Advertisment

தேர்தல் ஆடுகளம்

election-adukalam


தி.மு.க. டூ அ.தி.மு.க.! ஒன்றிய செயலாளர் மீது புகார்!

election-adukalam1

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.வின் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியச் செய லாளராக உமாகண்ணு ரங்கம் உள்ளார். இவர் மீது, ஒன்றியத்திலுள்ள கிளைக்கழகம் முதல் ஒன்றிய நிர்வாகிகள் வரை சுமார் 50 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவினை மா.செ தேவ ராஜிடம் தந்துள்ளார்கள். அதில், "பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாட்டுக்கு அவரது ஒன்றியத்திலுள்ள 11 ஊராட்சிகளிலிருந்து 4000 பேர் செல்வோம் என வாக்குறுதி தந்துவிட்டு, 400 பேரை மட்டுமே அழைத்து சென்றார். அங்கன்வாடி உதவியாளர் வேலை யைக்கூட கட்சியினருக்கு சிபாரிசு செய்யாமல் பணம் தந்தவர்களுக்கு சிபாரிசு செய்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேள்வி கேட் டால், "இவர் சரியில்லை, அவர் சரியில்லை, கட்சி வேலை பார்ப்ப தில்லை' எனக் குற்றம்சாட்டி பதவியை பறிக்கிறார். இவரின் செயல் பாட்டால் இவரது சொந்த ஊரான காவேரிப்பட்டு ஊராட்சியிலிருந்தே நம் கட்சி யினர் அ.தி.மு.க.வுக்கு போயிருக்கிறார்கள்' என புகார் மனு


தி.மு.க. டூ அ.தி.மு.க.! ஒன்றிய செயலாளர் மீது புகார்!

election-adukalam1

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.வின் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியச் செய லாளராக உமாகண்ணு ரங்கம் உள்ளார். இவர் மீது, ஒன்றியத்திலுள்ள கிளைக்கழகம் முதல் ஒன்றிய நிர்வாகிகள் வரை சுமார் 50 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவினை மா.செ தேவ ராஜிடம் தந்துள்ளார்கள். அதில், "பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாட்டுக்கு அவரது ஒன்றியத்திலுள்ள 11 ஊராட்சிகளிலிருந்து 4000 பேர் செல்வோம் என வாக்குறுதி தந்துவிட்டு, 400 பேரை மட்டுமே அழைத்து சென்றார். அங்கன்வாடி உதவியாளர் வேலை யைக்கூட கட்சியினருக்கு சிபாரிசு செய்யாமல் பணம் தந்தவர்களுக்கு சிபாரிசு செய்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேள்வி கேட் டால், "இவர் சரியில்லை, அவர் சரியில்லை, கட்சி வேலை பார்ப்ப தில்லை' எனக் குற்றம்சாட்டி பதவியை பறிக்கிறார். இவரின் செயல் பாட்டால் இவரது சொந்த ஊரான காவேரிப்பட்டு ஊராட்சியிலிருந்தே நம் கட்சி யினர் அ.தி.மு.க.வுக்கு போயிருக்கிறார்கள்' என புகார் மனுவை தந்துள்ளனர். இது குறித்து பொறுப்பு அமைச்ச ரும், மண்டல பொறுப்பாள ருமான அமைச்சர் எ.வ.வேலு விடம் முறையிட முயன்றுவருகின்றனர்.

Advertisment

வேட்பாளராக 20 கோடி! சொத்துக்களை விற்கும் ர.ர.க்கள்!

election-adukalam4

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தவிர மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் ஏராளமானோர் விருப்ப மனு கொடுத் துள்ளனர். மனுவோடு தங்களின் கட்சிப்பணி கள் பற்றியும்  கூறி யுள்ளனர். நேர்காண லும் முடிந்தது. பலரும் தொகுதி முழுக்க எடப்பாடியின் தேர் தல் வாக்குறுதிகளை பதாகையாக வைத்து விட்டு, அதை பட மெடுத்து வடக்கு மா.செ. விஜயபாஸ்க ருக்கும், கட்சித் தலை மைக்கும் அனுப்பி வருகின்றனர். இந் நிலையில், உங்களுக்கு சீட்டு வேணும்னா ரூ.20 கோடி பணம் தயாரா இருக்கணும் என்று மா.செ. கேட்டுக்கொண் டிருக்கிறாராம். இதைக் கேட்ட பிறகு, ஆலங்குடி தொகுதியில் சீட்டு வாங்கு வதற்காக சிலர் தங்களின் சொத்துக்களை விற்று வரு கின்றனர். சீட்டு கிடைக்க லைன்னா சொத்து போயிருமே என அவர்களது குடும் பத்தினர் பதட்டத் திலிருக்காங்களாம்!

Advertisment

மா. பொறுப் பாளரை புறக்கணிக்கும் முன்னாள் மா.செ!

election-adukalam2

கோவை மாநகர மாவட்டச் செயலாளராக நீண்ட காலமாகப் பதவிவகித்த சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக்கை அப்பதவியிலிருந்து நீக்கி விட்டு, கட்சியின் தீர்மானக்குழு செயலாளராக பதவி கொடுத்தது தி.மு.க. தலைமை. அடுத்ததாக செந்தில்பாலாஜியின் ஆதர வில் செந்தமிழ்செல்வன், கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் செந்தமிழ்செல்வன் மா.பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே அவரை முன்னாள் மா.செ. நா.கார்த்திக் கண்டுகொள்வதில்லை. எந்தவொரு நிகழ்ச்சிக்கும் கட்சியின் புரொட்டாகால்படி மா.பொறுப்பாளரை அழைப்பதில்லை. தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இப்படி செய்வது சரியா? கட்சி விதிப்படி மா.பொறுப்பாளரை தவிர்க்க முடியுமா? என்ற கேள்விகளுடன் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளது செந்தமிழ்செல்வனின் டீம்.

எடப்பாடி அணியா? தங்கமணி அணியா?

கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிப் பக்கமே தலைகாட்டாத நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. பி.பாஸ்கர், "எனக்குத்தான் இந்தத் தொகுதியில் சீட்டு' எனக் கூறிக்கொண்டு தொகுதியில் தலைக்காட்டத் துவங்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி நாமக் கல் சேலம் சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக, கட்சியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது "வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நம் மண்ணின் மைந்தன் பாஸ்கர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது துணிச்சலோடு  பாடுபடு வேன் என்று புரட்சித் தலைவி ஜெயலலிதா பிறந்த நாளில் உறுதிமொழி எடுப்போம்'' எனக் கூறுவதற்கு பதிலாக, நினைவுநாளில் உறுதிமொழி எடுப்போமென்று கூறியதால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். இது இப்படியிருக்க, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் தங்கமணிக்கும், பாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது மாவட்டமே அறிந்த ஒன்று. பாஸ்கர், எடப்பாடியிடம் நெருங்கிப் பழகிவருவதால், தங்கமணியைக் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதிக்கு அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில்... நாமக்கல் தொகுதி யில் பாஸ்கர், தான் போட்டியிடவுள்ளதாக உறுதிமொழி எடுக்கவைத்தது அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கொலுசு... ஹாட்பாக்ஸ்... டிஜிட்டல் கடம்பூர் ராஜூ!

election-adukalam3

மூன்றுமுறை அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி தொகுதியில் வென்ற கடம்பூர் ராஜூ. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்காவது முறையாக கோவில்பட்டி தொகுதியில் வெற்றிபெற்று சாதனை படைக்கத் திட்ட மிட்டுள்ளார். அதன்படி, உங்கள் வாக்குச்சாவடி எது? உங்களது வரிசை எண்? உள்ளிட்டவைகளை க்யூ.ஆர்.கோடு மூலம் பதிந்து, வீடு வீடாக விநியோகிக்கத் தொடங்கியுள்ளது அவரது டீம். அ.தி.மு.க.வினரை மட்டும் குறிவைத்து கொடுக்கப்படும் இந்த சீட்டு, பெயருக்குத்தான் வாக்குச்சாவடிக்கான சீட்டு. ஆனால் உண்மையில் இது வெள்ளிக்கொலுசு மற்றும் ஹாட்பாக்ஸிற்கான முன்பதிவு டோக்கனே! இதனை சம்பந்தப்பட்ட பூத் ஏஜெண்டிடம் கொடுத்தால் மேற்கண்ட பொருட்களை அவர் கொடுப்பாராம். இதனால் கோவில்பட்டியில் தேர்தல் களைகட்டத் துவங்கியுள்ளது.

nkn280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe