ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரான மெய்யநாதன், கடந்த ஆண்டு, தொகுதியிலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு அண்டாவும், தென்னங்கன்றும் வழங்கினார். "இது, தொகுதி மக்களுக்கு நான் கொடுக்கும் அன்புப்பரிசு'' என்றார். இதேபோல் இந்த ஆண்டு என்ன பொங்கல் பரிசு வழங்கு வாரென்ற எதிர்பார்ப்புடன் தொகுதி மக்கள் இருக்கிறார்கள்.
திருமயம் சட்டமன்றத் தொகுதியி லுள்ள ஒவ்வொரு கிராமத்திலும், தன் மகன் டாக்டர் அண்ணாமலையை வைத்து மருத்துவ முகாம், கிராமங்கள் தோறும் அன்னதானம் நடத்திவரும் அமைச்சர் ரகுபதி, தற்போது, ஒவ்வொரு குடும்பத்திற் கும் ஒரு எவர்சில்வர் அண்டா பரிசாக வழங்கிவருகிறார்.
கடந்த 2021, சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பொங்கலுக்கு, தனது விராலிமலை தொகுதியிலுள்ள அனைத்து குடும்பங்களுக் கும் வெண்கல பொங்கல் பானை, பொங்கல் பொருட்கள், அரிசி ஆகியவற்றை வழங்கினார் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இந்த ஆண்டுக்கு காலண்டர் மட்டும் வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில் எவர்சில்வர் பொங்கல் பானையுடன் பொங்கல் பொருட்க ளும், இனிப்பும் வழங்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
அதேபோல, விராலிமலை தொகுதியில் கடந்த 2 முறை தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்ற பழனியப்பன், வரும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு வழங்கவுள்ளதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியை தொடர்ந்து திருமயம், விராலிமலை ஆகிய தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசுகள் கிடைத்தபோதும், புதுக் கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை தொகுதி மக்களுக்கு எந்த பரிசும் இல்லையா என்ற ஏக்கம் அந்த தொகுதி மக்களிடம் உள்ளது.
இதுகுறித்து விபரமறிந்தவர்கள் கூறும்போது, "புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள இந்த 3 தொகுதியிலும் தாங்கள் தான் வேட்பாளர்கள் என்பது நன்றாகத் தெரிந்துவிட்டதால் இப்போதே தொகுதி மக்களை கவர பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். மற்ற தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பம் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் உள்ளதால் தான் யாரும் எதுவும் கொடுக்கவில்லையோ என்ற பேச்சு உள்ளது'' என்றனர்.
சமீபத்தில், துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி நகரில் எவர்சில்வர் அண்டாக் கள் வழங்கப்பட்டதுபோல திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் சக்கரபாணியும் எவர்சில்வர் அண்டாக்களை வழங்கியிருக்கிறார். தேர்தல் நேரம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் பொங்கல் பரிசுகள் தாராளமாகக் கொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு என்ன பொங்கல் பரிசு தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடமும், எதிர்கட்சி களிடமும் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/electiongift-2025-12-29-17-04-03.jpg)