ஆயுஷ்’ எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவர்கள் ஒரிஜினலா? போலியா? என்பதை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கவுன்சிலிலேயே போலியான பணிநியமனங்கள் நடந்திருக்கிறது. இப்படியிருந் தால், போலிச்சான்றிதழ்களை ஏன் இவர்களே அச்சடித்துக் கொடுத்து போலி டாக்டர்களை உருவாக்கமாட்டார்கள்?’’ என்று கேள்விகேட்டு ஷாக் கொடுக் கிறார்கள் நக்கீரனை தொடர்பு கொண்ட மருத்துவர்கள். மேலும், விசாரணையில் இறங்கியபோதுதான் சுகா தாரத்துறையில் கூடுதல்செய லாளராக இருந்து ஓய்வுபெற்று பதிவாளர் பதவியைபிடித்த கு.இராஜசேகரனின் தில்லு முல்லுகள் அம்பலமாகிறது.
தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் சித்தமருத்துவ மன்றம், தமிழ் நாடு இந்திய மருத்துவக்கவுன் சில், ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் ஆகிய மூன்று கவுன்சில்களும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளன. இம்மூன்று கவுன்சில்களுக்கும் "ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ' என்பதுபோல் ஒரே பதிவாள ரான இராஜச
ஆயுஷ்’ எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவர்கள் ஒரிஜினலா? போலியா? என்பதை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கவுன்சிலிலேயே போலியான பணிநியமனங்கள் நடந்திருக்கிறது. இப்படியிருந் தால், போலிச்சான்றிதழ்களை ஏன் இவர்களே அச்சடித்துக் கொடுத்து போலி டாக்டர்களை உருவாக்கமாட்டார்கள்?’’ என்று கேள்விகேட்டு ஷாக் கொடுக் கிறார்கள் நக்கீரனை தொடர்பு கொண்ட மருத்துவர்கள். மேலும், விசாரணையில் இறங்கியபோதுதான் சுகா தாரத்துறையில் கூடுதல்செய லாளராக இருந்து ஓய்வுபெற்று பதிவாளர் பதவியைபிடித்த கு.இராஜசேகரனின் தில்லு முல்லுகள் அம்பலமாகிறது.
தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் சித்தமருத்துவ மன்றம், தமிழ் நாடு இந்திய மருத்துவக்கவுன் சில், ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் ஆகிய மூன்று கவுன்சில்களும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளன. இம்மூன்று கவுன்சில்களுக்கும் "ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ' என்பதுபோல் ஒரே பதிவாள ரான இராஜசேகரனுக்குக்கீழ் உதவியாளர் ஜெயக்குமார், இளநிலை உதவியாளர் நிர்மல் குமார், தட்டச்சர் மோகனாம் பாள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பாலாராஜ், அலுவலக உதவி யாளர் எசக்கியேல், துப்புரவுப் பணியாளர் இந்திராணி ஆகி யோரும் ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலில் கவிதா, பாபு, ஜோசுவா என்கிற வாசு தேவன், கோமதி, வில்லியம், டேவிட் ஆகியோர் பணியமர்த் தப்பட்டிருக்கிறார்கள்.
சித்த மருத்துவ மன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலுக்கு அரசாணைப்படி தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்திக் கொண்ட பதிவாளர் இராஜசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் இரண்டுமாதம் மூன்றுமாதம் என தற்காலிகப்பணி களை வழங்கி, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக பணியமர்த்தி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய கவுன்சில் ஊழியர்களோ, ""இத்துறையில், நடக்கும் முறைகேடுகள், லஞ்ச ஊழல்கள் குறித்து யாராவது புகார் கொடுக்கவந்தாலோ, நியாயம் கேட்க வந்தாலோ அவர்களை மிரட்டி, விரட்டியடிக்க ஜெயக்குமாரைத்தான் ‘பாடிகாட்’ ஆக பயன்படுத்திவருகிறார் பதிவாளர் இராஜசேகரன். ஓலைச்சுவடி பிரிவில் பணியாற்றிய போஸ் என்பவரின் உறவினரான ஜெயக்குமார் அவரது சிபாரிசில் ஆபீஸ் அசிஸ்டெண்டாக சேர்ந்து கடந்த பத்து வருடங்களுக்குமேலாக தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தின் உதவியாளராக ம்ஹூம்... நிழல் பதிவாளராக இருக்கிறார்.
2009-ல் திருக்குமார் என்ற உதவியாளர் அரசின் ரப்பர் ஸ்டாம்புகளை வீட்டிற்கே எடுத்துச் சென்று போலிச்சான்றிதழ்களை அச்சடித்து வினியோகித்தார் என்று பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது. அப்போது, அவருக்கு துணையாக செயல்பட்டவர் இந்த ஜெயக்குமார்தான். ஆனால், போலிச்சான்றிதழ் விவகாரம் வெடிக்க ஆரம் பித்ததும் உதவியாளர் திருக்குமார் தற்கொலை செய்துகொண்டார். அப்போதைய பதிவாளர் சாய்பிரசாத் கட்டாய விடுப்பில் சென்றுவிட்டார்.
ஆனால், தன்னுடைய பணிநியமன தில்லுமுல்லுகள் எல்லாம் தெரிந்த ஜெயக்குமாரை சரிக்கட்டுவதற்காக ஜெயக்குமாரின் தம்பி பாபுவுக்கும் சுமார் 33,000 ரூபாய் சம்பளத்தில் ஹோமியோபதி கவுன்சிலில் பணிவழங்கியிருக் கிறார் பதிவாளர் இராஜசேகரன். மேலும், சித்த மருத்துவ மன்றம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் இரண்டிலும் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் தகுதி, திறமை அடிப்படையில் எவ்வித தேர்வும் வைத்தும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. இதுகுறித்து, ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டாலும் கொடுக்காமல் மறைத்துவருகிறார் பதிவாளர் இராஜசேகரன்.
ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலுக்கு அதன் விதிப்படி பணி நியமனம் செய்யப்பட்ட வர்தான் உதவியாளர் கவிதா. ஆனால், இங்கு நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து கவிதா வாய்திறக் கக்கூடாது என்பதற்காக கவிதாவின் தங்கை மோகனா வுக்கு சித்தமருத்துவ மன்றத் தில் பணி வழங்கிவிட்டார் இராஜசேகரன். ஜோசுவா என்கிற வாசுதேவன், வில்லியம், பதிவாளரின் தம்பி மகன் டேவிட், நிர்மல்குமார், பாலாராஜ் உள்ளிட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பதிவாளர் இராஜசேகரனுக்கு வேண்டப்பட்டவர்களே.
இதுகுறித்து, பணி நியமன ஊழல் குற்றஞ்சாட்டப் பட்ட பதிவாளர் இராஜ சேகரனை தொடர்புகொண்டு நாம் விளக்கம் கேட்டபோது, ""விளம்பரம் கொடுக்காமல் எனது உறவினர்கள், வேண்டப் பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டது தவறுதான். ஆனால், தகுதி-திறமை அடிப்படையில்தான் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்''’என்று கேஷுவலாக சொன்னவர் "என்னென்ன தகுதி?' என்று கேட்டபோது சொல்லமறுத்து விட்டார்.
தேசிய ஒருங்கிணைந்த மருத்துவச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் இந்திய ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் டாக்டர் கமலஹாசன் நம்மிடம், “""தேர்தலே நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகம், சித்தமருத்துவ மன்றத்திற்கும் தேர்தல் வைத்து தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். டாக்டர்கள் கவுன்சில்களின் தலைவர்களாக உறுப்பினர்களாக வந்துவிட்டால் உள்ளே நடக்கும் ஊழல்கள் தானாக வெளிவரும். தவறுகள் தடுக்கப்படும்''’என்கிறார் கோரிக்கையாக.
இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கவனத்திற்கு கொண்டுசென்றபோது, ""உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் அதிரடியாக. இதில், ‘களை’ எடுக்கவில்லை என்றால் போலி டாக்டர்களை உருவாக்கி மக்களின் உயிருக்கு ‘உலை’ வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
-மனோசௌந்தர்