Advertisment

நயினாரை காப்பாற்றும் அமலாக்கத்துறை! பிடிபட்ட பணம்!

ss

ட்டுக்கு பணம் கொடுப்பதற்காக சென்னையிலிருந்து நெல்லைக்கு கடத் தப்பட்ட 4 கோடி ரூபாய் விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான பல ஆதாரங்களை பா.ஜ.க.வினர் அழித்திருப்பதால் அதனை மீட்க, களத்தில் இறங்கியுள்ளது மாநில உளவுத்துறை. இது குறித்து விசாரித்தபோது, இதுவரை வெளியில் வராத பல பகீர் தகவல்கள் கிடைக்கின்றன.

Advertisment

பறக்கும் படையினரின் விசாரணையில், "நயினார் நாகேந்திரனின் உத்தரவின் பேரிலேயே இந்த பணத்தை எடுத்துச் செல்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணம் போகிறது'’என்று ஆரம்பித்து ஏகப்பட்ட விசயங்களை கக்கியிருக்கிறார்கள் நயினாரின் ஆட்கள்.

nn

இதுகுறித்து உளவுத்துறை தரப்பில் விசாரித்த போது,”"இந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக அக்கட்சியின் அகில இந்திய தலைமையே நிதி உதவி அளித்திருக்கிறது. இதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கான பணம் தமிழகத்துக்குள் வந்தது. அந்த கோடிகளில் கணிசமான தொகை சென்னையில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டன.

அப்படி பதுக்கி வைக்கப்பட்ட இடங்களில் மிக முக்கியமானது சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள ஏய்சியோ கொரியன் ரெஸ்டாரண்ட். இந்த ரெஸ்டா ரெண்ட், பா.ஜ.க.வின் தொழில் பிரிவு மாநில தலைவராக இருக்கும் கோவர்த்தன் என்பவருக்கு சொந்தமானது. இதில் ரெஸ்டாரெண்ட், க்ளப் மற்றும் கோவர்த்தனின் அலுவலகம் ஆகியவை இருக்கின்றன.

தமிழக பா.ஜ.க.வின் ஆர்கனைஸிங் செகரட்டரி கேசவவிநாயகமும் கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர். சேகரும்தான் பா.ஜ.க.வின் நிதி தொடர்பான விவகாரங்களை கவனிப்பார்கள். அந்த வகையில் தேர்தல் செலவுகளுக்கான தொகை குறித்த

ட்டுக்கு பணம் கொடுப்பதற்காக சென்னையிலிருந்து நெல்லைக்கு கடத் தப்பட்ட 4 கோடி ரூபாய் விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான பல ஆதாரங்களை பா.ஜ.க.வினர் அழித்திருப்பதால் அதனை மீட்க, களத்தில் இறங்கியுள்ளது மாநில உளவுத்துறை. இது குறித்து விசாரித்தபோது, இதுவரை வெளியில் வராத பல பகீர் தகவல்கள் கிடைக்கின்றன.

Advertisment

பறக்கும் படையினரின் விசாரணையில், "நயினார் நாகேந்திரனின் உத்தரவின் பேரிலேயே இந்த பணத்தை எடுத்துச் செல்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணம் போகிறது'’என்று ஆரம்பித்து ஏகப்பட்ட விசயங்களை கக்கியிருக்கிறார்கள் நயினாரின் ஆட்கள்.

nn

இதுகுறித்து உளவுத்துறை தரப்பில் விசாரித்த போது,”"இந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக அக்கட்சியின் அகில இந்திய தலைமையே நிதி உதவி அளித்திருக்கிறது. இதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கான பணம் தமிழகத்துக்குள் வந்தது. அந்த கோடிகளில் கணிசமான தொகை சென்னையில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டன.

அப்படி பதுக்கி வைக்கப்பட்ட இடங்களில் மிக முக்கியமானது சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள ஏய்சியோ கொரியன் ரெஸ்டாரண்ட். இந்த ரெஸ்டா ரெண்ட், பா.ஜ.க.வின் தொழில் பிரிவு மாநில தலைவராக இருக்கும் கோவர்த்தன் என்பவருக்கு சொந்தமானது. இதில் ரெஸ்டாரெண்ட், க்ளப் மற்றும் கோவர்த்தனின் அலுவலகம் ஆகியவை இருக்கின்றன.

