தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில்... இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கும் விவகாரம் தேசிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத் தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜீவ்குமாரின் பதவிக் காலம் கடந்த 17-ந் தேதி முடிந்த நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஞானேஷ் குமார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தேர்தல் ஆணையராக இருந்தவர்.

தலைமைத் தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும், அந்த வழக்கின் விசாரணை 19-ந்தேதி வரவிருக்கும் நிலையில், ஞானேஷ்குமாரின் நியமனம் தேசிய அளவில் அதிர்வுகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி யுள்ளது.

amitsha

தேசம் முழுவதும் பொதுத்தேர்தல்களை நடத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்றது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். இதன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவருக்கு தேர்தல் தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்கக் கூடிய அதிகாரம் இருக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்க்கட்சித் தலை வர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கமிட்டிதான் தேர்வு செய்து வந்தது. ஆனால், இந்த சட்ட நடைமுறைகள் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு ஒவ்வாததாக இருந்தது. அதனால், கமிட்டியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக, பிரதமர் நியமிக்கும் ஒன்றிய அமைச்சர்களில் ஒருவர் இடம் பெறுவார் என்று பிரதமர் மோடி எடுத்த முடிவின்படி சட்ட மசோதா திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார்.

Advertisment

இந்த சட்ட மசோதா அரசியல் ரீதியாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அதன் ஒரு பகுதியாக இந்த சட்ட மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது. அந்த வழக்கின் விசாரணை கடந்த 19-ந் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடங்கிய கமிட்டி கூடி, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை தேர்வு செய்திருக்கிறார்கள். ஞானேஷ்குமாரின் தேர்வு, பிரதமர் மோடியின் தனிப்பட்ட முடிவு என்கின்றனர். பிரதமர் மோடியின் விருப்பத்தை ராகுல்காந்தி எப்படி ஏற்றுக்கொண்டார் என்கிற கேள்வி எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி அரசியலில் கடுமையாக எதிரொலித்தது. பல்வேறு மாநில கட்சிகளிடமும் இந்த கேள்வி எழுந்தது.

இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, ‘"எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது, தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய் வதற்கான கூட்டப்பட்ட கமிட்டி கூட்டத்தில், ஐந்து அதிகாரிகள் கொண்ட ஒரு பட்டியலை ராகுல் காந்தியிடம் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. அதனை வாங்கிப் பார்க்காமல், "உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் அதன் விசாரணை 19-ந் தேதி வரவிருப்பதையும் சுட்டிக்காட்டி, எதற்கு அவசரம் காட்டுகிறீர் கள்? இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு அமைதியாக இருக்கலாமே? தேர்தல் ஆணை யத்தின் தலைமை ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இல்லாத போது எதற்கு அவசரம் காட்டுகிறீர்கள்?' என மோடியிடம் ராகுல் காந்தி கேட்டிருக்கிறார். கூட்டம் கூட்டப்பட்டதற்கு எதிர்ப்பும் காட்டியிருக்கிறார்.

rr

Advertisment

இதனை மோடியும் அமித்ஷா வும் ஏற்கவில்லை. அதேசமயம், ராகுல்காந்தியை பொருட்படுத் தாமல், மெஜாரிட்டி அடிப் படையில் மோடியும் அமித் ஷாவும் இணைந்து ஒரே முடிவை எடுத்துள்ளனர். அதன்படி தேர்வு செய்யப்பட்டவர்தான் ஞானேஷ்குமார். அதனால், தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன சட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பை அந்த கமிட்டி கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறார் ராகுல்காந்தி. அதனால், பிரதமர் மோடியின் முடிவை எந்த கோணத்திலும் ராகுல்காந்தி ஏற்கவில்லை''’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டி ருக்கும் ஞானேஷ்குமாரை பற்றி தமிழக ஐ..ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, "ஒன்றிய உள்துறை அமைச்சகத் தில் நீண்ட மாதங்கள் பணியாற்றியவர் ஞானேஷ்குமார். அப்படி பணிபுரிந்தபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானார். அந்த நெருக்கம், உள்துறை சார்ந்து மோடி அரசு தீர்மானிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு அடிநாதமாக இருக்க வைத்தது. குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆவணங்களைக் கையாண்டவர். அத்துடன், வழக்கில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மனுக்கள், வைக்கவேண்டிய வாதங்கள் என பல அறிவுறுத்தல்களை வழங்கியவர் ஞானேஷ் குமார்.

இது மட்டுமல்ல, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி, காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவின் சூத்திரதாரி ஞானேஷ் குமார்தான். அப்படிப்பட்ட தங்களுக்கு நெருக்கமானவரைத்தான் தேர் தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக மோடியும் அமித்ஷாவும் தேர்வு செய் திருக்கிறார்கள்''’ என்கின்றனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.