"ஹலோ தலைவரே, அமலாக் கத்துறையின் நடவடிக்கைகள் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.''”

Advertisment

"ஆமாம்பா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் ஸ்கெட்ச் போட்டு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கே?''”

ff

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வை தொடர்ந்து எதிர்த்துவரும் கெஜ்ரிவாலை, மோடியின் பா.ஜ.க. அரசால் அடக்கமுடியவில்லை. இந்த நிலையில், அவரை முடக்க நினைக்கும் டெல்லி, அமலாக்கத்துறையை கீ கொடுத்து முடுக்கிவிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அவரை மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யும் நோக்கத்தில்தான், 2ஆம் தேதி விசா ரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கெனவே இதே விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா, சில மாதங்களுக்கு முன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அதே ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்பியான சஞ்சய் சிங்கும் கடந்த மாதம் கைது செய்யப் பட்டிருக்கிறார். இந்த வரிசையில் இப்போது கெஜ்ரிவால் நிறுத்தப்பட்டிருக்கிறார். டெல்லியின் இந்த நடவடிக்கை, நாடுமுழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.''”

Advertisment

"தமிழக முதல்வர் ஸ்டாலினும் கூட இதே பாணியில் குறிவைக்கப்படலாம்ன்னு டெல்லி அமைச்சர் ஒருவரே பா.ஜ.க. மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறாரே?''”

stalin

"ஆமாங்க தலைவரே, கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப் பப்பட்ட உடனேயே, டெல்லி அமைச்சரான அதிஷி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தனது அரசியல் எதிரிகளை நேர்மையான முறையில் வெல்ல முடியாத பா.ஜ.க., இப்படியான குறுக்கு வழியைக் கையில் எடுக்கிறது என்றும், கெஜ்ரிவாலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் போன்ற டெல்லிக்கு ஆகாத தலைவர்களும் கைது செய்யப்படலாம் என்றும், இதேபோல் கேரளா முதல்வர் பின ராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் பா.ஜ.க.வால் குறிவைக்கப்படலாம் என்றும் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக் கிறார். இதுபற்றி தமிழக நிலவரத்தை விசாரித்த போது, முதல்வர் ஸ்டாலினை குறிவைத்தும், அமலாக்கத்துறையின் மூவ்கள் தொடங்கி யிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.''”

Advertisment

"என்னப்பா சொல்றே? அங்கே கடிச்சி இங்கே கடிச்சி, மனுசனைக் கடிக்கிற கதையால்ல இருக்கு.''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் மணல் விவகாரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்திய அமலாக்கத்துறையினர், அடுத்து தமிழக அமைச்சரவையின் சீனியரும், நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருக னைக் குறிவைத்து, ரகசியமாகக் காய்களை நகர்த்தினர். இதையறிந்த அமைச்சர் துரைமுரு கன், "என் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. நான் எதையும் எதிர் கொள்ளத் தயாராகவே இருக்கேன்'’என்ற ரீதியில் சொல்லத் தொடங்கினார். இது குறித் தெல்லாம் ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம். இப்போது துரைமுருகனை நூல்பிடித்துச் சென்று, முதல்வர் ஸ்டாலின் வரை குடைச்சல் கொடுக்க, அமலாக்கத்துறை திட்டமிட்டிருக்கிற தாம். எனவே, பல வகையிலும் மணல் மற்றும் கிராவல் விவகாரத்தைத் துழாவி வருகிறார் களாம். இந்தியா கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. பயப்படுவதால், அதன் முக்கிய தலைவர்களை பா.ஜ.க. குறிவைப்பதாக இப்போது தி.மு.க.வினரும் புகாரை வைத்துவருகிறார்கள். இதற்கிடையே, தமிழக பா.ஜ.க.வினரோ, தங்கள் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்து வருவதால், "தி.மு.க.வை விடாதீர்கள்' என்று டெல்லியிடம் முட்டி மோதி வருகிறார்களாம்.''”

"இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கு''”

"ஆமாம்பா, என்ன விவாதிச்சாங்களாம்?''

"தலைமைச் செயலகத்தில் 31ஆம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், வரும் ஜனவரியில் சென்னையில் நடக்கப்போகும் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது புதிய முதலீடுகளை தமிழகத்தில் உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொகுப்புச் சலுகைகளைக் கொடுக்கலாம்னு முடிவெடுத் திருக்கிறார்கள். மேலும் இந்தக் கூட்டத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 7,108 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங் களுக்கு அனுமதியளித்து ஒப்புதல் வழங்கப் பட்டிருக்கிறது. இதுதவிர, துறைமுக மேம்பாட்டில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில், அரசின் துறைமுக மேம்பாட்டுக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித் திருக்கிறது. இப்படி பல்வேறு திட்டங்களுக் கான அனுமதி கொடுத்திருப்பதன் மூலம் தொழில் துறையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல, முதல்வர் தீவிர ஆர்வம் காட்டு கிறார்னு கோட்டை வட்டாரம் சொல்லுது.''”

"இருப்பினும் முதல்வர் மனதில் ஒருவித வருத்தம் பெருகி இருப்பதாகவும் சொல்கிறார் களே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஊழலற்ற ஆட்சியைத் தரவேண்டும் என்பது முதல்வரின் ஆசை. ஆனால் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. பல துறைகளிலும் ஊழல் பெருகிவருவது குறித்த தகவல்கள், உரியவர்கள் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தப் பட்டு வருகிறது. இது அவரை ரொம்பவே கவலையடையச் செய்திருக்கிறதாம். இந்த நிலையில், நடக்கும் ஊழல் விவகாரங்களை அரசாங்கத்தில் கோலோச்சும் சில முக்கிய அதி காரிகளே, எதிர்த்தரப்பினருக்குப் போட்டுக் கொடுத்து வருகிறார்களாம். அப்படிப்பட்ட அதிகாரிகளி டம் முதல்வர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, தி.மு.க. அனுதாபி களான சில ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். கவலைப்படு கிறார்கள்.''”

"கல்லூரி மாணவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளை விதைக்க, கவர்னர் ரவி ஜரூராக இருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருவதைப் பார்த்த கவர்னர் ரவி, அதற்கு பதிலடி தரும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளையும், பா.ஜ.க. கொள்கைகளையும் விதைக்கத் திட்ட மிட்டிருக்கிறாராம். தற்போது முதற்கட்டமாக, மோடியின் விருப்பப்படி ஜி 20 மாநாட்டில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், எரிசக்தி தொடர்பான கருத்தரங்கை அழகப்பா பல் கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யவைத்திருக் கிறார். இதில் ஆர்.எஸ்.எஸ்.சோடு இணக்கம் கொண்டவர்களை மட்டும் பங்கேற்கும்படி செய்துள்ளனர். இந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டும் ஏறத்தாழ 90 ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்கள் இருக்கிறார்களாம். தமிழகம் முழுக்க இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளையும் இங்கே நடத்துகின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருக்கும் கல்லூரி முதல்வர்கள் அனைவரும், தன்னை சந்திக்கவேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம் கவர்னர். இது கல்வித்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.’''

ff

"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும், மாஜி மந்திரி வேலுமணிக்கும் இடையிலான லடாய் முற்றுகிறதே?''”

"அப்படித்தாங்க தலைவரே செய்திகள் வருது. அ.தி.மு.க. தலைமையைக் குறிவைத்திருக் கும் மாஜி வேலுமணி, கட்சி நிர்வாகிகளைக் கவரும் வகையில் தன் சகோதரர் அன்பரசனின் மகன் திருமணத்துக்கு 7 ஆயிரம் ஆடுகளை வாங்கி, அசைவ விருந்துகொடுக்க நினைத்ததை, நம் நக்கீரன் எடுத்துச்சொன்னது. இதனால் கடுப்பான எடப்பாடி, அவரைக் கடுமையாகக் கண்டித்தார். இதனால், தடபுடலாக அசைவ விருந்து கொடுக்கும் திட்டத்தை நிறுத்திய வேலுமணி, எடப்பாடி மீது கடும் எரிச்சலில் இருக்கிறாராம். இந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி சங்ககிரியில் நடந்த எடப்பாடியின் மைத் துனர் வெங்கடே ஷின் திருமணத்தில், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். எடப்பாடியுடன் ஏற்பட்டிருக்கும் லடாயால், அந்தத் திருமண விழாவை வேலுமணியும் அவர் தரப்பினரும் பகிரங்கமாகவே புறக்கணித்துவிட் டார்களாம். இது அவர்களுக்கிடையிலான உர சலின் வேகத்தைக் காட்டுகிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வில் இருக்கும் சீனியர்களே.''”

"ஆமா... பா.ஜ.க. அமர்பிரசாத் ரெட்டி, போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு அனுப்பப் பட்டிருக்காரே?''”

"பா.ஜ.க. கொடிக்கம்பத் தகராறு விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பா.ஜ.க. பிரமுகரான அமர்பிரசாத்ரெட்டி மீது, தென்காசி சச்சரவு விவகாரம் தொடங்கி மேலும் சில வழக்குகள் பாய்ந்திருக்கின்றன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள போலீஸ் முயற்சிப்பதாக பா.ஜ.க. தரப்பிலிருந்து கூக்குரல் எழுந்துவருகிறது. இந்த நிலையில், அவரை ஒரு நாள் தங்கள் கஸ்டடி யில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற, போலீஸ் டீம், அவரிடம் இருந்து எந்தத் தகவ லையும் கறக்கமுடியாமல் தவித்தது. தனக்கு குறிப்பிட்ட அடையார் ஓட்டலில் இருந்து இட்லி, வடை, சாம்பார் வேண்டும் என்று கேட்ட அமர், விசாரணையைத் தொடங்க முயலும் போதெல்லாம், தனக்கு ரத்தக்கொதிப்பு இருப்ப தாகவும், அல்சர் இருப்பதாகவும், மயக்கம் வருவதாகவும் சொல்லி டபாய்த்தா ராம். அவர் அரசியல் பிரமுகராக இருப்பதால் வேறுவகையிலான விசாரணையை போலீஸ் டீமால் நடத்தமுடியவில்லை. கடைசியில் ஒரு நாள் அவரை வெளியே வைத்திருந்து உபசரித்ததுதான் மிச்சம் என்று அலுத்துக்கொண்டிருக்கிறது விசாரணை டீம்.''”

"உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் விவகாரம் இழுபடுகிறதே?''’

"ஆமாம் தலைவரே, “அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு ஜாமீன் மனு கடந்த 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தது. இந்த மனுவை, நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம். திரிவேதி ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், இந்த வழக்கில் வாதாட வேண்டிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வேறு நீதிமன்றத் தில் இருப்பதால், கடைசி யாக இந்த மனுவை விசா ரிக்கும்படி கேட்டுக்கொண் டார். இதேபோல, அமலாக் கத்துறை சார்பில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தாவும், வேறு ஒரு வழக் கில் ஆஜரானதால், இதேபோன்ற கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றமோ, ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது. இப்படி தொடர்ந்து தனது ஜாமீன் மனு ஏதேனும் ஒருவகையில் இழு படுவதால், செந்தில்பாலாஜி நொந்துபோயிருக் கிறாராம். எனினும், தீபாவளிக்குள் செந்தில் பாலாஜியை வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்கிற பகீரத முயற்சியில் தி.மு.க. வழக்கறி ஞர்கள் டீம் இருக்கிறது.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவ லைப் பகிர்ந்துக்கறேன். சங்கர மடத்தைப் பொறுத்த வரை, ஏற்கனவே இருந்த மடாதிபதிகள் தொடங்கி இப்போதுள்ள விஜயேந்திரர் வரை, அனைவரும் காங் கிரஸ் கட்சியின் அனுதாபிகளாம். இந்த நிலையில், சங்கரமடத்தின் பவரைக் கைப்பற்ற நினைக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி, தனக்கு நெருக்கமான விஜய் மேத்தா என்பவரை, இளைய சங்கராச்சாரியாராக ஆக்க முயன்றாராம். அவர் பிராமணர் அல்லாதவர் என்பதால் அவருக்கு மடத்தில் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து தற்போது, குடந்தையைச் சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருக்கும் ஆடிட்டர், அவரை பால மடாதிபதியாக்கும் திட்டத்தோடு, அதற்குரிய பயிற்சிகளில் ஈடுபடுத்தி வருகிறாராம். இவர் முயற்சிகள் பலித்தால், சங்கரமடத்தில் விரைவில் பா.ஜ.க. கொடி பறக்கலாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.''