அ.தி.மு.க. ஆட்சியில் கள்ள ஆட்டம் ஆடிய பலரும் சிக்கிவருகின்றனர். அந்த வரிசையில்.... முன்னாள் அமைச்சர் கள், லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டுகளில் சிக்கிவரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பணி நியமனத்திற்காக பல கோடியில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், பணி உயர்வு, பணியிடை மாற்றம் என செய்துவந்ததாக விஜிலென்சுக்கு தகவல் வர, அவர்கள் அதிரடிக்குத் தயாராகிவருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 90-க்கும் மேற்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கிவருகிறது. இவற்றில் பயிலும் மாணவர்களும் தொழிற்கல்வி பயிற்சியளிப்பதற்கு இளநிலை பயிற்சி அலுவலர்கள் நியமனம் செய்வதற்காக அரசே தேர்வு நடத்தி, அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை 1:5 என்ற விகிதாச்சாரத்தில் நேர்முக தேர்வுக்கு அழைத்துப் பணி நியமனம் செய
அ.தி.மு.க. ஆட்சியில் கள்ள ஆட்டம் ஆடிய பலரும் சிக்கிவருகின்றனர். அந்த வரிசையில்.... முன்னாள் அமைச்சர் கள், லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டுகளில் சிக்கிவரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பணி நியமனத்திற்காக பல கோடியில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், பணி உயர்வு, பணியிடை மாற்றம் என செய்துவந்ததாக விஜிலென்சுக்கு தகவல் வர, அவர்கள் அதிரடிக்குத் தயாராகிவருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 90-க்கும் மேற்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கிவருகிறது. இவற்றில் பயிலும் மாணவர்களும் தொழிற்கல்வி பயிற்சியளிப்பதற்கு இளநிலை பயிற்சி அலுவலர்கள் நியமனம் செய்வதற்காக அரசே தேர்வு நடத்தி, அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை 1:5 என்ற விகிதாச்சாரத்தில் நேர்முக தேர்வுக்கு அழைத்துப் பணி நியமனம் செய்கிறது.
அதன்படி 326 இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணிக் காக 2016-ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதில் 2018-ஆம் ஆண்டு 281 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது. ஆனால் 1:5 விதியை பின்பற்றாமல், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், பணி நியமனத்திற்கு ஒரு குழுவை நியமனம் செய்தார். அதில் நிலோபர் கபிலின் அரசியல் பி.ஏ.வான அப்துல் ஜாப்பர், கூடுதல் இயக்குனர் டி.ராஜசேகர், ராமநாதாபுரம் கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார், தர்மபுரி சிவகுமார் ஆகியோர் இருந்தனர். அவர்கள் பணி நியமனம் செய்ய ஏகத்துக்கும் பண வசூல் செய்தனர். இதற்காகவே இந்த சிண்டிகேட் அமைக்கப்பட்டது.
அப்படி ஒரு பணிக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பணிநியமனத்தைச் செய்துள்ளனர்.
2016ம் ஆண்டு நடைபெற்ற முதல்நிலைத் தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண்ணை தெரிவிக் காமல், பணி நியமனம் செய்த தோடு, மேலும் மூன்று ஆண்டு கழித்து, மீண்டும் கட்-ஆப் மதிப்பெண்ணை குறைத்து தனக்கு வேண்டியவர்களை பணி நியமனம் செய்துள்ளனர்.
அதேபோல, வாட்ச் மேன் முதல் பயிற்சி நிலைய முதல்வர் பதவிவரை, பணி மாற்றங்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஒருவர் என வைத்துக்கொண்டு, அவர்கள் மூலம் சென்றால் மட்டுமே பணிமாற்றம் உறுதியாகும். அந்த வகையில் சென்னை மண்டலத்தில் உள்ள 5 மாவட் டத்திற்கு சண்முகானந்தம், சேலம், கோயமுத்தூர் மண்ட லத்திற்கு சிவகுமார், கிருஷ்ண மூர்த்தி, மதுரை திருநெல் வேலிக்கு கூடுதல் இயக்குனர் ராஜசேகரின் உறவினரான ரமேஷ்குமார், திருச்சி, விழுப் புரம் மண்டலத்திற்கு அமலா ரெக்ஸ்லின் மற்றும் ஒசூர் ஜெகநாதன் இவர்கள் மூல மாகவே பணிமாறுதல் நடக்கு மாம். அப்படி பணிமாற்றத் திற்கு உதவிகரமாக இருந்த காரணத்திற்காக கூடுதல் இயக்குனர் இவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளாராம்.
பரமக்குடியில் கல்லூரி முதல்வராக இருந்துவந்த ரமேஷ் குமாருக்கு மதுரையில் டி.டி. பதவி உயர்வு கொடுத் துள்ளார். அதே போல தர்மபுரியில் பணிபுரிந்த ஜெகநாதனை முன்பு இருந்த இயக்குனர் ஜோதிநிர்மலா பனிஷ்மெண்ட்டாக கொல்லி மலைக்கு மாற்றினார். அவரை தற்போது பதவி உயர்வு கொடுத்து டி.டி.யாக ஒசூரில் பணியில் அமர்த்தியுள்ளனர். மதுரையில் இருந்த அமலா ரெக்ஸ்லின் டி.டியாக பதவி உயர்வு பெற்று சென்னையில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
இப்படி பணி மூப்பு வழங்க வேண்டுமானால் பணி முதுநிலைப்பட்டியல் வெளிப்படையாக வெளியிட்டு அதன் பிறகு இந்த பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும். ஆனால் இதன்படி சீனியர் பட்டியலில் உள்ளவர் களுக்கு பணி உயர்வு கொடுக்காமல், ஜூனியராக உள்ள இவர்களுக்கு பணி கொடுத்திருக்கின்றனர். இதற்குக் காரணமானவர் கூடுதல் இயக்குனர் ராஜ சேகர்தான் என்கின்றனர்.
இது குறித்து தொழி லாளர் நலத்துறை கூடுதல் இயக்குனர் ராஜேகரிடம் கேட்டபோது, ”"என்மேல் காழ்ப்புணர்ச்சியில் உள்ளவர்கள் விஜிலென்ஸுக்கு போட்டுக் கொடுத்துள்ளனர். இதுபோன்ற எந்த விசயத்திலும் நான் தலையிட வில்லை. ஜெ.டி.ஓ. பணியை மட்டும்தான் நான் போட்டேன். மற்றபடி அனைத்தும் வீரராகவன் அவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். இந்த விவகாரத்தில் திருநெல்வேலி ஐ.ஏ.எஸ். விஷ்ணு விசாரித்து முடித்துள்ளார். இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல் லை''’என்று பதட்டமாகச் சொன்னார்.
இயக்குனர் வீரராகவ னிடம் கேட்டபோது, "தற்போதுதான் இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளேன். இது தொடர்பான ஆதாரங்களைப் பெற்று, என்ன நடந்துள்ளது என்பதை முதலில் விசாரித்து. அதன்பின்னர், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''’ என்றார் நிதானமாக.
உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பது போல், ஊழல் செய்தவர்கள் தண்டனை பெற்றே ஆவார்கள்.