காராஷ்டிர தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்தே தேர்தலில் சில மேட்ச் பிக்ஸிங் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அழுத்தமாகக் குற்றம் சாட்டியதோடு எப்படியெல்லாம் தேர்தல் நடைமுறையில் ஆளும்கட்சி செல் வாக்கு செலுத்தியது என்பதை விவரித்திருந்தார். தற்போது அமெரிக்காவில் 2024-ல் நடந்த தேர்தலிலும், வாக்கு எண்ணிக்கையிலும் எந்திரத்திலும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலில் ராகுலின் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம். தேர்தல் கமிஷனரை நியமிப்பதற் கான சட்டத்தைத் திருத்தியது பா.ஜ.க. முன்பு இந்த தேர்வுக் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்றிருந்ததை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஒரு கேபினட் அமைச்சர் என திருத்தம் செய்தது. இம்முறை பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று மாற்றியது. மூன்றில் இருவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகிவிட எதிர்க்கட்சித் தலை வரின் ஆட்சேபனைகள் பொருளற்றதாகி விடு கின்றன.

ss

இரண்டாவதாக, வாக்காளர் பட்டி யலை போலி வாக்காளர் களால் நிறைத் தல். 2019 நாடாளுமன் றத் தேர்தலின் போது மகா ராஷ்டிர வாக்காளர் எண்ணிக்கை 8.98 கோடி. ஐந்து வருட இடைவெளியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 9.29 கோடியானது. ஐந்து வருட இடைவெளியில் 31 லட்சம் வாக்காளர்களே அதிகரித்திருந்தனர். ஆனால் அடுத்த ஐந்து மாதங்களில் மட்டும் 41 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆக, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 9.70 கோடி. மகாராஷ்டிர அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கணக்கின்படி அம்மாநிலத்திலுள்ள வயதுவந்தோரின் எண்ணிக்கை 9.54 கோடி. மிச்சமுள்ள 16 லட்சம் பேர் எங்கிருந்து வந்தனர்?

மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணிக்கு மேல் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கிட்டத்தட்ட 76 லட்சம் வாக்காளர்கள் 5 மணிக்குமேல் வாக்களித்திருக் கிறார்கள். முந்தைய தேர் தல்களில் எல்லாம் இதுபோல் நடை பெறவில்லை. கடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ.க. மோச மாக வாக்குகள் வாங்கிய 85 தொகுதிகளைச் சேர்ந்த 12,000 பூத்துகளில்தான் 5 மணிக்கு மேலான வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதாவது இந்த பூத்துகளில் 5 மணிக்கு மேல் சராசரியாக ஒரு பூத்தில் 600 பேர் வாக்களித்திருக்கின்றனர். ஒருவர் வாக்களிக்க 1 நிமிடம் என்றாலும்கூட, இங்கெல்லாம் கூடுதலாக 10 மணி நேரம் தேவை. ஆனால் இந்த 11,000 பூத்துகளில் எங்கேயுமே கூடுதலாக 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடை பெறவில்லை என தர்க்கங்களுடன் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் முழுமையான, தர்க்கப்பூர்வமான பதில் எதுவும் தரவில்லை. இதனைச் சரிசெய் யாமல், தேர்தல் நடத்தினால் மகாராஷ்டிராவில் நடந்ததே பீகாரிலும் நடக்கும் எனவும் விமர்சனம் வைத்திருக்கிறார் ராகுல்.

ராக்லேண்ட் கவுண்டியின் 2024 தேர்தல் முடிவுகளில் துல்லியம் இல்லையெனத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க நியூயார்க் உச்சநீதிமன்ற நீதிபதி அனுமதியளித்துள்ளார். ஸ்மார்ட் லெஜிஸ்லேஷன் என்ற தேர்தல் தொடர்பான அமைப்பு தாக்கல்செய்த இந்த வழக்கு, ஜனாதிபதி மற்றும் அமெரிக்க செனட் வாக்கு எண்ணிக்கைகள் இரண்டும், கடுமை யான முறைகேடுகளைக் காட்டுகின்றன என்று குற்றம்சாட்டுகிறது.

"இந்த ஒரு வழக்கில் கிட்டத்தட்ட 50% வாக்குகள் மாறியுள்ளன'' என்று ஸ்மார்ட் லெஜிஸ்லேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான லுலு ஃப்ரைஸ்டாட் கூறுகிறார். "செனட் முடிவுகள் தவ றானவை என்பதற் கான தெளிவான சான்றுகள் உள்ளன, மேலும் ஜனாதி பதி தேர்தல் முடிவு கள் தவறாக இருந்தால், அது 2024 ராக்லேண்ட் கவுண்டி பொதுத் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு நபரின் அரசியலமைப்பு உரிமை களையும் மீறுவதாகும்'' என அவர் வாதிட்டார்.

தேர்தல் முறைகேடுகள் வேறு இடங்களி லும் பதிவாகியிருந்தாலும், ராக் லேண்ட் மாவட்டமே நீதிமன்றத்தில் முறையாக வழக்குத் தொடுத்த முதல் மாவட்டமாகும். நெவாடாவின் கிளார்க் கவுண்டி, பென்சில்வேனியா வின் சில பகுதிகளிலும் இதேபோன்ற பிரச் சினைகள் எழுந்தன. அங்கு வெடிகுண்டு மிரட் டல்கள் மற்றும் இயந்திரச் செயலிழப்புகள் வாக்களிப்பைச் சீர்குலைத்தன.

இதேபோல அமெரிக்கத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் 40 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குப்பதிவு எந்தி ரங்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளது. இயந்திரங்களைப் பரிசோதனை செய்து சான்றளிக்க ஒரு தனியார் நிறுவனம் நியமிக்கப் பட்டது. புரோ வி.வி. நிறுவனம் தேர்தல் மென் பொருள் உள்ளிட்ட அனைத்தையும் கட்டுப் பாட்டில் வைத்திருந்தது. வாக்குகள் காணாமல் போனது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கமலா ஹாரிஸ் மற்றும் பிற வேட்பாளர் களுக்கான வாக்குகள், வாக்குப்பதிவு இயந் திரங்களால் சரியாக எண்ணப்படவில்லை. 2024 தேர்தலில் பதிவான வாக்குகளை முழு மையாக மறுஎண்ணிக்கை செய்யவேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது. அடுத்த விசாரணையை செப்டம்பர் 22, 2025 அன்று நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி மேலும் தெரியவரலாம்.

இந்தியாவைத் தொடர்ந்து, அமெரிக் காவிலும் தேர்தல் தில்லுமுல்லு குற்றச் சாட்டு எழுந்துள் ளது... உலக அளவில் அதிர்ச்சி அலை களை எழுப்பி யுள்ளது.

Advertisment