தேர்தல் கூத்து

ss

தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. போடி தொகுதியிலுள்ள முத்தையன்செட்டி பட்டி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனது பிரச்சாரத்தை அனுராதா தொடங்கினார். அவருக்கு அங்குள்ள பெண்கள் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர். அப்போது அவர்களிடம், "உங் கள் வீட்டுப் பிள்ளை டி.டி.வி. மனைவியாக உங்களிடம் நான் வந்திருக்கிறேன்.

ee

அவர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் சென்று விட்டதால் ஒரு வாரம் பிரச்சாரத்திற்கு வரமாட்டார். அதனால் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் நான் கொடுத் துவைத்த பாக்கியம் இது. 16 வருடத் திற்கு பிறகு இங்கு வந்திருக்கிறார். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும்'' எனக்கூறி சென்டிமெண்ட்டான தனது பேச்சின் மூலம் வாக்கு சேகரித்துவருகிறார். ஜாதிரீதியாகவும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இவரது பிரச்சாரம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அரசியல்!

ee

தேர்தலில் போட்டியிடாதது குறித்து, “"தியாகம் அல்ல.. வியூகம்'’என்று கமல்ஹாசனால் சாதாரணமாகச் சொல்லிவிட முடிகிறது. சில ஊர்களில் ம.நீ.ம. நிர்வாகிகள் மனநிலையோ வேறாக இருக்கிறது. விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்காக சிவகாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தபோது ம.நீ.ம. நிர்வாகிகளையும் அழைத்திருந்தனர். அவர்களோ, பட்டும்படாமலேயே கலந்துகொண்டனர். இதுகுறித்து ம.நீ.ம. நிர்வாகி ஒருவர், "தேர்தல் பணிக்குழு அலுவலகத்துல மீட்டிங் நடந்தப்ப எங்ககிட்ட யாரும் சொல்லல. போன எம்.பி. தேர்தல்ல ம.நீ.ம. வேட்பாளர் முனியசாமி 56,815 ஓட்டு வாங்குனாரு. இது எல்லாமே கமல் மேலருக்க அபிமானத்துல விழுந்த ஓட்டுக்கள். ம.நீ.ம. கட்சில உறுப்பினரா சேரலைன்னாலும், கமலுக்காக வாக்களிக்க அனேகம் பேர் இருக்காங்க. தேர்தல் பிரச்சாரத்தப்ப எங்களை மதிச்சாலும், மதிக்கலைன்னாலும், கூட்டணி தர்மத்தை மதித்து கை சின்னத்துலதான் எங் காளுங்க ஓட்டு போடுவாங்க''’என்றார். ம.நீ.ம. வாக்காளர் களின் வாக்குகளும் வெற்றிக்கு முக்கியமென்பதை கூட்டணி யினர் உணர வேண்டுமென்பதே இவர்களின் ஆதங்கம். அரவணைத்துச் செல்வதே கூட்டணிக்கு பலம்!

ரூர் தொகுதி பா.ஜ.க. வேட் பாளர் செந்தில் நாதனை ஆதரித்து திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ் பேசும்போது, கரூர் சிட்டிங் எம்.பி. ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, "இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்த

தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. போடி தொகுதியிலுள்ள முத்தையன்செட்டி பட்டி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனது பிரச்சாரத்தை அனுராதா தொடங்கினார். அவருக்கு அங்குள்ள பெண்கள் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர். அப்போது அவர்களிடம், "உங் கள் வீட்டுப் பிள்ளை டி.டி.வி. மனைவியாக உங்களிடம் நான் வந்திருக்கிறேன்.

ee

அவர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் சென்று விட்டதால் ஒரு வாரம் பிரச்சாரத்திற்கு வரமாட்டார். அதனால் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் நான் கொடுத் துவைத்த பாக்கியம் இது. 16 வருடத் திற்கு பிறகு இங்கு வந்திருக்கிறார். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும்'' எனக்கூறி சென்டிமெண்ட்டான தனது பேச்சின் மூலம் வாக்கு சேகரித்துவருகிறார். ஜாதிரீதியாகவும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இவரது பிரச்சாரம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அரசியல்!

