Advertisment

தேர்தல் திருவிழா! களைகட்டிய ரெட்டி மாநாடு!

reddyconference

துரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மண்டல மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டை, அதன் மாநில தலைவர் ரவி கொடியேற்றி தொடங்கிவைத்தார். 

Advertisment

மாநாட்டை, நடிகையும் ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான  ரோஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க, அதனைத் தொடர்ந்து சங்க  நிர்வாகிகள் முத்தமிழ் செல்வி, தேவசேனா சித்ரா, கஸ்தூரி புஷ்பலதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பொதுச்செயலாளர் பூர்ணச்சந்திரன், புதுச்சேரி எம்.பி. வைத்தியலிங்கம், பத்திரிகையாளர் ரமேஷ்பிரபா, தனலெட்சுமி கல்விக் குழும தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

விழாவில் நடிகை ரோஜாவுக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. மாநாட்டில் ’"ரெட்டி அரசாட்சிகளின் வரலாறு'’என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்

துரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மண்டல மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டை, அதன் மாநில தலைவர் ரவி கொடியேற்றி தொடங்கிவைத்தார். 

Advertisment

மாநாட்டை, நடிகையும் ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான  ரோஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க, அதனைத் தொடர்ந்து சங்க  நிர்வாகிகள் முத்தமிழ் செல்வி, தேவசேனா சித்ரா, கஸ்தூரி புஷ்பலதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பொதுச்செயலாளர் பூர்ணச்சந்திரன், புதுச்சேரி எம்.பி. வைத்தியலிங்கம், பத்திரிகையாளர் ரமேஷ்பிரபா, தனலெட்சுமி கல்விக் குழும தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

விழாவில் நடிகை ரோஜாவுக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. மாநாட்டில் ’"ரெட்டி அரசாட்சிகளின் வரலாறு'’என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநாட்டில் அரசுத் தோட்டத்தை ஓமந்தூரார் தோட்டம் என பெயர் மாற்றிய மறைந்த முதல்வர் கலைஞருக்கு நன்றி தெரிவித்தும், ஓமந்தூராருக்கு மணிமண்டபம் அமைத்து அதில் சிலையமைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், ரெட்டி சமுதாய மக்களுக்கு மத்திய- மாநில அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்க வசதியாக ஓ.பி.சி. சான்றிதழ் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா, குடியரசு தின விழாவில் பல்வேறு சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில்  ஓமந்தூரார் பெயரிலும் விருது வழங்க வேண்டும், மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் பெயர் சூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

மாநாட்டில் தனலெட்சுமி கல்விக் குழும நிறுவனர் சீனிவாசன், பத்திரிகையாளர் ரமேஷ் பிரபா, பொதுச்செயலாளர் பூர்ணசந்திரன், மாநில தலைவர் ரவி, புதுச்சேரி எம்.பி. வைத்தியலிங்கம், நடிகை ரோஜா ஆகியோர் உரையாற்றினர். 

மாநில தலைவர் ரவி, “"எங்களது சமுதாய மக்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கவேண்டும். பல ஆண்டுகளாக ஓ.பி.சி. சான்றிதழ் கேட்டு போராடிவருகிறோம். அதனையும் தங்களுக்கு வழங்க வேண்டும்''” என தெரிவித்தார்.

reddyconference1

அவரைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ரமேஷ்பிரபா பேசும்போது, "ரெட்டி அரசாட்சிகளின் வரலாறு என்ற புத்தகம் வெளியிடப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதுவதே மிகச்சிரமமான விசயம். அப்படியிருக்க 950 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இது வெளிவந்தது சிறப்பான விசயம். இந்த சமூகம் இந்த உலகிற்கு எவ்வளவு பணிகள் செய்திருக் கின்றன, எத்தனை தலைவர்கள் தமிழ்நாட் டிற்காக அரும்பாடுபட்டிருக்கிறார்கள், அவர்களின் தியாகம், செயல்பாடுகளை ஒன்றுதிரட்டி வெளிகொண்டு வந்துள்ளது  இந்த புத்தகம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் இந்தப் புத்தகம் இருக்கவேண்டும். அனைத்து மக்களுக்காகவும் சிந்தித்து வழிகாட்டுவோம்'' என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா பேசினார். "தென்மண் டல ரெட்டி மாநில மாநாட் டுக்கு வந்தது மகிழ்ச்சி. இது குல மாநாடு இல்லை… குடும்ப மாநாடு''’ என தெலுங்கில் பேசி  தனது உரையை தொடர்ந்தார். “நான் தமிழ்நாட்டு மருமகள். சினிமாவிலும் அரசியலிலும் சாதனை புரிந்தது உங்களது ஆசிர்வாதத்தால் தான். நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., விஞ்ஞானி, வியாபாரிகள் என பல துறைகளி லும் சாதிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்தும் இதுவரை செய்து தரவில்லை. நம்மை ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க மறுக்கிறார்கள். ஓட்டுக்காக மட்டுமே நம்மைப்   பயன்படுத்துகிறார்கள். நமது சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் இருந்து நமது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். இந்த மாநாட்டிற்கு வந்தது மிகப் பெரிய சந்தோசம். உங்களுக்காக எந்த நேரத்திலும் உழைக்கத் தயாராக இருக்கின்றேன்''’என்றார்.  

மாநாட்டுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். அதேபோல ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஒன்றிய- மாநில அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். தீர்மானத்தில் ஓமந்தூராருக்கு மணிமண்டபம் கட்டிய கலைஞருக்கும், ஓமந்தூராருக்கு சிலையமைத்த தமிழ்க முதல்வருக்கும் நன்றி தெரிவித்தபோது கூட்டத்தில் கரகோஷம் அதிகமாக எழுந்தது. 

nkn280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe