Advertisment

ராங்கால்! கைகோக்கும் எதிரிகள்! -அதிர்ச்சியில் எடப்பாடி! கவர்னரிடம் அண்ணாமலை தந்த தகரப் பெட்டி! - அலட்டிக்காத தி.மு.க.!

dd

"ஹலோ தலைவரே, நாடாளுமன்ற மாநிலங்களவை யில் இப்போது பா.ஜ.க.வின் பலம் கணிசமாக உயருகிறது.”

Advertisment

"ஆமாம்பா, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவின் பலம் உயர்வதை அனைத்துத் தரப்பும் கவலையோடு பார்க்குது.”

"உண்மைதாங்க தலைவரே, இதுவரை மாநிலங்களவையில் பெரும் பலத்தைப் பெற்றிராத மோடியின் பா.ஜ.க. அரசு, இந்த ஆகஸ்ட் டில், பெரும் பலத்தைப் பெறுகிறது. எனவே, மோடி அரசு, மிச்சமிருக்கும் தன் பதவிக் காலத்திலேயே, தான் நினைக்கும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றத் திட்ட மிட்டிருக்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியா விற்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது மோடி அரசு. அதேபோல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மக்களின், பலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அது ஈடுபடப்போகிறதாம். அதனால், பா.ஜ.க. தன் அசுர பலத்தால் இந்தியாவை நிம்மதியை இழக்கச் செய்துவிடுமோ என்கிற கவலை மேகம் சூழ்ந்து வருகிறது.”

"அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடக்குதே?”

ops-ttv-eps

Advertisment

"ஆமாங்க தலைவரே, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் தனக்குக் கீழ்தான் இருக்கிறார்கள் என்று உணர்த்த நினைக்கும் எடப்பாடி, அதற்காக இந்த ஆகஸ்ட் 20-ல் பிரமாண்டமான பொன்விழா மாநாட்டை, மதுரையில் நடத்த இருக்கிறார். அதற்கு பெருமளவில் கூட்டத்தைத் திரட்டி வரவேண்டும் என்று தங்கள் மா.செ.க்களுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலான பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுடன் தொடர்ச்சியாக எடப்பாடி விவாதித்தபடியே இருக்கிறார். இந்த மாநாடு தமிழகத்தையே மிரட்டும் வகையில் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.”

"ஆனால், எடப்பாடியை மிரட்டும் வகையில், இந்த நேரத்தில் அவருக்கு எதிராக ஓ.பி.எஸ். வரிந்துகட்டுகிறாரே?”

"உண்மைதாங்க தலைவரே, மாநாட்டை நடத்தும் உற்சாகத்தில் எடப்பாடி இருப்பதால், அவருக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்று ஓ.பி.எஸ். வியூகம் வகுத்துக்கொண்டு இருக்கிறார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் எடப்பாடிக்கு எதிர

"ஹலோ தலைவரே, நாடாளுமன்ற மாநிலங்களவை யில் இப்போது பா.ஜ.க.வின் பலம் கணிசமாக உயருகிறது.”

Advertisment

"ஆமாம்பா, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவின் பலம் உயர்வதை அனைத்துத் தரப்பும் கவலையோடு பார்க்குது.”

"உண்மைதாங்க தலைவரே, இதுவரை மாநிலங்களவையில் பெரும் பலத்தைப் பெற்றிராத மோடியின் பா.ஜ.க. அரசு, இந்த ஆகஸ்ட் டில், பெரும் பலத்தைப் பெறுகிறது. எனவே, மோடி அரசு, மிச்சமிருக்கும் தன் பதவிக் காலத்திலேயே, தான் நினைக்கும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றத் திட்ட மிட்டிருக்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியா விற்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது மோடி அரசு. அதேபோல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மக்களின், பலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அது ஈடுபடப்போகிறதாம். அதனால், பா.ஜ.க. தன் அசுர பலத்தால் இந்தியாவை நிம்மதியை இழக்கச் செய்துவிடுமோ என்கிற கவலை மேகம் சூழ்ந்து வருகிறது.”

"அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடக்குதே?”

ops-ttv-eps

Advertisment

"ஆமாங்க தலைவரே, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் தனக்குக் கீழ்தான் இருக்கிறார்கள் என்று உணர்த்த நினைக்கும் எடப்பாடி, அதற்காக இந்த ஆகஸ்ட் 20-ல் பிரமாண்டமான பொன்விழா மாநாட்டை, மதுரையில் நடத்த இருக்கிறார். அதற்கு பெருமளவில் கூட்டத்தைத் திரட்டி வரவேண்டும் என்று தங்கள் மா.செ.க்களுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலான பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுடன் தொடர்ச்சியாக எடப்பாடி விவாதித்தபடியே இருக்கிறார். இந்த மாநாடு தமிழகத்தையே மிரட்டும் வகையில் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.”

"ஆனால், எடப்பாடியை மிரட்டும் வகையில், இந்த நேரத்தில் அவருக்கு எதிராக ஓ.பி.எஸ். வரிந்துகட்டுகிறாரே?”

"உண்மைதாங்க தலைவரே, மாநாட்டை நடத்தும் உற்சாகத்தில் எடப்பாடி இருப்பதால், அவருக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்று ஓ.பி.எஸ். வியூகம் வகுத்துக்கொண்டு இருக்கிறார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் எடப்பாடிக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வலியுறுத்தியும், அதில் மெத்தன மாக நடந்துகொள்ளும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், ஆகஸ்ட் 1ஆம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஓ.பி.எஸ். முதற்கட்டமாக நடத்துகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தினகரனின் அ.ம.மு.க.வும் கலந்துகொள்வதுதான் ஹைலைட். ஓ.பி.எஸ்.ஸும் தினகரனும் ஒரே இடத்தில் கலந்துகொண்டு கைகோத்து ஆர்ப்பாட்டத்தை பரபரப்பாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இது எடப்பாடியை அதிரவைத்திருக்கிறது. லோக்சபா தேர்தலை மையப்படுத்தி, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் இப்படி ஒருவருக்கு எதிராக ஒருவர் அரசியல் செய்வதை, தி.மு.க. தரப்பு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கிறது.”

"இருந்தாலும் தங்கள் மாநாட்டுக்கு பிரதமர் மோடியை எடப்பாடி அழைக்க இருக்கிறாராமே?”

"அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டுக்கு பிரதமர் மோடியை அழைக்கவேண்டும் என்று அக்கட்சியின் கொங்கு மண்டல மாஜிக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆரம்பத்தில் தயங்கினா லும், பின்னர் எடப்பாடியும் மோடியை அழைக்கும் மூடுக்கு வந்திருக்கிறாராம். இதை யடுத்து, அ.தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை, பிரதமர் அலுவலகம் மூலமாக மோடிக்கு தெரிவித் திருக்கிறார் எடப்பாடி. இதற்கிடையே, ஜூலை 28ஆம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து நடை பயணத்தை தொடங்குகிறார் பா.ஜ.க. அண்ணா மலை. இதனை ஆரம்பித்து வைக்க அமித்ஷா அழைக்கப்பட்டிருக்கிறார். எனினும், மணிப்பூர் விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்திருப்பதாலும், இந்திய முழுக்க’"கோ பேக் அமித்ஷா'’என்கிற கோஷம் எதிரொலிப்பதாலும், இந்த நேரத்தில் தமிழகத்துக்குப் போகவேண்டுமா? என்று அமித்ஷா தயங்குகிறாராம். அண்ணாமலையின் இந்த பிரச்சார யாத்திரை தொடக்கவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகிய மூவரையுமே அழைத்திருக்கிறதாம் டெல்லி. ஓ.பி.எஸ்.ஸும், தினகரனும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் நானும் வெட்கமில்லாமல் கலந்துகொள்ள வேண்டுமா? எனக்கூறி நிராகரித்துவிட்டாராம் எடப்பாடி.”

"கவர்னர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. அண்ணாமலை சந்தித்திருக்கிறாரே?”

annamalai

"தி.மு.க. அமைச்சர்களின் 2-வது சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்த அண்ணாமலை, அதனை பொதுவெளியில் வெளியிடுவதா? அல்லது சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதா? என மேலிடத்தில் கேட்டிருந்தார். இந்த நிலையில், கவர்னரை சந்தியுங்கள் என டெல்லியில் இருந்து சிக்னல் வந்ததால், புதன்கிழமை ராஜ்பவனில் கவர்னரை அண்ணாமலை சந்தித் திருக்கிறார். அப்போது, கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில், எல்காட், தமிழ்நாடு மெடிக்கல் நிறுவனம், போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் ஊழல் நடந்ததாக, அண்ணா மலை புகார் பட்டிய லைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரிடம், அ.தி. மு.க. மீதான ஊழல் பட்டியல் என்ன ஆச்சு? என்ற கேள்வியை வைக்க, ராஜ்பவன் வாச லில் மீடியாக்கள் திரண்டிருந்தன. ஆனால் அண்ணாமலை யோ, அவர் களிடம் சிக்கா மல் எஸ்கேப் ஆகிவிட்டார். அண்ணாமலை யின் புகார் குறித்து தி.மு,.க. அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை.”

தி.மு.க. அரசோடு நெருக்கம் பாராட்டுகிறவர்கள் மூலமே அதற்கு எதிரான புகார்களை, பா.ஜ.க. அண்ணாமலை தயாரித்தார் என்கிறார்களே?”

"உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்றேங்க தலைவரே, அ.தி.மு,க. மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ராமச்சந்திரன். இவர்தான் பா.ஜ.க. அண்ணாமலைக்கு வார் ரூமை அமைத்துக்கொடுத்தவராம். அண்ணாமலைக்கும் அ.தி.மு.க. விஜயபாஸ்கருக்கும் நட்புப் பாலமாகவும் இந்த ராமச்சந்திரன் இருந்து வருகிறாராம். இந்த ராமச்சந்திரன், முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான உமாநாத்துக்கு மிக நெருக்கமானவராம். இந்த ராமச்சந்திரனை வைத்துதான், கடந்த கால தி.மு.க. ஆட்சியில் மெடிக்கல் கார்ப்பரேச னில் பெரும் ஊழல் நடந்ததாக, அண்ணாமலை குற்றச்சாட்டைத் தயார் செய்தாராம். இப்படி அண்ணாமலைக்கு ஊழியம் செய்யும் ராமச் சந்திரன், இந்த தி.மு.க. ஆட்சியிலும் செல்வாக்கோடு இருக்கிறார் என்கிறார்கள்.''’

"தமிழக அரசு அனுப்பிய பி.ஆர்.ஓ.வை ராஜ்பவன் திருப்பி அனுப்பிவிட்டதே?''

"ராஜ்பவனில் பி.ஆர்.ஓ. பணியிடம் காலியாக இருந்தது. இந்த பணியிடத்தை நிரப்புவதற்காக 4 பேர் கொண்ட பட்டியலை தி.மு.க. அரசு அனுப்பி வைத்திருந்தது. அந்த பட்டியலில் இருந்த திவாகர் என்பவரை, ராஜ்பவன் பி.ஆர்.ஓ.வாக தேர்வு செய்தது. இந்த திவாகர், சி.எம்.டி.ஏ.வின் பி.ஆர்.ஓ.வாக இருந்தவர். திவாகர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், திடீ ரென்று, அவரை நியமிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது ராஜ்பவன். இது குறித்து விசாரித்த போது, ‘’அந்த திவாகர் பணிபுரிந்த பல்வேறு இடங்களிலும் பெண் விவகாரம், ஊழல், லஞ்சம் என ஏகப்பட்ட புகார்கள் கிளம்பியிருக்கிறது. இந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது ஆக்சன் எடுத்த தி.மு.க. அரசு, பல மாதங்கள் அவரை காத்திருப்போர் பட்டியலிலேயே வைத்திருந்தது. சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சிபாரிசில், சி.எம்.டி.ஏ.வின் பி.ஆர்.ஓ.வாக பதவி வாங்கினார் திவாகர். இப்படிப்பட்டவரை, தேர்வு செய்த பிறகுதான் முழுதாகத் தெரிந்துகொண்டு ராஜ்பவன் நிராகரித்துவிட்டது என்கிறார்கள்.''

"தி.மு.க.வின் தென்காசி தெற்கு மா.செ.வான சிவபத்மநாபன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக் கிறாரே?''

ff

"ஆமாங்க தலை வரே, தி.மு.க. தென்காசி தெற்கு மா.செ.வான சிவபத்ம நாபன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதில் பொ றுப்பாளராக சுரண்டை நகரின் தி.மு.க. செயலாளரான ஜெயபாலன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே, தென்காசி மா.செ.வாக இருந்த சிவபத்மநாபனின் மீது கட்சியினரின் புகார் மனுக்கள் அறிவாலயத்தை முற்றுகையிட்டிருக் கின்றன. அதனால் அறிவாலயத்தால் அப்போதே எச்சரிக்கப்பட்டிருக்கிறார். இருந்தும் அவரது போக்கு மாறவே இல்லையாம். உதாரணமாக, உள்ளாட்சித் தேர்தலின்போது சுரண்டை நகராட்சியாக மாற்றப்பட்டு தேர்தல் நடந்தபோது, அங்கே ஜெயபாலனை சேர்மனாக்கும்படி எம்.பி. கனிமொழி, சிவபத்மநாபனிடம் கேட்டுக் கொண் டாராம். ஆனால் அதைப் புறக்கணித்த சிவபத்ம நாபன், தனக்கு நெருக்கமான வள்ளி முருகனை சேர்மனாக்கி, தலைமையின் அதிருப்தியை சம்பாதித்தாராம். தற்போது தி.மு.க. பெண் கவுன் சிலர் ஒருவர், இவரை பகிரங்கமாகவே விமர்சித்துப் பேசிய நிலையில்தான், அவர் மீது அதிரடி நட வடிக்கையை எடுத்திருக்கிறது அறிவாலயம்.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். பத்திரப் பதிவுத்துறையில் தற்காலிகப் பணி நீக்கத்திற்கு ஆளானவர்களின் கோப்புகள், காத்திருப்பது குறித்து நாம், நமக்கு வந்த தகல்களை கடந்த இதழில் பரிமாறிக் கொண்டோம். அந்தத் தகவல்களில் உண்மை இல் லையாம். பணி நியமனத்திற்காகக் காத்திருந்த அந்தக் கோப்புகள், எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில் நேர்மையாக பணி யமர்த்தப்பட்டு உள்ளனராம். இதற்கிடையே, இன்னொரு தகவலும் வழிமறிக்கிது. அதாவது, முதல்வரைச் சுற்றி இருக்கும் ஒரு சில அதிகாரிகளின் ஆதிக்கம், அளவுக்கு மீறிப் போவதால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கடுமையான இறுக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அவர்களில் சிலர், பேசாமல் மத்திய அரசுப் பணிக்குச் சென்று விடலாமா? என யோசிக் கிறார்களாம்.''

____________

இறுதிச்சுற்று!

முதன்மை அலைவரிசை முடக்கம்! இந்தித் திணிப்பு காரணமா?

நிதிப் பற்றாக்குறை காரணமாக தேசிய அளவில் செயல்படும் வானொலி மையம் உள்ளிட்ட 5 பிராந்திய மொழிகளின் வானொலி ஒலிபரப்புகள் ஜூன் மாதத்துடன் நிறுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நிதிப் பற்றாக்குறை காரணமாக அல்ல, இந்தி மொழித் திணிப்பிற்கான இசைவின்மை காரணமாகவே எனக் கூறுகின்றனர்.

அகில இந்திய வானொலி நிலையம் முதன்மை மற்றும் பண்பலை அலைவரிசை என இரண்டு அலைவரிசையாகச் செயல்பட்டு வந்த நிலையில். அதில் முதன்மை அலைவரிசையானது விவசாயம், கலை, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த விசயங்களை ஒலிபரப்பி வந்தது. இந்த நிகழ்வுகளில் ஒன்றிய அரசு, என்.சி.இ.ஆர்.டி எனும் கல்விசார்ந்த விவரங்களை இந்தி மொழியில் வெளியிடத் தொடங்கியது. இதற்கு தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் முட்டுக்கட்டை யாக இருந்ததாலும் அதை வேறுவழியில் திணிப்பதற் காகவுமே, முதன்மை அலைவரிசையை நிறுத்திவிட்டு பண்பலை அலைவரிசையில் இந்த நிகழ்வை கொண்டுவருவதாகச் சொல்லியுள்ளனர்.

இதனால் முழுநேர பொழுதுபோக்காக இருந்துவந்த ரெயின்போ பண்பலையில் இலக்கியம், கலைக்கு இடமில்லாமல் போவதோடு, அதைச் சார்ந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக அறிவிப் பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், பொறியாளர் கள் வேலையிழக்க நேர்ந்துள்ளது. மீண்டும் பழைபடியே முதன்மை அலைவரிசையைக் கொண்டுவரவேண்டும் என்பதே பெரும்பாலோரின் கோரிக்கையாக உள்ளது.

-அருண்பாண்டியன்

nkn290723
இதையும் படியுங்கள்
Subscribe