பாசிட்டிவ் பாலாஜி!
முன்னாள் அ.தி.மு.க. மாஜி கே.டி. ராஜேந்திரபாலாஜி, பாசிட்டிவ் சென்டிமெண்டில் தீவிரம் காட்டிவருகிறாராம். தனது பெயரில் வரக்கூடிய தி, ஜி போன்ற எழுத்துக்களின் சுழி கீழ்நோக்கி வராமல் மேல்நோக்கியே இருக்க வேண்டுமென்று கறாராக இருப்பாராம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/electionadukalam1-2026-02-23-16-38-01.jpg)
ஒருமுறை, அவருடன் காரில் பயணித்த உதவியாளரின் ரிங்டோனில் “"போனால் போகட்டும் போடா'’என்ற பாடல் ஒலித்தபோது, உடனே அவரை காரிலிருந்தே இறக்கி விட்டார். கடந்த தேர்தலில் தொகுதி மாறியதில் வெற்றி கிட்டாததால், தன்னை வளர்த்த சிவகாசி என்ற பெயரை தனது பெயருக்கு முன்பாக சேர்த்துக்கொண்டதும் பாசிட்டிவ் காரணத்தால்தானாம். இம்முறை தனது பாசிட்டிவ் அணுகு முறையால் சிவகாசி தொகுதியில் வெற்றியைப் பெற்றுவிடலாமென்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராஜேந்திரபாலாஜி.
கொதிக்கும்தி.மு.க. உ.பி.க்கள்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/electionadukalam2-2026-02-23-16-38-19.jpg)
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கௌதமன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் எதிர்பார்த்த நிலையில் வி.சி.க.வின் ஆளூர் ஷாநவாஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் கடுப்பான கௌதமனை தி.மு.க. தலைமை டோஸ் விட்டபின்பே வரிந்துகட்டி வேலைபார்த்தார். தற்போது தேர்தல் நெருங்கும் சூழலில், வி.சி.க. எம்.எல்.ஏ.வை ஓரங்கட்டி நிகழ்ச்சிகளை நடத்தினார் கௌதமன். "எம்.எல்.ஏ. தொகுதிக்கே வர்றதில்ல'' எனக் காரணம் சொல்லவே இப்படி செய்வதாக வி.சி.க.வினர் விமர்சித்தனர். மேலும், தனது ஆதரவாளர் களின் மூலம், கௌதமன் தான் நாகை மாவட்டத்தின் அசைக்கமுடியாத சக்தி என முகநூலில் பதிவிட வைத்து தனக்கான பிம் பத்தை உருவாக்கிவரு கிறார்.
நாகை அரசியல் புள்ளிகளோ, "நாகை தொகுதியில் மீனவர் களின் வாக்கு மிகமிக சொற்பம், அவர்களிடம் கௌதமனுக்கு செல்வாக் கில்லை. மேலும், ஆளூர் ஷாநவாஸ் மீண்டும் தொகுதி வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டார். இந்த கௌதமன் மா.செ. ஆனதும் பல கோடியில் வீடு, நிலம், லாஞ்ச் படகு, வாகனம் என சேர்த்துவிட்டார்'' என்று இவருக்கு எதிராகப் புலம்புகிறார்கள். இவரே மா.செ., இவரே மீன் வளர்ச்சிக்கழகத் தலைவர்னு எல்லா பொறுப்பையும் வச்சுக்கிட்டா நாங்க என்ன பண்றது?'' என்று புலம்பி வருகின்றனர் உ.பி.க்கள்.
பதவிகளோ, பொறுப்புகளோ வேண்டாம்..!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/electionadukalam3-2026-02-23-16-38-43.jpg)
"தி.மு.க. நிர்வாகி நியமனத்தில் சாதியப் பாகுபாடு பார்க்கின்றார்கள், ஆகையால் வார்டு செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பொறுப்பிலிருந்து எங்களை விடுவியுங்கள்' என தி.மு.க. தலை மைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட திருமலையாம்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சியை சார்ந்த 8 பூத் தி.மு.க.வினர். பொதுச்செயலாளர் துரைமுருக னுக்கு எழுதப்பட்ட கடிதமோ, "திருமலையாம் பாளையத்தில் 15 கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சாதிப் பாகுபாடு காரணமாக திருமலையாம் பாளையம் பேரூர் கழக செயலாளர் ராமராஜை மாற்றி கிருஷ்ணசாமி என்பவரை நியமித்துள்ளார் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன். திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் 11 பூத்துகளில் சுமார் 10,500 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8 பூத்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறக்க முடிவு செய்திருக்கின்றோம். ஆகையால், எங்களுக்கு பதவிகளோ, பொறுப்புகளோ வேண்டாம்; அடிப்படை உறுப்பினராகவே தொடர விரும்புகிறோம்'' என்கின்றது. இந்த விவகாரம் கோவை மாவட்ட தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிசங்கு நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ..?
"வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கான வேட்பாளர் நானே'' என கணக்குப்போட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் பனை தொழிலாளர் நல வாரியத் தலைவருமான டேவிட் செல்வின் தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.விற்கு தாவினார். எம்.எல்.ஏ. கனவில் இருந்த டேவிட் செல்வினுக்கு
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/electionadukalam4-2026-02-23-16-39-00.jpg)
செக் வைத்திருக்கின்றார் அதே கட்சியைச் சேர்ந்த ஜே.கே.ஆர்.முருகன். "அஜிதா ஆக்னஸ் விவகாரத்திற்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஸ்ரீவைகுண்டம் தவிர்த்து 5 சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக 5 மா.செ.க்களை நியமித்தது கட்சி. ஸ்ரீவைகுண்டத் திற்கு மட்டும் மா.செ. நியமிக்கப்பட வில்லை. இதில் நேற்று கட்சிக்கு வந்தவர் எக்ஸ் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின். அவருக்கு எப்படி உடனே மா.செ. பொறுப்போ, எம்.எல்.ஏ. சீட்டோ கொடுக்க முடியும்? அதற்குமுன்னால் கட்சியில் இருந்தவர்களின் நிலை என்னாவது? அதுபோக டேவிட் செல்வினின் போட்டியாளராக கருதப்படும் ஜே.கே.ஆர். முருகனின் மனைவியான சுபத்ரா த.வெ.க.வின் மாநில துணைச்செய லாளர் பொறுப்பில் இருக்கிறார். சீட்டிற்காக கட்சிக்கு வரவேண்டாம் என முன்னமே கூறியுள் ளதே தலைமை'' எனக் கூறிவிட்டு தேர்தல் வேலையைத் தொடங்கி யுள்ளது ஜே.கே.ஆர். முருகன் டீம். "தி.மு.க.வில் இருந்தாலாவது மரியாதை இருந்திருக்கும். இங்கே அதுவும் இல்லை' என புலம்பிவருகிறாராம் எக்ஸ் டேவிட் செல்வன்.
முப்பெருந்தேவியர்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/electionadukalam5-2026-02-23-16-39-35.jpg)
2026 தேர்தலில் ஒவ்வொரு கட்சி பிரமுகர் களும் தங்களுக்கான தொகுதியை உறுதிசெய்வதில் மும்முரமாகயிருக்கிறார்கள். இதில் விளவங்கோடு தொகுதிக்கு கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க.,–அ.தி.மு.க.வில் 3 பெண் களுக்கிடையே யார் வேட்பாளர் என்ற கடும் போட்டி தொடங்கியிருக் கிறது. காங்கிரசில் எம். எல்.ஏ. பதவியை ராஜி னாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த விஜயதாரணி மீண்டும் விளவங்கோடில் போட்டியிட சீட் கேட்டு பா.ஜ.க. தலைமையை நெருக்கிக்கொண்டி யிருக்கிறார். அதேநேரத் தில் இடைத்தேர்தலில் அங்கு போட்டியிட்ட பா.ஜ.க. மகளிரணி நந்தினி "இடைத்தேர்தலில் போட்டியிட்ட எனக்குதான் சீட் தரவேண்டும்' என்று நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி கொடுக்கிறார். அ.தி.மு.க.வில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ராணி "எனக்கு சீட் தாங்க' என்று தளவாய்சுந்தரம் மூலம் எடப்பாடியை கேட்டுக்கொண்டிருக்கிறார். இடைத்தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. நந்தினியும், அ.தி.மு.க. ராணியும் டெபாசிட் இழந்தார்கள். தற்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்ததால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதால்தான் இந்த முப் பெருந்தேவியர் சீட்டுக்கு முண்டியடிக்கிறார்களாம்.
"சீட்டு கேளுங்க...' -அனைவரையும் உசுப்பிவிடும் அ.தி.மு.க. மா.செ!
மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில், தி.மு.க. மா.செ. நிவேதா முருகனிடம் தோற்றுப்போனார். தனது தோல்விக்கு முன்னாள் அ.தி.மு.க. மா.செ. வி.ஜி.கே.செந்தில்நாதன்தான் காரணம் எனக் கருதியதால் இருவருக்குமான பகை வலுத்தது.
பவுன்ராஜ் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணி யனின் ஆதரவாளர். வி.ஜி.கே.செந்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் ஆதரவாளர். இருவரையும் அழைத்துப்பேசிய எடப்பாடி, பூம்புகார், மயிலாடுதுறை தொகுதியில் இருவரும் வெற்றிபெறுவதற்கான பரஸ்பரம் புரிதலுக்கு வந்தனர். இதன்படி, பூம்புகார் தொகுதியில் பவுன்ராஜ் வெற்றிபெறுவாரென்ற பிம்பத்தை செந்தில்நாதனின் ஆதரவாளர்களே பேசுபொரு ளாக்கினர். ஆனால் பவுன்ராஜோ செந்தில்நாதனின் ஆதரவாளர்களை ஒதுக்கிவிட்டு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பொறுப்புகளைக் கொடுத்தார். மயிலாடுதுறை மா.செ.வாக இருந்த வி.ஜி.கே.செந்தில்நாதனை ஒரு ஒன்றியத்தை மூன் றாகப் பிரித்து, அதில் ஒரு ஒன்றியத்திற்கு செய லாளராக அறிவித்து அவரை டென்ஷனாக்கினார். இதையடுத்து, வி.ஜி.கே.செந்தில் ஆதரவாளர்களோ "மயிலாடுதுறையில் அண்ணனுக்கு சீட்டு கொடுக்க வில்லையென்றால் நடிகர் கட்சி தயாராக இருக் கிறது, மொத்த இலைக்கூடாரத்தையும் அங்கே கூட்டிட்டுப் போயிடுவோம்!" எனக் கடுப்பில் பேசிவருகின்றனர். பவுன்ராஜோ, மறைமுகமாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட பலரையும் தூண்டிவிட, இதுவரை 42 பேர் அத்தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார் களாம்! போட்டி அதிகமாக இருப்பதால் கூட்டணிக்கு கொடுக்கும் முடிவுக்கு எடப்பாடி வருவாரென எதிர்பார்க்கிறார் பவுன்ராஜ்!
-ராம்கி, நாகேந்திரன், செல்வகுமார், மணிகண்டன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/23/electionadukalam-2026-02-23-16-37-46.jpg)