Advertisment

தேர்தல் செலவு ஊழல்! பா.ஜ.க.வில் வெடிக்கும் மோதல்கள் !

sdfs

போலீஸில் புகார், வழக்குப் பதிவு, கைது என பா.ஜ.க.வில் நடக்கும் தேர்தல் பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லை. கணக்குக் கேட்டு பெண்டு நிமித்தியிருக்கிறார் தமிழிசை சௌந்திரராஜன். இதனால், தமிழக பா.ஜ.க.வில் பரபரப்பும் அதிர்ச்சியும் அதிகரித்தபடியே இருந்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கேற்ப 15 கோடி, 10 கோடி, 8 கோடி என தேர்தல் செலவுகளுக்கு அனுப்பி வைத்தது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. இதைத் தவிர தென்சென்னையில் போட்டியிட்ட முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் பங்குக்கு நண்பர்கள், உறவினர்களிடம் கடன்பெற்று பல கோடிகளை செலவு செய்தனர்.

Advertisment

vv

இந்த கோடிகளை தொகுதியின் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் ஒப்படைத்து தேர்தல் செலவுகளை கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் பா.ஜ.க. வேட்பாளர்கள். ஆனால், தேர்தல் செலவுகளுக்காக இப்படி கொடுக்கப்பட்ட கோடிகள், பூத் நிர்வாகிகள் தொடங்கி கீழ்மட்ட தொண்டர்கள் வரை முழுமையாகப் போய்ச்சேரவில்லை.

பூத் செலவுகளுக்காக கொடுக்கப் பட்ட பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாவட்ட தலைவர் ஒருவர் புகார் கொடுத்த விவகாரத்தில் தமிழிசை சௌந் திரராஜனின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய் யப்பட்டிருக் கிறார்கள். இ

போலீஸில் புகார், வழக்குப் பதிவு, கைது என பா.ஜ.க.வில் நடக்கும் தேர்தல் பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லை. கணக்குக் கேட்டு பெண்டு நிமித்தியிருக்கிறார் தமிழிசை சௌந்திரராஜன். இதனால், தமிழக பா.ஜ.க.வில் பரபரப்பும் அதிர்ச்சியும் அதிகரித்தபடியே இருந்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கேற்ப 15 கோடி, 10 கோடி, 8 கோடி என தேர்தல் செலவுகளுக்கு அனுப்பி வைத்தது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. இதைத் தவிர தென்சென்னையில் போட்டியிட்ட முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் பங்குக்கு நண்பர்கள், உறவினர்களிடம் கடன்பெற்று பல கோடிகளை செலவு செய்தனர்.

Advertisment

vv

இந்த கோடிகளை தொகுதியின் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் ஒப்படைத்து தேர்தல் செலவுகளை கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் பா.ஜ.க. வேட்பாளர்கள். ஆனால், தேர்தல் செலவுகளுக்காக இப்படி கொடுக்கப்பட்ட கோடிகள், பூத் நிர்வாகிகள் தொடங்கி கீழ்மட்ட தொண்டர்கள் வரை முழுமையாகப் போய்ச்சேரவில்லை.

பூத் செலவுகளுக்காக கொடுக்கப் பட்ட பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாவட்ட தலைவர் ஒருவர் புகார் கொடுத்த விவகாரத்தில் தமிழிசை சௌந் திரராஜனின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய் யப்பட்டிருக் கிறார்கள். இந்த சம்பவம் சென்னை பா.ஜ.க.வில் பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘’தென்சென்னையில் போட்டி யிட்ட தமிழிசையை வெற்றிபெற வைக்கவேண்டிய பொறுப்பு தொகுதிப் பொறுப்பாளர் கரு.நாக ராஜன், தென்சென்னை மாவட்ட பா.ஜ.க. தலைவர் காளிதாஸ், தென்சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சாய்சத்யன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பூத் செலவுகள் உட்பட தேர்தல் செலவுகளுக் காக பல கோடிகளை இவர்களிடம் பகுதி பகுதியாகக் கொடுத்திருந்தார் தமிழிசை. இந்த பணத்தைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட கோல்மாலில் இவர்களுக்குள் மோதல் வெடித்திருக் கிறது. இதனையடுத்து கரு.நாகராஜன், சாய்சத்யன் ஆகியோரின் ஆதரவாளரான முத்துமாணிக்கம் என்பவர், தமிழிசையின் ஆதரவாளரான டீக்காராம் என்பவரின் மகன் வாசு, ஜெயக்குமார், சரவணன், வெங்கடேசன் ஆகியோர் மீது துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனை விசாரித்து வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் 2 நாட்களுக்கு முன்பு மேற்கண்டவர்களை கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவமறிந்து டென்சனான தமிழிசை, கரு.நாகராஜன் மற்றும் சாய்சத்யனை தொடர்பு கொண்டு கடுமையாக விளாசியிருக்கிறார். புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என தமிழிசை கறாராகக் கூறியும் புகார் வாபஸ் பெறப்பட வில்லை. அதேசமயம், கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரை மட்டும் வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறார்கள். மற்ற மூவரையும் சிறையில் அடைத்துள்ளது போலீஸ். தனது ஆதரவாளருக்கு எதி ராக தொகுதியின் பொறுப்பாளர் களாக இருந் தவர்களின் தூண்டு தலும், பணம் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறுமே புகாருக்கு காரணமாக இருந்ததை தமிழிசையால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

vv

அதேபோல, மத்திய சென்னை பா.ஜ.க.வின ரிடையே ஏற்பட்ட மோதலில் அமைந்தகரை போலீஸ் ஸ்டேசனில் அண்ணாநகர் வடக்கு மண்டல பா.ஜ.க. தலைவராக இருக்கும் ராஜ்குமார் என்பவர், பா.ஜ.க.வின் மத்திய சென்னை வர்த்தகப் பிரிவு செயலாளர் மூர்த்தி, பா.ஜ.க. நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் மீது புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகார் மீது சி.எஸ்.ஆர். (எண்: 358/2024, 27.4.2024) பதிவு செய்திருக்கிறது அமைந்தகரை போலீஸ். இந்த விவகாரமும் கமலாலயத்திற்கு தெரிவிக்கப்பட, ஏகப்பட்ட டென்சனில் இருக்கிறது பா.ஜ.க. தலைமை.

இந்த நிலையில், தேர்தல் கணக்கு வழக்கு குறித்து தென்சென்னை தொகுதிக்கான கோர் கமிட்டி நிர்வாகிகளை அழைத்து விசாரித்திருக் கிறார் தமிழிசை சௌந்திர ராஜன்.

இதுகுறித்து பா.ஜ.க. வில் விசாரித்தபோது, "தேர்தல் செலவுகளுக்காக கொடுக்கப்பட்ட கோடிக் கணக்கான பணத்தில் ஊழல் நடந்திருப்பது குறித்து, தென்சென்னைக்கான பா.ஜ.க.வின் கோர் கமிட்டி நிர்வாகிகளை தனது இல்லத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார் தமிழிசை. அதில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், நாராயணன் திருப்பதி, காளிதாஸ், எஸ்.ஜி.சூர்யா, பிரமிளா சம்பத், உமா ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சாய்சத்யன் மட்டும் வரவில்லை.

அந்த கூட்டத்தில், "உங்களின் விருப்பத் தையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில்தானே தேர்தல் செலவுகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அதற்கான கணக்குகளைச் சொல்லுங்கள்'' என கேட்டார் தமிழிசை. அதாவது, தேர்தல் பணிகள் தொடங்கிய முதல் 10 நாட்கள் வரையில்தான் கட்சி நிர்வாகிகளிடம் பணம் கொடுக்கப்பட்டது. அதில் ஊழல் நடப்பதை அறிந்து கடைசி 10 நாட்கள் தனது நேரடி பார்வையில் பணத்தை பிரித்துக் கொடுத்தார் தமிழிசை. ஆக, முதல் 10 நாளில் கொடுக்கப்பட்ட பணத்துக்குத்தான் கணக்கு கேட்டார். அப்போது தாங்கள் செலவிட்டதாக ஒரு கணக்கினை நிர்வாகிகள் கொடுத்தனர்.

அப்போது நாராயணன் திருப்பதி, "நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் என சொன்னால்தான் இவர்கள் கொடுக்கும் கணக்குகள் சரியாக இருக்கிறதா என்பதை செக்பண்ண முடியும்'' என தமிழிசையிடம் சொல்ல, "தம்மிடம் கட்சி கொடுத்த தொகை எவ்வளவு? தனிப்பட்ட முறையில் தனது பணம் எவ்வளவு போடப்பட்டது?' என்கிற விபரங்களைச் சொன்னார் தமிழிசை. அதனோடு நிர்வாகிகள் கொடுத்த கணக்கு வழக்குகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது நிறைய குளறுபடிகள் இருந்தன.

இதனையடுத்து, இந்த கணக்கு வழக்குகளை சரியாக ஆராய்ந்து முழுமையான ரிப்போர்ட்டை கொடுக்குமாறு நாராயணன் திருப்பதியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் தமிழிசை. தற்போது "தென்சென்னைக்கான தேர்தல் செலவுகள் முழுமையாக ஆராயப் பட்டு வருகிறது'’ என் கிறார்கள் பா.ஜ.க.வினர்.

இதேபோல மத்திய சென்னையிலும் பா.ஜ.க.வினர் கொந் தளித்துவரும் நிலையில், கோர் கமிட்டியை கூட்டி கணக்கு வழக்குகளை ஆராய மறுத்துவருகிறார் மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ்செல்வம். தென்சென்னையில் தொடங்கி யுள்ள இந்த கணக்கு கேட்பு விவகாரம் தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வில் பரவி வருகிறது.

இந்நிலையில் பா.ஜ. மாநிலத் தலைவர் தலைமையில் சென்னையில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்படி, "ஒவ்வொரு மாவட்டமாக வெடிக்க காத்திருக்கும் தேர்தல் செலவு ஊழல்கள் பா.ஜ.க. தலைவர்களை அம்பலப்படுத்தும்' என்கிறது கமலாலயத் தரப்பு. வாக்குப்பதிவு முடிந்தும் ஓயவில்லை பா.ஜ.க. பஞ்சாயத்து!

nkn010524
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe