ஓ.பி.எஸ். மூன்று லட்சம் தரணும்! போஸ்டர் பரபரப்பு!

election2

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்புவனத் தை சேர்ந்த சிங்.செல்வராஜ், அ.தி.மு.க. பேரூர் செயலாளராகவும், திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். தற்போது ஓ.பி.எஸ். தி.மு.க.வில் சேர்ந்துள்ள நிலையில், செல்வராஜ், "முன்னாள் முதல்வர் என்னிடம் வாங்கிய கடனை இன்னாள் முதல்வர் வாங்கித் தருவாரா?' என்கிற வாசகங்களோடு கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், "திருப்புவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம், பட்டுப்புடவை உற்பத்தியில் சிறந்த வடிவமைப்புக்கான ஜனாதிபதி விருது பெற்றது. இதற்காக, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். இருவரையும் சந்தித்து, அவர்கள் உருவம் பதித்த பட்டுப்புடவையை நினைவுப்பரிசாக வழங்கினோம். அதன்பிறகு கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கும் அவர் உருவம் பதித்த பட்டுப்புடவையை நினைவுப்பரிசாக வழங்கவேண்டுமென்றும், அதற்கான பணத்தை கொடுத்துவிடுகிறேன் எனவும் கூறி, பட்டுச்சேலையை ஓ.பி.எஸ். வாங்கி, அதை பிரதமருக்கு பரிசாக வழங்கினார். இதற்கான பணத்தை பல முறை கேட்டும் ஓ.பி.எஸ். கொடுக்கவில்லை. அதான் தற்போது, ஸ்டாலின் அப்பணத்தை பெற்றுத்தர வேண்டும்'' என்கிறார். இதுகுறித்து "தனிப்பட்ட முறையில் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்வதற்காக செல்வராஜ் இப்படி செய்துள்ளார்'' என்கின்றனர் சில நடுநிலை அ.தி.மு.க.வினர்.

Advertisment

விருதுநகர்ல சீட் கேட்கிற தைரியம் இருக்கா?  அச்சமூட்டும் எம்.எல்.ஏ.!

election1

மூன்றாவது முறையாக தி.மு.க. எம்.எல். ஏ.வாக பதவி வகித்துவரும் ஏ.ஆர்.ஆர்.சீனி வாசன், தற்போது நான்காவது முறையாக விருதுநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டுள்ளார். அவரது  அணுகுமுறையும்,  மிரட்டல் கலந்த அரசியல் பாணியும், பலரை அச்சப்பட வைத்திருக்கிறது. சீட் கேட்கும் தைரி யம் பலருக்கும் இல்லை. அப்படியிருந்தும் ராஜகுரு, கிருஷ்ணகுமார் போன்றவர்கள் சீட் கேட்டுள்ளனர். சீனிவாசனுக்கு எதிரான வலு வான போட்டியாளர் உருவாகவில்லை என்று விருதுநகரில் பேச்சு இருந்தாலும், அதுவே அவருக்கான ஆதரவென்று அர்த்தமில்லை. “"வேறு யாரேனும் நின்றால் நாங்கள் ஆதரிப்போம்; ஆனால் இவரே மீண்டும் போட்டியிட்டால் சற்று யோசிப்போம்!'’என்ற முணு முணுப்பு அக்கட்சி வட் டாரத்தில் வெளிப்படுகிறது.  பொதுமக்களுடன் நெருக்கம் குறைவு. குறைகளை நேரில் கேட்கும் பழக்கமில்லை. தொகுதி வளர்ச்சியில் அக்கறையில்லை. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருப்பது அவரின் அரசியல் பலமாகத் தொடர் கிறது. நான்காவது முறையும் வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்பெற்று விடுவாரோ என்ற அரசியல் கணக்கு தென்மண்டல தி.மு.க. வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க்கவும், பேசவும் சாதாரணமாகத் தோன்றும் சீனிவாசனை, கட்சியினரோ ஒரு “"சைலென்ட் டெரர்'’போல பார்க்கிறார்கள்! இப்படியாக முரண்பாட்டின் உருவமாகத் தெரிகிறார் சீனிவாசன். 

Advertisment

"அருந்ததியருக்கு ஒதுக்குங்கள்'-உரிமை முழக்கம்!

சமீபத்தில், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு வருகைதந்து, தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தனர். அருந்ததியர் சமூகங்களை ஒன்றி ணைத்து மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கரூரில், கோவையில் மாநாடுகளை நடத்தினர். ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் திராவிடர் கழகம் மற்றும் திராவிட தமிழர் கழகம் உள்ளிட்ட அமைப்புக்கள். "எம்.ஜி. ஆருக்கு பிறகு அருந்ததிய மக்கள், தலைவராக எண்ணுவது மு.க.ஸ்டாலினையே. ஆதலால், எங்களுக்கு இவ்வளவு தொகுதி கள் வேண்டுமென்பது கட்டாய மல்ல. எங்களுக்கு கொடுத்தது போக, மேற்கு மண்டலத்திலுள்ள பவானிசாகர், அவிநாசி, கிருஷ்ண ராயபுரம், தாராபுரம் மற்றும் வால் பாறை உள்ளிட்ட தனித்தொகுதி களுக்கு அருந்ததியர் சமூக மக்களை வேட்பாளராக நிறுத் துங்கள். இது எங்களின் வேண்டுகோள்" என்கிறார்கள் அருந்ததிய சமூக அமைப்பினர். தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஏறக்குறைய 48 சட்டமன்றத் தொகுதிகளில் அருந்ததிய சமூக மக்கள், வெற்றியை நிர்ணயிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள்..?!

election3

அமெரிக்கா -இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலில்  ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் உலகெமெங்கும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ் வேளையில், "ஈரானில் நடை பெறக்கூடிய ஆட்சி ராணுவ ஆட்சி. அந்த ஆட்சி பெண் களுக்கு எதிராகவும், அங் குள்ள சிறுபான்மையினருக்கு எதிராகவும் கொடூரமான ஆட்சியாக நடக்கிறது'' என்று போகிறபோக்கில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம். அது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, "கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனியை இழிவாகப் பேசி, இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய கார்த்தி ப.சிதம்பரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! இவண்: இஸ்லாமிய இளைஞர்கள், காட்டுத்தலை வாசல், காரைக்குடி' என சுவரொட்டிகளை மாநகரெங்கும் ஒட்டியும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இவருக்கு இது தேவையா? என அங்கலாய்க் கின்றனர் சொந்த கட்சியினர்.

Advertisment

எஃகு கோட்டையை நொறுக்கிய சேலை கோஷம்!

சாத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. "அ.தி.மு.க. எஃகு கோட்டை... தங்கக் கோட்டை'’என்று முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உற்சாகமாக மேடை யில் முழக்கமிட்டுக்கொண்டிருந்தார். “"கூட்டத்துக்கு வந்தால் சேலை தருவோம்'’என்ற வாக்குறுதி, அ.தி.மு.க. கூட்டத்தை நிரப்பியது. “"சேலை தர்றேன்னு சொல்லித்தான் கூட்டத்துக்கு கூட் டிட்டு வந்தீங்க... ஏன் தரல?'’என்று தாய்க் குலங்கள் மேடையை நோக்கி எதிர்ப்புக்குரல் எழுப்பியவுடன், ‘எஃகு கோட்டை’ உருகத்தொடங் கியது. "உங்க பேச்சைக் கேட்க நாங்க வரல,… எங்களுக்கு ஏன் டோக்கன் தரல? எங்களுக்கு ஏன் சேலை தரல?'’என்ற கோஷம் மைக்கை மிஞ்சியது. இதற்கிடையில், "உண்மையாக இரட்டை இலை சின்னத்துக்கு உழைப்பவர்களுக்கே டோக் கன் தரமாட்டீங்களா?'’என்று சாத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, முன் னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டதும், மேடை அதகளமானது. பிரச்சினை வலுத்தவுடன், நிர்வாகிகள் அமைதியாக அங்கிருந்து நழுவினார்கள். பெண்களோ, “"டோக்கன் இல்லாமல் போகமாட்டோம்; சேலை வாங்காமல் கிளம்பமாட்டோம்'’என்று உறுதியுடன் நின்றனர். இறுதியில் நகரச் செயலாளர் கிருஷ்ணன், "நாளை காலை சேலை வழங்கப்படும்'’என்றதும், "இப்டி ஏமாத்திட்டாங்களே'என்று முணுமுணுத்த படி பெண்கள் கிளம்பினர்!

வரம்புமீறிய சேர்மன்! சிக்கலில் குடியாத்தம் எம்.எல்.ஏ.!

election4

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் தி.மு.க. ஒ.செ. சத்தியானந்தம். அவரது சொந்த ஊரான கொண்டசமுத்திரம் கிராமத்தில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்க விடப்பட்ட ஆன்லைன் டெண்டரில் கலந்துகொண்ட ஒரு கம்பெனி 40 லட்ச ரூபாய்க்கு டெண்டரை எடுத்து செய்யத் துவங்கியுள்ளது. இதில் டெண்டர் எடுத்த பீம்ஜி சரவணன் கம்பெனிக்கும், சேர்மன் சத்தியானந்தத்துக்கும் இடையே கமிஷன் மோதல் உருவாகியுள்ளது. கடந்த வாரம் அந்த இடத்துக்கு சேர்மன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேலையை நிறுத்தச்சொல்லி தகராறு செய்துள்ளார். உடனே, அங்கு வேலை செய்துகொண்டி ருந்த பட்டியல் சமூகத்தினரை சாதிப்பெயரை சொல்லி திட்டிய தாக குடியாத்தம் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, எஸ்.சி. - எஸ்.டி. பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டது. தனித்தொகுதியான குடியாத்தத் தில் ஆளுங்கட்சி சேர்மன் சாதிப்பெயரைச்சொல்லி திட்டுகிறார், தன் சாதி மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராகக்கூட குரல் கொடுக்காமல் இருக்கிறார் எம்.எல்.ஏ. அமுலு என அவருக்கெதிராகவும் இந்த விவகாரத்தை திருப்பிவிட்டுள்ளனர். "சேர்மன் திட்டியதற்கு நான் என்ன செய்யமுடியும்?'' எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார் எம்.எல்.ஏ. "இதன் பின்னால் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி தரப்பு இருக்கிறது' என்கிறார்கள்.

-ராம்கி, நாகேந்திரன், ராஜா, செல்வகுமார்