மின்னணு பயிர் சர்வே! அச்சத்தில் வேளாண் மாணவிகள்! -வலுக்கும் எதிர்ப்பு!

ss

ந்தியா முழுவதுமுள்ள வேளாண் வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், விளைநிலத்தின் தன்மை, அளவு, பயிரிடப்படும் பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தொகுத்து, டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில் தேசிய அளவில் வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், "டிஜிட்டல் பயிர் சர்வே' பணிகள் நடந்துவருகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான குறிஞ்சிப்பாடி அருகே கருங்குழி கிராமத்தில், மின்னணு பயிர் சாகுபடி கணக் கெடுப்புத் திட்டத்தை கடந்த 8ஆம் தேதி அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் திருச்சி குமலூர் வேளாண் கல்லூரியில் பயிலும் பட்டயப் பயிற்சி மாணவ மாணவிகள், விவ சாயிகளுடன் தங்கி, பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணியை மேற் கொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "விவசாயிகள் அடங்கல் பெறுவதில் கால தாம தங்கள் ஏற்படுவதால் புதிய கூட்டு முயற்சியாக மாணவர்களைக் கொண்டு மின்னணு முறையில் கணக்கிடும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதனை அனைத்து விவசாயிகளும் வரவேற் றுள்ளனர். இதில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஸ்டைபன்ட் தொகை வழங்கப்படும். மாணவர் களுக்கும் இது அனுபவக் கல்வியாக இருக்கும்'' என்றார். பொதுவாக இத்திட்டம், வருவாய்த் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் மேற் கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் தற்போது இதனை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் கொடுத்துள்ளனர். இதற்காக வேளாண் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கற்றல் -கற்பித்தல் செயல்பாடுகளிலிருந்து விடுவிக்கப

ந்தியா முழுவதுமுள்ள வேளாண் வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், விளைநிலத்தின் தன்மை, அளவு, பயிரிடப்படும் பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தொகுத்து, டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில் தேசிய அளவில் வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், "டிஜிட்டல் பயிர் சர்வே' பணிகள் நடந்துவருகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான குறிஞ்சிப்பாடி அருகே கருங்குழி கிராமத்தில், மின்னணு பயிர் சாகுபடி கணக் கெடுப்புத் திட்டத்தை கடந்த 8ஆம் தேதி அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் திருச்சி குமலூர் வேளாண் கல்லூரியில் பயிலும் பட்டயப் பயிற்சி மாணவ மாணவிகள், விவ சாயிகளுடன் தங்கி, பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணியை மேற் கொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "விவசாயிகள் அடங்கல் பெறுவதில் கால தாம தங்கள் ஏற்படுவதால் புதிய கூட்டு முயற்சியாக மாணவர்களைக் கொண்டு மின்னணு முறையில் கணக்கிடும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதனை அனைத்து விவசாயிகளும் வரவேற் றுள்ளனர். இதில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஸ்டைபன்ட் தொகை வழங்கப்படும். மாணவர் களுக்கும் இது அனுபவக் கல்வியாக இருக்கும்'' என்றார். பொதுவாக இத்திட்டம், வருவாய்த் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் மேற் கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் தற்போது இதனை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் கொடுத்துள்ளனர். இதற்காக வேளாண் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கற்றல் -கற்பித்தல் செயல்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, வயல்வெளிகளில் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

agr

இந்தத் திட்டம் குறித்து கருங்குழி கிரா மத்தைச் சேர்ந்த விவசாயி ராமானுஜம் கூறுகை யில், "வள்ளலார் தண்ணீரால் விளக்கேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் இந்தத் திட்டத் தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. நான் 15 ஏக்க ருக்கு மேல் விவசாயம் செய்கிறேன். இயற்கை பேரிடர் காலங்களில் காப்பீட்டுத்தொகை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்களிடம் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுவந்தது. அவர்கள் குறைத்து மதிப்பிட்டு எழுதிவிட்டால் இழப்பீடு குறைவாகக் கிடைக்கும். தற்போது மின்னணு முறையில் துல்லியமாகப் பயிர் வளரும் போதே கணக்கெடுப்பதால், இதில் எந்தத் தவறும் நடக்க வாய்ப்பில்லை. எனவே விவ சாயிகள் அனைவரும் இந்தத் திட்டத்தை வரவேற்கிறோம்'' என்றார்.

வீராணம் ஏரி ராதா மதகு பாசன சங்கத் தலைவர் ரங்கநாயகி கூறுகையில், "குமராட்சி பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் விவ சாயம் செய்கிறேன். மின்னணு கணக்கெடுப்பு முறையை விவசாயிகள் வரவேற்றுள்ளோம். இந்த செயலி தற்போது ஆங்கிலத்தில் உள்ளது. இதனை அனைவரும் படிக்கும் வகையில் தமிழில் மாற்றம் செய்யவேண்டும். மாணவர் களும், விவசாயிகளும் இணைந்து துல்லியமாக அளவீடு செய்வதால் விவசாயிகளுக்கு அலைச்சல், காலவிரயம், மனஉளைச்சல் இல்லாமல் இருபோம்'' என்றார்.

ஒருபுறம் விவசாயிகள் தரப்பில் இத்திட்டத்துக்கு வரவேற்பு எழுந்தாலும், வயல்வெளிகளிலும், புதர்களிலும் இறங்கி பணிசெய்ய வேண்டிய சூழலில், மாணவ, மாணவிகள் பெரிதும் துன்பத்துக்கு ஆளாவதாக எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. திருவண்ணா மலை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்தபோது, வயல்வெளியில் சர்வே பணியின்போது பாம்பு கடித்ததால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் இன்னொரு மாணவியை குளவி கொட்டி யிருக்கிறது. வயல்வெளியில் புதர்களுக்கிடையே விஷப்பூச்சிக்கடிக்கிடையே பணியாற்றுவதால் மிகுந்த அச்சத்துடனேயே மாணவிகள் இருக் கிறார்கள். இதன்காரணமாக பெற்றோர்கள் தரப்பில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

sas

இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார், "இந்த மின்னணு சர்வே பணிக்காகத் தினமும் காலையில் 7 மணிக்கே கிளம்பிச்செல்லும் எங்கள் மகள், பணி முடித்து வீடு வரும்போது இரவு 8 மணியாகிவிடுகிறது. அவளுக்கு அலைச்சல் காரணமாக உடல் நலமில்லாத போதும் பணிக்கு வந்தாகவேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார்கள். இப்பணியில் ஈடுபடும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படுவதில்லை. விஷப் பூச்சிகள் கடிக்கின்றன. பாம்புக்கடியாலும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி ஒரு பணிக்கு போய்த்தான் ஆகணுமா? என்று நாங்கள் தடுத்தாலும், அப்படி போகாவிட்டால் மதிப்பெண்களில் கைவைத்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகப் போகிறார்கள். இந்த பணிக்கு மாணவ, மாணவிகளைப் பயன் படுத்துவதைத் தடுக்க வேண்டும்''’ என்றார்.

இப்பணியில் ஈடுபடும் மாணவிகள் தரப்பில் கூறும்போது, "மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணிக்காக எங்கள் வகுப்பிலுள்ள மாணவர்களை குழுக்குழுவாகப் பிரித்து விவசாய நிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கு ஒரு வராகவோ, இருவராகவோ பிரிந்து, விவசாய நிலங்களி லும், விவசாயிகளின் வீடுகளிலும் எங்க ளுக்கு தேவையான தரவுகளைத் திரட்டுகிறோம். இதற்காக நீண்ட தூரத்துக்கு ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலும் பயணிக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் எங்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது. அதேபோல், பணி நேரத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றாலும் அதற்கான வசதிகள் இல்லை. அதிலும், மாதவிடாய் காலமாக இருந்தால் எங்களுக்கு கூடுதல் சிரமம், மன உளைச்சல்''’என்றார்.

sag

இந்தத் திட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாடு முழுவதும் மின்னணு பயிர் கணக்கீட்டுப் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ மாணவி கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தமிழ்நாடு அரசின் இயலாமையை மறைப்பதற்காக, மாணவ, மாணவி யரின் பாதுகாப்பைப் பலி கொடுப்ப தாகும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இதுபோன்று நடத்தப்படுகிறது. இதில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற பகுதிகளில் மாணவ, மாணவியருக்கு சமூக விரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கு யார் பொறுப்பேற்பது? அரசு ஏற்குமா?'' என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

sdfஇதுகுறித்து கடலூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், "எப்படி மருத்துவ மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி எடுக்கிறார்களோ, அதே போன்றுதான் வேளாண் மாணவர்கள் விவசாயிகளுடன் தங்கி பயிற்சி எடுத்து, பல்வேறு கலளப்பணி அனுபவங்களைத் தெரிந்து கொள்வார்கள். பயிரில் பூச்சி தாக்குதல், அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வேளாண் விபரங்களைத் தெரிந்து கொள்கிறார்கள். அனைத்து இடங்களிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டு, பாதுகாப்பான தங்கும் இடங்கள், பேருந்து வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்கிறது'' என்றார்.

இவர் இப்படிச் சொன்னாலும், உண்மை நிலவரம் என்னவோ வேறு மாதிரியாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த 192 மாணவி கள் மற்றும் 8 பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டுவந்தனர். அவர்கள் தங்குவதற்கென காரியாபட்டியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த மண்டபத்தில் போதிய வசதிகள் இல்லையென்பதால் மாணவிகள் மிகவும் சிரமப் பட்டனர்.

மாணவிகள் சிரமப்படுவது குறித்த செய்தி, நிதி மற்றும் சுற்றுச்சுழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து உடனடி யாக அம்மாணவிகள் தங்கு வதற்கு தன்னுடைய மல்லாங் கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தை வழங்கியதோடு, வரும் 20ஆம் தேதி வரை மாணவியர் அங்கு தங்குவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகளை யும் செய்து கொடுத்துள்ளார். மேலும் நேரில் அங்குவந்த அமைச்சர், மாணவி களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந் தார்.

இதன்மூலம், மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்புத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்துவது குறித்த அச்சமே மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் மிகுந்திருப்பது தெரிகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

-கீரன் & காளிதாஸ்

nkn201124
இதையும் படியுங்கள்
Subscribe