Advertisment

சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும்! -சூளூரைத்த சரத்குமார்

ss

மத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தை மிக பிரமாண்டமாக நெல்லை பாளையங்கோட்டையில் நடத்தியிருக்கிறார் கட்சியின் தலைவர் சரத்குமார்.

Advertisment

கடந்த 9-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத் திற்காக மிகப்பெரிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் மாநில நிர்வாகிகளுடன் பொறுப்பாளர்கள் அனைவரை யும் அமர வைத்திருந்தார் சரத்குமார். மாநாட்டை யொட்டி நெல்லை மற்றும் பாளையங்கோட்டை முழுவதும் கட்சிக் கொடிகள், தோரணங்கள் களை கட்டியிருந்தன.

தென்மாவட்டங்களில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள், பைக்குகள் என பல்வேறு வாகனங்களில் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் சாரை சாரையாக பாளையங் கோட்டையில் குவிந்தனர். பொதுக்கூட்டத்தை மாநாடு போல ஒருங்கிணைத்திருந்தார் கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ந. சுந்தர்.

கூட்டத்துக்கு சரத்குமார் வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. சரத்குமார்

மத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தை மிக பிரமாண்டமாக நெல்லை பாளையங்கோட்டையில் நடத்தியிருக்கிறார் கட்சியின் தலைவர் சரத்குமார்.

Advertisment

கடந்த 9-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத் திற்காக மிகப்பெரிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் மாநில நிர்வாகிகளுடன் பொறுப்பாளர்கள் அனைவரை யும் அமர வைத்திருந்தார் சரத்குமார். மாநாட்டை யொட்டி நெல்லை மற்றும் பாளையங்கோட்டை முழுவதும் கட்சிக் கொடிகள், தோரணங்கள் களை கட்டியிருந்தன.

தென்மாவட்டங்களில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள், பைக்குகள் என பல்வேறு வாகனங்களில் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் சாரை சாரையாக பாளையங் கோட்டையில் குவிந்தனர். பொதுக்கூட்டத்தை மாநாடு போல ஒருங்கிணைத்திருந்தார் கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ந. சுந்தர்.

கூட்டத்துக்கு சரத்குமார் வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. சரத்குமார் மேடையேறியதும், "நாட்டாமை வாழ்க; நாளைய முதல்வரே வாழ்க!' என்கிற முழக்கங்களை விண்ணதிர எழுப்பினர் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள். மழை கொட்டியபோதும் அதனை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் திரண்டிருந்ததை உணர்வுப்பூர்வ மாக பெருமையாக உணர்ந்தார் சரத்குமார்.

Advertisment

கூட்டத்தில் மைக் பிடித்த மாநில நிர்வாகிகள் பலரும், கட்சியின் வலிமை குறித்தும், தேர்தலை எதிர்கொள்கிற வியூகங்கள் பற்றியும், இதுவரை மக்களுக்காக சமத்துவ மக்கள் கட்சி நடத்திய போராட்டங்கள் குறித்தும், தலைவர் சரத்குமார் முடிவு செய்கிறவர்களே ஆட்சிக்கு வரமுடியும் என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் உழைப்பு 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கிற உத்வேகத்தை தரும் என்றெல்லாம் ஆவேசமாகப் பேசினர்.

sarathkumar

இறுதியில் பேசிய கட்சியின் தலைவர் சரத்குமார், "அண்மையில், சென்னையில் 30 மணி நேரம் கடும் மழை பொழிந்தது. சென்னை நகரமே ஸ்தம்பித்தது. மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டனர். வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல். மின்சாரம் துண்டிப்பு. அலைபேசிகள் துண்டிப்பு. அவர்களை காப்பாற்றலாமெனில் அதற்கான வழித்தடங்கள் இல்லை. அந்தளவுக்கு ஒவ்வொரு பகுதிகளும், வீடுகளும் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. இதற்கு காரணம், சென்னையில் ஓடும் நீர்வழித்தடங்கள் பாதுகாக்கப்படவில்லை. சரிவர பராமரிக்கப்பட வில்லை.

தமிழகத்தில் 56 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திராவிட இயக்கங்கள், இலவசங்கள் கொடுப் பதையே முன்னிறுத்தின. இலவசங்களைத் தவிர்த்து, மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்திருந்தால் இன்றைக்கு மக்களுக்கு இப்பட்டிப்பட்ட அவல நிலை வந்திருக்காது. ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் வந்தால் அவர்களை சூழ்ந்துகொண்டு தங்களின் கோபத்தை மக்கள் வெளிக்காட்டுகிறார்கள்; கேள்வி கேட்கிறார்கள். இப்படி கேள்வி கேட்கும் மக்கள், தேர்தல்னு வந்துட்டா அவர்களுக்குத்தான் ஓட்டு போடு கிறார்கள். காரணம் என்ன, பணம்! ஜனநாயகம் போய் பணநாயகம் உருவாகி விட்டது.

காசுக்காக நாம் விலை போகிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும். இப்படி விலை போனால் மக்களை ஆட்சியாளர்கள் எப்படி மதிப்பார்கள்? ஆக, பணநாயகம் ஒழிந்து தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்கிற ஆட்சி மலர வேண்டும். அந்த ஆட்சியை எங்களால் மட்டுமே தர முடியும்.

உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பொருளாதாரத்தை மேம்படுத்த, தொழில் வளத்தை உயர்த்த வாக்குச்சீட்டு என்கிற ஆயுதத்தை உங்கள் கையில் கொடுத்திருக்கிறோம் என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அந்த ஆயுதத்தை நீங்கள் சரியான திசையில் பயன்படுத்த வேண்டாமா? அப்படி பயன்படுத்தினால் நல்ல ஆட்சி வரும்; அப்போது காட்சிகளும் மாறும்.

சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று மக்களை சந்தி யுங்கள்; உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுங் கள். ஒவ்வொரு தொண்டருக்கும் 150 குடும்பங் களைத் தெரிந்திருக்க வேண்டும். அந்தளவுக்கு கடுமையாக உழையுங்கள். 2026-ல் நாம் ஆட்சியை பிடிக்கிற அளவுக்கு உழைப்பைக் காட்டுங்கள். இப்போதிலிருந்தே அதற்காக உழைக்க வேண்டும். v 2026-க்கு முன்னதாக 2024-ல் அதாவது இன்னும் 4 மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறதே, அதை பற்றி பேசவில்லையே என நீங்கள் நினைக்கலாம். நாடாளுமன்றத் தேர்தல் நம் இலக்கல்ல! நல்ல தலைவர்களையும் மாற்றத்தையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது நாமாக ஏன் இருக்கக்கூடாது?

நீங்கள் சாதிப்பீர்கள்; 2026-ல் நீங்கள்தான் முதலமைச்சர் என என் மனைவி சொல்கிறார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என் மாமியார், "நீ எப்பய்யா முதலமைச்சர் ஆகப்போறே என கேட் கிறார். யார்யாரோ ஆசைப்படுகிறபோது நான் ஆசைப்படக்கூடாதா? எனக்கு வந்தால் காமடியாம். மற்றவர்களுக்கு வந்தால் சீரியஸாம்! அதனால் நான் காமடியா பேசறதா நினைக்காதீங்க. சீரியஸா பேசறேன். 2026-ல் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்'' ” என்றார் மிக அழுத்தமாக.

-சஞ்சய்

படங்கள்: ராம்குமார்

nkn131223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe