"ஒரு அரசாங்கம் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமெனில் அதன் சுகாதாரத்துறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுகாதாரத்துறை ஆரோக்கியமாக இருந்தால் அந்நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்' என்கிறார் விவேகானந்தர்.

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் சுகாதாரத்துறை எப்படி இருக்கிறது?

Advertisment

masu

கொரோனா சவால்களை எதிர்கொண்ட தி.மு.க. அரசு!

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட மே 7-ந் தேதி, 5 லட்சம் கோடி கடன் சுமையை மட்டுமல்லாமல், 25,665 கொரோனா நோயாளி களையையும் விட்டுச் சென்றிருந்தது அ.தி.மு.க. அரசு. 10,186 பேர் மரணமடைந்திருந்தனர். அடுத்த 15-ஆவது நாளில் கொரோனா தாக்குதலின் எண்ணிக்கை 36,184 ஆக வேகமாக அதிகரித்தது. இந்தியாவிலேயே இதுதான் உச்சபட்ச கொரோனா தாக்குதல். ஆக்சிஜன் பற்றாக்குறையிலிருந்து படுக்கைகள் பற்றாக்குறை வரை தமிழகம் முழுவதும் மரண ஓலம். மக்களைப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய சவால்களை எதிர் கொண்ட தி.மு.க. அரசு, முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் எடுத்த போர்க்கால நடவடிக்கைகளால் கொரோனா மரணமில்லாத தமிழகமாக உருவானது.

தூக்கத்தைத் தொலைத்த ஸ்டாலின்!

கொரோனாவின் வேகம் அதிகரித்தபோது, தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு வெறும் 230 மெட்ரிக் டன்தான். ஆனால், தேவை 800 மெட்ரிக் டன். ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் 27,563-தான் இருந்தன. தேவையோ 35,000 படுக்கைகள். இப்படி ஒவ்வொரு மருத்துவ வசதியிலும் இருப்புக்கும் தேவைக்குமான இடைவெளி பெரிதாக இருந்தது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களிடமும், வெளி நாடுகளின் அரசாங்கத்திடமும் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக்கொண்டே அமைச்ச ருக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிப்பதும், அதனை கண்காணித்தபடியும் இருந்தார் ஸ்டாலின். ஒவ்வொரு நாளும் தூக்கமில்லா இரவாக முதல்வருக்கு இருந்தது. முதல்வரின் வழிகாட்டுதலில் அமைச்சர் எடுத்த அதீத முயற்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டி கள், படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து மருத் துவ வசதிகளும் உடனுக் குடன் நிறுவப்பட, தமி ழகம் முழுவதும் மருத்துவக் கட்டமைப்பு வலிமையானது.

ff

Advertisment

இரண்டாம், மூன்றாம் அலையை தோற்கடித்த தி.மு.க!

அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி நாளில் ஆக்சிஜ னுடன் கூடிய படுக்கைகள் 27,563. தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் இப்போது 53,689. ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் அ.தி.மு.க. ஆட்சியில் 60,496 ஆக இருந்தது. இப்போது 1,10,569 படுக்கைகள். தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் 10,517 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜனை உறிஞ்சும் ப்ளாண்ட் டை தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 142 இடங்களில் அமைத்திருக்கிறது. ஆக்சிஜன் இருப்பை 10 மடங்கு உயர்த்தி 20,000 மெட்ரிக் டன் என்றளவில் வைத்துள்ளது மக்கள் நல்வாழ்வுத் துறை. அ.தி.மு.க. ஆட்சியில் 63,28,407 என்றளவில்தான் தடுப்பூசிகளின் பயன்பாடு இருந்தது. இதனை மக்கள் இயக்கமாக மாற்றியது தி.மு.க. ஆட்சி. இதுவரை 10,65,41,794 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் முதல் தடவை தடுப்பூசிகள் 92.44 சதவீதமும், இரண்டாவது தடுப்பூசிகள் 77.65 சதவீதமும் நிறைவு பெற்றிருக்கிறது.மேற்கண்ட நடவடிக்கைகளால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டு மக்களிடம் நோய் எதிர்ப்புசக்தி 88 சதவீதம் அதி கரித்துள்ளது. "இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையை வீழ்த்தி மக்களை பாதுகாத் துள்ளோம். நான்காம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்கிற மருத்துவசதிகள் தயாராக இருக்கிறது''‘என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தி.மு.க.வின் புரட்சிகர திட்டங்கள்!

கொரோனாவை கட்டுப்படுத்தியதை தவிர மருத்துவத்தில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. கொண்டுவரவில்லை என அ.தி.மு.க. தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது,’அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை அனைத்து வழிகளிலும் சீரழிந்து கிடந்தது. ஆனால், தி.மு.க.வின் ஓராண்டில் மக்களை பாதுகாக்கவும், மருத்துவத்துறையை மேம்படுத்தவும் பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். முதலில் மக்களைத்தேடி மருத்துவத் திட்டம். கிராமம் மற்றும் நகரங்களில் நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட பல நோய்களின் தாக்கத்தினால் மருத்துவமனையை தேடி வந்து மருந்துகள் வாங்கிச் செல்வர். ஆனால், இதனை தொடர்ச்சியாகச் செய்ய அவர்களின் பொருளாதாரச் சூழல் இட மளிப்பதில்லை. அதனால் மக்களைத் தேடி மருத்துவம் செல்ல வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் இந்த திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி கிருஷ்ணகிரி சாமனப்பள்ளி கிராமத்தில் ரூ.258 கோடியில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தொற்று நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு நோயாளிகளின் இல்லத்துக்கே சென்று மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. தேவையான மருந்துகள் வழங்குவது மட்டுமல்லாமல், நோய் ஆதரவு சேவைகள், ஃபிஸியோதெரபி சேவைகள், நோயாளிகளைப் பராமரித்தல், பெண்களுக்கான கருப்பை நோயை கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவமும் தரப்படுகிறது.

vv

மேலும், புற்று நோயாளர்களை முதல் மற்றும் இரண்டாம் நிலையிலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சை முறைகள் தரப்பட்டு நோய் முற்றாத தீர்வினை தந்துவருகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 63,77,588 பேர் பயனடைந்துள்ளதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைத் துள்ளோம். மக்களைத் தேடி மருத்துவம் செல்வதில் உலகத்துக்கே தமிழகம்தான் முன்னோடி. அதேபோல, விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகமுள்ள தமிழகத்தை பாதுகாக்க, "இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48' என்ற திட்டம், முதல்வரால் துவக்கப்பட்டிருக்கிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சையின் செலவுகளை அரசே ஏற்கும். விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்பவருக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுவரை விபத்தில் சிக்கி 52,443 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்காக அரசு செலவு செய்துள்ள தொகை 46,40,67,883 ரூபாய். இந்தத் திட்டத்தினால் விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. மேற்கண்ட 2 திட்டங்களும் புரட்சிகரமானவை என ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரே பாராட்டியிருக்கிறார்''’என்கிறார் மா.சுப்பிர மணியன்.

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை!

அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளுக்குத் தேவையான டிஷ்யூ பேப்பர் கள் முதல் உயர்ரக உபகரணங்கள் வரை கொள்முதல் செய்து கொடுப்பது தமிழக அரசின் மருத்துவப் பணிகள் சேவைக் கழகம். அ.தி.மு.க. ஆட்சியில் இத்துறையின் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் டெண்டர் விவகாரங்களில் புகுந்து விளையாடினார். இதற்காக, விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், பணிகள் கழகத்திலேயே விழுந்து கிடப்பார். தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் முந்தைய சூழல்கள் மாறவில்லை. அ.தி.மு.க. காண்ட்ராக்டர்கள் மற்றும் சரவணன் வழியாக விஜயபாஸ்கரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. மருத்துவத்துறையை முதல்வரின் செயலாளர் உமாநாத்தான் கவனித்து வருகிறார். "விஜயபாஸ்கரின் ஊழல்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தண்டனை கிடைக்கும் என தி.மு.க. தெரிவித்திருந்தது. இந்த ஓராண்டில் சிறு துரும்புகூட விஜயபாஸ்கருக்கு எதிராக நகரவில்லை' என்கிறார்கள் துறையின் நேர்மையான அதிகாரிகள்.

Advertisment

dd

உதவிப் பேராசிரியர் நியமன ஊழல்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அ.தி.மு.க. ஆட்சியில் உதவிப் பேராசிரியர்களாக ஜூனியர்கள் பலரையும் நிய மனம் செய்தார் விஜயபாஸ்கர். ஒரு போஸ்டிங்கின் விலை ரூ.20 லட்சம். குறிப்பாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மயக்கவியல் துறையில் சீனியர் களைப் புறக்கணித்து 8 ஜூனியர்களை நியமித்தனர். இவர்களின் நியமனத்தை ரத்து செய்ய ஆதாரப்பூர்வமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வழக்கு போட்டி ருக்கிறது ஹியரிங்கிற்கே வரவிடாமல் தடுக்கப்படுகிறது. இந்த நியமன ஊழல் தி.மு.க. அரசுக்கு தெரிவிக்கப்பட்டும் நோ ரியாக்ஷன். அதேபோல, பேராசிரியர் பதவி உயர்வு கொடுக்கப்படுகிறபோது இடமாறுதலும் நடக்கும். இது அரசு விதி. ஆனால் அப்படி பதவி உயர்வில் இடமாறுதல் செய்யப்படுகிற பலர், புதிய இடத்தில் பேருக்கு சேர்ந்துவிட்டு கொஞ்சநாளிலேயே அயலகப் பணி என்ற பேரில் முதலில் இருந்த இடத்துக்கே வந்துவிடுகிறார்கள். இதன் பின்னணியில் பல லகரங்கள் விளையாடியது. "அ.தி.மு.க.வில் நடந்த இந்த ஊழல்களும் களையப்படவில்லை' என்கிறது அதிகாரிகள் தரப்பு.

அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

அரசு மருத்துவமனை டாக்டர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படாததில் தி.மு.க. அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அரசு டாக்டர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை,”"கொரோனா தாக்குதலால் ஏற்பட்ட கடும் உயிர் அச்சத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்களெல்லாம் ஓடிவிட்டனர். அரசு டாக்டர்கள் மட்டும்தான் மக்களைப் பாதுகாக்க களப்பணியில் இருந்தனர். ஆனால், எங்களுக்கான ஊதிய கோரிக்கையை அ.தி.மு.க. அரசும் கண்டுக்கவில்லை, தி.மு.க.வும் கண்டுக்கவில்லை. ஊதிய கோரிக்கைக்காக "கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354-யை நிறைவேற்றுங்கள்' என நீண்டகாலமாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்தின்போது ஸ்பாட்டுக்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, "தி.மு.க. ஆட்சி வந்ததும் நிறைவேற்றித் தருகிறோம்'' என உறுதி தந்தார்... ஆனால் நடக்கவில்லை. இதுகுறித்து கவன ஈர்ப்பு போராட்டங்கள் பல நடத்தினோம். போராட் டத்தை ஒடுக்கினார்களே தவிர நியாயம் கிடைக்கவில்லை. அதனால் 19 ஆயிரம் அரசு டாக்டர்களின் குடும்பத்தின் வலியை வெளிப் படுத்தும் வகையில் அடுத்த மாதம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருக் கிறோம். "கொரோனா பணிகளின்போது மருத்துவர்கள் மரணமடைந்தால் 25 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும்' என அரசாணை இருக்கிறது. கொடூரமான முதல் அலையின் போது இறந்துபோன அரசு மருத்துவர்கள் 10 பேரின் குடும்பம் நிதி உதவி கேட்டு போராடிப் பார்த்தது. கிடைக்கவில்லை. 9 குடும்பத்தினர் சலித்துப்போய் விட்டுவிட்டனர். அதில் விவேகானந்தன் குடும்பம் மட்டும் நிதி உதவியும் அவரது மனைவி திவ்யாவுக்கு அரசு வேலையும் கேட்டு போராடிக்கொண்டிருக்கிறது. இதுவரை கிடைக்கவே இல்லை. ஆனால் இரண்டாம் அலை, மூன்றாம் அலையில் இறந்த தனியார் மருத்துவமனை டாக்டர்களின் குடும்பங்களுக்கு மட்டும் நிதி உதவி உடனுக்குடன் தரப்பட்டு விட்டது. அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?''’என்கிறார் ஆதங்கமாக.

தி.மு.க. ஆட்சியில் ஊழல்களுக்கு இடமில்லை!

குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது,”"அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் இருக்கிறது. நிச்சயம் நிறைவேறும். அரசு டாக் டர்களை கழக அரசு கைவிடாது. அதேபோல, அ.தி.மு.க.வினரின் ஆதிக்கமும் ஊழல்கள் எது வும் தி.மு.க. ஆட்சியில் இல்லை. குற்றச் சாட்டுகள் தவறானவை. யாருடைய தலை யீடும் இல்லாமல் அனைத்து செயல்பாடு களும் வெளிப்படைத்தன்மையுடன்தான் இருக்கின்றன. ஊழல்களுக்கு தி.மு.க. ஆட்சியில் இடமே கிடையாது''’என்கிறார் அழுத்த மாக. பொது சுகாதாரச் சவால் களை சந்தித்து தீர்வு காண் பதிலும் மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு.