மீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கத்தியை வைத்துக்கொண்டு கெத்து காட்டும் கலாச்சாரம் தொடர்கதை யாகி வருகிறது, அதன் விளைவு, கொலையில் முடிந்துள்ளது.

கடந்த மே 12ஆம் தேதி ஞாயிறன்று மதியம், சென்னை, தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம், சேதுநாராயணன் சாலை அருகில் இருசக்கர வாகனத்தில் உதயகுமார், அவரது பெண் தோழியுடன் வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் உதயகுமாரை மடக்கியதும், வாகனத்திலிருந்து இறங்கிய இருவர், பட்டாக்கத்தியால் உதயகுமாரை வெட்ட வந்தார்கள். இதனைக் கண்டு பயந்துபோன உதயகுமார், இரு சக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு அங்கி ருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அவரை விரட்டிச் சென்ற இருவரும் உதயகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி சேலையூர் காவல் நிலையம் சென்று சரணடைந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் மட்டும் தப்பியோடி விட்டார்.

ss

தகவலறிந்து சென்ற சிட்லப் பாக்கம் காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக் காக அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்க, அங்கே சிகிச்சை பலனில்லாமல் திங்களன்று அதிகாலை உதயகுமார் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் கொலை முயற்சி வழக்கு தொடர்ந்திருந்த சிட்லப்பாக்கம் காவல்துறையினர், மப்பேடு பகுதியை சேர்ந்த நரேஷ், கல்லூரி மாணவரான கிருஷ்ணா, சாந்தகுமார் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், நான்கு மாதங்களுக்கு முன்பு, ஆட்டோவை தெருவில் நிறுத்தியிருந்தபோது ஏற்பட்ட தகராறில் உதயகுமார், நரேஷை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், அதன் காரணமாக தற்போது வெட்டிய தாக வாக்குமூலம் அளித்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெட்டுப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த தால் வழக்கை கொலை வழக் காக மாற்றி விசாரித்து வரு கின்றனர்.

சாதாரண பிரச்சனை களுக்காகக் கூட கத்தியை எடுக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது, இதுகுறித்து கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக் குமார் கூறுகையில், "மாணவர் கள் மத்தியில் இப்படியான வன்முறை மனோபாவம் ஏற் படுவதற்கு சினிமா, தொலைக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகக்கூடிய வன்முறைக் காட்சிகள் முக்கிய காரண மாகின்றன. அவற்றில் வெளிப் படும் கதாநாயக மனோபாவத் தால் ஈர்க்கப்பட்டு தாங்களும் அதுபோன்ற வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள். இதெல் லாம் தவறென்ற சிந்தனையே இல்லாமல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

போதைப்பொருட்கள் தற்போது வெகுசுலபமாகப் புழக்கத்தில் கிடைக்கும் சூழலில், அந்த மயக்க நிலையில், தான் செய்வதறியாமல் இதுபோன்ற வன்முறையைக் கையி லெடுப்பதும் நடக்கிறது'' என் கிறார்.

பெற்றோர்களின் கண் காணிப்பும், கண்டிப்புமே மாணவர்களை வன்முறைக்குள் செல்லாமல் தடுக்கும்.

Advertisment