தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர், சீனியர், தென் மாவட்டத்தில் தி.மு.க.வின் முக்கிய புள்ளி மற்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் அமைச்சர் ஐ.பெரியசாமி. ரெய்டு எனும் பெயரில் அவரை அசைத்துப் பார்த்தால், வரும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு சாதகமாக இருக்கும் என்கிற அரசியல் கணக்குடன் சனிக்கிழமையன்று அமலாக்கத்துறை யை ஏவியது ஒன்றிய அரசு. எதிர்பார்த்த ஒன்று தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி அமைதியாய் இருந்த நிலையில், எதிர்பார்த்த எதுவுமே கிடைக் காததால் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பிய அமலாக்கத்துறைக்கு சிரித்துக்கொண்டே கைகுலுக்கி வழியனுப்பி வைத்துள்ளார் அவர். அரசியல் வரலாற்றில், ரெய்டுக்கு வந்தவர்களை கைகுலுக்கி வழியனுப்பி வைத்த சம்பவம், எதிர்த்தரப்பினரையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி, சனிக்கிழமையன்று, காலை சுமார் 7 மணியளவில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஐ.பெரியசாமியை குறிவைத்து, அவருக்கு தொடர்புடைய 7 இடங் களில் சோதனையை ஆரம்பித்தது அமலாக்கத் துறை. திண்டுக்கல் துரைராஜ் நகர் இரண்டாவது தெருவிலுள்ள அமைச்சர் பெரியசாமி வீடு, சீலப் பாடியிலுள்ள அமைச்சர் பெரியசாமியின் மகனும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீடு, திண்டுக்கல் வள்ளலார் நகரிலுள்ள அவரது மகள் இந்திராணி வீடு, செம் பட்டி - வத்தலகுண்டு சாலையிலுள்ள இளைய மகன் பிரபுவுக்கு சொந்த மான ஸ்பின்னிங் மில், மருமகனின் 'இனப்' மில், சென்னை கிரீன் வேஸ் சாலையி
தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர், சீனியர், தென் மாவட்டத்தில் தி.மு.க.வின் முக்கிய புள்ளி மற்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் அமைச்சர் ஐ.பெரியசாமி. ரெய்டு எனும் பெயரில் அவரை அசைத்துப் பார்த்தால், வரும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு சாதகமாக இருக்கும் என்கிற அரசியல் கணக்குடன் சனிக்கிழமையன்று அமலாக்கத்துறை யை ஏவியது ஒன்றிய அரசு. எதிர்பார்த்த ஒன்று தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி அமைதியாய் இருந்த நிலையில், எதிர்பார்த்த எதுவுமே கிடைக் காததால் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பிய அமலாக்கத்துறைக்கு சிரித்துக்கொண்டே கைகுலுக்கி வழியனுப்பி வைத்துள்ளார் அவர். அரசியல் வரலாற்றில், ரெய்டுக்கு வந்தவர்களை கைகுலுக்கி வழியனுப்பி வைத்த சம்பவம், எதிர்த்தரப்பினரையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி, சனிக்கிழமையன்று, காலை சுமார் 7 மணியளவில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஐ.பெரியசாமியை குறிவைத்து, அவருக்கு தொடர்புடைய 7 இடங் களில் சோதனையை ஆரம்பித்தது அமலாக்கத் துறை. திண்டுக்கல் துரைராஜ் நகர் இரண்டாவது தெருவிலுள்ள அமைச்சர் பெரியசாமி வீடு, சீலப் பாடியிலுள்ள அமைச்சர் பெரியசாமியின் மகனும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீடு, திண்டுக்கல் வள்ளலார் நகரிலுள்ள அவரது மகள் இந்திராணி வீடு, செம் பட்டி - வத்தலகுண்டு சாலையிலுள்ள இளைய மகன் பிரபுவுக்கு சொந்த மான ஸ்பின்னிங் மில், மருமகனின் 'இனப்' மில், சென்னை கிரீன் வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் பெரியசாமியின் அரசு பங்களா மற்றும் சென்னை சேப்பாக்கத் திலுள்ள எம்.எல்.ஏ. செந்தில்குமார் வீடு ஆகிய இடங்கள் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. அனைத்து இடங்களிலும் செல்போன் ஜாமர்கள் பொருத்தப் பட்ட நிலையில் சோதனைகள் நடந்தன.
பெரியசாமி மற்றும் செந்தில்குமாரின் சென்னை இல்லத்தில் சில அறைகளுக்கு பூட்டிற் கான சாவி கிடைக்காத நிலையில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை சோதனை யிட்டு, கொண்டுவந்த ஜெராக்ஸ் இயந்திரங்கள் மூலம் தங்களுக்கான காகிதங்களை ஜெராக்ஸ் எடுத்தனர். இதே வேளையில் திண்டுக்கல்லிலுள்ள அமைச்சர் வீட்டின் முன்பு குவிந்த கட்சித் தொண் டர்கள் அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷம் போட, "அவங்க வேலையை பார்க்க வந்திருக் காங்க. நம்மால் அவங்களுக்கு எந்த இடைஞ்சலும் கூடாது'' என அமைச்சர் பெரியசாமி தொண்டர் களிடம் கோரிக்கை வைக்க, அமைதியானார்கள். இருந்தாலும் அங்கிருந்து நகராமல் வாசல் முன்புறத்தில் அந்த தெரு முழுவதும் நாற்காலி போட்டு உட்கார்ந்தனர். மறுபக்கம் ஒட்டுமொத்த மாநகராட்சி கவுன்சிலர்களும் அங்கு வந்து, "நாங்களும் அண்ணன் கூட இருக்கின்றோம்' என அங்கேயே அமர்ந்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், "2006 -2011 வரை வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்திருக்கின்றார் அமைச்சர் பெரியசாமி. அடுத்துவந்த அ.தி.மு.க. ஆட்சி வருமானத் திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெரியசாமி மீது வழக்கினை பதிவு செய்து தன்னுடைய அரசியல் வஞ்சத்தை ஆரம்பித்தது. எனினும் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் 2012-ல் அவரை விடுவித்தது. பின்னாளில், 2018ஆம் ஆண்டு இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. நீண்ட நாட் களாக கிடப்பில் கிடந்த அந்த வழக்கில் தீர்ப்பு ரத்து செய்யப் பட்டு, 2025 ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று மீண்டும் நடப்பிற்கு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பெரியசாமி மேல் முறையீடு செய்ய, இதன் விசாரணை, செவ்வாய்க் கிழமையன்று வர உள்ளது. அதற்கு முன்னால் ஏதாவது ஆதாரம் கிடைத்தால் வழக்கு நிற்கும் என்பதன் அடிப்படையிலும், தற்பொழுது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்பதால் பஞ்சாயத்துராஜ், ஜல்ஜீவன் உள்ளிட்ட மத்திய அரசு திட்டத்தில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கின்றதா? என்பதன் அடிப்படையிலும் அமைந்தது இந்த ரெய்டு'' என்றார்.
எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத் தின்போது நயினார் நாகேந்திரன் அளித்த விருந்தின்போது, தி.மு.க.வின் எட்டு அமைச்சர்கள் குறித்த ஃபைலை எடப்பாடி கொடுத்ததாகவும், அந்த அடிப்படையில் ரெய்டு நடந்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
சுமார் 12 மணி நேரம் வரை நீடித்த சோதனையில் தாங்கள் எதிர்பார்த்தது எதுவும் சிக்காததால், தலையை தொங்கவிட்டபடியே ரெய்டை முடித்துக்கொண்டனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். திண்டுக்கல் வீட்டிலிருந்து வெளியேறிய அதிகாரிகளிடம் சிரித்துக்கொண்டே கைகுலுக்கி அனுப்பிவைத்த பெரியசாமி, அங்கிருந்த தொண்டர்களிடம் "ஒன்னுமில்லை, நீங்கள் வீட்டிற்கு போகலாம்." என்றார்.
முன்னதாக, ரெய்டை கண்டித்து தீக்குளிக்க முற்பட்டார் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் சரவணன், அமலாக் கத்துறையின் ரெய்டை கண்டித்து தேவர் பேரவை சார்பாக எடப்பாடிக்கு எதிராகவும், பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும் ஒட்டப்பட் டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இப்படியிருக்க, 'அனுமதியின்றி பூட்டை உடைத்து அத்துமீறி பிரவேசித்துள்ளனர்' என திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது எம்.எல்.ஏ. செந்தில்குமார் தரப்பு. இது வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, தலைமை செயலகத்தில், அமைச்சர் பெரியசாமியின் அறைகளில் சோதனையிட, அமலாக்கத் துறை அதிகாரிகள் செல்வதாக தகவல் வெளியாக, அமைச்சர் அறை பூட்டப்பட்டதுடன், தலைமை செயலகமும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
ஒன்றிய அரசின் அச்சுறுத்தும் நடவடிக்கை களில் இது ஒன்று என்பதால், "ஊஉ-க்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! சட்டப்படி எதிர்கொள்வோம்! வாக்கு திருட்டு’ என்ற ’சட்ட விரோத வாக்குப் பரிமாற்றத் தை திசைதிருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது'' எனக் காட்ட மாக அறிக்கை வெளியிட்டார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
"தி.மு.க. தனியாக நின்றாலே வென்றுவிடும் என்கிற மத்திய உளவுத்துறையின் ரிப்போர்ட் மத்திய அரசுக்கு கிலியடித்திருக் கின்றது. எப்படியாவது தி.மு.க. வின் வெற்றியை முடக்க வேண்டும் என்கிற எண்ணம் பா.ஜ.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும். கட்சியின் சீனியர் தலைகளை டார்கெட் செய்து நெருக்கடி கொடுத்தால் தி.மு.க.வில் பதைபதைப்பை உரு வாக்கலாம் என ஒன்றிய உளவுத்துறை ஆலோ சனை கூறிய நிலையில் அமலாக்கத்துறை பாய்ந்திருக்கின்றது. ஆனால் இது முன்னமே எதிர்பார்த்த ஒன்றுதான். இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடு களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் வேளையில் இது நடைபெற வேண்டுமென்று காத்திருக்க, உச்ச நீதிமன்ற வழக்கில் என்ன பதில் சொல்வது என்ற நெருக்கடியில் சீனியர் பெரியசாமி மீது பாய்ந்திருக்கின்றது அமலாக்கத்துறை. பீகார் தேர்தல் ரிசல்டை பொறுத்துத்தான் அடுத்தகட்ட ரெய்டுகள் தொடரும்'' என குறிப்பு எழுதியுள்ளது மாநில உளவுத்துறை.
அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அனைவரையும் விடுவித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், திண்டுக்கல் நீதிமன்றத் தின் உத்தரவை ரத்து செய்தது. இதற்கெதிராக அமைச்சர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் செய்யப் பட்ட மேல்முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து ஆகஸ்ட் 18, திங்களன்று உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"அமைச்சர்களைக் குறிவைக்கும் அமலாக்கத் துறைக்கு எதிராக சம்பவம் செய்துள்ளார் ஐ.பெரிய சாமி' என தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கூறிவருகின்றனர்.