Advertisment

ராங்கால்- துரைமுருகனை குறிவைத்த அமலாக்கத்துறை! சீமானுக்கு, எடப்பாடி தூண்டில்! தீபாவளி வசூல்! வர்த்தக நிறுவனங்களை வேட்டையாடும் பா.ஜ.க.!

ff

"ஹலோ தலைவரே, அமலாக்கத்துறை அடுத்ததா சீனியர் அமைச்சர் ஒருவரை நெருங்க இருப்பதாகத் தகவல்கள் வருகிறதே?''”

Advertisment

duraimurugan

"மணல் பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் கரிகாலன், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரைக் குறிவைத்து அண்மையில், அதிரடி ரெய்டுகளை நடத்திய அமலாக்கத்துறை, கிடைத்த ஆவணங்களை வைத்து, அவற்றின் மிச்சசொச்ச விவகாரங்களையும் சைலண்டாகத் துழாவி வருகிறது. அடுத்ததாக கனிமவளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரான தி.மு.க.வின் சீனியர் துரைமுருகனையும் தற்போது அது நெருங்கும் முடிவில் இருக்கிறதாம். அமைச்சருக்கு சம்மன் அனுப்பவும் அது திட்டமிட்டிருக்கிறதாம். டெல்லியின் சிக்னலுக்காகத்தான் அவர்கள் தயார் நிலையில் காத் திருக்கிறார்களாம். இதையறிந்த அமைச்சர் தரப்பும், ’அமலாக்கத்துறையா? வா வந்து பார்’என்று அதன் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதாம். இந்த நிலையில், துபாயில் ஏறத்தாழ தலைமறைவுபோல் இருந்த மணல் அதிபர்களான கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரும் சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் தமிழகம் திரும்பிவிட்டார்களாம். தேர்தலை மையமாக வைத்து இயங்கிவரும் அமலாக்கத்துறையால், தமிழகம் மற்றொரு பரபரப்புக்குத் தயாராகிவிட்டது என்கிறார்கள் விவரமறிந்த வர்கள்.''”

Advertisment

ff

"நாம் தமிழர் சீமானிடம், எடப்பாடி நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையே தோல்வின்னு தகவல் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, இப்பவே தேர்தல் கூட்டணியைத் தொடங்க நினைக்கும் எடப்பாடி, பல்வேறு கட்சிகளுக்கும் தூது விட்டுக்கொண்டிருக்கிறார். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியையும் தொடர்புகொண்டாராம். இதுபற்றி, நாம் தமிழர் தரப்பிடமே நாம் விசாரித்தபோது, எங்க சீமான் அண்ணனை எடப்பாடியே தொடர்புகொண்டு, நாம சந்திக்கணுமேன்னு கேட்டிருக்கிறார். என்ன விசயமான்னு அண்ணன் கேட்ட போது, எங்கக் கூட்டணிக்கு நீங்க வரணும். அதுபத்தி நாம சந்திச்சிப் பேசுவோம்னு எடப்பாடி அழைத்திருக்கிறார். எங்க அண்ணனோ அழைப்பை மறுத்துவிட்டு, எங்கக் கட்சி 40 தொகுதியிலும் தனிச்சுப் போட்டியிடப் போகுதுன்னு கறாராகச் சொல்லிவிட்டார். இதில்

"ஹலோ தலைவரே, அமலாக்கத்துறை அடுத்ததா சீனியர் அமைச்சர் ஒருவரை நெருங்க இருப்பதாகத் தகவல்கள் வருகிறதே?''”

Advertisment

duraimurugan

"மணல் பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் கரிகாலன், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரைக் குறிவைத்து அண்மையில், அதிரடி ரெய்டுகளை நடத்திய அமலாக்கத்துறை, கிடைத்த ஆவணங்களை வைத்து, அவற்றின் மிச்சசொச்ச விவகாரங்களையும் சைலண்டாகத் துழாவி வருகிறது. அடுத்ததாக கனிமவளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரான தி.மு.க.வின் சீனியர் துரைமுருகனையும் தற்போது அது நெருங்கும் முடிவில் இருக்கிறதாம். அமைச்சருக்கு சம்மன் அனுப்பவும் அது திட்டமிட்டிருக்கிறதாம். டெல்லியின் சிக்னலுக்காகத்தான் அவர்கள் தயார் நிலையில் காத் திருக்கிறார்களாம். இதையறிந்த அமைச்சர் தரப்பும், ’அமலாக்கத்துறையா? வா வந்து பார்’என்று அதன் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதாம். இந்த நிலையில், துபாயில் ஏறத்தாழ தலைமறைவுபோல் இருந்த மணல் அதிபர்களான கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரும் சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் தமிழகம் திரும்பிவிட்டார்களாம். தேர்தலை மையமாக வைத்து இயங்கிவரும் அமலாக்கத்துறையால், தமிழகம் மற்றொரு பரபரப்புக்குத் தயாராகிவிட்டது என்கிறார்கள் விவரமறிந்த வர்கள்.''”

Advertisment

ff

"நாம் தமிழர் சீமானிடம், எடப்பாடி நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையே தோல்வின்னு தகவல் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, இப்பவே தேர்தல் கூட்டணியைத் தொடங்க நினைக்கும் எடப்பாடி, பல்வேறு கட்சிகளுக்கும் தூது விட்டுக்கொண்டிருக்கிறார். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியையும் தொடர்புகொண்டாராம். இதுபற்றி, நாம் தமிழர் தரப்பிடமே நாம் விசாரித்தபோது, எங்க சீமான் அண்ணனை எடப்பாடியே தொடர்புகொண்டு, நாம சந்திக்கணுமேன்னு கேட்டிருக்கிறார். என்ன விசயமான்னு அண்ணன் கேட்ட போது, எங்கக் கூட்டணிக்கு நீங்க வரணும். அதுபத்தி நாம சந்திச்சிப் பேசுவோம்னு எடப்பாடி அழைத்திருக்கிறார். எங்க அண்ணனோ அழைப்பை மறுத்துவிட்டு, எங்கக் கட்சி 40 தொகுதியிலும் தனிச்சுப் போட்டியிடப் போகுதுன்னு கறாராகச் சொல்லிவிட்டார். இதில் எடப்பாடிக்கு பலத்த ஏமாற்றம்னு தெரிவித்தது. இதுபற்றி எடப்பாடித் தரப்பு என்ன சொல்லுதுன்னா, "சீமானைப் பொறுத்தவரை தேர்தல்ல ஜெயிக்கணுமேன்னு அவர் கட்சி நடத்தலை. 40 தொகுதியில் 20ஐ எங்க ளுக்குக் கொடுங்க. தேர்தலுக்கு நிதியும் கொடுங்கன்னு எங் கக்கிட்ட கேட்பாரா?ன்னு கிண்டலா சொல்லுது. ஆக, இரு தரப்புக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தது உறுதியாகுது. ஆனா, டீலிங்தான் படிய லைன்னு தெரியுது.''”

"உறவு முறிந்ததாக அறிவிக்கப்பட்ட போதும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையில் ஒரு ரகசிய இணக்க ஒப்பந்தம் போடப்பட்டி ருக்கிறதாமே?''”

"அப்படித்தான் செய்தி வருகிறது. இதன்படி, கூட்டணி உறவு வெளிப்படையாக முறிக்கப்பட்ட போதும், ரகசிய ஒப்பந்தம் ஒன்றை பா.ஜ.க. அ.தி.மு.க.வோடு நடைமுறைப் படுத்துகிறதாம். அதாவது, அ.தி.மு.க.வை அவர்கள் விமர்சிக்கமாட்டார்களாம். அதே போல் அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வை எந்தவகையிலும் விமர்சிக்கக்கூடாதாம். இதற்கு ஈடாக, அ.தி.மு.க. தரப்பைக் குறிவைத்து ரெய்டு நடவடிக் கைகள் எதுவும் இருக்காது என்று சொல்லப்பட்டு இருக் கிறதாம். எடப்பாடியும், உங்கள் உறவை நாங்கள் முழுதாக முறிக்கவில்லை. டிசம்பரில் 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், அது முடிந்ததும், கூட்டணி குறித்து யோசிப்போம். அதுவரை, அவரவர் பாதையில் செல்வோம் என்று சொல்லி இருக்கிறாராம். அரசியல்ல எப்படியெல்லாம் டிசைன் டிசைனாக யோசிக் கிறாங்கன்னு அ.தி.மு.க.வின் சீனியர்களே சிரிக்கிறார்களாம்.''”

"இதனால்தான் மாஜி மந்திரி வேலுமணி இல்லத் திருமணத்திற்கு பா.ஜ.க.வினர் அதிகம் தலையைக் காட்ட லையா?''”

velumani

"ஆமாங்க தலைவரே, முதலில் பா.ஜ.க. தரப்பினர் அந்தத் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதாக இருந்ததாம். கடைசியில் பியூஷ்கோயலின் வருகையும் நிறுத்தப்பட்டுவிட்டதாம். பா.ஜ.க. தன் சார்பில் புதுவை கவர்னர் தமிழிசையை மட்டும் நடுநிலைவாதியாகக் கலந்துகொள்ளச் செய்திருக்கிறது. இந்தத் திருமணத்தைத் தனது ஆதரவாளர்களின் திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருந்த வேலுமணி, எடப்பாடியின் கடுமையான எச்சரிக்கையால் அமைதியாகிவிட்டாராம். அதனால் அவர் நினைத்ததில் பாதியளவிற்குக்கூட அந்த திருமண வைபவம் சோபிக்க வில்லை என்கிறார்கள்.''”

"வர்த்தக நிறுவனங் களைக் குறிவைத்து தமிழக பா.ஜ.க.வினர் விமர்சித்து வருகிறார்களே?''”

"ஆமாங்க தலை வரே, அண்மைக் காலமாக சில வர்த்தக நிறுவனங்கள், பழமைக்கு எதிரான சிந்தனைகளை துணி வாக வெளிப்படுத்தி வருகின்றன. மங்கலகரம் என்றால் குங்குமப் பொட்டு என்று காலங் காலமாகச் சொல்லிவரும் கருத்துக்கு மாறாக, பிரபல பட்டு நிறுவனமான நல்லி, ஒரு விளம்பரத்தில், நெற்றிப்பொட்டு இல்லாத பெண்ணைக் காட்டியது. இதையே தமிழக பா.ஜ.க. வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், இது என்ன விளம்பரம்? அமங்கலமாக என்று சமூக ஊடகங்களில் மண்ணை வாரித் தூற்றி வருகிறார்கள். இதேபோல் அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் சீனிவாச ராஜா, அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில், தந்தை பெரியாரால்தான் பிராமணரால்லாத தன்னைப் போன்றவர்கள் ஓட்டல் தொழி லில் சிறந்து விளங்க முடிகிறது என்று பாராட்டிப் பேசினார். இப்படி இவர் பெரியாரை பாராட்டிப் பேசியதும், அவர் களை கசப்பாக்கி இருக்கிறது. எனவே இவர்களை, இந்துமத விரோதிகளைப்போல் சித்தரித்து, கடும் விமர்சனப் புழுதியை மாநில பா.ஜ.க.வினர் எழுப்பி வருகின்றனர். இது குறித்து பொதுவான வர்த் தகப் பிரிவினர் தரப்பில் விசாரித்தபோது, பா.ஜ.க. வினரின் இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம், தீபாவளி கலெக்சனை அதிகமாக வசூலிக்கத்தான் என்கிறார்கள் புன்னகை யோடு.''”

"தமிழகம் தொடர் பான மூன்று வழக்குகளை உச்சநீதிமன்றம் கையி லெடுத்திருப்பதுடன் தற்போதைய அமைச் சர்கள் பலருக்கும் நோட் டீஸ் அனுப்ப உத்தர விட்டிருப்பதைக் கவனிச்சீங்களா?''”

"தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ஜெகன்நாத் என்பவர், “சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட் டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு கலந்துகொண்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரியும், இந்த மாநாட்டின் பின்னணியை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதே போல சென்னையைச் சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர் தமிழக அரசின் பல்வேறு அமைச்சர் களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் வழக்கை முடித்துவைத்த அல்லது விடுதலை செய்த வழக்குகளில் மாநில அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இந்த வழக்குகளை சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு தமிழக அரசுக்கும் டி.ஜி.பி.க்கும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்னொரு பக்கம் ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்புமனுத் தாக்கலின் போது சொத்து விவரங்களை முழுமையாகத் தாக்கல் செய்யவில்லை. அதனால் ரவீந்திர நாத்தின் சொத்து விவரங்களைக் குறித்து முழுமையாக விசாரிக்கவேண்டுமென தங்க.தமிழ்ச் செல்வன் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் இதுகுறித்து ஓ.பி.ரவீந்திர நாத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த மூன்று வழக்குகளைக் குறித்துத்தானே சொல்றே?''”

"ஆமா, அதுமட்டுமில்லாம சிட்டிங் மினிஸ்டர்கள் மேலான புகார்களை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துட்டுப்போய் எதிர்க் கட்சிகள் நோட்டீஸ் அனுப்பச் செய்யறதுவரை உஷாரா இருக்கும்போது, விஜயபாஸ்கர், எடப்பாடினு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில புகாருக்கு ஆளான எத்தனையோ அமைச் சர்கள்மேல நடவடிக்கை எடுக்கிறதுலயோ, திட்டமிட்டு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் பா.ஜ.க.வினர் மேலான வழக்குகளை சட்ட நடவடிக்கைக்கு கொண்டுபோறதுலயோ வேகம் காட்டாம தி.மு.க. வழக்கறிஞர் அணி இருக்குதோங்கிற சந்தேகத்தை ஏற்படுத்துது.''””

dd

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்த நம் நக்கீரன் இதழ்ல, ஆவின் சந்தித்துவரும் நட்டம் குறித்து விரிவாக எழுதப் பட்டிருந்தது. இந்த செய்தி ஆவின் தரப்பை அதிர வைத்திருக்கிறது. பால்வளத் துறையை கவனித்துவரும் முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., ஆவினில் ஏற்படும் நட்டம் மற்றும் ஊழல் பற்றி விசாரித்துவருகிறார். முதல்வரின் உத்தரவின் பேரிலேயே இந்த விசாரணை நடந்துவருகிறதாம். மேலும், ஆவின் காண்ட்ராக்டர்களுக்கு தரவேண்டிய 15 கோடி ரூபாயை நிலுவையில் வைத்திருக்கிறது ஆவின் நிறுவனம். இந்த தொகையை ரிலீஸ் செய்ய, நிர்வாகத் தரப்பில் கட்டிங் கேட்கப்படுகிறதாம். கட்டிங் தர, கான்ட்ராக்டர்கள் மறுப்பதால், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இந்த விவகாரமும் அனுஜார்ஜுக்கு புகார்களாகப் போயிருக்கு. அதனால், ஆவினில் உள்ள ஊழல் அதிகாரிகளுக்கு விரைவில் சரியான கவனிப்பு இருக்கும்னு கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.''”

_____________

இறுதிச் சுற்று!

f

பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் கைதேர்ந்தவரான மருத்துவர் தர்மலிங்கம் சம்பந்தப்பட்ட விவகாரம் ஒண்ணைச் சொல்லியாகணும். இவர் முன்னாள் முதல்வர் கலைஞருக்கே மருத்துவம் பார்த்தவர். இவரது தர்மா ஆயுர்வேதக் கல்லூரிக்குச் சொந்தமான இடங்களை உரிய அனுமதியின்றி தேவேந்திரன் என்பவர் வந்து பார்வையிட்டிருக்கிறார். இதைக் கவனித்த கல்லூரி நிர்வாகம் அவர் யாரென அறிந்துகொள்ள முனைப்புக் காட்டி விசாரித்ததில் தன்னைச் சீர்காழி சேர்மன் தேவேந்திரன் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கல்லூரி நிர்வாகம், காவல் துறையிடம் சென்றபோதும், "துர்கா மேடம் சொல்லித்தான் பார்க்க வந்ததாக' தேவேந்திரன் தெரிவித்திருக்கிறார். உண்மையில் அவரது மனைவி கமலஜோதிதான் சீர்காழி சேர்மனே தவிர இவரில்லை. இந்த தேவேந்திரன், ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு தனது மனைவியை நிறுத்தியபோதே, துர்கா ஸ்டாலினுக்கு அணுக்கமானவர் எனச் சொல்லி வெற்றிபெற்றவராம். இதையடுத்து விற்பனைக்கு என எந்தத் தகவலும் இல்லாத நிலையில் தங்கள் கல்லூரிக்குச் சொந்தமான நிலத்தை தேவேந்திரன் பார்வையிட்டுச் சென்றதையடுத்து, இது ஏதும் ஆக்ரமிப்பு விவகாரமோ என நிர்வாகம் சந்தேகமடைந்துள்ளது. அதேசமயம் தி.மு.க. தரப்பிலோ, தேவேந்திரனுக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் எந்த பரீட்சயமும் கிடையாது. எனினும் தன் சொந்த நலன்களுக்காக தேவேந்திரன் துர்கா ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தி வருகிறார் எனத் தெரிவிக்கிறார்கள்.

nkn251023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe