சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுமா?

ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் வேட்பு மனுவில் காட்டிய சொத்துப் பட்டியல் அனைவரை யும் வியக்கவைத்தது. ஆனால் இவரோ கட்சிப்பணிக்கு வரும் ர.ர.க்களுக்காக பணப் பையை அவிழ்ப்ப தில்லையாம். "அக் கவுண்ட் டிரான்ஸ் பர் ஆகல. சீக்கிரம் ஆயிடும்'' என்று சாக்கு போக்கு சொல்கிறாராம். இதனை கேள்விப்பட்ட எடப்பாடி, தங்கமணியிடம், "உங்கள நம்பித்தான் இறக்கினோம். நீங்களே எல்லாத்தையும் பாருங்க'' என்று நொந்துபோய் சொல்லியிருக்கிறாராம். ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பாகக் களமிறங்கியுள்ள பிரகாஷ், தீவிர பிரச்சாரத்தின்போது, கணேசமூர்த்தி தொகுதிக்கு என்னென்ன செய்தாரோ, அப்படியே நான் உங்களுக்கு செய்வேன்'' என உருக்கமாகப் பேசி மக்களை கவர்ந்து வருகிறார். இவருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமியும் முழு பலத்தை காட்டிவருகிறார்.

அரசியலென்றாலே நன்றி மறப்பதுதானே!

ss"நீங்கதான் பாத்துக்கணும், அவனோட எதிர்காலமே உங்ககிட்டதான் இருக்கு'' எனச் சொல்லி ராஜேந்திர பாலாஜியிடம் விஜயபிரபாகரனை ஒப்படைத்திருக்கிறார்கள் எடப்பாடியும், பிரேமலதாவும். அந்த நொடியிலிருந்தே தீவிரமாக வேலை செய்கிறார் ராஜேந்திர பாலாஜி. ராஜேந்திர பாலாஜியின் உழைப்புக்கு பலன் கிடைக்கணு மென்றால், அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சிலர் ஒத்துழைக் கணும் என்கிறார்கள். திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளைச் சேர்ந்த ராஜன்செல் லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தே.மு.தி.க. வேட்பாளருக்கு வேலை செய்யவில்லை என்ற மனக்குறையும் தே.மு.தி.க. சைடில் இருக்கிறது. உதயகுமாரோ ஓ.பி.எஸ்.ஸை தோற்கடிப்பதிலேயே குறியாக இருப்பதால் விஜயபிரபாகரனை கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள். 2009-ல் மாபா பாண்டியராஜனுக்கு தே.மு.தி.க. வேட்பாளராக வாய்ப்பு தந்தார் விஜயகாந்த். பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு தந்து அரசியலில் அடையாளப்படுத்தினார். அந்த நன்றிக்காகவாவது விஜய பிரபாகரனுக்கு மாபா பாண்டியராஜன் பிரச்சாரம் செய்திருக்கலாம் என வருத்தப்படுகின்றனர் தே.மு.தி.க.வினர்.

Advertisment

ஜோசியருக்கும் ஒரு சீட்டெடுத்துப் பார்த்திருக்கலாம்!

கடலூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரச்சாரம் செய்துவரும் இயக்குனர் தங்கர் பச்சான், கடலூர், தென்னம்பாக்கம் பகுதியிலுள்ள அய்யனார் கோவிலருகே சாலை யோரம் அமர்ந்திருந்த கிளி ஜோசியர் செல்வ ராஜிடம், தனக்கு ஜோசியம் பார்த்துச்சொல்லும் படி கூறியிருக்கிறார். கிளி அய்யனார் படமுள்ள சீட்டெடுத்துக் கொடுக்க, "கிளி அய்யனார் சீட்டை எடுத்துக் கொடுத்துள்ளது. இதன்மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் அய்யனார் ஆசியுடன் இந்த தொகுதியில் வெற்றி பெறுவீர்கள்'' என்று கூறியுள்ளார். தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலாக, அதுவே ஜோசியருக்கு வினையானது. கிளியை கூண்டில் அடைத்து ஜோசியம் பார்த்தது வனத்துறை சட்டப்படி தவறு எனக்கூறி ஜோசியர் செல்வராஜை வனத்துறை யினர் கைது செய்தனர். இதையறிந்த பா.ம.க. தலைவர் அன்புமணி, "தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி ஜோதிடர் கூறியதற்காக ஜோதிடரை கைது செய்திருக்கிறார்கள். இது தமிழக அரசின் பாசிசத் தன்மையைக் காட்டுகிறது'' என்று கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், கிளியை கூண்டில் அடைத்து ஜோதிடம் பார்க்கக்கூடாது என எச்சரித்தபின் ஜோசியரை விடுவித்தனர்.

தேனியில் விட்டதைப் பிடிக்குமா தி.மு.க.?

Advertisment

ee

தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் முக்குலத்தோர் சமூகத்தில் போட்டி போடும் தி.மு.க. வேட்பாளரான தங்கத் தமிழ்ச்செல்வனுக்கும், அ.ம.மு.க. டி.டி.வி.தினகரனுக் கும் ஓட்டுக்கள் பிரிய வாய்ப்புள்ளது. அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வந்த முக்குலத்தோர் சமூகத்தினரின் ஓட்டு வங்கி, நாயுடு சமூகத்தைச் சேர்ந்த நாராயணசாமிக்கு பதிலாக டி.டி.வி.க்கு மாறிவிழ வாய்ப்புள்ளது. இது டி.டி.வி.க்கு பலம். அதைத்தாண்டி பிரச்சாரத்துக்காக டி.டி.வி. பணத்தை வாரியிறைக்கிறார். எனினும், இரண்டு தேர்தலில் இங்கு போட்டியிட்டும் டி.டி.வி. மக்களைக் கவனிக்கவில்லையென்ற அதிருப்தி இருக்கிறது. ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றபின் மக்களை ஏமாற்றியதுபோல் இங்கும் ஏமாற்றக்கூடுமென்று பேசப்படுகிறது. பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் பகுதிகளிலுள்ள பெரும்பான்மை இஸ்லாமியர் ஓட்டுக்களும், வி.சி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் ஓட்டுக்களும் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இங்கு தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும், தேர்தல் பொறுப்பாளர்கள் சிலருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்தது. தேனி, திண்டுக்கல் பிரச்சாரத்துக்காக வந்த முதல்வர் ஸ்டாலின், முதல் நாள் இரவில் அனைவரோடும் ஆலோசனைக்கூட் டம் நடத்தி, "அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி தங்கத்தமிழ்ச்செல்வனை வெற்றிபெறச் செய்யவேண்டும்'' என்று பொறுப்பாளர்களுக்கு அறிவுரை கூற, அனைவரும் வேறுபாடு மறந்து, பிரச்சாரத்தில் தீவிரம் காட்டியுள்ளனர்.

மற்ற பா.ம.க. வேட்பாளர்கள் பாவப்பட்ட வேட்பாளர்களோ!

அரக்கோணம், சோளிங்கர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் போன்ற பகுதிகளில் மருத்துவர் ராமதாஸ் பிரச்சாரம் செய்யவந்தபோது வழக்கமாக வரும் கூட்டம் தற்போது வரவில்லை. இதுகுறித்து பா.ம.க. நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "தருமபுரியில் சௌமியா அன்புமணி களத்தில் இறங்கியதுமுதல் தலைவரின் குடும்பத்தினர் அங்கே டெண்ட் அடித்து தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதனைப் பார்த்த மற்ற நிர்வாகிகளும், "நாமும் போய் வருவோம், தலைமையின் கரிசனப் பார்வை அப்போதுதான் நமக்கும் கிடைக்கும்' எனக்கூறி, பெரும்பாலான நிர்வாகிகள் அங்கு சென்று தேர் தல் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல், கடலூர் தொகுதியில் தங்கர்பச்சானுக்கு தேர்தல் வேலை செய்யாமல், அன்புமணியின் மைத்துனர் காங்கிர ஸின் விஷ்ணுபிரசாத்துக்கு அன்புமணி ஆதரவாளர் கள் கட்சி வேலை பார்க்கிறார்கள். இதேபோல், கள்ளக்குறிச்சி வேட்பாளர் தேவதாஸ், விழுப்புரம் முரளிசங்கர், மயிலாடுதுறை ஸ்டாலின், சேலம் அண்ணாதுரை, திண்டுக்கல் திலகபாமா என ஒவ்வொருவருக்கும் பா.ம.க. நிர்வாகிகள், இளைஞர் களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் பிரச்சனை இருக்கிறது. சேலத்தில் போட்டியிடும் அண்ணா துரைக்கு பிரச்சாரம் செய்யவேண்டிய அருள் எம்.எல்.ஏ., தருமபுரிக்கு சென்று சௌமியா மேடத்துக்காக தேர்தல் வேலை செய்கிறார்'' என்று புலம்புகிறார்கள்.

தேர்தலால் பயனில்லையெனில் புறக்கணிக்கத்தானே செய்யணும்?

கரூர் நாடாளுமன்றத் தொகுதி இலுப்பூர் கோட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில் 400 ஏக்கர் விவசாய நிலத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வாங்கியும், இணையத்தில் பதிவேற்றம் செய்யாததைக் கண்டித்து, ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக போஸ் டர் வைத்து கருப்புக் கொடியும் பிடித்துள்ளனர். இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி உத்தரவின்பேரில், அனுமதியில்லாமல் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னவாசல் காவல் நிலையத்தில் புகாரளிக்கப் பட்டுள்ளது. "தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் வைப்பது சட்டப்படி குற்றமா?'' என மூத்த வழக்கறி ஞர் கணபதி சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்லாண்டுகளாய் அலைந்தும் பலனில்லாமல்தான் இறுதியாக, தேர்தலைப் புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டுகிறார்கள். இதற்காக அவர்கள் மீது வழக்கு போடுவது நல்லதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் குற்றமாகக் கருதக்கூடாது'' என்றார்.

எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்! -விளவங்கோடு

ss

நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு இடைத்தேர்தலும் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. போட்டியில் சுயேட்சைகள் உட்பட 10 பேர் களத்தில் நின்றாலும், காங்கிரஸ் தாரகை கத்பர்ட்டுக்கும் பா.ஜ.க. நந்தினிக்கும்தான் நேரடி மல்லுக்கட்டு. தாரகை கத்பர்ட்டுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழியும் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் வாக்குச் சேக ரித்து சென்ற நிலையில் பா.ஜ.க. நந்தினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் மட்டும்தான் வாக்கு கேட்க வந்துள்ளார். ரோடு ஷோக்கு அமித்ஷா வருவதாகக் கூறபட்ட நிலையில்... அது இரண்டுமுறை தள்ளிப் போய்விட்டது. விளவங்கோடு வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே மோடி கன்னியாகுமரி வந்து போய்விட்டார்.

அ.தி.மு.க. ராணிக்கு தளவாய்சுந்தரம் மட்டும் ஒன்றிரண்டு நாட்கள் வாக்குச் சேகரித்தார். மற்ற நிர்வாகிகள் ஒருவரும் கண்ணில் தென்படாததால் ராணி அப்செட். நாம் தமிழர் ஜெமினிக்கு, சீமான் இரண்டு இடங்களில் ஓட்டு கேட்டு சென்ற நிலையில் தொகுதியிலுள்ள சீமானின் தம்பிமார்கள் சமூக வலைத்தளம் மூலம் வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தொகுதி மக்களோ, "இடைத்தேர்தல் என்றால் வாரி வழங்குவாங்களே, ஆனால் கட்சிகாரங்ககிட்ட இருந்து இன்னும் ஒண்ணும் வரலியே'” என்ற எதிர்பார்ப்பில் உள்ள னர். "இடைத்தேர்தல் நாடாளு மன்றத் தேர்தலோடு சேர்ந்து வந்ததால் இடைத்தேர்தலுக் கான பரபரப்பும், மவுசும், கரன்சி விளையாட்டும் இல்லாமல் போயிற்று' என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

இதற்கிடையில் இரண்டு வாக்குகள் செலுத்தவேண்டிய விளவங்கோடு தொகுதி மக்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணியில் சுறுசுறுப்பாக உள்ளனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போல் கடைசி கட்டத்தில் பணம் வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் மக்கள்.

-எஸ்.பி.எஸ்., ஜீவா, சக்தி, து.ராஜா, இரா.பகத்சிங், மணிகண்டன்