தமிழகத்தில் நடக்குமா -நடக்காதா? என்ற கேள்வியோடு இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒருவழியாக நடந்துமுடிந்து தேர்வான அனைவரும் ஜன. 6-ல் பதவியும் ஏற்றுவிட்டனர். ஆனால் தலைவர் பதவிக்கான அதிகாரமும் வழங்காமல் மக்கள் பணிகளும் நடக்காமல் தலைவர்கள் பொம்மைகளாகவே இருப்பதாக குமுறுகிறார்கள். அதிகாரம் கேட்டு போராட்டம் நடத்த தயாராக இருக்கும் குமரி மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் சிலர் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தோவாளை ஊராட்சிமன்றத் தலை
தமிழகத்தில் நடக்குமா -நடக்காதா? என்ற கேள்வியோடு இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒருவழியாக நடந்துமுடிந்து தேர்வான அனைவரும் ஜன. 6-ல் பதவியும் ஏற்றுவிட்டனர். ஆனால் தலைவர் பதவிக்கான அதிகாரமும் வழங்காமல் மக்கள் பணிகளும் நடக்காமல் தலைவர்கள் பொம்மைகளாகவே இருப்பதாக குமுறுகிறார்கள். அதிகாரம் கேட்டு போராட்டம் நடத்த தயாராக இருக்கும் குமரி மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் சிலர் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தோவாளை ஊராட்சிமன்றத் தலைவர் நெடுஞ்செழியன், “""மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களின் அதிகாரத்தை மறைமுகமாக அரசு பறித்துவைத் திருக்கிறது. பதவியேற்று கிட்டத்தட்ட 60 நாட்களாகி விட்டது. ஆனால் இன்று வரை எங்களுக்கு அதி காரத்தை தரவில்லை. இதனால் அடிப்படை, அவசரப் பணிகள் எதுவும் செய்யமுடிவில்லை. குறிப்பாக துர்நாற்றம் வீசுகிற கழிவு நீர் ஓடைகள், பழுதடைந்து கிடக்கும் சாலைகள், தெரு விளக்குகள், உடைந்து கிடக்கும் தண்ணீர் பைப்புகளை சரிசெய்ய முடியாமல் இருக் கிறோம். மேலும் ஊராட்சிக்கான நிதியும் இதுவரை கொடுக்காமல் இருக்கிறார் கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, "நாங்க என்ன செய்ய முடியும்'னு நழுவுறாங்க. ஊராட்சிக்கு ஊராட்சி செயலாளர்கள்கூட இல்லை. வீட்டு வரி, தண்ணீர் வரி யாரெல்லாம் செலுத்தணும்னு எந்த தகவலும் தெரிய வில்லை. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமல் நான் சொந்தக் காசு கொடுத்து கழிவு நீர் ஓடை மற்றும் தெருவிளக்குகளை சரிசெய் கிறேன். கழிவு நீர் ஓடைகளிலிருந்து அள்ளிய மண், குப்பைகளைக் கொண்டு செல்ல வாகனமும் இல்ல. பில்தொகை செட்டில் பண்ணாததால ஒப்பந்த வாகன ஓட்டிகளும் வரமாட்டாங்குறாங்க.
மக்கள் ஒவ்வொரு நாளும் பிரச் சினைகளை சுட்டிக்காட்டி எங்களை கேள்வி கேட்டு நச்சரிக்கிறாங்க. ஊராட்சி அலுவலகத்தை பூட்டியே போட்டா மக்கள் எங்கள தப்பா நினைப்பாங்க, அத னாலதான் திறந்து வெச்சு பொம்மையா உட்கார்ந்திருக்கோம். கலெக்டர் நடவ டிக்கை திருப்தி தராவிட்டால் அடுத்த கட்டம் அதிகாரம் கேட்டுப் போராடு வதுதான்'' என்றார்.
சகாயநகர் ஊராட்சிமன்றத் தலை வர் மகேஷ் ஏஞ்சலினோ, ""மக்கள்கிட்ட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லிக் கேட்கிறாங்க. பழுதடைந்த குடிநீர் பைப்புகள சரிசெய்ய பிளம்பர் கிட்ட சொன்னா செட்டில் செய்யாத பழைய பில்லை எல்லாம் காட்டி பணம் கேட்கிறாங்க. தேர்தலை நடத்தி எங்க ளையெல்லாம் சும்மா உட்கார வச்சிருக் கிறாங்க. தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால் மக்கள் பணி செய் திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் செய்ய போதிய அதிகாரத்தையும் நிதியையும் ஊராட்சி மன்றங்களுக்கு உடனடியாக அரசு வழங்கவேண்டும்’''’என்றார்.
-மணிகண்டன்