தி.மு.க. தலைமைக்கு எச்சரிக்கை மணியடிக்கும் ராஜபாளையம்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/electionground1-2026-02-19-17-28-01.jpg)
ராஜபாளையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது எடுத்த புகைப்படம் ஒன்றைக் காட்டி, “"இந்தக் கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் இருக்கிறார். கூட்டணிக்கட்சியினர் தங்களது கொடிகளை ஏந்தி நிற்கின்றனர். ஆனால், அந்தக் கொடிகளுக்கு மத்தியில் தி.மு.க. கொடி எதாவது இருக்கிறதா? ம.தி.மு.க. கொடியை தி.மு.க. கொடின்னு தப்பா நினைச்சிடாதிங்க'' என்று குமுறலுடன் பேசியது ஓர் உடன்பிறப்பு. காரணத்தை விசாரிக்கையில், "மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்னு தலைமை நினைச்சுட்டு இருக்கு... ஆனால் ராஜபாளையத்தில் நிலைமை தலைகீழ். இங்க 200 ரூபா கொடுத்து கூட்டத்துக்கு கூப் பிட்டாலும், போஸ்டர்ல 600 பேருக்கு மேல பெயர் போட்டாலும்கூட பெரும்பாலான வர்கள் வராமல், கூட்டத்தில் போடப் பட்ட நாற்காலிகள் பெரும்பாலும் காலியாத்தான் இருக்கு. எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கட்சிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்களின் நிலை இன்றளவும் மாறாமலிருக
தி.மு.க. தலைமைக்கு எச்சரிக்கை மணியடிக்கும் ராஜபாளையம்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/electionground1-2026-02-19-17-28-01.jpg)
ராஜபாளையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது எடுத்த புகைப்படம் ஒன்றைக் காட்டி, “"இந்தக் கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் இருக்கிறார். கூட்டணிக்கட்சியினர் தங்களது கொடிகளை ஏந்தி நிற்கின்றனர். ஆனால், அந்தக் கொடிகளுக்கு மத்தியில் தி.மு.க. கொடி எதாவது இருக்கிறதா? ம.தி.மு.க. கொடியை தி.மு.க. கொடின்னு தப்பா நினைச்சிடாதிங்க'' என்று குமுறலுடன் பேசியது ஓர் உடன்பிறப்பு. காரணத்தை விசாரிக்கையில், "மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்னு தலைமை நினைச்சுட்டு இருக்கு... ஆனால் ராஜபாளையத்தில் நிலைமை தலைகீழ். இங்க 200 ரூபா கொடுத்து கூட்டத்துக்கு கூப் பிட்டாலும், போஸ்டர்ல 600 பேருக்கு மேல பெயர் போட்டாலும்கூட பெரும்பாலான வர்கள் வராமல், கூட்டத்தில் போடப் பட்ட நாற்காலிகள் பெரும்பாலும் காலியாத்தான் இருக்கு. எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கட்சிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்களின் நிலை இன்றளவும் மாறாமலிருக் கிறது. ஆனால், அதிகாரம் பெற்ற சிலர் மட்டும் சொகுசான வாழ்க்கையில் திளைத்துவருகின்றனர். கட்சிக்குள் சுமார் 15 சதவீதம் பேர் அதிகார வட்டத்தைச் சுற்றிநிற்கும் நிலையில், மீதமுள்ள 85 சதவீத தொண்டர்கள் மனவேதனையுடன் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதேநிலை தொடரு மானால், “நாம ஏன் இவங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?”என்ற கேள்வி வாக்குப்பதிவு நாளில் தீர்ப்பாக மாறும்'' என்கிறார்கள். ராஜபாளையம், தி.மு.க., தலைமைக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது.
