதிமன்றத்துக்குச் சென்றவரே எங்கள் அமைப்பின் மாநில துணைத் தலைவரான சமுத்திரம் ஐயா தான். பிறகெப்படி நாங்கள் தவறு செய்ய முடியும்? வெறும் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் போராட்டங்கள் நடத்துகிறார்கள்'' என்றார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திர சேகரிடம் கேட்டபோது, ""புகாருக்குள் ளான கலைமாமணி விருதுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தரப்பட்டவை. தற்போது மன்றத்தின் சார்பாக ஒரு கமிட்டி போட்டு, நிச்சயமாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று நீதிமன்றத்துக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. தேர்வுக் குழுவும் போடப்பட்டு சரியான கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சோம சுந்தரம் குறித்து வந்த குற்றச்சாட்டு கள் தவறானவை. அவர் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. தற்போது அவருக்கும் மன்றத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் நிரூபிக்கச் சொல்லுங்கள் என்றுதான் கூறுகிறார்'' என விளக்கமளித்தார். எளிய கலைஞர்களின் நலனுக்காகச் செயல்படும் மன்றத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை, கலைஞரின் அரசுதான் சரிசெய்ய வேண்டும்.

-தெ.சு.கவுதமன்

nkn211222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe