Advertisment

ராங்கால் இ.பி.எஸ். Vs ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையர் க்ரீன் சிக்னல்!

s

"ஹலோ தலைவரே, தேர்தல் ஆணையத்தின் க்ரீன் சிக்னல் எடப்பாடித் தரப்புக்குக் கிடைச் சிருக்கு''”

Advertisment

"ஆமாம்பா, ரெண்டு பக்கமும் டெல்லி காய் நகர்த்துதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அ.தி. மு.க.வின் லகானை யார் பிடிக்கிறதுங்கிற கோதாவில் எடப் பாடியும், ஓ.பி.எஸ். ஸும், தொடர்ந்து வரிந்துகட்டி நிற் கும் நிலையில்... டெல்லியின் தயவு தங்களுக்கே கிடைக்க ணும்னு இவங்க ரெண்டு பேருமே மாறி, மாறி டெல்லியை அப்ரோச் பண்ணி வந்தாங்க. இந்த நிலையில், இரு தரப்பையும் மாறி மாறி அரவணைக்கிற மாதிரி, டெல்லி ஆக்டிங் கொடுத்தது. குறிப்பா, ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு எடப்பாடிக்கு அழைப்பு அனுப்பிய டெல்லி, அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச் செய லாளர்னு அவரைக் குறிப்பிட்டு, அவர் தரப்பை நிமிர்ந்து உட்கார வைத்தது. அதேபோல் குஜராத் அமைச்சரவை பதவி ஏற்புவிழாவுக்குச் சென்ற ஓ.பி.எஸ்.ஸை, போட்டி அ.தி.மு.க.வைத் தொடங்குவதற்கான ஆயத்தத்தில் இறங்கும்படி ஜே.பி.நட்டா மூலம் உசுப்பி விட்டது டெல்லி. இந்த நிலையில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற கையெழுத்தோடு எடப்பாடி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க.வின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்கை, தேர்தல் ஆணை யம் முறைப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறது.''”

Advertisment

rr

"ஓ.பி.எஸ்.ஸுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ். தனது மா.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய 21-ந் தேதி அன்றே, எடப்பாடித் தரப்பின் வரவு செலவுக் கணக்கை ஏற்றுக்கொண்ட அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓ.பி.எஸ். கூட்டிய கூட்டம் நடந்துக்கிட்டு இருந்தபோதே, இந்த விசயத்தை எடப்பாடி விறுவிறுப்பா தன் ஆதரவாளர்கள் மூலம் பரவ வைத்து ஓ.பி.எஸ். தரப்பை ரொம்பவே மிரள வைத்திருக்கிறார். அதே நேரம், இப்படியொரு அறிவிப்பு, இந்த நாளில்தான் வெளியிடப்படணும்னு எடப்பாடி தனது டெல்லி லாபி மூலம், வெற்றிகரமாக மூவ்பண்ணிக் காட்டியிருக்கிறார்னு அவர் தரப்பினர் மார் தட்டிக்கிறாங்க. அக்டோபர்

"ஹலோ தலைவரே, தேர்தல் ஆணையத்தின் க்ரீன் சிக்னல் எடப்பாடித் தரப்புக்குக் கிடைச் சிருக்கு''”

Advertisment

"ஆமாம்பா, ரெண்டு பக்கமும் டெல்லி காய் நகர்த்துதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அ.தி. மு.க.வின் லகானை யார் பிடிக்கிறதுங்கிற கோதாவில் எடப் பாடியும், ஓ.பி.எஸ். ஸும், தொடர்ந்து வரிந்துகட்டி நிற் கும் நிலையில்... டெல்லியின் தயவு தங்களுக்கே கிடைக்க ணும்னு இவங்க ரெண்டு பேருமே மாறி, மாறி டெல்லியை அப்ரோச் பண்ணி வந்தாங்க. இந்த நிலையில், இரு தரப்பையும் மாறி மாறி அரவணைக்கிற மாதிரி, டெல்லி ஆக்டிங் கொடுத்தது. குறிப்பா, ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு எடப்பாடிக்கு அழைப்பு அனுப்பிய டெல்லி, அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச் செய லாளர்னு அவரைக் குறிப்பிட்டு, அவர் தரப்பை நிமிர்ந்து உட்கார வைத்தது. அதேபோல் குஜராத் அமைச்சரவை பதவி ஏற்புவிழாவுக்குச் சென்ற ஓ.பி.எஸ்.ஸை, போட்டி அ.தி.மு.க.வைத் தொடங்குவதற்கான ஆயத்தத்தில் இறங்கும்படி ஜே.பி.நட்டா மூலம் உசுப்பி விட்டது டெல்லி. இந்த நிலையில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற கையெழுத்தோடு எடப்பாடி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க.வின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்கை, தேர்தல் ஆணை யம் முறைப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறது.''”

Advertisment

rr

"ஓ.பி.எஸ்.ஸுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ். தனது மா.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய 21-ந் தேதி அன்றே, எடப்பாடித் தரப்பின் வரவு செலவுக் கணக்கை ஏற்றுக்கொண்ட அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓ.பி.எஸ். கூட்டிய கூட்டம் நடந்துக்கிட்டு இருந்தபோதே, இந்த விசயத்தை எடப்பாடி விறுவிறுப்பா தன் ஆதரவாளர்கள் மூலம் பரவ வைத்து ஓ.பி.எஸ். தரப்பை ரொம்பவே மிரள வைத்திருக்கிறார். அதே நேரம், இப்படியொரு அறிவிப்பு, இந்த நாளில்தான் வெளியிடப்படணும்னு எடப்பாடி தனது டெல்லி லாபி மூலம், வெற்றிகரமாக மூவ்பண்ணிக் காட்டியிருக்கிறார்னு அவர் தரப்பினர் மார் தட்டிக்கிறாங்க. அக்டோபர் 3-ஆம் தேதி எடப்பாடி தாக்கல் செய்த வரவு செலவுக் கணக்கை, இத்தனை நாள் நிலுவையில் வைத்திருந்த தேர்தல் ஆணையம், மிகச் சரியாக 21 ஆம் தேதி ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருப்பதை மற்ற கட்சிகளும் உன்னிப்பாக கவனிக்கின்றன.''”

"சரிப்பா, அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல் வர் ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கி இருக்காரே?''”

rr

"டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தபடியே இருந்தது. பல ஆண்டுக ளாகவே இப்படிப்பட்ட புகார்கள் எழுந்த போதும், முந்தைய அ.தி.மு.க. அரசு இதைப்பற்றிக் கொஞ்ச மும் அலட்டிக்கலை. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்துக்கு இந்த புகார்கள் வைக்கப்பட, அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அவர், மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்றதாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனை யாளர்கள் என 852 பணியாளர்களையும், இத்த கைய குற்றத்துக்கு உடந்தையாக இருந்த 1,970 பணியாளர்களையும் ஒரே நேரத்தில் லம்பாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார். மேலும், அவர்களிட மிருந்து அபராதத் தொகையாக 4 கோடியே 61 லட்ச ரூபாயும் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதை யறிந்த முதல்வர், அமைச்சர் செந்தில் பாலாஜியை மகிழ்வோடு தட்டிக் கொடுத்திருக்கிறார்.''”

"தற்காலிக ஆசிரியர்கள் மனக்குமுறலில் இருக்காங்களே?''”

"தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதத் தொகை பொங்கல் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கல்வித்துறையில் மட்டும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதே இல்லை. அதனால், எங்களை மட்டும் அரசு ஏன் போனஸ் விசயத்தில் புறக்கணித்து, மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துகிறது? என்கிறார்கள் பகுதி நேர ஆசிரியர்கள். மேலும், முந் தைய அதிமுக அரசுதான் எங்களை அப்படி நடத்தியது. இந்த தி.மு.க. அரசாவது எங்களுக்கு ஆறுதல் தரும் வகையில், இந்த ஆண்டுமுதல் போனஸ் வழங்கவேண்டும் என் கிறார்கள் பரிதவிப்போடு.''“

"மாஜி அ.தி.மு.க. மந்திரி சி.வி.சண்முகத்தின் கடும் விமர்சனம் தி.மு.க.வினரை கொதிப்படைய வைக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வை மிகக்கடுமையாக விமர் சிப்பதை வழக்கமாக வைத் திருக்கிறார் சி.வி.சண் முகம். சமீபத்தில் கூட, தமிழகத்திலுள்ள 39 லோக்சபா எம்.பி.க் களும் டெல்லியில் பிச்சை எடுக்கிறார் கள் என்றும், கூனிக் குறுகி நின்று ஒன் றிய பா.ஜ.க. அரசிடம் காரியம் சாதித்து வருகிறார்கள் என் றும் கொச்சையாக விமர்சித்தார். இத னால் தி.மு.க.வினர் கொதிப்படைவதை உணர்ந்த ஸ்டாலின், தி.மு.க.வில் உள்ள வன்னியர் சமூக எம்.பி.க்களில் ஒருவரான சேலம் எஸ்.ஆர்.பார்த்திப னிடம், இதற்கு அறிக்கை மூலம் கடுமையாக பதிலடி தரும்படி, தகவல் கொடுத்தார். இருவரும் ஒரே சமூகத்தினர் என்பதால்தான், கட்சித் தலைமை பார்த்திபனை களமிறங்கச் சொன்னது. ஆனால், பார்த்திபனோ எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதிகாக்க, அவரை வினோதமாகப் பார்க்கிறதாம் அறிவாலயம்.''”

rr

"சர்ச்சை நாயகரான ‘மணல் கிங்’ சேகர்ரெட்டியின் குடும்பத்துக்கு வந்த சோதனையைப் பார்த்தியா?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான சேகர் ரெட்டி, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மணல் குவாரிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பவர்ஃபுல் புள்ளி. அரசியல் தொடர்பின் அடிப்படையில் பல்வேறு முறைகேடுகளில் சிக்கியவர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கிலும் கைதானவர். இவர், சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா மூலம், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக ஆனார். அவரின் செல்வாக்கால் மீண்டும் அப்பதவியை ரெட்டி தக்க வைத்து வருகிறார், இந்த நிலையில் அவரது ஒரே மகளுக்கும், திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அதிகாரியான தர்மா ரெட்டியின் ஒரே மகனான சந்திர மௌலிக்கும் திருமண ஏற்பாடு நடந்து வந்தது. ஜனவரி 26 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடக்க இருந்த நிலையில், மாப்பிள்ளை சந்திரமௌலி 21 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவ மனையில் இறந்துட்டார்.'' ”

"இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சந்திரமௌலி தற்கொலை பண்ணிக்கிட்டார்ன்னு தகவல் வந்துச்சேப்பா.''”

"சந்திரமௌலி 18ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் அட் மிட் ஆனதாகச் சொல்லப்பட்டது. அதேபோல் அந்த மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளி யிட்ட அறிக்கையில், சந்திரமௌலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிபிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவ தாகவும், அவர் உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த சந்திர மௌலி, மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் வைக்கப் பட்டிருக்க, அவர் குடும்பத்தார் ஏழாம் தளத்தில் காத்திருந்தாங்க. இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக் கிறது.'' ”

"இந்த விவகாரம் ஆந்திர அரசியல் தளத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, சேகர்ரெட்டியின் சம்பந்தியாக இருந்த தர்மாரெட்டியும் லேசுப்பட்ட ஆளில்லை. அவர் ஆந்திராவில் உள்ள ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமான வர், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவரான தர்மாரெட்டி, ப்ரோமோஷன் மூலம் ஐ.ஏ.எஸ். கேடரில் இருந்தவர். அதனால் அவர் மகன் மருத்துவ மனையில் அட்மிட் ஆன விவகாரம் அங்கே பரபரப்பை உண்டாக்குச்சு. இந்த நிலையில் 18ஆம் தேதி மாலை சந்திரமௌலிக்கு நெஞ்சுவலின்னு சொல்லி காவேரியில் அட்மிட் செய்ததா அவர் குடும்பத்தினர் சொல்றாங்க. அதேநேரம், சந்திரமௌலிக்கும் அவர் திருமணம் செய்துகொள்ள இருந்த சேகர்ரெட்டி மகளுக்கும் பிரச்சினை என்றும், அதன் காரணமாக சந்திரமௌலி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் இன்னொரு தரப்பு சொல்லுது. இந்த மரணத்தில் பல அவிழாத முடிச்சுகள் இருப்பதால், அது ஆந்திராவையே விறுவிறுப்பாக்கி இருக்கு.''”

"ஜெ.வின் போயஸ் கார்டனில் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் இருக்கும் பகுதிகள், 91-96 ஜெ’ ஆட்சிக்காலத்தில், கட்டப்பட்டது என்பதால் அவற்றையும், முறையற்று வாங்கப்பட்ட சொத்துக்களையும், வழக்கில் அட்டாச் செய்து, அவற்றை அரசு கையகப்படுத்தணும் என்று, நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பும் கை காட்டுகின்றன. இருந்தும் அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இதற் கான முயற்சிகளில் இறங்க வில்லை. அதனால், நீதி மன்றத்தால் கைப்பற்றப் பட்ட ஜெ.’தொடர்பான சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்கும் முயற்சிகள் நடந்துவருகிறதாம். இந்த நிலையில், ஜெ.வின் ஹைதரா பாத் திராட்சைத் தோட்டத்தை ஜெ.வின் அண்ணன் மகனும் தீபாவின் சகோதரனுமான தீபக் ரூ 150 கோடிக்கு விற்றிருக்கிறார். இதில் தீபாவின் பங்கான ரூ 75 கோடி அவருக்குக் கொடுக்கப்பட்டி ருக்கிறது. இதற்கிடையே, ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லத்தை விற்கும் முயற்சியில் தீபா இறங்க... இதற்கு எடப்பாடி, சசிகலா ஆகியோர் தரப்பிடம் இருந்தும் எதிர்ப்பு வந்தி ருக்கிறது. இதேபோல் வழக்கில் சிக்கிய ஏனைய ஜெ.வின் சொத்துக்களை சசி தரப்பும் விற்க முயற்சிக்கிறதாம்.''

"பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் தமிழக அரசு ஒரு முடிவுக்கு வந்துடுச்சாமே?''

"ஆமாங்க தலைவரே...''

rr

"தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்களை வைத்துக் கொடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் புகார்கள் எழுந்ததை மனதில் வைத்து, உணவுத்துறை செயலாள ரான டாக்டர் ராதாகிருஷ்ணன், எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் ஒதுங்கி கொண்டாராம். அரசு சர்க்கரைக் கழகத் தின் கமிஷனரும், கரும்பைக் கொள்முதல் செய்தால், விநியோகிக்கப்படும் கரும்பின் உயரம் குறித்து சர்சைகள் எழும். அதனால் கரும்புக் கொள்முதலைச் செய்ய எங்களுக்கு விரும்பமில்லை என்று ஜகா வாங்க, பேசாமல் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ 1000 வீதம் கொடுத்துவிடலாமா? என்ற யோசனையில் இருக்கிறதாம் அரசு.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கிறேன். கடந்த இதழில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் யானைகள் பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையானதை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்திக்கு அமைச்சர் மூர்த்தி தரப்பிலிருந்து... "திருமணத்துக்கு முன் கஜபூஜை நடத்தினோம். அதற்காக வனத்துறை யிடமும், அரசிடமும் சட்டப்படி அனைத்து அனுமதியையும் முறைப்படி வாங்கித்தான் பூஜை நடத்தினோம். காலை 6-7 மணிக்குள் பூஜை நடத்திவிட்டு, யானைகளை திருப்பி அனுப்பி வைத்துவிட்டோம். அதன் பிறகுதான் மணவிழா நடந்தது' என விளக்கம் தந்தார்கள்.''

nkn241222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe