செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அவரது தரப்பு வழக் கறிஞர் முனைவர் ராம்சங்கர் ராஜாவிடம் பேசினோம்.
கடந்த ஆண்டு ஜூன் 14-ல் கைதுசெய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு எதனடிப்படையில் உச்சநீதிமன் றம் ஜாமீன் வழங்கியது?
அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங் களில் மோசடியாக சிலவற்றை இணைத்துள்ளார்கள் என்பதை நீதிமன்றம் அறிந்த பின்னரே ஜாமீன் கிடைத் துள்ளது. அமலாக்கத்துறை அவரது வீட்டில் பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றைக் கைப்பற்று கிறார்கள். அதனை எங்கிருந்து எடுத்தோம், என் னென்ன எடுத்தோம் என்பதை தடயவியல் துறையில் கொடுத்து, ரிப்போர்ட் வாங்கணும். அப்படிச் செய்யா மல் அதனை இவர்களே வைத்துக்கொண்டனர். இது தொடர்பாக நாங்கள் முன்வைத்த வாதங்களுக்கு அவர் களிடம் பதிலே இல்லை. இரண்டாவது, 471 நாள் என் பது மிக நீண்ட காலம். இதனையும் நீதிமன்றம் கருத் தில் கொண்டது. மூன்றாவது, வழக்கில் இவரது சட்டப் பரிவர்த்தனை தொகை ஒரு கோடியே 31 லட்சம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramsankar_0.jpg)
ஒரு கோடிக்கு மேல் இருந்தால் அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என்பது சட்டம். ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை, இவரது வங்கிக்கணக்கில் சட்டத்திற்குப் புறம்பாக பரிவர்த்தனை செய்துள்ளார் என்று அமலாக்கத்துறை வழக்கு போட்டது. நாங்கள், அதில் ரூபாய் 78 லட்சம், சட்டமன்ற உறுப்பினராக அவர் பெற்ற சம்பளம் என்றும், மீதித் தொகை விவசாயத்தில் இருந்து கிடைக்கப்பெற்றது என்றும் வாதிட்டோம். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
அதற்கு அமலாக்கத்துறை வைத்த வாதங்கள் என்ன?
மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரப் பட்டது. அதில் காலதாமதம் ஏற்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் கிடைக்க வில்லை. ஜாமீன் தரக்கூடா தென்பதற்கு பல்வேறு கார ணங்களை அமலாக்கத்துறை சொன்னது. அவர்களது தரப்பு மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகாமல் இருந்ததும் ஒரு காரணம். இந்த காலதாமதத்திற்கு அமலாக்கத்துறையே முக்கிய காரணம். 11 முறையும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரவில்லை. வேறு நீதிமன்றத்தில் உள்ளார் என்று ஒவ்வொரு முறையும் வாய்தா கேட்டார்கள்.
வாய்தா வாங்க என்ன காரணம்?
அவர்களிடம் சரியான தரவுகள் இல்லை. நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை. செந்தில்பாலாஜி உள்ளே இருக்க வேண்டும் என்பதற்காகவே வாய்தா வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
இந்த விசயத்தில் நீதி மன்றம் என்ன சொன்னது?
471 நாட்கள் மிக நீண்ட காலம். விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டவரை மிக நீண்டகாலம் சிறையில் வைத் திருப்பது சட்டத்திற்குப் புறம் பானது. மனுதாரருக்கு ஜாமீன் மறுக்கமுடியாது. ஜாமீன் என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சட்டப் பூர்வமான உரிமை. செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டால், அரசிய லமைப்பு சட்டப்பிரிவு 21-ன் கீழ் தனிமனித சுதந்திரம் உள் ளிட்ட அடிப்படை உரிமை களை மீறுவதுபோல ஆகி விடும். எனவே, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த முரண்களையெல் லாம் பார்த்து, அமலாக்கத் துறை வழக்குத் தொடர்ந்ததே தவறு என்பதை நீதிமன்றம் குறிப்பிடவில்லையா?
முதல் நாளிலிருந்து அந்த வாதத்தைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். அது விசாரணையில்தான் புலப்படும் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்குமான வித்தியாசம் என்னவென்றால், இந்தியா வில் ஒருவர் மீது வழக்கு சுமத்தப்பட்டது என்றால் குற்றவாளிதான் தனது நேர்மைத்தன்மையை நிரூ பிக்கவேண்டும். இதுவரை அமலாக்கத்துறை இந்தியாவில் 5,848 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில் 45 வழக்குகளில் மட்டுமே விசாரணை நடக்கிறது. அமலாக்கத்துறையை மிகத் தவறான முறையில் கையாள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நீதிமன்றமும் சமீபகாலமாக சொல்லிவருகிறது. அதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம். அமலாக்கத்துறை உண்மை யான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எத்தனையோ ஆயிரக் கணக்கான கோடிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் லை. இது அரசியலுக்காக போடப்பட்ட வழக்குதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தொகுப்பு: ராஜவேல்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-10/ramsankar-t.jpg)