Advertisment

போக்குவரத்துத் துறையை குறிவைக்கும் அமலாக்கத்துறை!

ff

ரசு போக்குவரத்துத்துறையில் நடந்துள்ள விளம்பர ஊழல்களை மோப்பம் பிடித்திருக்கிறது அமலாக்கத்துறை. இதனால், போக்குவரத்துத் துறையை மையப்படுத்தி விரைவில் அதிரடி ரெய்டு நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

Advertisment

தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்து கழகத்தில் 1,200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் சென்னையிலிருந்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்றுவருகின்றன. இவைகளில் விளம்பரம் செய்ய விடப்பட்ட டெண்டர் விவகாரத்தில்தான் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisment

tt

இதுகுறித்து போக்குவரத்துக்கழக தொழிற்சங் கங்கள் மற்றும் அமலாக்கத் துறை செயல்பாடு களில் பரிட்சயமுள்ள சிலரிடம் விசாரித்தபோது, "அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் 1,200 பேருந்துகளில், 600 பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்கான பாக்ஸ் டெண்டர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஒரு பேருந்தில் விளம்பரம் செய்ய 1 மாதத்திற்கு 3,200 ரூபாய் பிக்ஸ் செய்தது போக்குவரத்துக்கழக நிர்வாகம். இந்த தொகையிலிருந்து யார் அதிக தொகையை கோட் பண்ணு கிறார்களோ அவர்களுக்கு டெண்டர் முடிவாகும். டெண்டரில் ஏ.எம்.சி.கம்பெனி, சீசன் எண்டர்ப் ரைசஸ், அல்நஃபியா அட்வர்டைசிங், ரிசி ஆட் அண்ட் ப்ரமோட்டர்ஸ், சாய் ஆர்ட்ஸ் ஆகிய 5 கம்பெனிகள் கலந்துகொண்டன. இதில் 3,205 ரூபாய் கோட் பண்ணிய ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. 600 பேருந்துகளில் 2 பக்கமும் உள்ள நடுப்பகுதியில் 2 ஆண்டுகள் விளம்பரம் செய்து கொள்ளலாம்.

ஒரு பேருந்தில் ஒரு மாதத்துக்கு விளம்பரம் செய்ய 3,205 ரூபாய் என 600 பேருந்துகளுக்கும் மாதம் 19,23,000-க்கு டெண்டர் விட்டுள்ளது போக்குவரத்துக் கழகம்.

ரசு போக்குவரத்துத்துறையில் நடந்துள்ள விளம்பர ஊழல்களை மோப்பம் பிடித்திருக்கிறது அமலாக்கத்துறை. இதனால், போக்குவரத்துத் துறையை மையப்படுத்தி விரைவில் அதிரடி ரெய்டு நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

Advertisment

தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்து கழகத்தில் 1,200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் சென்னையிலிருந்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்றுவருகின்றன. இவைகளில் விளம்பரம் செய்ய விடப்பட்ட டெண்டர் விவகாரத்தில்தான் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisment

tt

இதுகுறித்து போக்குவரத்துக்கழக தொழிற்சங் கங்கள் மற்றும் அமலாக்கத் துறை செயல்பாடு களில் பரிட்சயமுள்ள சிலரிடம் விசாரித்தபோது, "அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் 1,200 பேருந்துகளில், 600 பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்கான பாக்ஸ் டெண்டர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஒரு பேருந்தில் விளம்பரம் செய்ய 1 மாதத்திற்கு 3,200 ரூபாய் பிக்ஸ் செய்தது போக்குவரத்துக்கழக நிர்வாகம். இந்த தொகையிலிருந்து யார் அதிக தொகையை கோட் பண்ணு கிறார்களோ அவர்களுக்கு டெண்டர் முடிவாகும். டெண்டரில் ஏ.எம்.சி.கம்பெனி, சீசன் எண்டர்ப் ரைசஸ், அல்நஃபியா அட்வர்டைசிங், ரிசி ஆட் அண்ட் ப்ரமோட்டர்ஸ், சாய் ஆர்ட்ஸ் ஆகிய 5 கம்பெனிகள் கலந்துகொண்டன. இதில் 3,205 ரூபாய் கோட் பண்ணிய ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. 600 பேருந்துகளில் 2 பக்கமும் உள்ள நடுப்பகுதியில் 2 ஆண்டுகள் விளம்பரம் செய்து கொள்ளலாம்.

ஒரு பேருந்தில் ஒரு மாதத்துக்கு விளம்பரம் செய்ய 3,205 ரூபாய் என 600 பேருந்துகளுக்கும் மாதம் 19,23,000-க்கு டெண்டர் விட்டுள்ளது போக்குவரத்துக் கழகம். ஆனால், டெண்டர் எடுத்துள்ள நிறுவனமோ, வெளிமார்க்கெட்டில் ஒரு பேருந்தில் ஒரு மாதத்துக்கு விளம்பரம் செய்ய 30,000 ரூபாய் என கணக்கிட்டு 600 பேருந்துகளுக் கும் 1 கோடியே 80 லட்சத்துக்கு விற்றிருக்கிறது.

அந்த வகையில், இந்த டெண்டர் 2 வருட காலம் என்பதால் போக்குவரத்து கழகத்துக்கு 4 கோடியே 61 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கும். அதுவே டெண் டர் எடுத்த நிறுவனத்துக்கு 43 கோடியே 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த 2 வருட கால டெண்டரில் அரசுக்குச் செலுத்தவேண்டிய 4,61,52,000 ரூபாயை கழித்துவிட்டால் டெண்டர் எடுத்துள்ள நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத் தொகை 38 கோடியே 58 லட்சத்து 48,000 ரூபாய்.

பொதுவெளியில் வெளிமார்க்கெட்டில் 1 பேருந்தில் 1 மாதத்துக்கு விளம்பரம் செய்ய 30,000 ரூபாய் கொடுக்க தனியார் நிறுவனங்கள் தயாராக இருக்கும் நிலையில், வெறும் 3,205 ரூபாய்க்கு எதற்கு தனியார் லாபம் கொழிக்க டெண்டர் விடவேண்டும்?

அப்படியே டெண்டர் விடுவதாக இருந்தால் வெளிமார்க்கெட் ரேட்டுக்கு மேட்ச் செய்கிறமாதிரி டெண்டர் தொகையை பிக்ஸ் செய்யவேண்டாமா? அப்படி செய்திருந்தால் போக்குவரத்துக்கழகத்துக்கு பல கோடிகள் அடுத்த 2 வருடங்களுக்கு லாப மாகக் கிடைக்கும். அதைத் தவிர்த்துவிட்டு டெண்டர் என்ற பேரில் தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியமென்ன? கார ணம், டெண்டர் விடுவதன் மூலம் அதிகாரி களுக்கு கமிசன் கிடைக்கும் என்பதுதான்.

tr

அந்த வகையில், அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக நிர்வாகத்தின் உயரதிகாரி ஒருவருக்கு மட்டுமே 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டிருக்கிறது. ஆக, தனக்கு கிடைக்கும் லாபத் தொகையில் 5 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 34 கோடி ரூபாயைச் சுருட்டுகிறது டெண்டர் எடுத்த நிறுவனம்.

டெண்டரில் கலந்துகொள்ள இந்த தொழிலில் குறிப்பிட்ட காலம் முன்அனுபவம் இருக்கவேண்டும், குறிப்பிட்ட தொகைக்கு ட்ரான்சேக்ஷன் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், டெண்டர் எடுத்த கம்பெனிக்கு விதிகளின்படி எந்தத் தகுதியும் இல்லை. குறிப்பிட்ட கம்பெனிக்கு தரவேண் டும் என்பதற்காகவே தகுதியுள்ள நிறுவனங்களை சில காரணங்களைச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிட்டனர் அதிகாரிகள். துறையின் அமைச்சர் சிவசங்கர் இந்த டெண்டர் விவகாரத்தில் கவனம் செலுத்தவேண்டும்''” என்கிறார்கள். இதற்கிடையே, டீசல் ஊழல் குறித்தும் போக்குவரத்துக்கழக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "தமிழகம் முழுவதும் 22,000 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறன. இவைகளுக்காக ஒரு நாளைக்கு 18 லட்சம் லிட்டர் டீசலை கொள்முதல் செய்கின்றன போக்குவரத்துக்கழகங்கள்.

ஒரு வருடத்துக்கு முன்புவரை, பொதுத்துறை நிறுவனமான இண்டியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐ.ஓ.சி.) இருந்து நேரடியாகவே தேவையான டீசல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அப்படி கொள்முதல் செய்யும்போது, லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளை குறைத்துக் கொடுத்தது இண்டியன் ஆயில் நிறுவனம்.

அந்த வகையில், ஒரு நாளைக்கு 45 லட்ச ரூபாய் போக்குவரத்துக் கழகங்களுக்கு லாபம் கிடைத்தது. ஆனால், ஐ.ஓ.சி.யிடம் கொள்முதல் செய்யும் டீசலுக்கு செலுத்தவேண்டிய தொகையில் பல கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகங்கள் பாக்கி வைத்திருந்தன. நிலுவைத் தொகையை செட்டில் செய்யாததால், டீசல் சப்ளையை நிறுத்திவிட்டது ஐ.ஓ.சி. இதனால், தனியார் பெட்ரோல் பங்குகளிடமிருந்துதான் பல மாதங்களாக டீசலை கொள்முதல் செய்துவருகிறது அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள். பெட்ரோல் பங்க் லைசன்ஸ் எடுத் துள்ள சில தனியார் நிறுவன உரிமையாளர்கள் சிண்டி கேட் அமைத்துக்கொண்டிருப்பதால் அவர்களிடம் பேசி, டீசல் கொள்முதல் செய்கிறது போக்குவரத்துக்கழ கம். அப்படி வாங்கும்போது லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் கூடுதலாகக் கொடுத்து வாங்குகின்றன.

கூடுதலாகக் கொடுக்கப்படும் 2 ரூபாய் 50 காசுகளில், 1 ரூபாய் 25 காசுகள் தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனங்களுக்கும், 1 ரூபாய் 25 காசுகள் அதி காரிகளுக்கும் என பிரித்துக்கொள்ளப்படுகிறது. அதி காரிகளுக்கான அந்த கமிஷன் பணம் ஒவ்வொருநாளும் சென்னை பாரீஸிலிருக்கும் ஒரு மார்வாடி யிடம் செட்டில் செய்யப்படுகிறது.

ஐ.ஓ.சி.யிடம் டீசல் வாங்குபோது ஒரு நாளைக்கு 45 லட்ச ரூபாய் கழகங்களுக்கு லாபம் கிடைத்தது. தனியாரிடம் வாங்குவதால் தினமும் 45 லட்ச ரூபாய் நட்டம் ஏற்பட்டுவருகிறது. அந்தவகையில், வருடத்துக்கு 164 கோடியே 25 லட்ச ரூபாய் போக்குவரத்துக் கழகத்துக்கு நட் டம். அதிகாரிகளின் கமிஷன் கொள்ளைகளுக் காகவே கழகங்கள் நட்டமாக்கப்படுகின்றன.

அதேபோல, சமீபத்தில் 1000 பேருந் துகளை ஆல்ட்ரேசன் செய்ய ஆர்டர் போடப் பட்டுள்ளது. அதாவது, பழைய சேஸை வைத்துக் கொண்டு புதிதாக பாடி மட்டும் கட்டவேண்டும் என்பது ஆர்டர். புதிய சேஸ், புதிய பாடி கட்டினாலே ஒரு பேருந்துக்கு 30 லட்சம் ரூபாய் போதுமானது. ஆனால், இங்கு பழைய சேஸ், புது பாடி மட்டும் கட்டுவதற்கான ஆல்ட்ரேசன் செய்ய ஒரு பேருந்துக்கு 45 லட்சம் ரூபாய் பில் போடப்படுகிறது. இதைக் கணக்கிட்டால் இதில் நடக்கும் ஊழல்கள் கண்ணைக் கட்டும். இதெல்லாம் அமைச்சருக்குத் தெரியாமலே நடக்கின்றன''’என்கின்றன போக்குவரத்து துறை வட்டாரங்கள். அரசுப் போக்கு வரத்துக்கழகங்களில் நடந்துகொண்டி ருக்கும் இந்த ஊழல் விவகாரங்கள் தான் அமலாக்கத்துறைக்கு சமீ பத்தில் கிடைத்திருக்கிறது. அந்தத் தகவல்களின் அடிப் படையில் விரைவில் கழகங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்படலாம் என்கின்ற விவரமறிந்த அமலாக்கத்துறை வட்டாரங்கள்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "பேருந்து களில் விளம்பரம் செய்ய ஒரு தொகை நிர்ணயித்து டெண்டர் விடப்படுகிறது. ஆனால், டெண்டர் எடுத்தவர் அதனை பொதுவெளியில் இவ்வளவு தொகைக்குத்தான் விற்கவேண்டும் என நாம் நிர்ப்பந்திக்க முடியாது. கேள்வி கேட்கவும் முடியாது. பொதுவெளியில், அதிக ரேட் போகிறது என்பதற்காக நேரடியாக நாம் பேச்சுவார்த்தை நடத்தி விளம்பர ஒப்பந்தம் போடமுடியாது. காரணம், அதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது. விளம்பரம் செய்துவிட்டு பலரும் பணம் தராமல் ஏமாற்றிவிடுவதும் நடக்கிறது. அத னால்தான், அதிகாரிகள் டெண்டர் முறையைக் கையாளுகிறார்கள். இதை தவறென சொல்ல முடியாது. அதேபோல, டீசல் விவகாரத்தில், தனியார் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் வாங்கி யது உண்மைதான். இப்போது இல்லை. அதாவது, ஐ.ஓ.சி. நிறுவனம் பல்க் வியாபாரம், சில்லரை வியாபாரம் என 2 வகைகளில் டீசல் கொடுத்துவரு கிறது. பங்குகளைவிட ஐ.ஓ.சி.யிடம் ரேட் குறை வாக இருந்ததால் பல்க்காக வாங்கிக்கொண்டிருந் தோம். திடீரென விலையை உயர்த்திவிட்டனர். இதனால், பெட்ரோல் பங்கு களில் ரேட் குறைவாக இருந்த தால், பங்குகளுக்கு மாறினோம். தற்போது, ஐ.ஓ.சி.யிடமும், பெட்ரோல் பங்குகளிடமும் ஒரே ரேட் என்பதால் இப்போது ஐ.ஓ.சி.யிட மிருந்துதான் டீசல் வாங்கப்படுகிறது. அதனால் துறையில் ஊழல் நடப்பதாக சொல்கிற குற்றச் சாட்டுகள் எதிலும் உண்மையில்லை'' என்று மறுக்கிறார் அமைச்சர் சிவ சங்கர்.

தி.மு.க. ஆட்சியில் நடக் கும் ஊழல்களை துறை வாரியாக சேகரித்துவருகின்றன மத்திய மோடி அரசின் விசாரணை அமைப்புகள்.

nkn281023
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe