வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட ஒருவருடமாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். சமீபத்தில் ஹரியானா மாநிலம் கர்னல் மாவட் டத்தில் மாநில அரசுக்கு எதிராக சாலைமறியலில் இறங்கிய ஹரியானா மாநில விவசாயிகள் மீது போலீசார் லத்தி சார்ஜில் இறங்கியதில், பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் விரைவில் நடை பெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக, பா.ஜ.க. முதல்வர் மனோகர்லால் கட்டா தலைமையில் கர்னல் மாவட்டத்தில் தேர்தல் வியூகங்களைத் திட்டமிடுவதற்கான கூட்டம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது.

police

கர்னல் மாவட்டத்தின் ப்ரேம் பிளாஸா ஹோட்டலில் உயர்மட்டத் தலைவர்களுக்கான கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவர் ஓ.பி. தன்கர் உள்ளிட்டவர்களின் வாகனங்கள் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டிருக்கின்றன. ஹோட்டலுக்கு முன்பு போய் போராடவும், கறுப் புக் கொடி காட்டவும் விவசாயிகள் முயன்றதை யடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆயுஷ் சின்கா, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் தலைகளை உடைக்கும்படி உத்தரவிட்ட தாகவும் இதையடுத்தே காவல் துறை கடுமையான நடவடிக்கை யில் இறங்கியதாகவும் சொல்லப் படுகிறது.

Advertisment

போலீசாரின் லத்தி சார்ஜில் பல விவசாயிகள் பலத்த காயமடைந்தனர். போலீசார் விவசாயி களைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங் களில் பரவியதால் ஹரியானாவிலும் அண்டை மாநிலமான பஞ்சாபிலும் விவசாயிகள் திரண்டு சாலைக்கு வந்தனர். இதனால் மிக விரைவாகப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மட்டும் பாரதிய கிஸான் யூனியன் 56 இடங்களில் போராட்டம் நடத்தியிருக்கிறது.

dd

Advertisment

பிரச்சினை பெரியதாக மாறியதை அடுத்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், “"அமைதியை நிலைநாட்டுவது அத்தியாவசிய மானது. ஆனால் அதற்காக அதிகாரிகள் தேர்வு செய்த வார்த்தைகள் தவறானவை. அதேசமயம் விவசாயிகள் தரப்பில் நடந்த சட்டமீறல்கள் பற்றியும் விசாரிக்கப்படும். தவறுசெய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்''”என கூறியுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்துவோ, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்திருப்பதோடு, “"போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வருந்தத்தக்கது. இது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை மீது நடந்த தாக்குதல்” என விமர்சித்துள்ளார்.

"தேர்தலை பக்கத்தில் வைத்துக்கொண்டு, விவசாயிகள் மீது தாக்குதலை நிகழ்த்தியிருக்கும் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு விவசாயிகளின் அசல் பலம் என்னவென்பதை காட்டுவோம்' என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.