-ராம்கி
காஞ்சிபுரம் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
கோயில் நகரமான காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட தி.மு.க. - அ.தி. மு.க. தரப்பில் பலத்த போட்டி நிலவுகிறது. அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் இரண்டு முறை காஞ்சிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் தொகுதியை மாற்றி உத்திரமேரூர் தொகுதி இவ ருக்கு வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. வேட்பாளர் க.சுந்தர் நான்காவது முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். அணிக்கு சென்ற ரஞ்சித்குமார் என்பவர் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பிரித்ததால் சோமசுந்தரம் தோல்வியடைந்தார், இதில் உத்திரமேரூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான வாலாஜாபாத் கணேச னுக்கும் இவருக்குமான பனிப்போரால் கணேசனுக்கு சீட்டும் வழங்கப்படவில்லை. இதுவும் கடந்த தேர்தல் தோல்விக்கான காரணத் தில் ஒன்றாக இருந்தது. இந்நிலையில், ஓ.பி.எஸ். அணியிலிருந்த ரஞ்சித்குமார், தற்போது புதியதாக உதயமாகவுள்ள பண்ருட்டி ராமச்சந்திரனின் கட்சியில் நிர்வாகிகளுடன் சேரப்போவதாகத் தெரிவித்துள்ளார். தற்போது சோமசுந்தரத்திற்கு காஞ்சிபுரம் தொகுதி உறுதியான நிலையில், "அ.தி. மு.க. கூட்டணியிலுள்ள பா.ம.க.வின் மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் கடந்த தேர்தலில் பெரும் பணத்தை செலவு செய்து தோல்வியடைந்தார். இந்த முறை மகேஷுக்கு சீட்டு வழங்க வேண்டும்'' என்று சோமசுந்தரத்தின் எதிர்கோஷ்டியும், தி.மு.க.வை சேர்ந்த சில நிர்வாகிகளும் அழுத்தம் தருவதாக செய்திகள் பரவுகின்றது.
-அரவிந்த்
வேட்பாளராக வாசலை மாற்றியமைத்த டாக்டர்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/electionground2-2026-02-19-17-28-31.jpg)
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்த நிலையிலும்கூட கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றிபெற்றார். அப்பொழுது தி.மு.க. சார்பில் வேட்பாளராகக் களமிறங்கி 1740 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றவர் டாக்டர் வரதராஜன். இந்த முறை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகத் தன்னை தி.மு.க. களமிறக்கும் நம்பிக்கையில் சீட்டிற்காக அலைந்து வருகிறார். அதுபோக, கேரளாவிலிருந்து நம்பூதிரிகளை வரவழைத்து ஹோமம் வளர்த்தவர், அவர்கள் சொன்னபடி, இதுநாள்வரை இருந்த வீட்டின் தெற்கு வாசலை மூடிவிட்டு கிழக்கு வாசலை திறந்துள்ளார். அவருடைய நம்பிக்கை நடக்குமா? வீண் போகுமா? என்பது சட்டமன்ற வேட்பாளர் அறிவிப்பில் தெரியவரும்!
-நாகேந்திரன்
போலி முத்திரைத்தாள் வழக்கில் அ.தி.மு.க. வேட்பாளர்?!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/electionground3-2026-02-19-17-28-47.jpg)
2016போல் இந்த முறையும் தனக்குத் தான் குன்னூர் சட்டமன்ற வேட்பாளராக வாய்ப்பென்று குன்னூர் முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு காத்திருக்க, அவர்மீது பதியப்பட்ட முத்திரைத்தாள் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் திலீப், தனது குடும்பச் சொத்தை முத்திரைத்தாள் திருத்தம் செய்து அபகரித்து விட்டதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாள ரிடம் புகாரளித்திருந்தார். அதன்படி, கோத்தகிரி காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணையில், முன்னாள் அ.தி.மு.க. குன்னூர் எம்.எல்.ஏ. ராமு, அவருடைய சகோதரர் ராஜன் மற்றும் ராஜ்குமார், ராஜூ, லிங்கியம்மாள், தீபு, திலீப், ரஞ்சித் ஆகியோர் உதகையிலுள்ள முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் ரூ.50 மதிப்புள்ள முத்திரைத் தாள்களை 2012ஆம் ஆண்டு வாங்கி, 2006, 2010 எனத் திருத்தம் செய்து போலியான ஆவணங்களை தயாரித்தனர். இதுதொடர்பாக கோத்தகிரி காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,குன்னூரில் அ,தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்க ஆயத்தமான சாந்தி ராமு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பேசப்பட்ட அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனை நாடியுள்ளதாக தகவல்.
-வேகா
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us