ee

தேர்தலில் போட்டியிடாதது குறித்து, “"தியாகம் அல்ல.. வியூகம்'’என்று கமல்ஹாசனால் சாதாரணமாகச் சொல்லிவிட முடிகிறது. சில ஊர்களில் ம.நீ.ம. நிர்வாகிகள் மனநிலையோ வேறாக இருக்கிறது. விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்காக சிவகாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தபோது ம.நீ.ம. நிர்வாகிகளையும் அழைத்திருந்தனர். அவர்களோ, பட்டும்படாமலேயே கலந்துகொண்டனர். இதுகுறித்து ம.நீ.ம. நிர்வாகி ஒருவர், "தேர்தல் பணிக்குழு அலுவலகத்துல மீட்டிங் நடந்தப்ப எங்ககிட்ட யாரும் சொல்லல. போன எம்.பி. தேர்தல்ல ம.நீ.ம. வேட்பாளர் முனியசாமி 56,815 ஓட்டு வாங்குனாரு. இது எல்லாமே கமல் மேலருக்க அபிமானத்துல விழுந்த ஓட்டுக்கள். ம.நீ.ம. கட்சில உறுப்பினரா சேரலைன்னாலும், கமலுக்காக வாக்களிக்க அனேகம் பேர் இருக்காங்க. தேர்தல் பிரச்சாரத்தப்ப எங்களை மதிச்சாலும், மதிக்கலைன்னாலும், கூட்டணி தர்மத்தை மதித்து கை சின்னத்துலதான் எங் காளுங்க ஓட்டு போடுவாங்க''’என்றார். ம.நீ.ம. வாக்காளர் களின் வாக்குகளும் வெற்றிக்கு முக்கியமென்பதை கூட்டணி யினர் உணர வேண்டுமென்பதே இவர்களின் ஆதங்கம். அரவணைத்துச் செல்வதே கூட்டணிக்கு பலம்!

ரூர் தொகுதி பா.ஜ.க. வேட் பாளர் செந்தில் நாதனை ஆதரித்து திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ் பேசும்போது, கரூர் சிட்டிங் எம்.பி. ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, "இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்தார்? உங்கள் குறைகளை எத்தனை முறை கேட்டறிந்தார்? என்பது குறித்து கரூர் பா.ஜ.க. அலுவலகத்தில் வந்து கூறினால், அனை வருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நமது வேட்பாளர் செந்தில்நாதன் அறிவித்துள் ளார். அதற்காக கரூர் கட்சி அலுவலகத்தில் தனி கவுண்டர் போடப் போகிறோம். அங்கே வந்து நீங்கள் கூறினால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்'' எனக்கூறி 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டை ஆட்டிக் காண்பித்து பேசினார். இந்த சம்பவம் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர், வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக செந்தில்நாதன், கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண வேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். நேக்கா வேட்பாளரை சிக்கலில் மாட்டிவிட்டுட்டாரே!

நாகை தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சுர்ஜித்சங்கர், தொகுதிக்கு அறிமுகமில்லாதவர். அவர் பிறந்தது வேதாரண்யம் அருகிலுள்ள தலைஞாயிறாக இருந்தபோதும், அவரது பெயரைச் சொன்னாலே "என்னப்பா, வடநாட்டுலருந்து ஆளைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கீங்க’என்று கிண்டலடிக்கிறாங்க' என புலம்புகின்றனர் ர.ர.க்கள். காங்கிரஸிலிருந்த சுர்ஜித்சங்கரை அ.தி.மு.க.விற்கு கொண்டுவந்து ஒரே மாதத்தில் சீட்டு வாங்கிக் கொடுத்து, சூட்கேசையும் சுர்ஜித்சங்கரிடம் பெற்றுவிட்டாராம் மாஜி ஓ.எஸ்.மணியன். இதை கேள்விப்பட்டு கடுப்பான மாஜி காமராஜ், தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு தராத கோபத்தில், தஞ்சாவூர் தொகுதியில் வேலைபார்க்கக் கிளம்பி விட்டாராம். எனவே ஓ.எஸ்.மணியன் தனியாளாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு... டென்சனில், பல இடங்களில் நாகை வேட்பாளர் என்பதை வேதாரண்யம் வேட்பாளர் என்றும், தலைஞாயிறு தொகுதியை சேர்ந்தவர் என்றும் குழப்பியவர், வேட்பாளர் பெயரையும்கூட சுர்ஜித்சிங் என்று தவறாகச் சொல்லி அதிர்ச்சியளிக்கிறாராம். சுர்ஜித்சிங் பர்னாலா நெனப்பு வந்துடுச்சோ!

ss

யிலாடுதுறை காங்கிரஸ் வேட் பாளராக சுதா நீண்ட இழுபறிக்கு பிறகு கடைசி நேரத் தில் அறிவிக்கப் பட்டாலும், அன் றிரவே தொகுதிக்கு வந்துவிட்டார். கடைசி நேரத்தில் கூட்டணிக்கட்சியினர் சகிதமாக டூவிலரில் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மயிலாடுதுறையில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், சிக்னேச்சர் என்ற பிரமாண்ட மண்டபத்தில் நடந்தது. அந்த மண்டபம் பிரியாணிக்கும், அசைவ உணவுகளுக்கும் பேமஸ் என்பதால் அங்கு ஆலோ சனைக் கூட்டம் என்றதும், ஆஹா தடபுடலா விருந்து இருக்கும் என நிர்வாகிகள் குவிந்துவிட்ட னர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மெய்யநாதன், கோவி.செழியன் என பலரும் வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டனர். நிகழ்ச்சி முடிய இரண்டரை மணியாகியபோதும் மதிய உணவு ஏதுமில்லாததால், "பிரியாணி தான் இல்ல, தயிர்சாதம் கூடவா ஏற்பாடு செய்ய முடியல? குடிக்க தண்ணிகூட ஏற்பாடு செய்யலயேப்பா? இப்படியிருந்தா எங்க போயி முடியப் போகுதோ''’என பசியோடு புலம்பினார் பாபநாசத்தி லிருந்து வந்த நிர்வாகி ஒருவர். வேட்பாளர் சுதா... சுதாரிச் சுப்பாரா?!

ss

தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்தே வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம். பர்னிச்சர் கடை நடத்திவரும் திட்டக்குடியைச் சேர்ந்த கணேசன், கடையில் வசூலான ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக செல்லும் போது, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தனியார் நிறுவனத்தில் கேஷிய ராகப் பணியாற்றும் நெட்டப் பாக்கம் ஞானவேல், பணியாளர் களுக்கு சம்பளமாகக் கொடுக்க எடுத்துவந்த ஒன்பது லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற மர வியாபாரியிட மிருந்து 79 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள னர். நெல்லிக்குப்பத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் முகமது கவுஸ், வங்கியில் செலுத்துவ தற்காக எடுத்துச்சென்ற ஐந்து லட்ச ரூபாயை பறிமுதல் செய்துவிட்டதால் முதலாளிக்கு என்ன பதில் சொல்வதென்று திகைத்துப்போய் நிற்கிறார். சேத்தியாத்தோப்பு வர்த்தக சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, "வாகன சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை சித்ரவதை செய்கிறார்கள். இப்போதைய விலைவாசிக்கேற்ப 5 லட்ச ரூபாய் வரை கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் அறி வித்தால் வியாபாரமே செய்யக்கூடாதோ? ராமநாதபுரத்தில் சுயேட்சையாக பாலாப்பழச் சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்., இப்போது புதுப்பிரச்சனையில் சிக்கியுள்ளார். அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு வருகைதந்த ஓ.பி.எஸ்.ஸுக்கு, நிகழ்ச்சி நடைபெற்ற மண்டப வாசலில் நின்ற பா.ஜ.க. மகளிர் அணியை சேர்ந்த மூன்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர். ஓ.பி.எஸ். தனது பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் தாள்களை எடுத்து, 1,500 ரூபாய்களை வழங்கினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக, தேர்தல் கண்காணிப்புக்குழுத் தலைவர் அருள், அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே கூட்டம் நடத்திய தாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டதில், ஓ.பி.எஸ். மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேமரா செல்போன் இருப்பதை மறந்துட் டாரோ!

பெரம்பலூரை பொறுத்தவரை தி.மு.க.வின் அருண்நேரு புதுமுகமாக இருந்தாலும், தீவிர களப் பணிகளால் தொகுதியில் அனைவருக்கும் அறிமுக மாகியிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஐ.ஜே.கே. பாரிவேந்தர், அத்தொகுதிக்காக தான் செய்துகொடுத்த நலத்திட்டங்களாக, தண்ணீர்த் தொட்டி, கட்டடங்களைச் சுட்டிக்காட்டி, தனியாளாக வாக்கு சேகரிக்கிறார். மேலும், தன்னுடைய எஸ்.ஆர்.எம். குழுமத்தில் சிகிச்சைக்காக வரும் நோ €யாளிகளுக்கு நன்முறையில் மருத்துவம் வழங்கிட வும் அறிவுறுத்தி வருகிறார். மருத்துவமனையில் பிர சவத்திற்காக வந்தவர்களின் பெயர்ப் பட்டியலை வாங்கி, அவர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்து வருகின்றனர். நான் வெற்றிபெற்றால் இந்தத் தொகுதி மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்குவேன் என் றும் உறுதியளித்துவருகிறார். இவரது பண பலத்துக் கும், அமைச்சர் மகனின் கட்சி பலத்துக்கும் இடை யில் தான் போட்டியே என்கிறார்கள். மருத் துவமனைய வச்சே கவர் பண்றாரே!

யிலாடுதுறை தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் பாபு, சீர்காழியிலுள்ள கூட்டணிக்கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியவர், தே.மு.தி.க. ஒன்றியச் செயலாளர் ராஜசேகரை சந்திக்கவே இல்லை. கடந்த ஒரு வாரமாகவே ராஜசேகர் தனது வார்டிலுள்ள மக்களைத் திரட்டி வேட்பாளருக்காகக் காத்திருக்க, ஆனால் அவரைச் சந்திக்காமல் அ.தி. மு.க. வேட்பாளர் புறக்கணித்துவரு கிறாராம். இதனால் அவர் ஆத்திரத் திலிருப்பது தி.மு.க. தரப்பினருக்கு தெரியவர, தி.மு.க. மாவட்ட செய லாளர் நிவேதாமுருகன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம், காங்கிரஸ் வேட்பாளர் சுதா உள்ளிட் டோர் திரண்டு சென்று ராஜசேகருக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினர். இதனைக் கேள்விப்பட்டு பதட்டமான அ.தி.மு.க. தரப்போ, எடப்பாடி பழனிசாமி இன்று மயிலாடுதுறைக்கு வருகிறார். இந்நேரத்தில் இப்படி பண்றாரே எனக்கூறி, அவரை சமாதானப்படுத்தி கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள்! சைக்கிள் கேப்புல சால்வை போர்த்திட்டாங்களே!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கடந்த பௌர்ணமியன்று சென்னை யை சேர்ந்த ராஜேந்திரன், தரிசனத்துக்கு 4 மணி நேரமாக வரிசையில் நிற்கும்போது மயக்கமடைந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அடுத்த நான்காவது நாளில், விசாகபட்டினத்தை சேர்ந்த சகாமங்கமணி என்கிற பெண்மணி கோவிலுக்குள் நெஞ்சுவலி வந்து கீழே விழுந்து மரணமடைந்தார். கோவில் சார்பில் முதலுதவி கிளினிக் உள்ளது. ஆனால் அன் றைய தினம் முதலுதவி செய்யக்கூட அங்கே மருத் துவரோ, மருத்துவ ஊழியரோ இல்லை. பக்தர் களுக்கு கோவில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை என்பதையே திருவண்ணாமலை யில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பிரச்சார மாக முன்னெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது! கோவிலை வைத்தே மக்களை வளைப்பாங்களே!

dd

ப்போதெல்லாம் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க அரசியல் கட்சிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களைத்தான் அழைக்கிறார்கள். விழுப்புரம் தொகுதியில் கண்டாச்சிபுரம் பகுதியில், வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது, 200 ரூபாய் தருவதாகக்கூறி மகளிர் குழுப் பெண்களை அழைத்துவந்தவர்கள், கூட்டம் முடிந்து கிளம்புகையில் நூறு ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். 200 தருவதாகக்கூறி 100 மட்டுமே தருகிறார்களே, கூலி வேலைக்கு போனா லும்கூட 300 ரூபாய் கிடைத்திருக்குமேவென்று கொந்தளித்துள்ளனர். அதேபோல், 100% வாக் குரிமை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சாலைகளில் விழிப்புணர்வுக் கோலம் போடு வதற்காக விழுப் புரம் சுற்று வட் டாரப் பகுதியி லுள்ள மகளிர் குழுக்களை அதி காரிகள் வர வழைத்துள்ளனர். அவர்களும் 11 மணிவரை வேலைசெய்தும், குடிக்கத் தண்ணீரோ, சாப்பாடோ கூட தரவில்லையாம். இதை எதிர்த்துக் கேள்வி கேட்டால், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி, சலுகைகள் தருவதைத் தடுத்துவிடுவார்களோ எனப் பயந்து, தங்களுக்குள்ளேயே புலம்பியிருக்கின்றனர். மகளிர் குழுக்கள்னாலே இளக்காரம்தானோ!

ddதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலும், அவரது உதவியாளரும் அரசு வேலை வாங்கி தருவதாகச்சொல்லி நூற்றுக்கும் மேற்பட் டோரிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டனர். இது தொடர்பாக நிலோபர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப் பட்ட நிலையில், அந்த புகார் மீதான விசாரணை அப்படியே உள்ளது. தற்போது வேலூர் தொகுதி யில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதிக்கு ஆம்பூர், வாணியம்பாடி, வேலூரிலுள்ள முஸ்லீம் ஓட்டுக்களை பெறுவதற்காக நிலோபரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள முடிவெடுத்த எடப்பாடி, மா.செ.வும் மாஜியுமான கே.சி.வீர மணியை சந்திக்கும்படி சொல்லியுள்ளார். வீரமணியை சந்தித்து, "என்னை கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள்' என கடிதம் தந் தார் நிலோபர். ஆனால் வீரமணியோ, "இந்தம்மா வால் கட்சிக்கு ஒரு ஓட்டுகூட வராது'' எனக்கூறி, மீண்டும் சேர்ப்பதை எதிர்த்தார். ஆனால் இதையும் மீறி, ஏப்ரல் 1ஆம் தேதி வேலூருக்கு பிரச்சாரத்துக்கு வந்த எடப்பாடி, மேடையில் நிலோபரை ஏற்றி அமரவைக்க, கடுப்பிலிருக்கிறாராம் வீரமணி. மாஜி வீரமணிக்கே பெப்பே காட்டிட்டாரே!

-ராம்கி, சக்தி, எஸ்.பி.எஸ்., து.ராஜா, இரா.பகத்சிங், க.செல்வகுமார், -துரை.மகேஷ்

nkn060424
இதையும் படியுங்கள்
Subscribe