லோ தலைவரே, தேர்தல் நேரத்தில் தி.மு.க. அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராயிடிச்சி.''

Advertisment

""ஆமாம்பா, தமிழகம் மீட்போம், விடியலை நோக்கி என்கிற பெயர்களில் பிரச்சாரத்தை முன்னெடுத்த ஸ்டாலின், கடைசியா அ.தி.மு.க.வை நிராகரிப்போம்னு மக்கள் கிராம சபைக் கூட்டங்களைக் கூட்டியும் பிரச்சாரத்தைக் கொண்டு போனார். இப்ப அடுத்த கட்டமா, ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற பெயரில் அவர் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரெடியாயிட்டார்.''

rang

""உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளையும் கவர் பண்ற மாதிரி, அந்தந்த மாவட்டத்திலும் ஒன்றிரண்டு இடங்களில் மக்கள் சந்திப்பை ஸ்டாலின் நடத்த இருக்கிறார். அதில் மக்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அவங்களோட கோரிக்கைகளை- குறைகளை எழுதச் சொல்லி மனுவா வாங்கிக்கப் போறாராம். அதற்காக கலைஞரின் கோபாலபுர வீட்டு வாசலில் மீடியாக்களை சந்திச்சி, "மு.க.ஸ்டாலினாகிய நான், ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்களின் இந்தக் குறைகளை எல்லாம் நிறை வேற்றுவேன். இது என்னுடைய பொறுப்பு'னு வீடியோவில் பேசி, 29 ஆம் தேதியில் இருந்து அந்தக் கூட்டங்களில் மக்கள் முன் வாக்குறுதி கொடுக்க அவர் தயாராயிட்டார்.''

""ஆளுங்கட்சியான அ.தி.மு.க இதை எப்படி பார்க்குது?''’

Advertisment

""ஸ்டாலினின் இந்த பிரச்சாரத் திட்டத்தை, பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஐபேக் தயாரிச்சிருக்குன்னு உளவுத்துறை, எடப்பாடிக்கு நோட் போட்டிருக்கு. அதே நேரம் பா.ம.க. தரப்போ, "2016-ல் நாங்கள் முன்னெடுத்த "அன்புமணியாகிய நான்'னு தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி உருவாக்கி கொடுத்த பிராண்டிங்கை ஐ-பேக் அப்படியே காப்பி அடிச்சி, ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கு'ன்னு சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்குது. ஆனா, ஆளுங்கட்சித் தரப்பில் ஒரு ஜெர்க் தெரியுது. அடுத்து ஆட்சிக்கு வரப்போகும் ஸ்டாலின்னு எடப்பாடி பழனிச்சாமியே போற போக்கில் பேசியது ட்ரெண்ட் ஆயிடிச்சி.''

""தேர்தல் நேரத்தில் ஏறத்தாழ எல்லாக் கட்சிகளையுமே அரசியல் வியூக வகுப்பாளர்கள்தான் உருட்டி விளையாடுறாங்க.''

rr

Advertisment

""தலைவரே, எடப்பாடியின் அரசியல் ஆலோசகராக இருக்கும் சுனிலும் ஓய்வுபெற்ற உளவுத்துறை ஐ.ஜி.யான சத்தியமூர்த்தியும் தினசரி எடப்பாடியை சந்திக்கிறாங்க. ‘வெற்றிநடை போடும் தமிழகம்னு அ.தி.மு.கவுக்காக தமிழக அரசு பணத்தில் கொடுக்கப்படும் விளம்பரங்களையும் இவங்கதான் டீல் பண்ணுறாங்க. இரண்டு பேர் காட்டிலும்தான் மழைன்னு ஆளுங்கட்சி நிர்வாகிகளே புலம்புறாங்க.''

""பா.ம.க. சார்பில் உள்ஒதுக்கீட்டுக்காக கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம்னு டாக்டர் ராமதாஸ் அறிவிச்சிருக்காரே?''

rang

""வன்னியர் சமூகத்திற்கு 20 சத இட ஒதுக்கீடு கொடுத்தால்தான் தேர்தல் உடன்பாடுன்னு சொல்லிவந்த பா.ம.க.வை, ஒருவழியாக எடப்பாடித் தரப்பு சமாதானப்படுத்திவிட்டதாம். இடஒதுக்கீடு பற்றி அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடணும்ங்கிறது டாக்ட ரோட நிபந்தனை. அதோடு பா.ஜ.க.வைவிட அதிக சீட்டுக்களை பா.ம.கவுக்கு ஒதுக்கணும்னும் டாக்டர் கேட்டிருக்காரு. மற்ற வெயிட்டான டீலிங் விவகாரமும் முடிவானதும், இருகட்சிகளுக்கும் இடையிலான உடன்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம்.''

""ஆனா, தே.மு.தி.க. செம கடுப்புல இருக்குதே?''

""விஜயகாந்த்தின் உடல்நிலை காரணமா தே.மு.தி.கவை முழுமையாக நிர்வாகிக்கும் பிரேமலதா, தனது தம்பி சுதீஷ் மூலம் பலமுறை எடப்பாடியைத் தொடர்பு கொண்டு பேசியும் கூட, 10 சீட்டுகளுக்கு மேல் உங்களுக்குத் தரமுடியாது என்று கைவிரித்த அவர், அதன்பின் அக்கட்சியை வெயிட்டிங் லிஸ்டில் வைத்துவிட்டாராம். அந்த கடுப்பில்தான் பிரேமலதா 234 தொகுதியிலும் நாங்கள் நிற்போம்ன்னு அதிரடியாகப் பேசுகிறாராம்.''

""அ.தி.மு.கவில் எடப்பாடிதான் ஒன் மேன் ஷோவா?''

""வெளியே அப்படி தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே புகைச்சல் அதிகமாகத்தான் இருக்குதாம். சக அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோர், தாங்கள் சொல்லும் நபர்களுக்கே வரும் தேர்தலில் சீட் கொடுக்கனும்னு நிர்பந்திக்கிறாங்களாம். அதேபோல் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆளுக்கு 10, 15 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துக்கொண்டு, தங்கள் இஷ்டத்துக்கு நடந்துக்குறாங்களாம். எடப்பாடியின் காதுபடவே, சின்னம்மா பக்கம் போறதுதான் புத்திசாலித்தனம்னு பேசுகிறார்களாம். அதனால் யார் எந்த நேரத்தில் காலை வாருவார்களோங்கிற கவனத்தோடு ஸ்டெப் வைக்கிறாரு எடப்பாடி.''

""ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெறும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எப்படி இருக்கார்?''

""கொரோனாவால் பதிக்கப்பட்டு எக்மா கருவிவரை பொருத்தப்பட்ட அமைச்சர் காமராஜின் உடல் நிலையில், இப்போது முன்னேற்றமாம். ஆனால் அவர் துறையில் இருந்துதான் பின்னடைவான தகவல்கள் வருது. 3500 டன் ரேசன் அரிசியை அமைச்சர் தரப்பினர் கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்று பெரும் லாபம் பார்த்ததாக டெல்லிவரை புகார்கள் போயிருக்கு. இதில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உண்டாம். இந்த விவகாரத்தைத் தீவிரமாகத் துருவும் டெல்லி, விரைவில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறதாம். அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி வி.ஐ,.பி உள்ளிட்டவர்களுக்கும் விரைவில் ஷாக் டிரீட்மெண்ட் கிடைக்குமாம்.''

rang

""ஓ...''’

""சுகாதாரத் துறைக்குக் கீழ் இருக்கும் மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ஆர்.உமாநாத் ஐ.ஏ.எஸ். இருக்கிறார். இவரும் தேன்மொழி என்ற தொழிலதிபரும் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்களாம். கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்..ஏ.வின் மகளான தேன்மொழி லண்டனில் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். இங்கே நுங்கம்பாக்கத்திலும் கிளை நிறுவனம் இருக்கிறதாம். இவர் மூலம்தான் கொரோனா தொடர்பான ரேபிட் கிட்டை, அதிக விலை கொடுத்து தமிழக அரசுக்காக வாங்கினார்களாம். இதுபோல் அந்தத் துறையில் நடந்த 500 கோடி ரூபாய் அளவிலான ஊழல்களுக்கும் அவர்தான் வாசலாக இருந்தாராம். இது தொடர்பான புகார்களும் டெல்லிக்குப் போனதால்தான், டெல்லி விஜயபாஸ்கர் மீது ஏக காட்டமாக இருக்கிறதாம்.''

""அடுத்த மேட்டர்?''

""காங்கிரஸில் இருந்து வெளியேறி, ரஜினியின் புதிய கட்சியில் சேரக் காத்திருந்த கராத்தே தியாகராஜனின் மூவ் பற்றி போன முறை பேசிக்கிட் டோம். 25-ந் தேதி தன் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட் டிய அவர், இந்த தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிப்பதுன்னு முடிவு செஞ்சிருக்கேன். நான் சேரப்போவது எந்தக்கட்சி என்பதை விரைவில் சொல்கிறேன்ன்னு சொல்லியிருக்கார். ரஜினி மக்கள் மன்ற மா.செ.க்கள் சிலரும் அவரைத் தொடர்பு கொண்டு பேசிக்கிட்டு இருக்காங்கலாம்.''

""நான் ஒரு தகவலைச் சொல்றேம்ப்பா.. காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் புரோக்கர்கள் நடமாட்டம் இருப்பதாக, சமீபத்தில் நாம பேசி, நக்கீரனிலும் வந்திருந்தது. அது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் ஊடகத்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான கோபண்ணா எழுதியுள்ள மறுப்பு கடிதத்தில், ‘50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியில், நிர்வாகிகள் நியமனத்திற்காக கரன்ஸி விளையாடுவதாகக் கூறுவது, மிகப்பெரிய நகைச்சுவையாகவே எனக்கு தோன்றுகிறது. காங்கிரஸில் இருப்பதே ஒரு தியாகம்தான்’ என்று தெரிவித்திருப்பதோடு, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நிர்வாகிகள் நியமனத்தில் பணமும் விளையாடவில்லை, புரோக்கர்களும் இல்லைன்னு திட்டவட்டமா மறுப்பு தெரிவிச்சிருக்காரு.''

""தலைவரே... ஏர் இந்தியா நிறுவனத்தில் பி.கே.சம்பத் என்பவர், கடந்த 28 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் விமான நிலைய பயணிகள் லக்கேஜ் பிரிவில் மூத்த உதவியாளராக இருக்கிறார். இவர் வரும் 31-ந் தேதி ஓய்வுபெற இருக்கும் நிலையில் தான், அவர் போலி வயதுச் சான்றிதழ் கொடுத்து, கூடுதலாக 8 ஆண்டு கள் வரை இவர் பதவியில் நீடித்திருக்கிறதா புகார் தெரிவிக்கப்பட்டிருக்கு. அந்த வகையில் ஏறத்தாழ ரூ.50 லட்ச ரூபாய் வரை இவருக்கு சம்பளமா கிடைச்சிருக்கு. பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு இவர் நெருக்கம். அதனால நடவடிக்கை இல்லாமல் காப்பாற்றப்படுவதா புகார் தெரிவிச்சவங்க சொல்றாங்க. சம்பத் தரப்போ அது பொய்யான புகார்னு சொல்லுது.''

""ம்...''

""தலைவரே, நான் அடுத்த மேட்டருக்கு வர்றேன்.… தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு மூன்றாம் முறையாக பணி நீட்டிப்பு கொடுக்க எடப்பாடி ஆசைப்படுகிறார். ஆனால் அவர் மீதான ஊழல் புகார்களால் டெல்லியில் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் அவரை, தேர்தலில் களமிறக்க நினைக்கிறாராம் எடப்பாடி. அவரைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து, நிதியமைச்சர் ஆக்கப்போவதாகவும் அவருக்கு எடப்பாடி உறுதி கொடுத்திருக்கிறாராம். அ.தி.மு.க ஆதரவு மனப்பான்மை கொண்ட இன்னும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சசிகலா தரப்பிடம் நட்பு பாராட்டி வருகிறார்களாம்.''

rang

""தலைமைச்செயலாளர் பெயர் அடிக்கடி விவகாரத்தில் சிக்குதே?''

""அது சம்பந்தமா ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் ஒரு லாபி ஓடிக்கிட்டு இருக்குது. அதோடு, சென்னை போரூரில், மகரிஷி வித்யா மந்திர் என்ற கல்விக் குழுமத்துடன் இணைந்து, தலைமைச் செயலாளர் சண்முகம் தரப்பு, ஒரு சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறதாம். அந்தப் பள்ளிக்கான இடம், தமிழக அரசுக்கு உணவுப்பொருட் களை கண்ட்ராக்ட் அடிப்படையில் விநியோகித்துவரும் கிறிஸ்டிஃபுட் உரிமையாளர்களின் பெயரிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிளை டெண்டர் அடிப்படையில் விநியோகித்து வரும் சைக்கிள் ரவி உள்ளிட்டவர்கள் பெயரிலும் இருக்கிறதாம். இப்படி நிறைய புகார்கள் டெல்லி வரை போயிருக்குதாம்.''

""இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக சென்னை துறைமுகத்தில் தன் நண்பர்களுக்கு விருந்து வைத்து விழா கொண்டாடி இருக்கிறாரே?''

""ஆமாங்க தலைவரே, எண்ணூர் துறைமுகக் கழகத்தின் சேர்மனாக இருக்கும் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ். அண்மையில் துறைமுகத்தில் சூப்பரான டின்னர் கொடுத்து அசத்தியிருக்கிறார். அந்த டின்னரில், மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும். அதனால் யாரும் அவசரப்பட்டு வேறு வகையிலான முடிவுகளை எடுக்காதீர்கள். அவர் களையே ஆதரியுங்கள்னு அட்வைஸும் செய்தாராம்.''

""ஆனாலும் ஆட்சி மாறும் என்ற எதிர்பார்ப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டாலினை சந்திக்கிறாங்களாமே?''

""ஆமாம்... தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலம் முடிவதால், கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்.தான் அடுத்த தலைமைச் செயலாளர் என்று கோட்டை வட்டாரத்தில் டாக் அடிபடுது. அவர் அண்மையில் ஐ.டி. நிறுவன தொழிலதிபரான ஆறுமுகத்தின் உதவியுடன் மு.க.ஸ்டாலினை ரகசியமாக சந்திச்சதா கோட்டையில் பேச்சு அடிபடுது. அடுத்த தலைமைச் செயலாளராகும் வாய்ப்பு தனக்கிருப்பதால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் அதே பதவியில் நீடிக்க அனுமதிக்கணும்னு அவர் சொன்னதுக்கு தி.முக. தரப்பிடமிருந்தும் பாசிட்டிவ் பதில் கிடைச்சிருக்குதாம். இதேபோல் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தரப்பிடம் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நட்பு பாராட்டி வருவதோடு, சாதகமான சில காய் நகர்த்தல்களிலும் ஈடுபட்டு வருகிறார்களாம்.''

""புதிய தலைமைச் செயலாளர் நியமனம் பற்றி நான் ஒரு தகவல் சொல்றேன். மத்திய அரசுப் பணியிலிருந்த தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் ரஞ்சன் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக அரசுப் பணிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இவர் புதிய தலைமைச் செயலாளர் ஆவார் என்பதுதான் லேட்டஸ்ட் டாக். ஆர்.எஸ்.எஸ். சிபாரிசாம்.''