விசில் சத்தத்துக்கு தடை! சிவகங்கை கவுன்சிலரின் ஐடியா!
த.வெ.க.வின் சின்னமாக விசில் அறி விக்கப்பட்ட நாளிலிருந்து விசில் பேசுபொருளானாது. இதில் விசில் சத்தத்தை முதலில் தடை செய்தது சென்னை சேப்பாக்கம் மைதானம். குறிப்பாக, 2026, டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றபோது விசிலை ரசிகர்கள் கொண்டுவரத் தடை விதித்தது. இந்த தடை தொடரும் என சென்னை சேப்பாக்கம் மைதான நிர்வாகம் அறிவித்த வேளையில், நாமும் விசிலை தடைசெய்து பார்ப்போமா? என்றெண்ணிய சிவகங்கை நகராட்சி 21வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அயூப்கான், அதற்காக நூதன முறையை கையாண்டது பேசுபொருளாகியுள்ளது. தன்னுடைய வார்டுகளுக்கு உட்பட்ட 18 தெருக்களிலும் குப்பை சேகரிக்கும் பொருட்டு, இனி நீங்கள் விசிலை பயன்படுத்த வேண்டாம் எனக் குப்பை சேகரிப்பு விழிப்புணர்வு பாடல் அடங்கிய ஒலிப்பானை கொடுத்து, "குப்பை சேகரிக்கும்போது இப்பாடலை ஒலிபரப்புங்கள்'' என்று நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஒலிப்பான்களை இலவசமாகக் கொடுத்து, விசில் சத்தத்தை கேட்கவிடாமல் செய்துள்ளார் அயூப்கான். இது தி.மு.க. தலைமை வரைக்கும் சென்று பாராட்டை வாங்கிக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-வேகா
தொழிலதிபரை மிரட்டிய ஆளும்கட்சி ஒ.செ! கடுப்பான எம்.பி!
10 கோடி ரூபாய் கையில் வைத்திருந்தால் சீட் கேளுங்கள் என ஆளுங்கட்சி தலைமை சொல்லியுள்ளது. ஆரணியில் செவாலியர் பெயரிலுள்ள மாடர்ன்ஸ் ரைஸ் உ
விசில் சத்தத்துக்கு தடை! சிவகங்கை கவுன்சிலரின் ஐடியா!
த.வெ.க.வின் சின்னமாக விசில் அறி விக்கப்பட்ட நாளிலிருந்து விசில் பேசுபொருளானாது. இதில் விசில் சத்தத்தை முதலில் தடை செய்தது சென்னை சேப்பாக்கம் மைதானம். குறிப்பாக, 2026, டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றபோது விசிலை ரசிகர்கள் கொண்டுவரத் தடை விதித்தது. இந்த தடை தொடரும் என சென்னை சேப்பாக்கம் மைதான நிர்வாகம் அறிவித்த வேளையில், நாமும் விசிலை தடைசெய்து பார்ப்போமா? என்றெண்ணிய சிவகங்கை நகராட்சி 21வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அயூப்கான், அதற்காக நூதன முறையை கையாண்டது பேசுபொருளாகியுள்ளது. தன்னுடைய வார்டுகளுக்கு உட்பட்ட 18 தெருக்களிலும் குப்பை சேகரிக்கும் பொருட்டு, இனி நீங்கள் விசிலை பயன்படுத்த வேண்டாம் எனக் குப்பை சேகரிப்பு விழிப்புணர்வு பாடல் அடங்கிய ஒலிப்பானை கொடுத்து, "குப்பை சேகரிக்கும்போது இப்பாடலை ஒலிபரப்புங்கள்'' என்று நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஒலிப்பான்களை இலவசமாகக் கொடுத்து, விசில் சத்தத்தை கேட்கவிடாமல் செய்துள்ளார் அயூப்கான். இது தி.மு.க. தலைமை வரைக்கும் சென்று பாராட்டை வாங்கிக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-வேகா
தொழிலதிபரை மிரட்டிய ஆளும்கட்சி ஒ.செ! கடுப்பான எம்.பி!
10 கோடி ரூபாய் கையில் வைத்திருந்தால் சீட் கேளுங்கள் என ஆளுங்கட்சி தலைமை சொல்லியுள்ளது. ஆரணியில் செவாலியர் பெயரிலுள்ள மாடர்ன்ஸ் ரைஸ் உரிமையாளரை தொடர்புகொண்டு "தேர்தல் நிதி தா' என பணம் கேட்டு மிரட்டியுள்ளார் ஆரணி தொகுதியிலுள்ள ஆளும்கட்சி ஒ.செ. ஒருவர். அந்த தொழிலதிபரோ, "சீட் வாங்கிக்கிட்டு வாங்க பார்த்து செய்யறேன்" என்றுள்ளார். "இப்பவே வேண்டும், எனக்குத்தான் சீட்'' எனச் சொல்லி அவரிடம் எடக்குமடக்காக பேசியுள்ளார். இதில் கடுப்பாகி நேரடியாக சி.எம். தரப்புக்கு புகாரை தட்டிவிட்டுள்ளார், இதுபற்றி மா.செ.வும், எம்.பி.யுமான தரணிவேந்தனிடம் கேட்டுள்ளது தலைமை. அவர் அதிர்ச்சியாகி சம்பந்தப்பட்ட ஒ.செ.வை அழைத்து லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். என்னை மன்னிச்சிடுங்கண்ணே என டெல்லிக்கு சென்று மன்னிப்பு கேட்டதாக கூறுகின்றனர் கட்சி நிர்வாகிகள்.
-கிங்
"காங்கிரஸ்ல ஒருத்தர் 2 பேர் இருந்துகிட்டு..." ராஜ.கண்ணப்பனின் சர்ச்சை பேச்சு!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/election1-2026-02-12-16-38-17.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் "தமிழ்நாடு தலைகுனியாது!' என்ற தலைப்பில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் கலந்துகொண்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது."சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த இயக்கம் தி.மு.க. இனி தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது. 67வரைக்கும் காங்கிரஸ் இருந்தது, அப்பறம் வரமுடியல. இனி வர முடியுமா? காங்கிரஸ்ல ஒருத்தர் 2 பேர் இருந்து உயிர வாங்கிட்டு இருக்காங்க. கூட்டணியில இருக்காங்க, சொன்னா கோவிச்சுக்குவாங்க. அதை தலைவர் பார்த்துக்குவார். ஒரு கல்யாண நிகழ்ச்சி யில் செல்வப்பெருந் தகையை பார்த்தேன். என்ன செய்றது, கூட் டணியில இருக்கோம்னு போட்டோவுக்கு போஸ் கொடுக் கிறோம். தி.மு.க. கூட்டணியில், கூட் டணி ஆட்சி இல் லை. கலைஞர் 110 சீட்டு ஜெயிச்சப்பவும் தனிச்சுதான் ஆட்சி அமைச்சார். அமைச்சர்களும் கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை. வி.சி.க.காரர்கள் வேலை கேட்டால் வாங்கிக் கொடுக்கிறோம். உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறோம். ப.சிதம்பரம் மீது நான் போட்ட தேர்தல் வழக்கை முதல்வர் சொன்னதால் நிறுத்தி வைத்திருக்கிறேன்'' என்று காங்கிரஸ் குறித்து அவர் பேசியது சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
-இரா.பகத்சிங்
பா.ஜ.க. மகளிரணி தலைவி தற்கொலை முயற்சி! பின்னணியில் எக்ஸ்?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/election2-2026-02-12-16-38-32.jpg)
"மாவட்ட தலைவர் பாண்டித்துரை ஓவர் டார்ச்சர் கொடுக்கிறார். மாவட்டப் பொறுப்பி லிருக்க எனக்கு தகுதி இல்லையா? எனது சொந்த செலவில் அனைத்தையும் பார்த்தேன். அவர் சொன்ன ஒரு விசயத்தைக் கூட தட்டவில்லை, காலையில் போன் செய்து "நான் தலைவரா.? உன் புருசன் தலைவரா? மகளிர் நிர்வாகியை மட்டும் போட்டு போஸ்டர் அடித்தது தப்பு. எப்படி போட்டாய்?' எனக்கூறி பிரச்சனை செய்து மன உளைச்சல் செய்கிறார். மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் செய் எனக் கூறினார். பின்னர் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்து எனக் கூறினார். எனக்கு ஒன்றரை லட்சம் செலவு. எனது சாவுக்கு பாண்டித்துரைதான் காரணம்'' என மாநில மகரளிரணித் தலைவியிடம் போனில் கூறிவிட்டு, ஆடியோ பேசியும், கடிதம் எழுதி வைத்துவிட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ராஜேஸ்வரி. மாவட்டத்தலைவர் பாண்டித்துரை யோ, "காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடக் காத்திருந்த நிலையில் என்னை வீழ்த்த இதுபோல் நடக்கிறது'' என்கிறார். இது இப்படியிருக்க, எக்ஸ் எம்.எல்.ஏ. ஒருவர் அனைத்து செய்தியாளர்களுக்கும் இவ்விவகார ஆடியோ வையும், தற்கொலை கடிதத்தையும் அனுப்பியது தெரிந்து, அவரையும் விசாரிக்கத் தொடங்கியுள் ளது காவல்துறை!
-நாகேந்திரன்
சீட்டுக்காக கெடா வெட்டு! ஆரணி அலப்பறை!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/election3-2026-02-12-16-38-50.jpg)
திருவண்ணாலை மாவட்டம் ஆரணி தொகுதியில் கடந்த முறை தி.மு.க.வை சேர்ந்த ஆரணி ஒ.செ. அன்பழகன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்வியுற்றாலும் தொகுதிக்கு நான்தான் பொறுப்பாளரென்று வலம்வந்தார். அவருடன் ஒ.செ. துரை.மாமது, ஒ.செ. சுந்தர் இருவரும் இடதும் வலதுமாக வலம் வந்தார்கள். ஆரணி நகரமன்றத் தலைவர் மணி ஒரு கோஷ்டியாக செயல்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் தி.மு.க. தோல்வியடைந்துவருகிறது. 2026-ஆவது வெல்ல வேண்டுமென நினைக்காமல், தங்களை வளப்படுத்துவதில் மட்டும் நிர்வாகிகள் கவனமாக இருந்தனர். இதுதொடர்பாக பலமுறை பஞ்சாயத்து, அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மா.செ. தரணி வேந்தன் எம்.பியிடம் நடந்தன. இருந்தும் மாற்ற மில்லை. கோஷ்டிப்பூசலும் குறையவில்லை. இத னால் தொகுதியின் பொறுப்பாளராக தரணிவேந் தனை நியமித்தார் அமைச்சர் வேலு. இந்நிலையில், ஒ.செ.க்கள் அன்பழகன், துரை.மாமது, சுந்தர், கண்ணமங்களம் பேரூர் செயலாளர் கோவர்த் தனன், ஆரணி நகரமன்றத் தலைவர் மணி, ந.செ. மணிமாறன் என முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆரணி சீட் வாங்க முயற்சிக்கின்றனர். சீட் வேண்டுமென்பதற்காக கோவில் கோவிலாக சென்று பூஜை செய்துவருகின்றனர். வாஸ்து நிபு ணர் ஒருவரிடம் ஒ.செ. அன்பழகன் ஆலோசனை கேட்க, புதியதாக கட்டப்பட்ட வீட்டை ஆல்ட்ரேஷன் செய்யுங்கள், குலதெய்வத்துக்கு கெடாவெட்டி பொங்கல் வையுங்கள் எனச்சொல்ல, அவற்றைச் செய்துள்ளாராம்.
-ராஜா
மாங்கனி நகர அ.தி.மு.க.வில் கலகக்குரல்!
சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க.வில் கட்சிப் பணிகளை மேற்பார்வையிட எடப்பாடியால் நியமிக்கப்பட்ட மொரப்பூர் தொகுதி அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. சிங்காரத்தின் அட்ராசிட்டியால் கடுப்பிலிருக்கிறார்கள் மாங்கனி நகர் அ.தி.மு.க.வினர். சிங்காரம் பொறுப்பேற்ற பிறகு, மா.செ.வான மாஜி எம்.எல்.ஏ. வெங்கடா சலத்தை நீக்கியதோடு, எம்.கே.செல்வராஜ், ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோரை சேலம் மாநகர பொறுப்பாளர்களாக நியமித்தார். இரண்டே மாதங்களில், செல்வராஜை தூக்கிவிட்டு, மொத்த பொறுப்பையும் பாலுவிடம் ஒப்படைத்தார். 60 வார்டுகளையும் துண்டுதுண்டாக உடைத்து, நண்டு சிண்டுகளை வார்டு செயலாளர்களாக நியமித்தார். சேலம் தெற்கு சிட்டிங் எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியத் தையே வார்டு செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கினார். இதில் கடுப்பான ர.ர.க்கள், அ.தி.மு.க. கோட்டையான சேலம் தெற்கு, சேலம் மேற்கு தொகுதிகளை நாங்களே தகர்த்தெறிந்து, சிங்கா ரத்தின் அட்ராசிட்டிக்கு எதிர்ப்பைக் காட்டுவோம் என்கிறார்கள். சிலரோ, தி.மு.க., த.வெ.க. பக்கம் கரையொதுங்க நாள் பார்க்கிறார்கள்!
-இளையராஜா
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us