Advertisment

ராங்கால்- ஈ.பி.எஸ் யள் ஓ.பி.எஸ் ! -இறுதி யுத்தம்! இடைத்தேர்தல் களமிறங்கும் மருமகள்!

r

"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் பவர் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரப்போகுது''”

Advertisment

"ஆமாம்பா, உச்சநீதி மன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை முடிஞ்சிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, கடந்த ஜூலை 11-ல் எடப்பாடித் தரப்பு கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான பஞ்சாயத்து உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இதன் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 11ஆம் தேதி நடந்தபோது, எடப்பாடித் தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் அவரவர் வாதங்களை அழுத்த மாகவே பதிவு செய்தது. இரட்டைத் தலைமை இருந்தால் நிர்வாகச் சிக்கல் ஏற்படும் என்று எடப்பாடித் தரப்பு புதிய வாதத்தை வைத்தது. இதன்பின்னர் பலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக் கிறது. அதிகபட்சம் அடுத்தவாரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வந்துவிடும் என்கிறது வழக்கறிஞர்கள் தரப்பு. இதற்கிடையே தீர்ப்பு எப்படி வரும்? அடுத்து என்ன செய்வது? என்றெல்லாம் எடப்பாடியும் ஓ.பி.எஸ். ஸும் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார்கள். இவர்களில் எடப்பாடி தனக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் உதவியை நாட, நீதிபதியோ ஒன்றிய அதிகார மையங்களிலும் தன் உச்சநீதிமன்ற நட்பு வட்டாரத்திலும் காய்களை நகர்த்திவருகிறாராம். இதே போல், ஓ.பி.எஸ். தரப்பும், டெல்லி லாபியை உருட்டிக்கொண்டு இருக்கிறதாம்.''”

Advertisment

rang

"எடப்பாடி, ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த அரசியல் மூவ் என்னவாம்?''”

"கவர்னர் விவகாரத்தில் அதிரடியாகச் செயல்பட்டு, மக்கள் மத்தியில் தி.மு.க. ஹீரோ வாக மாறியிருக்கிறது என்று, அ.தி.மு.க.வினரே எடப்பாடியிடம் சொன்னார்களாம். "ஆமாம்பா, அதுக்கு பதிலடி நாம் கொடுத்தாகனும். பொங்கல் முடிந்த பிறகு, தி.மு.க.வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும் பிரச்சினை களையும் கையில் எடுத்து, தி.மு.க.வின் இமேஜை டேமேஜ் செய்வோம்' என்று எடப் பாடி சொல்லியிருக்கிறார். அதற்காக, அவர் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், என்ன மாதிரியெல்லாம் தி.மு.க. அரசை எதிர்க்கலாம் என்று ஹோம்ஒர்க் செய்து வருகிறார்களாம். ஓ.பி.எஸ்.ஸோ, "முதல

"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் பவர் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரப்போகுது''”

Advertisment

"ஆமாம்பா, உச்சநீதி மன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை முடிஞ்சிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, கடந்த ஜூலை 11-ல் எடப்பாடித் தரப்பு கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான பஞ்சாயத்து உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இதன் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 11ஆம் தேதி நடந்தபோது, எடப்பாடித் தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் அவரவர் வாதங்களை அழுத்த மாகவே பதிவு செய்தது. இரட்டைத் தலைமை இருந்தால் நிர்வாகச் சிக்கல் ஏற்படும் என்று எடப்பாடித் தரப்பு புதிய வாதத்தை வைத்தது. இதன்பின்னர் பலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக் கிறது. அதிகபட்சம் அடுத்தவாரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வந்துவிடும் என்கிறது வழக்கறிஞர்கள் தரப்பு. இதற்கிடையே தீர்ப்பு எப்படி வரும்? அடுத்து என்ன செய்வது? என்றெல்லாம் எடப்பாடியும் ஓ.பி.எஸ். ஸும் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார்கள். இவர்களில் எடப்பாடி தனக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் உதவியை நாட, நீதிபதியோ ஒன்றிய அதிகார மையங்களிலும் தன் உச்சநீதிமன்ற நட்பு வட்டாரத்திலும் காய்களை நகர்த்திவருகிறாராம். இதே போல், ஓ.பி.எஸ். தரப்பும், டெல்லி லாபியை உருட்டிக்கொண்டு இருக்கிறதாம்.''”

Advertisment

rang

"எடப்பாடி, ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த அரசியல் மூவ் என்னவாம்?''”

"கவர்னர் விவகாரத்தில் அதிரடியாகச் செயல்பட்டு, மக்கள் மத்தியில் தி.மு.க. ஹீரோ வாக மாறியிருக்கிறது என்று, அ.தி.மு.க.வினரே எடப்பாடியிடம் சொன்னார்களாம். "ஆமாம்பா, அதுக்கு பதிலடி நாம் கொடுத்தாகனும். பொங்கல் முடிந்த பிறகு, தி.மு.க.வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும் பிரச்சினை களையும் கையில் எடுத்து, தி.மு.க.வின் இமேஜை டேமேஜ் செய்வோம்' என்று எடப் பாடி சொல்லியிருக்கிறார். அதற்காக, அவர் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், என்ன மாதிரியெல்லாம் தி.மு.க. அரசை எதிர்க்கலாம் என்று ஹோம்ஒர்க் செய்து வருகிறார்களாம். ஓ.பி.எஸ்.ஸோ, "முதலில் அ.தி.மு.க.வின் அதிகாரம் என் கைக்கு வரட்டும். அதன்பின் தமிழக அரசியலில் நான் யாருன்னு காட்டறேன்' என்று சொல்லிவருகிறார்.”

"தி.மு.க.வுக்குள் கலகம் நடத்த பா.ஜ.க. திட்டமிடுவதாக செய்தி வருதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இதற்காக பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின் றன. அதில் ஒன்றாக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான படித்துறை முருகன் என்ற ஆர்.எஸ்.முருகனை, ’சைலண்ட்பாம் ஆக’ தி.மு.க.வுக்கு அனுப்பிவைக்கவிருக்கிறதாம் பா.ஜ.க. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த முருகன், மற்றொரு பெரிய ஒப்பந்த தாரரான செய்யாத்துரையுடன் கைகோத்துக் கொண்டு, பல்வேறு காண்ட்ராக்ட் வேலை களைச் செய்துவருகிறார். இவர் ஒருகாலத்தில் படித்துறைகளில் காயும் வேட்டிகளைக் களவாடும் அளவிற்கு ஏழ்மை நிலையில் இருந்ததால் இவர் பெயரோடு படித்துறை ஒட்டி கொண்டதாம். இவர், எக்ஸ். எம்.பி. தென்காசி முருகேசனுடன் நட்பாகி, "அமைதிப்படை' படத்தில் வரும் சத்யராஜ் கேரக்டரைப் போல், கிடுகிடுவென அரசியலிலும் தொழிலிலும் வளர்ந்தவராம். இவர் எடப்பாடியிடமே 400 "சி'யை ஆட்டை போட்டதாக, அவர் தரப்பினரே சொல்கிறார்கள். அண்மையில் இவர் நிறுவனங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித் துறையினர், 103 கோடி கோடி ரொக்கத்தையும் சில கிலோ தங்கத்தையும் கைப் பற்றினர். இந்த வழக்கில் சிக்கி விழி பிதுங்கிய இவரை, "நாங்கள் இருக்க கவலை ஏன்?' என்று தி.மு.க. வுக்குப் போகச் சொல்லி, சில சீக்ரெட் வேலை களையும் கொடுத்திருக் கிறதாம் பா.ஜ.க. "அவரால் என்னென்ன மாதிரியாக பிரச்சினைகள் வெடிக்கப் போகிறதோ?' என்கிறார்கள் அவரது நட்பு வட்டத் தினரே...''”

rr

"சரிப்பா, வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கையில் தமிழக அரசு அதிரடியாக இறங்கி இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய் மதிப்பிலான சரக்கினையும், 20 லட்ச ரூபாய் அளவுக்கு சேவையும் செய்கிற வணிகர்கள் அனைவரும், தங்கள் நிறுவனத்தை ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லாமலே மக்களிடம் ஜிஎஸ்.டி வரியை பெரும்பாலான வியாபாரிகள் வசூலித்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு பெரும் வரி இழப்பும் ஏற்படுகிறது. இதையறிந்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, இந்த முறைகேடுகளைத் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இதையடுத்து மக்களிடம் வசூலிக்கும் ஜி.எஸ்.டி. தொகையை அரசுக்குச் செலுத்தாமல் இருப்பது ஜி.எஸ்.டி. சட்ட விதி 67 (12)-ன்படி குற்றம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவ தோடு,’"எனது விலைப்பட்டியல்; எனது உரிமை'’எனும் திட்டத்தையும் அமைச்சர் மூர்த்தி நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இதன் அடிப்படையில், 3,148 இடங்களில் அதிரடியாகச் சோதனைகளை நடத்தி, அவற்றில் 1,840 இடங்களில், முறைகேடு நடந்ததைக் கண்டுபிடித் திருக்கிறார்கள் அதிகாரிகள்.''”

"நாகர்கோயில் மாநகராட்சியின் பரபரப்பும் பதட்டமும் இன்னும் தணியலையே?''”

"உண்மைதாங்க தலைவரே! நாகர்கோவில் மாநகராட்சி மேயராகவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருப்பவர் மகேஷ். இவருக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்தும், அவர் செய்யும் அட்ராசிட்டிகள் குறித்தும் அறிவாலயத்துக்கு நிறைய முறையீட்டு மனுக்கள் போயிருக்கு. இதுகுறித்து ஏற்கனவே நாம் பேசி இருக்கிறோம். இதன்பிறகும் அவர் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லையாம். குறிப்பாக, அந்த மாநகராட்சியின் கிழக்கு மண்டல சேர்மன் கோகிலவாணியையும், மாநகர தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி தமிழ்ச்செல்வியையும், தனது இரண்டு கைகளாக ஆக்கிக்கொண்டு, மாநகராட்சியையே மேயர் மகேஷ் ஆட்டிப் படைக்கிறாராம். அவரை யார் சந்திக்க நினைத்தாலும், இந்த அம்மணிகள் மூலம்தான் சந்திக்க முடியுமாம். இதனால் மாநகராட்சி அதிகாரி கள் தொடங்கி, கட்சியினர் வரை நொந்து போயிருக்கிறார்கள்.''”

"ஈரோடு கிழக்குத் தொகுதி, இடைத்தேர்தலுக்குத் தயாராகுதே?''

rr

"உண்மைதாங்க தலைவரே, பெரியாரின் கொள்ளுப் பேரனும் காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா. அண்மையில் மறைந்ததால், அவர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கும் நிலைக்கு மாறி இருக்கிறது. தன் மகன் திருமகனுக்கு அரசியல் பலத்தை ஏற்படுத்திக்கொடுக்க ஆசைப்பட்ட இளங்கோவன், கடந்த தேர்தல் சமயத்தில் ஈரோடு கிழக்கைத் தன் மகனுக்காக காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் கேட்க, அதன்படி தி.மு.க.வும் விட்டுக் கொடுத்தது. ஆனால் அவர் இவ்வளவு விரைவாக மறைந்தது அனைத்துக் கட்சியிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கு. இப்போது ஈரோடு கிழக்கு காலியாக இருப்பதாக, முறைப்படி தமிழகத் தேர்தல் அதிகாரியான சத்யப்பிரதா சாஹு, இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். அதன்படி இன்னும் 6 மாதத்துக்குள் அங்கே இடைத்தேர்தலை நடத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு.''”

"ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும்னு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறாரே?''”

