Advertisment

தேர்தல் பகை! பஞ்சாயத்து தலைவர் கொலை! -சிக்கிய பா.ஜ.க. நிர்வாகி

dd

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரையடுத்த தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவரான பொன்ராஜின் கொலை இப்பகுதியை பரபரப்பாக மாற்றியிருக்கிறது. ஆக-22 அன்று காலை ஊராட்சிமன்ற அலுவலகம் சென்றுவிட்டு மதியம் 12 மணியளவில் தன்னுடைய தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார் பொன்ராஜ். அங்குள்ள மரத்தின்கீழ் அமர்ந்திருந்த பொன்ராஜை திடீரென்று வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிச்சாய்க்க, ரத்த வெள்ளத் தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

Advertisment

1986 முதல் தற்போது வரை தொடர்ந்து 36 வருடமாக தெற்குத் திட்டங்குளம் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் பொன்ராஜ். எப்போதும் தலைப்பாகைக் கட்டுடன் அவர் இருப்பதால் ஊர் மக்கள் பாசத்தோடு அவரை தலப்பாக் கட்டுத் தலைவர் என்றழைப்பர். பொன்ராஜின் மரணத் தகவலறிந்து கொதித்துப் போன மக்கள் திரண்டு வந்து அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி அரசு மருத்துவமனைமுன் கொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரையடுத்த தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவரான பொன்ராஜின் கொலை இப்பகுதியை பரபரப்பாக மாற்றியிருக்கிறது. ஆக-22 அன்று காலை ஊராட்சிமன்ற அலுவலகம் சென்றுவிட்டு மதியம் 12 மணியளவில் தன்னுடைய தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார் பொன்ராஜ். அங்குள்ள மரத்தின்கீழ் அமர்ந்திருந்த பொன்ராஜை திடீரென்று வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிச்சாய்க்க, ரத்த வெள்ளத் தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

Advertisment

1986 முதல் தற்போது வரை தொடர்ந்து 36 வருடமாக தெற்குத் திட்டங்குளம் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் பொன்ராஜ். எப்போதும் தலைப்பாகைக் கட்டுடன் அவர் இருப்பதால் ஊர் மக்கள் பாசத்தோடு அவரை தலப்பாக் கட்டுத் தலைவர் என்றழைப்பர். பொன்ராஜின் மரணத் தகவலறிந்து கொதித்துப் போன மக்கள் திரண்டு வந்து அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி அரசு மருத்துவமனைமுன் கொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ff

இந்த கொலைவிவகாரத்தில் தெற்கு திட்டங்குளத் தின் கார்த்திக் மற்றும் அவரது உறவினரான 18 வயது வாலிபரை கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் போலீசார்.

கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பா.ஜ.க.வின் இளைஞரணித் தலைவராக இருக்கும் கார்த்திக், “"கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்தில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தெற்குதிட்டங்குளத்தில் கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதைத் திறக்கவேண்டும். கண்மாயில் முட்புதர்கள் அதிகம் உள்ளதால் அவை களை அகற்றவேண்டும். திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்றுசெல்ல அதிகாரிகளை வலியுறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். கோரிக்கைகளை எனது கட்சி லெட்டர் பேடில் மனுவாக எழுதி பஞ்சாயத்து தலைவரி டம் கையெழுத்து வாங்கு வதற்காக அவரது அலுவலகத் திற்கு நானும் எனது உறவின ரின் பையனும் சென்றோம். ஆனால் அவர் தோட்டத்திற் குச் சென்றுவிட்டதாகத் தெரி வித்தனர். அங்கு சென்று நான் அவரிடம் மனுவில் கையெழுத் துக் கேட்டபோது அவர் எங்களை அவதூறாகப் பேசி னார். ஆத்திரமடைந்த நான் அவரை வெட்டிக் கொன் றேன்''’என்று விசாரணையில் தெரிவித்த கார்த்திக்கையும் அந்த வாலிபரையும் கைது செய்திருக்கிறார்கள்.

ffதெற்கு திட்டங்குளம் பகுதியின் மக்களிடம் பரவலாக விசாரித்தில், "பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் கோபப் படவே மாட்டார். ஊரில் யாராவது பிரச்சினை, வாக்கு வாதம் என்று கிளப்பினால், உறவுமுறையாகப் பேசி இரு தரப்பையும் சமாதானப்படுத்து கிறவர். வயது குறைந்தவர் என்றாலும் அவர்களிடம் தன்மையாக நடந்துகொண்டு மரியாதை கொடுப்பவர். நாங்கள் அறிந்தவரை அவர், யாரையும் அவதூறாகப் பேசியதில்லை''’என்கிறார்கள்.

"அவர் ஊராட்சித் தலைவர் பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே மக்களுக்குச் செய்யவேண்டியதைத் தவறாமல் செய்திருக்கிறார். அடிப்படை கழிப்பிட சுகாதார வசதிகள், தெருக்களில் ரோடு. ஊராட்சி மூலமாக மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நிவாரணங்கள் உள்ளிட்டவைகளோடு, பெரிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தாமிரபரணித் தண்ணீரைக் கொண்டுவந்து ஊராட்சியின் குடிதண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்திருக்கிறார். 1996-களில் ஊராட்சிக்குட்பட்ட மக்களில் 74 பேர் கலவர வழக்கில் சிக்கி அலைந்தபோது, தன்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து, வழக்கிலிருந்து அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தவர்.

இதன் காரணமாகவே சுற்றுப்பட்டிலிருக்கும் கிராமங்களி லும் தலைவர் பொன்ராஜுக்கு நல்ல பெயர். இதனால்தான், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகையைக் கொண்ட தெற்கு திட்டங்குளம் ஊராட்சியின் தலைவராக 36 வருடமாக நீடிக்கிறார். ஊராட்சித் தலைவி பதவி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட காலத்தில் பொன்ராஜின் மனைவி பொன்னுத்தாய் வெற்றி பெற்று தலைவராகியிருக்கிறார்.

அன்றைய கிராம சபை கூட்டத்தின்போது, பா.ஜ.க. இளைஞரணித் தலைவர் கார்த்திக் சபைக்கு வந்து சில கோரிக் கைகளை முன்வைத்தார். உடனே தலைவர் பொன்ராஜும் மற்றும் உறுப்பினர்களும் அவற்றை தீர்மானத்தில் ஏற்றி, செய்துமுடிப்பதாகத் தெரிவித்த தலைவர் பொன்ராஜிடம் உடனே நடத்தவேண்டும் என்று நெருக்கியதுடன் கார்த்திக் அவருடன் வாக்குவாதம் செய்ததுமில்லாமல் அவதூறாக வும் பேசியிருக்கிறார். தவிர ஊரிலிருந்த பள்ளிக்கூடத்தை தலைவர் பொன்ராஜ் ஊர்க்கமிட்டிக்கு கொண்டுவர முயற்சித்ததில், எதிர்த்தரப்பான கார்த்திக், தலைவர் மீது கோபத்தில் இருந்திருக்கிறார். தொடர்ந்து பொன்ராஜே தலைவராக நீடிப்பதால் இந்த முறை நடந்த தேர்தலில் அவருக்கு எதிராக கார்த்திக் தரப்பு முத்துக்கனி என்பவரை நிறுத்தி தேர்தல் பிரச்சார வேலைகளைச் செய்திருக்கிறது. எதிர்த் தரப்பின் தீவிர பிரச்சாரத்தையும் மீறி நல்ல மெஜாரிட்டியில் பொன்ராஜ் தலைவரானதிலிருந்தே. கார்த்திக் தரப்பு பகைமையில் இருந்தது''’என்கின்றனர் ஊர்மக்கள்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன், விசாரணை அதிகாரியான சுஜித் ஆனந்த் ஆகியோரிடம் கேட்டபோது, "ஏற்கனவே தேர்தல் பகையிருக்கிறது. நாம அவரத் திட்டிட்டோம். நம்மள வாழவிடமாட்டார்னு நினைச்சி ஆத்திரத்தில் வெட்டிட்டேன்னு சொன்னார்''’என்றார்.

nkn030922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe