எ.வ.வேலுவை குறி வைக்கும் இ.பி.எஸ்!

ev-eps

 

மிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியைத் துவங்கிவிட்டன. ஆளுங்கட்சியான தி.மு.க.வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என தீவிரம் காட்டுகின்றன. ஆளுங்கட்சியான தி.மு.க.வில் தமிழ்நாட்டை 8 மண்டலங்களாகப் பிரித்து, கழக துணைப் பொதுச்செயலாளர்கள், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம்தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர், மா.செ. செந்தில்பாலாஜி ஆகியோரை மண்டல தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 

கொங்கு மண்டலத்தில் இ.பி.எஸ்.ஸின் சொந்த மாவட்டமான அவரின் கட்டுப்பாட்டி லுள்ள சேலம் மாவட்டத்தையும், கே.பி.முனுசாமி பொறுப்பேற்றுள்ள தருமபுரியை மட்டும் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்படைத்துள்ளார் ஸ்டாலின். 

வடக்கு மண்டலத்தில் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களோடு கொங்கு பகுதி என அழைக்கப்படும் சேலம், தருமபுரி என 9 மாவட்டங்களில் 41 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாரம் ஒருநாள் எனச

 

மிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியைத் துவங்கிவிட்டன. ஆளுங்கட்சியான தி.மு.க.வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என தீவிரம் காட்டுகின்றன. ஆளுங்கட்சியான தி.மு.க.வில் தமிழ்நாட்டை 8 மண்டலங்களாகப் பிரித்து, கழக துணைப் பொதுச்செயலாளர்கள், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம்தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர், மா.செ. செந்தில்பாலாஜி ஆகியோரை மண்டல தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 

கொங்கு மண்டலத்தில் இ.பி.எஸ்.ஸின் சொந்த மாவட்டமான அவரின் கட்டுப்பாட்டி லுள்ள சேலம் மாவட்டத்தையும், கே.பி.முனுசாமி பொறுப்பேற்றுள்ள தருமபுரியை மட்டும் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்படைத்துள்ளார் ஸ்டாலின். 

வடக்கு மண்டலத்தில் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களோடு கொங்கு பகுதி என அழைக்கப்படும் சேலம், தருமபுரி என 9 மாவட்டங்களில் 41 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாரம் ஒருநாள் எனச் சென்று ஒவ்வொரு தொகுதியிலுள்ள மக்கள் பிரச்சினைகள், கட்சியிலுள்ள கோஷ்டி பிரச்சினைகளை அறிந்து அதனை தீர்த்து வைப்ப தோடு, தொகுதிகளை யும் ஸ்கேன் செய்து வெற்றிக்கான திட்டங் களை வகுத்து மா.செ., ஒ.செ., தொகுதிப் பொறுப் பாளர்களை விரட்டி வேலை வாங்கிவருகிறார். எந்த தொகுதிக்கு, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதுவரை முடிவு செய்து விட்டு வேகம் காட்டிக்கொண்டி ருக்கிறார். சேலத்தில் கோஷ்டிகள் அதிகமென்பதால் அதனைச் சரிக்கட்டும் வேலையில் தீவிரம் காட்டிவருகிறார். இந்நிலையில் அமைச்சர் வேலுவின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறார் இ.பி.எஸ். என்ற தகவல் நமக்குக் கிடைத்தது. 

இதுகுறித்து மேல்மட்ட அ.தி.மு.க. பிரமுகர் களிடம் நாம் பேசியபோது, “"தி.மு.க.வைப்போல் எங்கள் கட்சியிலும் தேர்தல் பணிகள் துவங்கிவிட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்களைக் கைவிட்ட வடக்கு, டெல்டா மாவட்டங்களை குறிவைத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டுகின்றார் இ.பி.எஸ். சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறவேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வேலை செய்துவருகிறார், இதுதான் எடப்பாடியை அலர்ட்டாக்கியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் இப்போது எங்கள் கட்சி 10 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் 5 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றாலும் அது தி.மு.க.வுக்கு வெற்றி, இ.பி.எஸ்.ஸுக்கு படுதோல்வி. தனது சொந்த மாவட்டத்திலேயே வெற்றிபெற முடியவில்லை என்கிற பெயர் வரும். சேலத்தில் தி.மு.க.வின் கோஷ்டி பூசல்கள்தான் எங்களுக்கு பெரிய வெற்றியை தந்துகொண்டிருக் கிறது. அந்த கோஷ்டிப் பூசல்களை சரிசெய்துகொண்டிருக்கிறார் வேலு. இதனைக் கவனித்த பின்பே இ.பி.எஸ். -வேலுமணி இருவரும் வேலுவை அவரது மாவட்டத்துக்குள் முடக்க வேண்டும் எனப் பேசியுள்ளனர். இதுகுறித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இ.பி.எஸ். -வேலுமணி மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் விவாதம் நடந்துள்ளது. 

திருவண்ணாமலை தெற்கு மா.செ.வாக போளூர் எம்.எல்.ஏ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இருக்கிறார். அவர், திருவண்ணாமலை மாவட்டத்தி லுள்ள முன்னாள் அமைச்சர், தி.மு.க.வின் மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் வேலுவை அவரது தொகுதியிலேயே முடக்கவேண்டும் என்றால் வேலுவோடு அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை மோதவிடவேண்டும் என நினைக்கிறார்கள். 

இதுகுறித்து இ.பி.எஸ். -எஸ்.பி.வேலுமணி இருவரும், அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம்,  "நீங்கள் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுங்கள்' எனச்சொன்னதுமே அதிர்ச்சியாகிவிட்டார்.       "நான் எதுக்கு திருவண்ணாமலையில் போய் போட்டியிடனும்? அங்க மாவட்டச்செயலாளராக இருக்கற ராமச்சந்திரனுக்கு சீட் தந்து நிற்கவைங்க' என்றுள்ளார். "உங்க சமுதாய மக்கள் அங்கே அதிகமா இருக்காங்க, உங்களை தவிர வேற யார் போட்டியிட்டாலும் நம்ம கட்சிக்காரங்க வேலுவுக்கு எதிரா வேலை செய்யமாட்டாங்க. நம்ம கட்சி நிர்வாகிகள் எல்லாம் அமைச்சர் வேலுவோடு நல்ல நெருக்கத்தில் இருக்கறதா சொல்றாங்க. நீங்க நின்னா அவருக்கு கடும் போட்டியா இருக்கும்'னு சொல்லியிருக்காங்க. "எனக்கு கலசப்பாக்கம் தொகுதி தாங்க, நான் அங்க ஏற்கனவே இரண்டு முறை ஜெயிச்சிருக்கேன்,   நான் கண்டிப்பா அங்க சாதாரணமா ஜெயிச்சிடுவன். அந்த தொகுதி இல்லன்னா நான் இப்போ எம்.எல்.ஏவா இருக்கற போளுர் தொகுதியைத் தாங்க. திருவண்ணாமலை தொகுதியில் நான் நிற்கமாட்டேன்' எனச் சொல்லியிருக்கார். 

எங்கள் கட்சித் தலைமை எடுத்த எல்லா ரிப்போர்ட்களிலும் "அமைச்சர் வேலுவை திருவண்ணாமலையில் தோற்கடிப்பது கடினம். அ.தி.மு.க. நிர்வாகிகள் எல்லாம் அவருடன் நெருக்கமாக உள்ளார்கள். அ.தி.மு.க.வில் யாருக்கு சீட் தந்தாலும் சரியாக வேலை செய்தால் மட்டுமே அவருக்கு டப் ஃபைட் தரமுடியும். அதற்கான ஆட்களாக பார்த்து நிறுத்தவேண்டும்' என ரிப்போர்ட் தந்துள்ளனர். அதனையெல்லாம் அலசி ஆராய்ந்தே, "வேலுவை அவரது தொகுதிக்குள் முடக்கியது போலவும் இருக்கும், அக்ரியும், தன் வெற்றியை மட்டுமே பார்ப்பார், மற்ற தொகுதி     களில் தலையிடமாட்டார்' என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினார்கள், அவர் முடியாது எனச்சொல்வதால் என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகிறார்கள்'' என விவரித்தார்கள். 

அமைச்சர் வேலுவுக்கு நெருக்கமான வர்களோ, "அவரின் தேர்தல் வேலையை பார்த்துப் பயந்தே அவரை முடக்க நினைக்கிறார் இ.பி.எஸ். அக்ரி மீதுள்ள கெட்ட பேரால் தான் தொகுதி மாறி, மாறி நிற்கிறார். இ.பி.எஸ்.ஸே நினைத்தாலும் திருவண்ணா மலையில் அவரைத் தோற்கடிக்க முடியாது, திருவண்ணாமலை தி.மு.க.வின் கோட்டை. இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அவர் பயப்படமாட்டார். வடக்கு மண்டலத்தில் அவர் சாதனை நிகழ்த்து வார்'' என்கிறார்கள்.

வடக்கு மண்டல பொறுப்பாளர் மட்டுமல்ல, தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரையும் முடக்கத் திட்டமிடுகிறது அ.தி.மு.க. தலைமை. 

-து.ராஜா

nkn020825
இதையும் படியுங்கள்
Subscribe