"கடந்த தேர்தலிலேயே ஈரோடு கிழக்கில் தி.மு.க. நிற்க திட்டமிட்டிருந்தது. கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆ.செந்தில் குமார் மற்றும் இந்தத் தொகுதியின் எக்ஸ் எம்.எல்.ஏ.வான வி.சி.சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரைக் களமிறக்கும் யோசனை அறிவாலயத்துக்கு இருந்தது. இளங்கோவனின் வேண்டுகோளுக்காக இந்தத் தொகுதி காங்கிரஸ் கைக்குப் போய்ச்சேர்ந்தது. அதனால் இந்த முறை இங்கே தி.மு.க.வினர் களமிறங்க ரெடியாக றாங்க. அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணிக் குழப் படிகளை நடத்துவதால், இங்கு தி.மு.க.வே நிற்கட்டும் என்று காங்கிரஸ் தரப்பிலிருந்தும் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அதனால் தி.மு.க. தரப்பில் பரபரப்பு தெரியுது.''”

"ஆனால் அங்கே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே நிறுத்தப்படலாம்னு செய்தி வருதேப்பா?''”

"உண்மைதாங்க தலைவரே. திருமகனின் ஈரோடு கிழக்குத் தொகுதியில், திருமகனின் மனைவி பூர்ணிமாவை களமிறக்க நினைக் கிறாராம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இந்த பூர்ணிமா, பிரபல டெக்ஸ்டைல் நிறுவனமான நாயுடு ஹால் உரிமையாளரின் மகள் என்பது கூடுதல் செய்தி. ஆனால், கணவனை இழந்த சோகத்தில் இருக்கும் பூர்ணிமா, இதுகுறித்த தன் கருத்து எதையும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையே சத்யமூர்த்திபவனில் திருமகன் படத்திறப்பு நிகழ்வை, கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான காண்டீபன் நடத்த முனைந்த போது, சீனியர்கள் இருவர் அதைத் தடுத்தது பற்றி நாம் கடந்தமுறை பேசினோம். இதுகுறித்த விளக்கத்தை நமக்குத் தந்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான கோபண்ணா, இறந்த திருமகன், எம்.எல்.ஏ. என்பதால், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்து காங்கிரஸ் சார்பில் படத்திறப்பு நிகழ்வை நடத்த இருந்தோம். அதனால்தான் தனித்தனி நிகழ்வு வேண்டாம் என்று அனுமதி மறுக் கப்பட்டது என்றார்.''”

"இன்னும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குறித்த சர்ச்சைகள் அடங்கலையே?''”

r

"ஆமாங்க தலைவரே, கடந்தமுறை நாம் உரையாடியபோது, ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் மற்றும் புரோமோசன் லிஸ்ட் வெளியானது பற்றியும், அவர்களில் மூன்று அதிகாரிகள் மட்டும், தங்களுக்குத் தரப்பட்ட பணியிடங்களை ஏற்கமறுத்து, கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது பற்றியும், அதனால் காவல்துறையே பரபரப்பில் மூழ்கியது பற்றியும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம். இப்போது அவர்கள் மூவரும் போக மறுத்த இடங் களுக்கு, வேறு மூன்று அதிகாரி களை காவல்துறை நியமித்து உத்தரவிட் டிருக்கிறது. இந்த நிலையில், அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி களை மாற்றம் செய் வதற்கான பட்டியலும் விரைவில் வெளிவரப் போகிறது என்கிறது கோட்டைத் தரப்பு.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கள் சங்கத் தேர்தல் 9 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இதில் கடந்தமுறை அ.தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்குக் களமிறங்கிய பால் கனகராஜ், இந்தமுறை பா.ஜ.க. சார்பில் களமிறங்கினார். அவருக்கு எதிராக வழக் கறிஞர் மோகன கிருஷ்ணன் வரிந்துகட்டி னார். இவருக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இவரது கை ஓங்கிய நிலையில், வாக்குப்பதிவு நேரத்தில் கலவரம், தள்ளுமுள்ளு, வாக்குச்சீட்டுக் கிழிப்பு என வன்முறைகள் அரங்கேறியது. நிலைமை மோசமானதால், இந்தத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட, தற்போது சென்னை உயர்நீதி மன்ற வளாகமே பதட்டத்தில் இருக்கிறது.''

nkn140123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe