எதிர்க்கட்சி மாநில அரசுகளை குறிவைக்கும் அமலாக்கத்துறை!

nn

மிழ்நாட்டில் தற்பொழுது மிக பிஸியாக இருக்கும் மத்திய அரசின் துறை என்றால் அது அமலாக்கத்துறைதான். இந்தியாவில் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களைத் தாண்டி அதிகமான அதிகாரி கள் தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை 15-த் தாண்டும் என் கிறார்கள் அமலாக்கத்துறையினர். தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சரையும் ஆய்வு செய் வதற்கு என தனித்தனி அமலாக்கத்துறை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்பொழுது வரு மானவரித்துறை யால் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் எ.வ.வேலு மீது அமலாக்கத்துறை பாய இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது. மணல் குவாரி கணக்கு வழக்குகள், செக்போஸ்ட்டுகளில் மணல் குவாரி நடமாட்டங்கள், மணல் எவ்வளவு அளவில் அள்ளப்பட்டு இருக்கிறது என்பது பற்றிய சேட்டிலைட் புகைப் படங்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் மணல் அள்ளப்பட்டது பற்றிய புகைப்படங்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்திக்கொண்டு இருக்க

மிழ்நாட்டில் தற்பொழுது மிக பிஸியாக இருக்கும் மத்திய அரசின் துறை என்றால் அது அமலாக்கத்துறைதான். இந்தியாவில் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களைத் தாண்டி அதிகமான அதிகாரி கள் தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை 15-த் தாண்டும் என் கிறார்கள் அமலாக்கத்துறையினர். தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சரையும் ஆய்வு செய் வதற்கு என தனித்தனி அமலாக்கத்துறை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்பொழுது வரு மானவரித்துறை யால் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் எ.வ.வேலு மீது அமலாக்கத்துறை பாய இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது. மணல் குவாரி கணக்கு வழக்குகள், செக்போஸ்ட்டுகளில் மணல் குவாரி நடமாட்டங்கள், மணல் எவ்வளவு அளவில் அள்ளப்பட்டு இருக்கிறது என்பது பற்றிய சேட்டிலைட் புகைப் படங்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் மணல் அள்ளப்பட்டது பற்றிய புகைப்படங்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நீர்வளத்துறை தலைமை அதிகாரி முதல் சாதாரண அதிகாரி வரை நூற்றுக்கணக்கான பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

nn

தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகள் மூடப்பட்டு விட்டன. மணல் குவாரிகளில் இருந்து ரெய்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட மணல் மிகப்பெரிய யார்டுகளில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மணலைத்தான் அரசு விற்பனை செய்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த யார்டுகளில் உள்ள மணல் விற்பனை வருகிற தீபாவளி வரைதான் வரும் என்கி றார்கள் மணல் தொழிலைச் சார்ந்தவர்கள். ஏற்கெனவே மணல் தொழிலில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கரிகாலன், ரத்தினம் கும்பல் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விட்டார்கள். அவர் களது ஏஜென்சிகள், கிராவல் மண், கல் குவாரி போன்றவற்றில் மட்டும் வசூல் செய்கிறார்கள். கரிகாலனுக்குப் பதில் ஆறுமுக சாமியை களத்தில் இறக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. ஆறுமுகசாமி, எனக்கு உடல்நிலை ஒத்துக் கொள்ளவில்லை என தன்னிடம் வேண்டியவர்களிடம் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். கரிகாலன் கும்பல் தங்களிடம் உள்ள எந்திரங்களை ஆந்திராவுக் குக் கொண்டுசென்று விட்டது. கரிகாலன் தனக்குச் சொந்தமான செக்மேட் பாரை மறுபடியும் திறந்து பார் பிசினஸை பெங்களூ ருவில் இருந்தபடியே நடத்த ஆரம்பித்துவிட்டார். மணல் விசயத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கரிகாலன் கும்பலை இதுவரை விசா ரிக்கவில்லை. ஆனால், இதில் பெரிய அளவிற்கு திட்டம் போட்டு அவர்கள் நகரு கிறார்கள்.

டெல்லி அரசை மதுபான விசயத்தில் எப்படி சிக்க வைத்தார்களோ அதே போல் அமைச்சர் துரைமுரு கனை மணல் விசயத்தில் சிக்க வைப்பதற்கான ஏற் பாடுகள் நடந்து கொண்டி ருக்கின்றன. ஆற்று மண லைத் தவிர வேறெங்கும் அமலாக்கத்துறை தனது கவனத்தைச் செலுத்த வில்லை. ஏனென்றால், ஆற்று மணலை மட்டும் தான் தமிழக அரசாங்கத்துக்கு சொந்தமான குவாரி கள் மூலம் அரசே நேரடியாக விற்கிறது. அதில் செய்யப்படும் முறைகேடுகள் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் வரும். அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் டெல்லியில் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்முதல் விசயத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதேபோல் சட்டீஸ்கரில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் ரூபாய் 508 கோடியை சவுரப் சந்திரசேகர், ரவி உப்பல் ஆகிய ஆன்லைன் பெட்டிங் பிரமோட்டர்களிடமிருந்து வாங்கியதாக அவர்களது இ-மெயில்களில் இருந்து தகவல்களை எடுத்து சட்டீஸ்கர் முதல்வர் பாகலுக்கு குறி வைத்திருக்கிறார்கள்.

தேர்தல் நடக்கும் அந்த மாநிலத்தில் ஒரு லாட்ஜிலிருந்து 5.39 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றி, அது தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் புக்கிங் ஆன்லைன் நிறுவனம் கொடுத்தது என வழக்குப் போட்டிருக்கிறார்கள். அதேபோல் சமீபத்தில் தேர்தல் நடக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையும் அமலாக்கத்துறை வழக்குகளில் சிக்க வைத்திருக்கிறது. அதே பாணியில் தமிழகத்தில் அமைச்சர்கள் துறைகளில் நடக்கும் விபரங்களை அமலாக்கத்துறை சேகரித்து வருகிறது.

இனி தமிழகத்தில் தேர்தல் முடியும்வரை அமலாக்கத்துறை சோதனைகள் தமிழக அமைச்சர்களைக் குறிவைத்து அடிக்கடி நடக்கும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

________

இறுதிச் சுற்று

ff

தமிழக அரசின் வணிகவரித் துறைக்கும், வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவைகளுக்கும் இடையிலான நிலுவைகளை தீர்வு செய்தல் தொடர்பான சமாதான் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த சமாதான் திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 6-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அவரது தலைமையில் சமாதான் திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மூர்த்தி, வரி செலுத்துவதன் கடமை குறித்து அறிவுறுத்தியதுடன், "வணிகர்களின் நலன்களுக்காக நிறைய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார் முதல்வர். தமிழகத்தில் 25,000 கோடிக்கும் அதிகமாக வரிபாக்கி நிலுவையில் இருக்கிறது. இதனை சலுகைகளுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து பரிசீலித்து சில சமாதான திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். அதனை வணிகர்கள் பயன் படுத்திக் கொள்ள லாம்'' என்று சமாதான் விழிப்புணர்வு திட் டத்தை விளக்கி னார்.

-இளையர்

nkn081123
இதையும் படியுங்கள்
Subscribe