தமிழக பா.ஜ.க.வின் ஆர்கனைஸிங் செகரட்டரி கேசவவிநாயகமும் கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர். சேகரும்தான் பா.ஜ.க.வின் நிதி தொடர்பான விவகாரங்களை கவனிப்பார்கள். அந்த வகையில் தேர்தல் செலவுகளுக்கான தொகை குறித்து சில உத்தரவுகளை பொருளாளர் சேகருக்கு பிறப்பிப்பார் கேசவவிநாயகம். அதன்படி சேகர் இயங்கினார். பா.ஜ.க.வுக்கு சென்னையை பொறுத்தவரை கோடிகளை புரட்டிக் கொடுக்கும் ஆபத்பாந்தவன் கோவர்த்தன்தான். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பல்வேறு இடங்களிலிருந்து திரட்டி உடனடியாகக் கொடுத்துவிடுவார் கோவர்த்தன்.

அந்த வகையில், தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்குரிய கோடிகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு இடங்களிலிருந்து சேகரித்து தரும் பொறுப்பை கோவர்த்தனனிடம் ஒப்படைத்திருந்தார் கேசவவிநாயகம். யாரெல்லாம் வருவார்கள், அவர்களிடம் எவ்வளவு தர வேண்டும் என்கிற தகவல் கேசவவிநாயகம் அல்லது சேகரிடமிருந்து சொல்லப்படும். அதன்படி இயங்குவார் கோவர்த்தனன்.

அப்படி சொல்லப்பட்ட உத்தரவின்படிதான் நயினாருக்காக அனுப்ப வேண்டிய 15 கோடிகளை பல்வேறு இடங்களிலிருந்து திரட்டி கோவர்த் தனன் கொடுத்த தொகையில் சுமார் 4 கோடி ரூபாய் பிடிபட்டது. மேலும், சென்னையில் போட்டியிடும் 3 பா.ஜ.க. வேட்பாளர்களுக்குமான தொகையும் கோவர்த்தன் மூலமாகவே விநியோ கிக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை எக்ஸ்பிரசில் பிடிபட்ட நயினார் நாகேந் திரனின் ஆட்கள் 4 பேரும், எங்கிருந்து இந்த பணத்தை வாங்கி வந்தோம் என்பதை சொல்லிவிட்டனர். அதில் 2 பேர் கோவர்த்தனின் கொரியன் ரெஸ்டாரெண்ட்டுக்கு சென்று குறிப்பிட்ட தொகையை வாங்கி வந்தோம் என்பதைத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இந்த வில்லங்கத்தில் கோவர்த்தன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவர்த்தனனின் கொரியன் ரெஸ்டாரெண்டில் ரெய்டு நடத்த பறக்கும் படையினர் விரைந்தனர். ரெய்டும் நடத்தப்பட்டது. ஆனால், பறக்கும் படையினர் அங்கு வருவதற்கு முன்பாகவே, சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகி யிருக்கும் ஹார்டு டிஸ்க்கை கழட்டிக் கொண்டு போய்விட்டார் கோவர்த்தன்.

அதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கோவர்த்தனை சந்திப்பதற்காக அவரது கொரியன் ரெஸ்ட்டாரெண்ட் கட்டிடத்தில் இயங்கும் அலுவலகத்துக்கு கேசவவிநாயகம் பல முறை வந்து போயிருக்கிறார். பா.ஜ.க.வினர் பலரும் வந்து சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் லெதர் பேக்குகளும், சூட்கேஸ்களும் காரில் இருந்து இறக்கப்படுவதும் ஏற்றப்படுவதுமாக இருந்துள்ளது. குறிப்பாக, கேசவவிநாயகம் அனுப்பி வைத்த ஆட்கள், நயினார் நாகேந்திரனின் ஆட்கள் ஆகியோர் இங்கு வந்து பணத்தை திரட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.

Advertisment

nn

இது தொடர்பான காட்சிகளும், கோவர்த்தனை சந்திக்க கேசவவிநாயகம் வந்துபோன காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கிறது. இத்தகைய விபரங்களெல் லாம் தெரிந்துதான், சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்ற பறக்கும் படையினர் கொரியன் ரெஸ்டாரெண்டுக்கு பறந்தனர். ஆனால், ஹார்டு டிஸ்க்குடன் பறந்துவிட்டார் கோவர்த்தன். ரெய்டில் வெவ்வேறு விசயங்கள் கிடைத்ததே தவிர, சி.சி.டி.வி. காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க் கிடைக்கவில்லை.

பறக்கும் படையினரின் விசாரணையில் கோவர்த்தனின் கொரியன் ரெஸ்டாரெண்ட் பற்றி நயினாரின் ஆட்கள் சொல்லிவிட்டனர் என்பதையும், கொரியன் ரெஸ்டாரெண்டில் ரெய்டு நடத்த போலீசார் வருகிறார்கள் என்பதையும் பா.ஜ.க. தலைமைக்கு யாரோ போட்டுக் கொடுத்துள்ளனர். உடனே இந்த விபரம் கோவர்த்தனுக்கு பாஸ் ஆக, ஹார்டு டிஸ்க்குடன் எஸ்கேப்பாகிவிட்டார் கோவர்த்தன். தற்போது அந்த ஹார்டு டிஸ்க்கை கைப்பற்ற தீவிர முயற்சியில் இருக்கும் பறக்கும்படையினர், கோவர்த்தனுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார் கள்” என்று வெளிவராத பல்வேறு தகவல்களை விவரிக்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

இதுகுறித்து பா.ஜ.க. மேலிட தொடர் பாளர்களிடம் நாம் விசாரித்தபோது, ‘"நயினாரின் ஆட்கள் பிடிபட்ட வழக்கில் தன்னையும் பறக்கும் படையினர் இணைத்துள்ள விவகாரத்தில் இருந்து காப்பாற்ற கேசவவிநாயகத்தின் உதவியை நாடினார் கோவர்த்தன். ஆனால், காப்பாற்ற மறுத்துவிட்டார் கேசவ விநாயகம். இதனால், டெல்லிக்கு பறந்த கோவர்த்தன், அங்கு சிலரை சந்தித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். பா.ஜ.க. கட்சியும் கேசவவிநாயகமும் தன்னை காப்பாற்றவில்லையே என்கிற மனஉளைச்சலில் தற்போது இருக்கும் கோவர்த்தனிடம், "இதெல்லாம் நமக்குத் தேவையா? அரசியலெல்லாம் வேண் டாம். பா.ஜ.க.விலிருந்து வெளி யேறுங்கள்' என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பறக்கும்படையினரின் விசாரணைக்கு கோவர்த்தன் ஆஜரானால் இன்னும் பல உண்மைகள் அம்பலமாகும்'' என்கிறார்கள்.

மேலும் விசாரித்தபோது, "தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஏ, பி, சி என 3 வகையாகப் பிரித்து, ஏ கேட்டகிரி வேட்பாளர்களுக்கு 15 கோடியும், பி கேட்டகிரி வேட்பாளர்களுக்கு 10 கோடியும், சி கேட்டகிரி வேட்பாளர்களுக்கு 8 கோடியும் கொடுக்கப்பட்டது. இதைத் தாண்டி வேட்பாளர்கள் சொந்தமாக செலவளித்தது பல கோடி.

கட்சி கொடுத்த பணத்தை முழுமையாக தொகுதி பொறுப்பாளர்களிடம் கொடுத்த ஒரே கேண்டிடேட் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் மட்டும்தான். ஆனால், இந்த பணத்தை கட்சியின் கீழ்மட்டம் வரை பொறுப்பாளர்கள் கொடுக்கவில்லை. அவர்களே பெருமளவு சுருட்டிக் கொண்டுவிட்டனர். இதுகுறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கு புகார் தெரிவித்திருக்கிறார் தமிழிசை.

தென்சென்னை வேட்பாளரான தமிழிசை, கட்சி ஒதுக்கிய பணத்தை பொறுப்பாளர்களிடம் கொடுத்து விட்டார். ஆனால், மத்திய சென்னை வேட்பாளரான வினோஜ் செல்வமோ, சொற்ப பணத்தை மட்டுமே பூத் நிர்வாகிகளின் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை சுருட்டிக்கொண்டுவிட்டார். இதனால் வேட்பாளரான வினோஜ் செல்வத்தின் மீது தேசிய தலைமைக்கு நிர்வாகிகள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி, வேட்பாளர் சொன்ன புகார்கள், வேட்பாளர் மீது சொல்லப்பட்ட புகார்களையெல்லாம் அமித்ஷாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளார் ஜே.பி.நட்டா. தற்போது இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது'’என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

இந்த நிலையில், பறக்கும் படையினரின் சம்மனுக்கு ஆஜராவதற்கு 10 நாட்கள் அவகாசம் கேட்டு தனது வழக்கறிஞர் வழியாக கடிதம் கொடுத்துள்ள நயினார் நாகேந்திரன், "பிடிபட்ட 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அது என் பணம் கிடையாது' என்று சொல்லி வருவதுடன், அமலாக்கத்துறை ஆலோசனையுடன் இயங்கிவருகிறார்.

இந்த சூழலில்தான், 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் நயினாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கு 24-ஆம் தேதி வந்தபோது, ’"தேர்தலின்போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத் திற்குட்பட்ட குற்றத்தில் வராது'’என அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறது. தி.மு.க. வழக்கறிஞர்களோ, "நயினாரை காப்பாற்ற அமலாக்கத்துறை திட்டமிடுகிறது'’என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

nkn270424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe